Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுக்கப்படும் நீதி

Featured Replies

மறுக்கப்படும் நீதி

 

மூதூர் பொது  வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இயங்கி வந்த அக் ஷன் பாம் எனும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த மேற்­படி 17 பணி­யா­ளர்­க­ளையும் ஆயுதம் தரித்த சீரு­டைக்­கா­ரர்கள் நிறு­வன வளா­கத்­துக்குள் நுழைந்து நிலத்தில்  குப்­பு­றப்­ப­டுக்கப் பண்ணி பின்­பக்­க­மாக தலை­யில் சுட்டு படுகொலைப்­ப­டுத்­தி­ய­தாக  அன்­றைய செய்­திகள்  தெரி­வித்­தன. 

 

மூதூரில் படு­கொலை செய்­யப்­பட்ட எங்கள் பிள்­ளை­களின் படு­கொ­லை­யோடு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் யார்? இதன் பின்­ன­ணி­யென்ன? இன்னும் ஏன் குற்­ற­வா­ளிகள் ­சட்­டத்தின் முன் கொண்டு வரப்­ப­ட­வில்­லை­யென்ற தமது கவ­லையையும் ஆதங்­கத்­தையும் தெரி­வித்­தார்கள் படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் பலர்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதி (04.08.2006) மூதூரில் வைத்து படு­கொலை செய்­யப்­பட்ட அக் ஷன் பாம் எனும் பிரான்ஸ் நாட்டின் தொண்டர் நிறு­வ­னத்தைச் சேர்ந்த 17 பேரின், 11 ஆவது ஆண்டு நினை­வேந்தல் நிகழ்வு நேற்­றைய தினம் (04. 08.2017) உற­வி­னர்­களால் அனுஷ்­டிக்­கப்­பட்­ட­போது, அந்த உற­வி­னர்கள் இவ்­வாறு கேள்வி எழுப்­பினர்.

2006 ஆம் ஆண்டு மூதூரில் இடம் பெற்ற கொடூ­ர­மான படு­கொ­லை­யோடு தொடர்­பு­பட்­ட­வர்கள் இலங்கைப் படை­யி­னரே.

இது சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­ட­போதும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இது­வரை நீதி பெற்றுத்தரப்­ப­ட­வில்லை. மனி­தா­பி­மான பணி­க­ளுக்­காக தொண்­டாற்­றிய 17 தொண்­டர்­களின் படு­கொ­லையை நாம் இன்னும் மறந்து போக­வில்­லை­யென கடந்த வருடம் தெரி­வித்­தி­ருந்தார் அக் ஷன் பாம் நிறு­வ­னத்தின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் வெரன் க்கியூ அன்­டிரக்ஸ். கடந்த வருடம் திரு­கோ­ண­ம­லையில் நடை­பெற்ற 10ஆவது நினை­வேந்தல் நிகழ்ச்­சியில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார். அவரின் கருத்­துப்­படி நல்­லாட்சி அர­சாங்­க­மா­வது, இவ்­வ­கை­யான மனித உரிமை மீறல்­க­ளுக்­கான நீதியை வழங்­கு­மென்­பது அவர்­களின் எதிர்­பார்ப்­பாகும்.

மனி­த­குல வர­லாற்றில் இது மாபெ­ரும் மனித உரிமை மீறல் என்­பதை உல­கத்­துக்கும் ஐ.நா.மனித உரிமைப் பேர­வைக்கும் தொடர்ந்து நாம் கூறி­வ­ரு­வ­துடன் சர்­வ­தேச நீதி­யொன்றை பெற்­றுத்­த­ரும்­படி தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­கிறோம். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு முறை­யான உயர்ந்த நீதி­யொன்று கிடைக்கும் வரை நாம் ஓயப்போவ­தில்லை என அக் ஷன் பாம் பணிப்­பாளர் தெரி­வித்­தி­ருந்தார்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மூதூரில் இடம்­பெற்ற படு­கொலை சம்­ப­வத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டர் நிறு­வ­ன­மான அக் ஷன் பாம் என்ற நிறு­வ­னத்தைச் சேர்ந்த 17 தொண்­டர்கள் படு­கொலை செய்­யப்­பட்டு 11 வரு­டங்கள் கழிந்­தோடி விட்ட நிலையில் படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் பெற்­றோர்கள், உற­வி­னர்கள் பகிர்ந்து கொண்ட கருத்­துக்கள் இங்கு பதிவு செய்து கொள்­ளப்­ப­டு­கி­றது.

எனது மகள் ரொமிலா சிவப்­பி­ர­காசம் 2006 ஆம் ஆண்டு படு­கொலை செய்­யப்­பட்டாள். இது­வரை உண்­மைகள் கண்டு பிடிக்­கப்­ப­ட­வில்லை. அர­சாங்­கமும் அக்­கறை காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை. அக் ஷன்பாம் நிறு­வ­னமும் கூடிய அக்­கறை எடுப்­ப­தாக தெரி­ய­வில்லை என அந்ததாய் தெரி­வித்தார்.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி (1–8–2006) கட­மைக்­காக மூதூ­ருக்கு சென்றார் எனது மகள். போனவள் தொலைபேசி மூலம் ஒரு தக­வலைத் தெரி­வித்தாள். மூதூரில் பதற்­ற­மாக இருக்­கி­றது. வீட்­டுக்கு வர முடி­யாது போலி­ருக்­கி­ற­தென எனது மகள் ரொமிலா கூறினார். தகப்பன் மகளைக் கூட்­டி­வரப் புறப்­பட்­ட­போதும் நிறு­வன அதி­கா­ரிகள் தாங்கள் கூட்­டிக்­கொண்டு வருவோம், நீங்கள் வர­வேண்­டா­மென தடுத்­தார்கள். நாங்கள் அதை நம்­பி­யி­ருந்தோம். ஆனால் நாலாம் திகதி கொல்­லப்­பட்­டார்கள் என்ற கொடூ­ர­மான செய்திதான் எமக்கு கிடைத்­தது.

“அம்மா பய­மாக இருக்­கி­றது. சாப்­பா­டு­மில்லை, கஞ்­சிதான் குடிச்சோம்” என மகள் அழுது கூறினாள். நாலாந்­தேதி தொலை­பேசி மூடப்­பட்­டு­விட்­டது. நிறு­வ­னத்தின் பெரி­யவர் அங்கு இருந்­தி­ருந்தால் படு­கொலை செய்­யப்­பட்ட அனை­வ­ரையும் காப்­பாற்றிக் கொண்டு வந்­தி­ருப்பார். துர­திர்ஷ்ட வச­மாக அவர் அன்று இருக்­க­வில்­லை­யெனக் கேள்­விப்­பட்டோம்.

இறந்­த­வர்­க­ளு­டைய சட­லங்­களைக் கூட, யாரும் கொண்டு வந்து தர­வில்லை. எனது மகனும் அவ­ரது நண்­பர்­களும் மற்­ற­வர்­க­ளு­டைய உற­வி­னர்­க­ளுமே டிராக்­டரில் சட­லங்­களைக் கொண்டு வந்­தார்கள்.

எனது ஆம்­பிள்ளைப் பிள்­ளை­க­ளுக்கு வெளி­நாட்டில் அடைக்­கலம் தாருங்கள் என மன்­றா­டினோம். ஒரு சின்ன அளவு உத­வி­யையும் அக் ஷன்பாம் செய்ய முன்­வ­ர­வில்லை. ஏலவே எனது மூத்­த­மகன் அனஸ்லி சிவப்­ப­ிர­காசம் திரு­கோ­ண­மலை புனித பிரான்ஸிஸ் சவே­ரியார் பாட­சா­லையில் படித்துக் கொண்­டி­ருந்த போது, பொதுக்­கு­ழாயில் நீரை எடுக்க பாட­சா­லைக்கு வெளியே வந்த போது (21.02.1998) இனந்தெரி­யா­த­வர்­களால் சுட்டுக்கொல்­லப்­பட்டான். அவன் இறந்து எட்டு வரு­டங்­க­ளுக்குப் பிறகு மூதூரில் படு­கொ­லையில் எனது மகள் ரொமி­லாவை பறி கொடுத்தேன் என அந்த தாய் புலம்­பிய வண்ணம் தன் வேத­னையை எம்­முடன் பகிர்ந்து கொண்டார்.

திரு­கோ­ண­மலை மனை­யா­வெ­ளியில் இருக்கும், கணேஷ் சிவ­னேஷ்­வரி தனது கணவன் செல்­லையா கணேஷ் மற்றும் தனது மகள் கவிதா கணேஷ் ஆகிய இரு­வ­ரையும் மூதூர் படு­கொலைச் சம்­ப­வத்தில் பறி­கொ­டுத்த வேத­னையை எம்­முடன் பகிர்ந்து கொண்டார்.

எனது கணவன் 15, வரு­டங்­க­ளுக்கு மேலாக அக் ஷன் பாம் என்ற தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றி வந்­தவர். எனது மகள் கவி­தாவும் அதே நிறு­வ­னத்தில் கட­மை­யாற்­றினார். நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்­ட­பின்­பா­வது எமது பிள்­ளை­களின் படு­கொலை சம்­ப­வத்­துக்கு நல்­ல­தொரு நீதி கிடைக்­கு­மென பெரி­ய­ளவில் நம்­பி­யி­ருந்தோம். புதிய அர­சாங்கம் வந்து 18 மாதங்­க­ளுக்கு மேலா­கி­விட்­டது. எனது கணவன், மகள் இழப்பை நட்ட ஈடு­களோ, சன்­மா­னங்­களோ ஈடு­கட்ட முடி­யாது. இரு உயிர்­களை அநி­யா­ய­மாக எமது குடும்பம் பறிகொடுத்து நிற்­கி­றது. எனது மகள், கணவன் ஆகி­யோரின் இழப்­புக்­களை எப்­ப­டித்தான் தாங்கி இந்த பத்­து­வ­ரு­டங்கள் ஓடி விட்­டன என்­பதை என்னால் நம்ப முடி­ய­வில்லை. இரு உயிர்­களின் இழப்­புக்கள் என்­னையும் எனது குடும்­பத்­தையும் எப்­படி பாதித்­தி­ருக்­கி­றது என்­பதை சொல்லிப் புரியவைக்க முடி­யாது என தனது கண­வ­னையும், மக­ளையும் பறி­கொ­டுத்த அந்த அம்மா கண்ணீர் வழிந்­தோட தனது துய­ரத்தை எம்­மிடம் கொட்­டினார்.

2006 ஆம் ஆண்டு திரு­கோ­ண­மலை மாவட்­டத்தைப் பொறுத்­த­வரை ஒரு துயரம் நிறைந்த ஆண்­டாகும். ஊட­க­வி­ய­லா­ளர்கள், 5 மாண­வர்கள் படு­கொலை, இளை­ஞர்­கொலை, மீன­வர்­கொலை, கடற்­ப­டைத்­தளம், சீனக்­குடா விமான நிலை­யத்தின் மீதும் ஆட்­லறித் தாக்­குதல், (12.08.2006) பவுல் முனை கடற்­ப­ரப்பில் அதி­வேக, டோரா படகு வெடித்து சித­றி­யது. (07.01.2006) அநு­ரா­த­புரச் சந்­தியில் வீதிச் சோதனைச் சாவ­டிக்கு அருகில் கிளேமோர் தாக்­கு­தலில் 6 பேர் கொல்­லப்­பட்­டமை.

கிழக்கை கதி­க­லங்க வைத்த மாவி­லாறு யுத்தம் (01–08–2006) இந்த யுத்தம் கார­ண­மாக ஆயி­ரக்­க­ணக்­கான தமிழ் முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்­தமை போன்ற ஏகப்­பட்ட துயரச் சம்­ப­வங்­களை தனது நிகழ்ச்சி நிர­லாகக் கொண்ட ஆண்டு 2006 ஆம் ஆண்­டாகும்.

மாவி­லாறு யுத்தம் தொடங்­கப்­பட்டு சுமார் நான்கு நாட்­க­ளுக்குள் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தை மாத்­தி­ர­மல்ல உலக “ நாடு­க­ளையே கதி­க­லங்க வைத்த மூதூர் படு­கொ­லை­யென வர்­ணிக்­கப்­படும் அக் ஷன் பாம் தொண்­டர்­க­ளான 17 பேர் கொல்­லப்­பட்­டார்கள். (4.8.2006) அவர்கள் உயிர்கள் பறிக்­கப்­பட்டு இன்­றுடன் பத்­து­ வ­ரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன.

இப்­ப­டு­கொ­லையில் அக் ஷன்பாம் தொண்­டர்­க­ளான முத்­து­லிங்கம், நர்­மதன், சக்­திவேல் கோணேஷ்­வரன், ரிச்சர்ட் அருள்ராஜ், சிங்­க­ராஜா –ஸ்ரீமஸ், ஆனந்த ராஜா, மோக­னதாஸ் ரவிச்­சந்­திரன் , ரிஷி­கேசன், கன­க­ரத்­தினம் கோவர்த்­தனி, கணேஷ் கவிதா, செல்­லையா கணேஷ், சிவப்­பி­ர­காசம் ரொமிலா, வயி­ர­முத்து கோகி­ல­வ­தனி, அம்­பி­கா­வதி ஜெய­சீலன், கணேஷ் ஸ்ரீதரன், துரை­ராஜா கேதீஸ்­வரன், யோக­ராஜா கோடீஸ்­வரன், முர­ளீ­தரன் தர்மரட்ணம், ஏ.எல்.மொகமட் ஜப்பா ஆகியோர் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

மூதூர் பொது வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் இயங்கி வந்த அக் ஷன் பாம் எனும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தில் கட­மை­யாற்றிக் கொண்­டி­ருந்த மேற்­படி 17, பணி­யா­ளர்­க­ளையும் ஆயுதம் தரித்த சீரு­டைக்­கா­ரர்கள் நிறு­வன வளா­கத்­துக்குள் நுழைந்து நிலத்தில் குப்­பு­றப்­ப­டுக்கப் பண்ணி பின்­பக்­க­மாக தலை­யில் சுட்டு படுகொலைப்­ப­டுத்­தி­ய­தாக அன்­றைய செய்­திகள் தெரி­வித்­தன.

இந்தப் பணி­யா­ளர்கள் படு­கொலை செய்­யப்­பட்டபோது தாங்கள் கட­மை­யாற்றும் சர்­வ­தேச தொண்டர் நிறு­வ­னத்தை அடை­யா­ளப்­ப­டுத்தும் சீரு­டைகள் அணிந்து இருந்­த­துடன் நிறு­வன வளா­கத்­துக்­குள்­ளேயே பல நாட்கள் தங்­கி­யி­ருந்­துள்­ளனர். மாவி­லாறு யுத்தம் மூண்­டதன் கார­ண­மா­கவும் உக்­கி­ர­மான போர் இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையே வெடித்த நிலையில் வெளியில் செல்ல முடி­யா­மலும், மாற்றார் வந்து பாது­காப்பு வழங்க முடி­யாத நிலையில் நிறு­வன வளா­கத்­துக்குள் சுமார் மூன்று நாட்கள் உண­வின்றி உறக்­க­மின்றி பாது­காப்­பைத்­தேட முடி­யாமல் அடை­பட்டுப் போய்க்­கி­டந்த அவர்­க­ளுக்­குத்தான் ஆகஸ்ட் 4 ஆம் திகதி அந்தக் கொடூரம் நடந்­தது. இப்­ப­டு­கொ­லையில் பலி­யா­ன­வர்­களில் மணம் புரி­யாத 4 இளம் பெண்கள் ஏனைய 13 பேரும் ஆண்­க­ளாவர்.

இப்­ப­டு­கொ­லையைக் கேள்­வி­யுற்ற பல்­வேறு சர்­வ­தேச அமைப்­புக்கள், மனித உரிமை ஸ்தாப­னங்கள், ஆர்­வ­லர்கள் கதி­க­லங்கிப் போனார்கள். சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்கம் ஐ.நா.வின் அக­தி­க­ளுக்­கான உயர்ஸ்தானிகர் ஆலயம் மற்றும் ஐரோப்­பிய ஒன்­றியம் உட்­பட பல அமைப்­புக்கள் இப்­ப­டு­கொ­லையை வன்­மை­யாக கண்­டித்­தன. மனித குல வர­லாற்றில் கண்­மூ­டித்­த­ன­மான காட்­டு­மி­ராண்டித்தனம் என அவை சாடி­யி­ருந்­தது.

அக்­கொ­டூர காட்­சியைப் பார்த்த சிலர் இப்­படி விவ­ரணம் செய்­தார்கள். மனித மூளை­களில் பிளம்­புக்கள் தலை­யெல்லாம் சிதறிக் கிடந்­தன. மனித சரீ­ரத்தின் உன்­ன­த­மான பார்வை மணிகள் பரவிக் கிடந்­தன என அக்­காட்­சியை சம்­பவம் நடை­பெற்­ற­தற்குப் பின் பார்த்­த­வர்கள் அழுது புலம்­பி­ய­தாக அந்­நாளில் செய்தி வெளி­யிட்ட ஏடு ஒன்று தெரி­வித்­தி­ருந்­தது. கடந்த 25 வரு­ட­கால வர­லாற்றில் இவ்­வா­றா­ன­தொரு கொடு­மை­யான படு­கொலை நடந்­த­தில்­லை­யென பிரான்ஸ் நாட்டில் இயங்கி வரும் பட்­டி­னிக்கு எதி­ராக செயற்­பட்­டு­வரும் அமைப்­பான ACF தெரி­வித்­தி­ருந்­தது. சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கத்தின் திரு­கோ­ண­மலை மாவட்ட தலை­வ­ராக அன்­றைய நாளில் செயற்­பட்டு வந்த யுவோன் என்­பவர் தான் வெளி­யிட்ட அறிக்­கையில் இச்­சம்­பவம் பற்றி பின்­வ­ரு­மாறு கண்­டனம் தெரி­வித்­தி­ருந்தார்.

இலங்­கையின் வட­கி­ழக்கில் 1983 ஆம் ஆண்­டுக்குப் பின் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­க­ளுக்கு மனி­தா­பி­மான ரீதியில் தொண்டுப் பணிகள் செய்­து­வரும் தொண்­டர்கள், பணி­யா­ளர்கள் பாது­காப்பு குறித்தும் அங்­குள்ள பாது­காப்பு நிலை­மைகள் மீதும் மிகுந்த அக்­க­றையும் அவ­தா­னிப்பும் செலுத்தி வரு­கிறோம்.

மூதூர் மக்­க­ளுக்கு பெறு­ம­தி­மிக்க பணி­களை ஆற்­றி­வந்த தொண்­டர்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட மிக மோச­மான மூர்க்­கத்­த­ன­மான தாக்­குதல் இது­வாகும் என இவ்­வா­றான காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மான தாக்­கு­தல்கள் மனி­தா­பி­மான, பணி­க­ளையும் தொண்­டு­க­ளையும் மிக மோச­மாகப் பாதிக்­கு­மென யுவோன் தனது அறிக்­கையில் (09.08.2006) குறிப்­பிட்­டி­ருந்தார்.

இச்­சம்­பவம் நடை­பெற்ற மறு­வாரம் இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் கருத்துத் தெரி­வித்த இடர் முகா­மைத்­துவம் மற்றும் மனித உரி­மைகள் அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க இவ்­வாறு தெரி­வித்­தி­ருந்தார்.

பிரான்ஸ் நாட்டின் தொண்டர் நிறு­வ­ன­மான அக் ஷன் பாம் ஊழியர் படு­கொலை விவ­கா­ரத்தில் படை­யினர் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்ற விடயம் இன்னும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அவ்­வாறு படை­யி­ன­ருக்கு தொடர்பு இருக்­கு­மானால் அவர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்கள்.

மக்­க­ளுக்­காக தொண்­டாற்­றிய இவர்­களை யார் எந்த நோக்­கத்­துக்­காக கொலை செய்­தார்கள் என்ற உண்­மையை கண்­ட­றி­வது புதி­ரா­க­வே­யுள்­ளது. விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. விசா­ர­ணையின் பின் உண்­மைகள் கண்­ட­றி­யப்­ப­டு­மென நம்­பு­கின்றேன். அந்த உண்­மையின் அடிப்­ப­டையில் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள் என அமைச்சர் தெரி­வித்­தி­ருந்தார் (08.08.2006).

இவை மட்­டு­மன்றி இலங்கை அர­சாங்­கத்தால் நிய­மிக்­கப்­பட்ட, கற்­றுக்­கொண்ட பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் பற்­றிய ஆணைக்­கு­ழு­வினர் இலங்­கையில் இடம்­பெற்ற மிக மோச­மான மனித உரி­மைகள் மீறல்கள் தொடர்பில் திரு­கோ­ண­ம­லையில் 2006 ஆம் ஆண்டு இடம்­பெற்ற 5 மாண­வர்கள் படு­கொலை மற்றும் 17 தொண்­டர்கள் படு­கொ­லைகள் சம்­பந்­த­மாக (9.120) பரிந்­து­ரையில் பின்­வ­ரு­மாறு விதந்­து­ரை­களைச் செய்­தி­ருந்­தார்கள்.

ஜன­வரி 2, 2006 இல் இடம்­பெற்ற திரு­கோ­ண­மலை 5 மாண­வர்­களின் படு­கொ­லைகள் மற்றும் ஆகஸ்ட் 4 இல் இடம்­பெற்ற பட்­டினிக்கெதி­ரான தொண்டர் நிறு­வ­னத்தின் 17 தொண்­டர்கள் கொலைச் சம்­ப­வங்­களில் மேலும் புலன்­வி­சா­ர­ணைகள் மற்றும் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் மீதான வழக்கு தொடர் தொடர்­பாக புலன் விசா­ர­ணை­களை செய்து விசா­ரிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு ஆணைக்­குழு பல­மாக பரிந்­து­ரைக்­கி­றது என மேற்­படி நல்­லி­ணக்க ஆணைக்­குழுவில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வாறு சர்­வ­தேச அள­விலும் உள்­நாட்டு நிலை­யிலும் பல்­வேறு கண்­ட­னங்­களும் விமர்­ச­னங்­களும் இருந்து வந்த போதும் இப்­ப­டு­கொலை மீது கவனம் காட்­டாமை பாதிப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி வழங்­காமை என்­பது இன்றுவரை இழு­பறி கொண்­ட­தா­கவே காணப்­ப­டு­கின்­றது என்­பது உண்மை. இவ்­வி­டயம் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களும் உற­வி­னர்­களும் தமது அதி­ருப்­தியை மாத்­தி­ர­மல்ல, விச­னத்­தையும் தெரி­வித்து வரு­வதை கேட்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

இப்­ப­டு­கொலை சம்­பந்­த­மாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அவர்கள் விசேட ஆணைக்­குழு ஒன்றை நிய­மித்­தி­ருந்தார். முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­பதி நிசங்க உட­ல­கம தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட விசேட ஆணைக்­கு­ழு­வா­னது தனது விசா­ர­ணை­களை முழு­மைப்­ப­டுத்­தா­மலே தனது விசா­ரணைப் பணியை இடையில் நிறுத்திக் கொண்­டது. இந்த மனித உரிமை மீறல் சம்­ப­வங்­க­ளுக்­கான சாட்­சிகள் பலர் குடும்­பங்­க­ளுடன் வெளிநா­டு­க­ளுக்கு சென்று விட்­டதால் அவர்­க­ளி­ட­மி­ருந்து வீடியோ மூலம் சாட்­சி­யங்­களைப் பதிவு செய்­வதில் உள்ள பிரச்­சி­னை­க­ளாலும் இலங்­கையில் சாட்­சி­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்­கான சட்டம் அமுலில் இல்­லா­த­தாலும் தம் ஆணைக்­கு­ழுவால் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து செல்ல முடி­ய­வில்­லை­யென ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரான உட­ல­கம தெரி­வித்தார்.

அவர் தனது அறிக்­கையின் தீர்ப்பில் இன்­னு­மொரு விட­யத்தை குறிப்­பிட்­டி­ருந்தார். அவ்­வ­ரி­களை அப்­ப­டியே தரு­கின்றேன். “மூதூர் அக் ஷன் பாம் ஊழி­யர்கள் 17 பேர் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்தில் இலங்கைப் படை­யி­ன­ருக்கு எவ்­வித சம்­பந்­தமும் கிடை­யாது என்­ப­தனை விசா­ர­ணைகள் மூலம் அறி­யக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. ஆயினும் அச்­சம்­ப­வத்தில் முஸ்லிம் ஊர்­காவல் படை­யி­ன­ருக்கு சம்­பந்தம் இருப்­ப­தற்­கான வாய்ப்பு இருப்­ப­தாக உட­ல­கம தெரி­வித்­தி­ருந்தார் நன்றி பி.பி.சி.(16 யூலை 2009)

திரு­கோ­ண­ம­லையில் படு­கொலை செய்­யப்­பட்ட 5 மாண­வர்கள் கொலை மற்றும் மட்­டக்­க­ளப்பு பாராளு­மன்ற உறுப்­பினர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம் கொலை ஆகிய சம்­ப­வங்கள் தொடர்பில் சாட்­சி­யங்கள் வெளி­நா­டு­களில் இருப்­ப­துடன் அவர்கள் சாட்­சி­ய­மளிக்க தயா­ராக இருக்­கின்ற போதிலும் வீடியோ மூலம் சாட்­சி­களைப் பதிவு செய்­வதில் உள்ள தடை­களால் அவற்றை பெற முடி­ய­வில்­லை­யெ­னவும் அவர் மேலும் தெரி­வித்­தி­ருந்தார்.

கடந்த 10 வரு­டங்­க­ளுக்கு மேலாக தேக்க, முடக்கம் பெற்­றி­ருக்கும் 17 தொண்டர் நிறு­வனப் படு­கொலை சம்­பந்­த­மாக புதிய அர­சாங்­கமும் வாழாது இருப்­பதும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி பெற்றுத்தராமல் காலம் கடத்துவதும் நல்லாட்சிக்கான உயர் தார்மீகமாக இருக்க முடியாது என்பது பாதிக்கப்பட்டவர்கள் சார் பில் முன்வைக்கப்படும் விமர்சன மாகும்.

உண்மை கண்டறியப்பட வேண்டும். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். தண்டனை யென்ற வியாகூலங் களுக்கு அப்பால் யார் குற்றவாளிகள் என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென்பதே உறவினர்கள் மற்றும் இழப்பாளர்களுடைய கோரிக்கையாகவும் விண்ணப்பமாகவும் இருக்கிறது என்பதை அவர்களை அணுகி விசாரிக்கும் போது தெரிந்து கொள்ளக் கூடிய தாகவுள்ளது.

பத்து வருடம் ஓடிப்போன நிலை ஒருபுற மிருக்க, புதிய நல்லிணக்க அரசாங்கமானது உடன் நீதியைப் பெற்றுத் தர ஆவன செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவ்வாரம் வெளியிட்ட தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளது.

அவ்வறிக்கையில் குறிப்பிட்டி ருப்பதாவது, பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டு ஒரு தசாப்த காலம் முடிவடையும் நிலையில் அத ற்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை அதிகாரிகளால் கைது செய்யப்படவில்லை. யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேனவினால் அமைக்கப் படவிருக்கும் விசேட நீதிமன்றம் இந்த அரசசார்பற்ற பணியாளர்களின் கொலை குறித்த விசாரணைகளை நடத்தி அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க ஆவன செய்ய வேண்டுமென அவ்வமைப்பு கோரியுள்ளது. ஆதாரம் (02.08.2016) செய்தித்தாள்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆணைக்குழுவை நியமித்திருந்தார். இருந் தும் குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேன தலைமையிலான அரசு உண்மையைக் கண்டறிய வேண்டுமென்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

திரு­மலை நவம்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-05#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.