Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்சிலோனாவுக்கு நெய்மர் குட்பை! மெஸ்ஸியின் நிழல் சுடுகிறதா? #NeymarPSG #NeymarEstParisien #NeymarJr10

Featured Replies

பார்சிலோனாவுக்கு நெய்மர் குட்பை! மெஸ்ஸியின் நிழல் சுடுகிறதா? #NeymarPSG #NeymarEstParisien #NeymarJr10

 
 

கால்பந்து உலகின் இளம் நட்சத்திரம் நெய்மரை நீங்க வாங்கணுமா? அதுக்கு நீங்க பெருசா ஒன்னும் செலவு செய்ய வேண்டியது இல்ல. சுமார் 1,677 கோடி ரூபாய் கொடுத்தா போதும்! ஷாக் ஆயிடலயே? ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆமாங்க, தோராயமா 1,677 கோடி ரூபாய். துல்லியமா சொல்லணும்னா 222 மில்லியன் யூரோக்கள்! அவ்வளவு செலவு செய்து நெய்மாரை பார்சிலோனா அணியிடமிருந்து வாங்கியுள்ளது பிரான்சின் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி (PSG).

நெய்மர்
    

கடந்த ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணி 105 மில்லியன் யூரோ கொடுத்து யுவன்டஸ் அணியிலிருந்து பால் போக்பாவை வாங்கியது. அதுவே ஒரு கால்பந்து வீரருக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய தொகை. அதனால் உலகின் காஸ்ட்லி வீரர் என்ற சிறப்பைப் பெற்றார். அப்போது மொத்த கால்பந்து உலகமும் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வசை பாடியது. “ஒரு வீரருக்கு இவ்வளவு தொகை செலவு செய்வதா?”, “பணத்தால் கால்பந்து பாழாகிறது”, “கால்பந்தின் இனி எங்கே செல்லப்போகிறது” என்றெல்லாம் புலம்பினர். காரணம் 100 மில்லியன் யூரோவைத் தாண்டி ஒரு டிரான்ஸ்ஃபர் நடந்தது அதுவே முதல் முறை. கால்பந்தின் நடப்பு ஜாம்பவான்கள் கிறிஸ்டோயோனா ரொனால்டோவும், மெஸ்ஸியும் தத்தமது அணிகளுடனான ஒப்பந்த காலத்தை நீட்டித்துக்கொண்டதால், போக்பாவின் அச்சாதனை முறியடிக்கப்பட இனி சில வருடங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அறங்கேறியுள்ளது கால்பந்தின் மாபெரும் வியாபாரம். அதுவும் போக்பாவை விட இரட்டை மடங்கு விலைக்கு. கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தைக்கு இடையில் இவ்வளவு பெரிய தொகை கைமாறுவதை லா லிகா அமைப்பு எதிர்த்தது. இருந்தாலும் பி.எஸ்.ஜி.  அணிக்கு 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் நெய்மர்.

யார் இந்த நெய்மர்? எதற்கு இவ்வளவு தொகை?

பிரேசில் – பீலே, ரொனால்டோ, ரொனால்டினோ, ககா, ராபெர்டோ கார்லோஸ் என்று பல ஜாம்பவான்களை கால்பந்திற்குக் கொடுத்த தேசம். கால்பந்தின் பிறப்பிடம்! ஆனால் கடந்த சில ஆண்டுகளாய் உலக அரங்கில் சாதிக்கத் தவறி வருகிறது அவ்வணி. சோதனைகளுக்கு நடுவில், தன் தேசத்தை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டுவர சாம்பா தேசத்தில் பிறந்த ஆபத்வாந்தவன் தான் நெய்மர். இளம் வயதிலேயே உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியவன். மெஸ்ஸி, ரொனால்டோ எனும் இரண்டு அரசன்களுக்குப் பிறகு அடுத்து கால்பந்து உலகை ஆளப்போகும் இளவரசன். வெறும் 17 வயதில் தொழில்முறை கால்பந்திற்குள் அடியெடுத்து வைத்த நெய்மர் இதுவரை சான்டோஸ் மற்றும் பார்சிலோனா ஆகிய இரண்டு கிளப்களுக்காக 411 போட்டிகளில் விளையாடி 241 கோல்கள் அடித்துள்ளார். தற்போது வெறும் 25 வயதேயான நெய்மர் பிரேசில் அணிக்காக வெறும் 77 போட்டிகளில் 52 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். டிரிபிளிங்கில் கில்லாடி. எதிரணி வீரர்களை ஏமாற்றுவதில் வல்லவன்.

நெய்மர்

 ஆனாலும், இவ்வளாவு தொகை செலுத்தியிருக்க வேண்டுமா? நிச்சயம், இது விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியதே. பி.எஸ்.ஜி என அழைக்கப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி முன்பு ஒரு சாதாரண அணியாகவே விளங்கியது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கத்தார் ஸ்போர்ட்ஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்ட பிறகு பல மில்லியன் டாலர்களை செலவு செய்து பல முன்னணி வீரர்களை வாங்கியது. அதன்பிறகு பிரான்சின் லீக் 1 தொடரை தொடர்ந்து 4 முறை வென்று அசத்தியது. ஆனாலும், சாம்பியன்ஸ் லீக்கில் அந்த அணியால் பெரிய அளவு சாதிக்க முடியவில்லை.    

ஐரோப்பிய அளவில் சாதிக்க வேண்டுமானால் ஒரு அணிக்கு ‘கோர்’ பலமானதாக இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மாறும் வீரர்களை வைத்துக்கொண்டு எதுவும் சாதிக்க முடியாது. தங்கள் அணிக்கு மையமாய் செயல்படும் ஒரு வீரன். அவனைச் சுற்றி இயங்கும் சில வீரர்கள். அவர்களை ஒருங்கிணைக்கும் பயிற்சியாளர் இவையெல்லாம் அவசியம். கடந்த 4 ஆண்டுகளாக பார்சிலோனாவும் ரியல் மாட்ரிட்டும் மட்டுமே சாம்பியன்ஸ் லீக்கை வெல்வதற்குக் காரணம் அதுதான். அத்தொடரை வெல்ல வேண்டுமேயானால் ஒரு ஜீனியஸ் அணியில் இருப்பது அவசியம். மெஸ்ஸியையும் ரொனால்டோவையும் கூட வளைத்துப்போட சிலமுறை அவ்வணி முயற்சித்து தோற்றுப்போனது. அதற்கடுத்த நிலையில் நிற்பது நெய்மர்... அவரையும் இதோ வாங்கியாகிவிட்டது. இன்றைய நிலைமையைப் பொருத்தமட்டில் 222 மில்லியன் யூரோக்கள் என்பது சற்று அதிகமே. ஆனால் கால்பந்துப் புத்தகத்தில் அந்த அணியின் வரலாற்றை இந்த வீரனால் அன்றி வேறு எவராலும் இனி எழுத முடியாது. அந்த வகையில் இது பி.எஸ்.ஜி-க்கு மிகச்சிறந்த முதலீடு.

முடிவுக்கு வரும் MSN 

MSN – கால்பந்து ரசிகர்கள் கடந்த 3 ஆண்டுகளாகக் கொண்டாடிய பெயர். மெஸ்ஸி, சுவாரஸ், நெய்மர் ஆகிய மும்மூர்த்திகளின் இணைதான் MSN. கால்பந்து உலகின் மிக அபாயகரமான இணையாகவும் இவர்கள் விளங்கினார்கள். எதிரணிகளின் தடுப்பை பீரங்கியைப் போல் உடைத்துத் தகர்த்தார்கள். விங்குகளில் மெஸ்ஸியும் நெய்மரும் மாயாஜாலம் காட்ட, ஸ்டிரைக்கராக சுவாரஸ் அதிரடி காட்டினார். இவர்கள் மூவரும் சேர்ந்து விளையாடிய 113 போட்டிகளில் 253 கோல்கள் அடித்துள்ளார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்தப் போட்டிகளில் நெய்மர் மட்டுமே 59 கோல்களும் 36 அசிஸ்டுகளும் செய்து அசத்தியுள்ளார்.

நெய்மர், சுவாரஸ், மெஸ்ஸி

நெய்மர் ஏன் மாறினார்?

உலகின் டாப் கால்பந்து கிளப்கள் என்றால் அது ரியல் மாட்ரிட்டும் பார்சிலோனாவும் தான். அந்த அணிகளிலிருந்து எந்த அணிக்குப் போனாலும் ஒரு வீரருக்கு அது பின்னடைவு தான். அப்படியிருக்கையில் ஏன் நெய்மர் பார்சிலோனாவை விட்டுப் போக வேண்டும்? பி.எஸ்.ஜி அணிக்கு 5 ஆண்டு காலம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நெய்மர் இந்தக் காலகட்டத்தில் வாங்கவிருக்கும் சம்பளம் மட்டுமே சுமார் 450 மில்லியன் பவுண்டுகள். அதாவது ஒரு ஆண்டுக்கு 90 மில்லியன் பவுண்டுகள். ஒரு மணி நேரத்திற்கு 3,200 பவுண்டுகள். இந்தப் பணம் தான் நெய்மர், பார்சிலோனாவை விட்டுச் செல்லக் காரணம் என்று பார்சிலோனா ரசிகர்கள் குறை கூறுகிறார்கள். இதற்குப் பின்னால் ரியல் மாட்ரிட் அணியின் சதி இருப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் நெய்மரின் இந்த முடிவிற்கு அந்த பார்சிலோனா ரசிகர்கள்தான் காரணம்.   

கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிக்கு முந்தைய சுற்று. இப்போது சம்பந்தப்பட்டுள்ள அதே பார்சிலோனாவும் பி.எஸ்.ஜியும் நேருக்கு நேர் மோதின. இரண்டு சுற்றுகள் கொண்ட போட்டியின் முதல் சுற்றில் 4-0 என படுதோல்வியைச் சந்தித்தது பார்சிலோனா. அந்தத் தோல்வியிலிருந்து மீள்வது எவ்வளவு கடினம்? ஆனால் மீண்டது. இரண்டாவது சுற்றில் 6-1 என சரித்திர வெற்றி பெற்று சாதனை படைத்தது. அடுத்த நாள் அனைத்து பேப்பர்களிலும் மெஸ்ஸி சூப்பர் மேன் போன்று கையை உயர்த்தியிருக்கும் புகைப்படம் வெளியானது. மொத்த ரசிகர்களும் மெஸ்ஸியைக் கொண்டாடித் தீர்த்தனர்.

Lionel Messi

ஆனால் அந்தப் போட்டியில் பார்சிலோனாவை வெற்றி பெற வைத்தது உணமையில் நெய்மார் தான். கடைசி 10 நிமிடங்களில் 2 கோல்கள் 1 அசிஸ்டு என மாயாஜாலம் புரிந்து தன் அணியை வெற்றி பெற வைத்தார். ஆனால் ரசிகர்களெல்லாம் மெஸ்ஸியை மட்டுமே கொண்டாடினார்கள். தங்களின் ஒற்றைத் தலைவனை மட்டுமே கொண்டாடுவது ரசிகர்களின் வழக்கம் தானே. நாம் கூட உலகக்கோப்பை வெற்றியில் யுவராஜ், கம்பீரையெல்லாம் மறந்து தோனியை மட்டும் தானே கொண்டாடினோம்.

அப்படித்தான். அப்படி மெஸ்ஸியின் நிழலில் தான் மறைந்து விடக்கூடாது என்பதற்காக நெய்மர் எடுத்த முடிவாகத்தான் இது இருக்கும். காரணம் இன்னும் தான் மெஸ்ஸியுடனேயே விளையாடி வந்தால் ‛உலகின் சிறந்த கால்பந்து வீரர்’ (Ballon d'or) போன்ற விருதுகளை தான் வெல்ல முடியாது என்பதும் அவருக்குத் தெரியும். ஆனாலும் இதையெல்லாம் வெளிப்படையையாச் சொல்லாமல் “பி.எஸ்.ஜி அணியின் எதிர்காலத்திட்டம் என்னைக் கவர்ந்ததால் அங்கு செல்கிறேன்” என்று கூறிவிட்டு மெஸ்ஸிக்கும் நட்போடு குட்பை சொல்லி விடைபெற்றிருக்கிறார் நெய்மர்.

யாருக்கு லாபம்?

நெய்மர்

ஏற்கனவே சொல்லியது போல் பி.எஸ்.ஜி அணிக்கு இந்த டிரான்ஸ்ஃபரால் பெரிய லாபம். உலக அரங்கில் மாபெரும் சக்தியை அவர்கள் தங்களை நிலைநாட்டிக்கொள்ள முடியும். அடுத்து இதனால் லாபம் பெறப்போவது ரியல் மாட்ரிட் அணி. தங்களின் மாபெரும் வைரியின் ஒரு கால் உடைந்திருக்கிறது என்றால் அவர்களுக்கு ஆனந்தம்தானே? இதனால் இனி எல் கிளாசிகோ போட்டிகளில் மாட்ரிடின் கரம் ஓங்கலாம்!  ரியல் மாட்ரிட் ரசிகர்கள் நெய்மரின் இந்த மூவை நியூ இயர் போல் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் கடந்த இரண்டு வாரங்களாக பி.எஸ்.ஜி ரசிகர்களை விட இந்த டிரான்ஸ்ஃபரை அதிகம் எதிர்பார்த்தவர்கள் அவர்களாகத்தான் இருக்கும். பெரிய லாபம் அடையப் போவது நெய்மர்தான். முன்பு கூறியது போல் மெஸ்ஸியின் நிழலிருந்து விடுபட்டு தன் தனித்துவத்தை உலகிற்கு அவர் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது. எனவே இதில் பெரிய லாபம் நெய்மருக்குத்தான்.

யாருக்கு நஷ்டம்?
பார்சிலோனா அணிக்கு இது மிகப்பெரிய இழப்பு. மெஸ்ஸி, சுவாரஸ் போன்றவர்கள் இருந்தாலும் இதுவரை செட்டாகி இருந்த பார்ட்னர்ஷிப் உடைந்திருப்பது அவர்களுக்கு சற்று சறுக்கலே. அதுவுமில்லாமல் பயிற்சியாளர் வெல்வர்டேவுக்கு இதுதான் முதல் சீசன். அதனால் அணியை அவர் எவ்வாறு மாற்றி வடிவமைக்கப் போகிறார் என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். டிபாலா, கோடின்ஹோ, ஹசார்டு போன்ற வீரர்களை நெய்மருக்கு மாற்றாக வாங்க அவர்கள் முயல்கிறார்கள். அடுத்து இதனால் நஷ்டம் அடையப் போவது மெஸ்ஸியும் ரொனால்டோவும். இவர்களுக்கு என்ன நஷ்டம் என்று ஷாக் ஆக வேண்டாம். கடந்த 10 ஆண்டுகளாக உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை இவர்களே வாங்கி வருகிறார்கள். இவர்களுக்குப் போட்டி தரக்கூடிய தரமான வீரர்களில் பெரும்பாலோனோர் இவர்களுடனேயே டீம் மேட்டாக இருந்ததால் இவர்களுக்கு அது உதவியாக இருந்தது. இப்போது நெய்மர் தனியாகப் போயிருப்பது இந்த ரேசில் அவர்களுக்கு நேரடி சேலஞ்சாக அமையும்.

Neymar Jr

 


ஆக மொத்தம் நெய்மரின் இந்த 222 மில்லியன் யூரோ டிரான்ஸ்ஃபரால் கால்பந்து உலகம் சற்று ஆடித்தான் போயிருக்கிறது. “இனி இதனால் அனைத்து வீரர்களின் விலையும் உயரும். சாதாரன வீரரைக் கூட அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்” என மான்செஸ்டர் யுனைடட் அணியின் மானேஜர் ஜோசே மொரினியோ கூறியிருக்கிறார். அதுவும் உண்மைதான். இதனால் கால்பந்து உலகில் ஒரு பொருளாதார இடி விழும். நெய்மர் சான்டோஸ் அணியிலிருந்து பார்சிலோனாவால் 57 மில்லியன் யூரோவிற்கு பார்சிலோனாவால் வாங்கப்பட்டபோதே அதில் பித்தலாட்டம் நடந்திருப்பதாக விசாரணை நடத்தியது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு. இப்போது 222 மில்லியன் யூரோக்கள். என்னென்ன பூதமெல்லாம் கிளம்பப்போகுதோ? 

http://www.vikatan.com/news/sports/98055-neymar-on-joining-psg-from-barcelona.html

  • தொடங்கியவர்

பார்சிலோனாவில் இருந்து விலகியது பணத்துக்காக அல்ல – நெய்மர்

Neymar press
u20-7s-2017-728.gif

பார்சிலோனா அணியில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கழகத்திற்கு உலகில் மிக அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் பிரேஸில் முன்கள வீரர் நெய்மர், தன் மீதான குற்றச்சாட்டுக்கு கவலை வெளியிட்டுள்ளார்.

எனது மாற்றத்திற்கு பணம் மாத்திரமே காரணம் என்று மக்கள் நினைப்பது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் தனது எதிர்காலம் பற்றி நீண்ட காலமாக நிச்சயமில்லாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு 222 மில்லியன் யூரோக்களுக்கு (262 மில். டொலர்) ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் நெய்மர், இதன்மூலம் ஆண்டொன்றுக்கு 45 மில்லியன் யூரோக்களை (8200 மில். ரூபாய்) சம்பாதிக்கவுள்ளார்.

உலகின் விலை உயர்ந்த வீரரானார் நெய்மர்

ஆனால் நெய்மர் நினைத்தால் மற்றொரு கழகத்தில் மேலும் பணம் சம்பாதிக்க முடியும் என்று பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் தலைவர் நாஸர் அல் கெலைபி குறிப்பிட்டார்.

இந்நிலையில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி சனிக்கிழமை பங்கேற்கும் முதல் லீக் போட்டியில் விளையாடுவதற்கு நெய்மர் தயாராகியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தளமாகக் கொண்ட பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் வெள்ளிக்கிழமை (04) இணைந்த நெய்மர், அணி முகாமையாளர்களுடன் ஊடகவியலாளர் சந்திப்பிலும் பங்கேற்றார்.

இந்த மாற்றத்திற்கு காரணம் பணம் மாத்திரமே என்ற குற்றச்சாட்டுப் பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நெய்மர், “இவ்வாறு கூறும் மக்களுக்கு எனது தனிப்பட்ட வாழ்வு பற்றி ஒன்றும் தெரியாது என்று மாத்திரமே கூறவேண்டியுள்ளது. நான் ஒருபோதும் பணத்துக்காக இதனை செய்யவில்லை.

நான் பணத்தை தேடுவதாக இருந்தால், வேறு ஒரு கழகத்திற்கு வேறு ஒரு நாட்டுக்கு என்று வேறு எங்காவது போயிருக்கலாம். மக்கள் தொடர்ந்து இவ்வாறு சிந்திப்பதையிட்டு நான் மிகக் கவலையடைகிறேன். பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகம் என்னை நம்பியது மகிழ்ச்சியானது” என்று கூறினார்.

எனினும் நெய்மரின் மாற்றம் பார்சிலோனா அணி ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரசிகர்கள் நெய்மரின் படங்களை எரித்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.     

“நான் எந்த தவறும் செய்ததாக நினைக்கவில்லை. ரசிகர்களுடன் நான் ஒருபோதும் மதிப்பு குறைவாக நடந்ததில்லை. கழகம் ஒன்றில் இருந்து வெளியேறவும் தொடர்ந்து இருப்பதற்கும் எல்லா வீரர்களுக்கு அனுமதி இருக்க வேண்டும். இதுவே வெளியேறுவதற்கான தருணம் என்றும் வீரர் ஒருவர் நினைப்பாராயின் அவருக்கு வெளியேற முடியுமாக இருக்க வேண்டும்” என்று நெய்மர் குறிப்பிட்டார்.

நெய்மர் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறுவது குறித்த ஒப்பந்தத்தில் கடந்த இரு தினங்களாக இழுபறி நீடித்த நிலையிலேயே அவர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணியில் இணைவது வியாழக்கிழமை உறுதியானது.

PSG அணி கட்டார் நாட்டு தொழிலதிபர் நாஸர் அல் கெலைபிக்கு சொந்தமானதாகும். 2011 ஆம் ஆண்டு அணியை வாங்கிய அவர் அதிக முதலீடு செய்து வருகிறார்.

ஆனால் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஒரு வீரரை ஒப்பந்தம் செய்வது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்று லா லிகா மற்றும் பார்சிலோனா கழகங்கள் கேள்வி எழுப்பி இதனை கூட்டமைப்புக்கு புகாராக அளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளன.   

http://www.thepapare.com

  • தொடங்கியவர்

நெய்மரை ஒப்பந்தம் செய்ய மொத்தம் ரூ. 3,750 கோடி செலவு!

 
 

நெய்மரை ஒப்பந்தம்செய்ய, பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி மொத்தம் ரூ. 3,750 கோடி செலவிட்டுள்ளது.

பார்சிலோனாவில் இருந்து விலகிய நெய்மர்

பார்சிலோனா அணிக்காக விளையாடிவந்த நெய்மர், கடந்த வருடத்தில்தான் அந்த அணியுடனான ஒப்பந்தத்தைப் புதுப்பித்திருந்தார். பார்சிலோனா, ரியல்மாட்ரிட் அணிகள் எப்போதுமே நட்சத்திர வீரர்களால் நிரம்பிவழிபவை. இந்த அணிகளின் ரிசர்வ் அணியே, ஒரு பவர் ஃபுல் அணிக்குச் சமமாக விளையாடக்கூடியதாக இருக்கும். மெஸ்ஸி போன்ற நட்சத்திர வீரர்கள் நிறைந்திருக்கும் பார்சிலோனாவில், நெய்மரால் ஜொலிக்க முடியவில்லை.

நெய்மரின் எண்ண ஓட்டத்தைத் தெரிந்துகொண்ட பி.எஸ்.ஜி அணி, அவரை கோழியை அமுக்குவதுபோல அமுக்கியது. பார்சிலோனாவுடனான நெய்மர் ஒப்பந்தத்தை முறிக்க (buyout clause) மட்டும் ரூ. 1,666 கோடி செலவிடப்பட்டுள்ளது. அது தவிர, நெய்மரின் சம்பளம் ஆண்டுக்கு ரூ. 222 கோடி வருகிறது. சம்பளம், போனஸ், buyout clause  எல்லாம் சேர்த்து நெய்மரை ஒப்பந்தம்செய்ய பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி மொத்தம் ரூ,.3.750 கோடி செலவிட்டுள்ளது. 

தற்போது, உலகின் விலை உயர்ந்த வீரர் என்கிற அந்தஸ்த்தை நெய்மர் அடைந்திருந்தாலும், சர்வதேச அளவில் பி.எஸ்.ஜி அணி விளையடிவரும். ஃப்ரெஞ்ச் லீக்-1 தொடர் பிரபலமானது இல்லை. பிரீமியர் லீக், ஸ்பானீஷ் லீக், இத்தாலி சீரி ஏ, பந்தஸ்லீகா தொடர்களுக்கு இருக்கும் மரியாதையும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் ஃப்ரெஞ்ச் லீக் தொடருக்குக் கிடையாது. சாம்பியன்ஸ் லீக் போட்டிக்கு பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி முன்னேறினால் மட்டுமே நெய்மரின் ஆட்டத்தைக் காண சர்வதேச ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். மற்றபடி ஃப்ரெஞ்ச்சுக்கு மட்டும்தான் ஃப்ரெஞ்ச் லீக் முக்கியம்.

பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி விடுத்துள்ள அறிக்கையில், ''நெய்மர் இதயத்தை இழக்கவில்லை. பணத்துக்காக அணி மாறவில்லை. அவரின் இதயம் சொல்வதைக் கேட்டு நடந்திருக்கிறார் '' என்று தெரிவித்திருக்கிறது. 

பி.எஸ்.ஜி அணியில் நெய்மருக்கு புகழ்பெற்ற 10-ம் எண் ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது. 

http://www.vikatan.com/news/tamilnadu/98092-psg-spends-almost-rs-3750-crore-for-neymar.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டம் இல்லாத மெசி தான் எனக்கு ஹீரோ   

  • தொடங்கியவர்

ஒரே நாளில் 10 ஆயிரம் நெய்மர் ஜெர்சியை விற்பனை செய்த பி.எஸ்.ஜி.

பிரேசில் நாட்டின் கால்பந்து வீரரான நெய்மரை ஒப்பந்தம் செய்த முதல் நாளிலேயே 10 ஆயிரம் நெய்மர் ஜெர்சியை விற்பனை செய்துள்ளது பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் கிளப்.

 
ஒரே நாளில் 10 ஆயிரம் நெய்மர் ஜெர்சியை விற்பனை செய்த பி.எஸ்.ஜி.
 
பார்சிலோனா அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து விளையாடி வந்தவர் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர். இந்த வருடம் பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் நெய்மரை ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்காக பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி டிரான்ஸ்பர் பீஸாக பார்சிலோனாவிற்கு 222 மில்லியன் யூரோ (சுமார் 1665 கோடி ரூபாய்) கொடுத்துள்ளது. பி.எஸ்.ஜி. அணியுடன் ஐந்து வருடத்திற்கான ஒப்பந்தம் நேற்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது.

உடனே நெய்மருக்கு 10 எண் பொறித்த ஜெர்சி வழங்கப்பட்டது. ஐரோப்பிய கண்டத்தில் ஒரு வீரரின் பெயரில் வீரர் இடம்பிடித்துள்ள கிளப் மட்டுமே ஜெர்சி பிரிண்ட் செய்து வெளியிடப்படும். மற்றவர்கள் பிரிண்ட் செய்யக்கூடாது. இந்த ஜெர்சிகளை விற்பனை செய்வதன் மூலம் கிளப்புகளுக்கு வருமானம் கிடைக்கும்.

201708052141087944_1_9-neymar-s._L_styvp

அந்த வகையில் பி.எஸ்.ஜி. நெய்மர் பெயர் மற்றும் எண் பொறித்த ஜெர்சியை பிரிண்ட் செய்து விற்பனை செய்து வருகிறது. முதல் நாளிலேயே இந்த கிளப் 10 ஆயிரம் ஜெர்சிகளை விற்றுள்ளது. விரைவில் ஒரு லட்சம் ஜெர்சிகளை விற்பனை செய்ய அந்த கிளப் முடிவு செய்துள்ளது.

ஒரு ஜெர்சிக்கு 100 யூரோ (7500 ரூபாய்) விலை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி முதல் நாளில் மட்டும் 1 மில்லியன் யூரோ சம்பாதித்துள்ளது. இப்படியே சென்றால் மார்ச் மாதம் மத்தியில், நெய்மரின் டிரான்ஸ்பர் பீஸான 222 மில்லியன் யூரோவை பி.எஸ்.ஜி. அணி சம்பாதித்துவிடுமாம்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/05214108/1100728/Neymar-at-PSG-Ligue-1-club-sell-more-than-10000-shirts.vpf

  • தொடங்கியவர்

கிளப்பை விட எந்த வீரரும் பெரியவர்கள் அல்ல: பார்சிலோனா தலைவர் சொல்கிறார்

 

கிளப்பை விட வீரர்கள் பெரியவர்கள் யாரும் கிடையாது என நெய்மர் பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறியது குறித்து அந்த கிளப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 
கிளப்பை விட எந்த வீரரும் பெரியவர்கள் அல்ல: பார்சிலோனா தலைவர் சொல்கிறார்
 
பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரரான நெய்மர், பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார். தற்போது அவரை 222 மில்லியன் யூரோ கொடுத்து பாரிஸ் ஜெயன்ட்-ஜெர்மைன் அணி வாங்கியுள்ளது.

பார்சிலோனா கிளப்பிற்கு நெய்மரை கொடுக்க விருப்பம் இல்லை. நெய்மருக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்பதால் பார்சிலோனாவை விட்டு வெளியேறினார்.

201708072053524961_1_6-neymar01-s._L_sty

இந்நிலையில் கிளப்பை விட எந்த வீரரும் பெரியவர்கள் அல்ல என பார்சிலோனா தலைவர் பார்டோமியு கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பார்டோமெயு கூறுகையில் ‘‘நெய்மர் அணியில் இருந்து விலக விரும்பினார். அவரது முடிவுடன் நாங்கள் ஒத்துப்போகவில்லை. ஆனால், பார்சிலோனா அணியை விட பெரிய வீரர் யாரும் இல்லை’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/07205349/1101079/Neymar-Barcelona-president-says-no-player-is-bigger.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.