Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரே கட்சியாவது சாத்தியமா?

Featured Replies

தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரே கட்சியாவது சாத்தியமா?

 

துரை­சாமி நட­ராஜா

மலை­யக அர­சியல் மற்றும் தொழிற்­சங்­கங்கள் தொடர்பில் நீண்­ட­கா­ல­மா­கவே விமர்­ச­னங் கள் இருந்து வரு­கின்­றமை தெரிந்த விட­ய­மாகும். மலை­யக அர­சியல் தொழிற்­சங்­க­வா­தி­க­ளுக்கு இடை­யி­லான முரண்­பாட்டுத் தன்­மை­யா­னது மக்­களின் உரி­மைகள் பறி­போ­வ­தற்கு உந்­து­சக்­தி­யாக அமைந்­துள்­ள­தா­கவும் விச­னங்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஐக்­கி­யத்தின் அவ­சி­யமும் உணர்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இத­னி­டையே தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் பிர­தித்­த­லை­வரும், அமைச்­ச­ரு­மான பி.திகாம்­பரம் கூட்­டணி ஒரே கட்­சி­யா­கவும், தொழிற்­சங்­கங்கள் ஒரே சங்­க­மா­கவும் செயற்­பட வேண்­டிய அடுத்­த­கட்டம் உத­ய­மா­கி­விட்­டது என்று வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். இந்த ஒற்­று­மைத்­தன்மை ஏற்­பட்­டுள்­ளதன் அவ­சியம் குறித்து இதனால் ஏற்­படும் ஏனைய விளை­வுகள் குறித்தும் பலர் விமர்­ச­னங்­களை முன்­வைத்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மா­க­வுள்­ளது.  

 

 

அர­சியல் கட்­சி­களும் தொழிற்­சங்­கங்­களும்  

அர­சியல் கட்­சிகள், தொழிற்­சங்­கங்கள் என்­பன மக்­களின் மேம்­பாடு கருதி பல­த­ரப்­பட்ட சேவை­க­ளையும் வழங்கி வரு­கின்­றன. அர­சியல் கட்சி என்­பது ஒரு சமூ­கத்­தி­னது ஒட்­டு­மொத்­த­மான உரி­மைகள் தொடர்­பா­கவும், சமூக, பொரு­ளா­தார, அர­சியல் ரீதி­யா­கவும் கொள்­கை­களை வகுக்­கக்­கூ­டிய ஒரு அமைப்­பாக உள்­ளது. கட்சி என்­பது ஒரு அர­சியல் ரீதி­யான அமைப்­பாகும். கட்சி என்­பது ஒரு அர­சாங்­கத்தை அமைக்கும் நிலையை அடை­யலாம். அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு ஆத­ரவும் வழங்­கலாம். பல கட்­சிகள் இணைந்து ஒரு அமைப்­பாக செயற்­ப­டவும் முடியும். ஒரு சமூ­கத்­திற்கு குறிப்­பிட்ட கால­கட்­டத்­திற்கு என்­னென்ன தேவைகள் அவ­சி­ய­மாக உள்­ளன என்­பதை இனங்­கண்டு கொள்­கை­களை வகுத்து செயற்­பட வேண்­டிய நிலை கட்­சியை சார்ந்­த­தாகும். ஆழ­மான சிந்­த­னை­யு­டனும், தூர நோக்­கு­டனும் கட்சி இவ்­வி­ட­யத்தை கையா­ளுதல் வேண்டும்.

கட்­சிகள் ஒவ்­வொன்றும் ஒவ்­வொரு போக்­கினை கொண்­டி­ருக்­கின்­றன. சில கட்­சிகள் ஜன­நா­யக ரீதி­யாக செயற்­பட்டு மக்­களின் நலன்­களை பேண முயல்­கின்­றன. இன்னும் சில கட்­சிகள் போராட்­டங்­களின் மூலம் தனது செயற்­பா­டு­க­ளுக்கு வலு­சேர்த்து வரு­கின்­ற­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாக உள்­ளது. ஜன­நா­யக ரீதியில் குரல்­கொ­டுத்து வந்த சில கட்­சிகள் தமது நட­வ­டிக்­கைகள் சாத்­தி­யப்­ப­டாத அல்­லது எதிர்­பார்த்த சாதக விளை­வு­களை ஏற்­ப­டுத்­தாத நிலையில் பின்னர் போராட்ட வழி­யினை தேர்ந்­தெ­டுத்த நிகழ்­வு­களும் உல­க­ளா­விய ரீதியில் இருக்­கத்தான் செய்­கின்­றன. ஆயுதப் போராட்­டத்­திற்கும் ஒரு கட்சி தலை­மை­யினை வழங்க முடியும். கட்­சிகள் ஆயுத ரீதி­யான போராட்­டங்­களில் ஈடு­பட்டும் மக்­களின் உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுத்­தி­ருக்­கின்­றன என்­ப­தனை உலக வர­லா­றுகள் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றன. ஒரு கட்சி தனியே ஆயுதப் போராட்­டத்தில் மட்­டுமே நம்­பிக்கை வைக்க வேண்­டி­ய­தில்லை. அதைப்­போன்று ஜன­நா­யக போராட்­டத்தில் மட்­டு­மேயும் நம்­பிக்கை வைக்க வேண்டும் என்­றில்லை. ஜன­நா­யக ரீதியில் போராடி உரி­மைகள் உரி­ய­வாறு கிடைக்­கா­த­போது ஆயுதப் போராட்­டங்­க­ளுக்கு வித்­தி­டப்­பட்ட கசப்­பான நிகழ்­வுகள் இருக்­கின்­றன. ஆயுதப் போராட்­டத்­தினை மக்­களும் கூட நியா­யப்­ப­டுத்தி இருந்­தனர். ஆயுதப் போராட்­டமா, ஜன­நா­யக போராட்­டமா என்­ப­தனை அந்­தந்த நாடு­களின் உள்­ளக நிலை­மை­களே பெரிதும் தீர்­மா­னிப்­ப­தாக அமையும் என்­ப­த­னையும் மறுப்­ப­தற்­கில்லை. எந்தக் கட்­சியும் எப்­ப­டியும் நடக்­கக்­கூடும்.

ஜன­நா­யக வரை­ய­றையில் அர­சுகள் இயங்­கு­கின்­றன. அர­சியல் கட்­சிகள் தொலை நோக்­கி­லான தன்­மை­யு­டை­யன. சமூ­கத்தின் நீண்­ட­கால மற்றும் குறுங்­கால தேவை­களை அறிந்து வைத்­தி­ருப்­பன. மலை­யக மக்கள் அல்­லது பிறி­தொரு சமூ­கத்­தினர் எதிலும் தங்கி நிற்­காத சுய­தேவைப் பொரு­ளா­தார திட்­டங்­களை எவ்­வாறு விரி­வு­ப­டுத்­தலாம், எவ்­வாறு உரு­வாக்­கலாம் என்­ப­தனை கட்­சிகள் மேற்­கொள்ள முடியும்.

தொழிற்­சங்­கங்­களை பொறுத்­த­வ­ரையில் தொழிற்­சங்­கங்கள் தொழி­லா­ளர்­களின் வாழ் வில் பின்­னிப்­பி­ணைந்த ஒன்­றாக விளங்­கு­கின்­றன. தொழி­லா­ளர்­களின் இன்­ப­துன்­பங்­களில் தொழி­லா­ளர்­க­ளுக்கு தோள் கொடுக்­கின்­றன. பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, சமூக வாழ்க்கை மேம்­பாடு, விளை­யாட்டு ஊக்­கு­விப்பு நட­வ­டிக்­கைகள், கல்வி அபி­வி­ருத்தி என்று சகல மட்­டங்­க­ளிலும் தொழிற்­சங்­கங்­களின் வகி­பா­கத்­தினை எம்மால் ஒரு­போதும் புறந்­தள்­ளி­வி­டு­வ­தற்­கில்லை. தொழில் நிலை­மை­களின் போது தொழி­லா­ளர்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கும் முகம்­கொ­டுக்க வேண்­டிய நிலைமை உரு­வாகும். இத்­த­கைய தொழி­லா­ளர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய அவ­சியம் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு இருக்­கின்­றது. இந்த நிலையில், தொழிற்­சங்­கங்கள் சுமு­க­மான பேச்­சு­வார்த்­தைகள், வேலை­நி­றுத்தம், மெது­வாக பணி­செய்யும் நட­வ­டிக்கை உள்­ளிட்ட பல்­வேறு அணு­கு­மு­றை­களின் ஊடாக தொழி­லா­ளர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கென்று உரிய ஒரு தீர்­வினை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு முய ற்­சிக்கும் ஒரு தொழிற்­சங்­கத்தில் தான் அங்கம் வகிப்­பதன் மூல­மாக தனக்கு என்­னென்ன நன்­மைகள் கிடைக்கும் என்­ப­தனை ஒரு அங்­கத்­தினர் தெரிந்து வைத்­தி­ருத்தல் வேண்டும். அத்­தோடு தொழிற்­சங்­கத்தின் வர­லாறு, கடந்­த­கால செயற்­பா­டுகள், சம­கால நகர்­வுகள் மற்றும் அணு­கு­மு­றைகள் உள்­ளிட்ட பல விட­யங்கள் குறித்தும் அங்­கத்­தி­னர்கள் தெரிந்து வைத்­தி­ருப்­ப­தா­னது மிகவும் பய­னுள்­ள­தா­கவே அமையும் எனலாம். தொழிற்­சங்கம் பற்­றியோ, அதனால் தனக்கு கிடைக்கும் நன்­மைகள் பற்­றியோ தெரிந்து கொள்­ளாது வெறு­மனே ஒருவர் தொழிற்­சங்­கத்தில் அங்கம் வகிப்­பா­ரானால் உரிய பலன்கள் அவ­ருக்கோ அல்­லது தொழிற்­சங்­கத்­திற்கோ ஏற்­ப­டப்­போ­வ­தில்லை என்­ப­த­னையும் நன்­றாக விளங்கிக் கொள்­ளுதல் வேண்டும்.

மலை­ய­கத்தை பொறுத்­த­வ­ரையில், அர­சியல் கட்­சி­களும் தொழிற்­சங்­கங்­களும் தொழி­லா­ளர்­களின் மேம்­பாட்­டிற்கு வித்­திட்டு வரு­கின்­றன. அதே­வேளை, தொழிற்­சங்­கத்தின் ஊடாக அர­சியல் பிர­வே­சமும் இங்கு இடம்­பெற்று வரு­கின்­ற­மையும் நீங்கள் அறிந்த விட­ய­மே­யாகும்.

ஐக்­கி­யத்தின் ஊடாக சமூக அபி­வி­ருத்தி  

உண்­மையில் குடும்பம், சமூகம், நாடு, உலகம் என்­கிற ரீதியில் ஐக்­கியம் என்­பது மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும். இந்த மட்­டங்­களில் எங்­கேனும் ஐக்­கியம் சீர்­கு­லை­கையில் அங்கு அபி­வி­ருத்தி மட்­டு­மல்­லாது அமை­தியும் சீர்­கு­லைந்து போவ­தனை நாம் நன்­க­றிவோம். இந்த வகையில் ஒரு சமூ­கத்தின் அபி­வி­ருத்­திக்கும் அமை­திக்கும் அச்­ச­மூகம் சார் அர­சியல் மற்றும் தொழிற்­சங்கவாதி­க­ளி­டை­யே­யான ஐக்­கிய கருத்­தொ­ரு­மித்த போக்கு தோள்­கொ­டுப்­ப­தாக அமையும் என்­பதே உண்மை. இந்த ஐக்­கிய நிலை­யா­னது மக்­க­ளி­டை­யேயும் இணக்­கப்­பா­டான, புரிந்­து­ணர்வு தன்­மை­யினை மேலோங்கச் செய்­வ­தாக அமையும்.

இந்­த­வ­கையில், மலை­யக அர­சியல் கட்­சிகள் மற்றும் தொழிற்­சங்­கங்கள் இடையே காணப்­படும் விரிசல் நிலை­மைகள் தொடர்பில் விமர்­ச­னங்கள் தொடர்ச்­சி­யா­கவே இருந்து வரு­கின்­றன. ஒருவர் இன்­னொ­ரு­வரை விமர்­சிப்­பதும் சிண்டு முடிப்­பதும் மலை­யக அர­சியல் தொழிற்­சங்க வாதி­க­ளி­டையே இருந்து வரும் வழக்­க­மாக உள்­ளது. இதற்­கென்று நாட்­டி­லுள்ள ஏனைய கட்­சி­க­ளி­டமும் தொழிற்­சங்­கங்­க­ளி­டமும் இந்த நிலை காணப்­ப­ட­வில்லை என்று நான் கூற­வ­ர­வில்லை. மலை­ய­கத்தில் சற்று அதி­க­மா­கவே உள்­ளது அவ்­வ­ள­வுதான். இந்த முரண்­பாட்­டுத்­தன்­மை­யா­னது மக்­களின் எழுச்­சிக்கும் உரி­மை­களை பெற்று முன்­செல்­வ­தற்கும் தடைக்­கல்­லா­கவே அமையும் என்­ப­தனை பலரும் வலி­யு­றுத்தி வந்­தி­ருக்­கின்­றனர். வலி­யு­றுத்­தியும் வரு­கின்­றனர். பின்­தங்­கிய ஒரு சமூ­கத்­தி­ன­ரி­டையே இத்­த­கைய முரண்­பாட்டு சூழ்­நி­லைகள் மேலும் பின்­ன­டை­விற்கு இட்­டுச்­செல்­வ­தா­கவே அமையும் என்ற குரல்­களும் ஓங்கி ஒலிப்­ப­தனை கேட்கக் கூடி­ய­தா­கவே இருக்­கின்­றது. எனவே, மலை­யக அர­சியல், தொழிற்­சங்­க­வா­தி­க­ளி­டையே ஒற்­றுமை நிலை மேலோங்க வேண்­டு­மென்றும் இதன் மூல­மா­கவே சமூக அபி­வி­ருத்­திக்கு இட்டுச் செல்­ல­மு­டியும் என்றும் புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்தி இருந்­தனர். இந்­திய வம்­சா­வளி பேரணி என்­கிற கூட்டு ஒரு காலத்தில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. எனினும், இக்­கூட்டு நீண்­ட­காலம் தாக்­குப்­பி­டிக்­க­வில்லை. எதிர்­பார்ப்­புகள் மழுங்­க­டிக்­கப்­பட்டு விட்­டன.

இத­னி­டையே தமிழ் முற்­போக்குக் கூட்­ டணி கடந்த 2015ஆம் ஆண்டில் உத­ய­மா­னது. மலை­யக மக்கள் முன்­னணி, ஜன­நா­யக மக்கள் முன்­னணி, தொழி­லாளர் தேசிய சங்கம் என்­பன கைகோர்த்து கூட்­ட­ணியை ஏற்­ப­டுத்­தின. இக்­கூட்­டணி இப்­போது தாக்குப் பிடித்­தி­ருக்­கின்­றது. மலை­யக மக்­களின் பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கு ஏகோ­பித்த நிலையில் ஒரு­மைப்­பாட்­டுடன் கூட்­டணி குரல்­கொ­டுத்து வரு­கின்­றது. கூட்­ட­ணியின் கூட்டு தொடர்ந்தும் நீடிக்க வேண்டும். இதனால் மலை­யக மக்கள் நன்­மை­களை பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும் என்று பலரும் கரு­து­வ­தாக கட்­சியின் முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­வித்தார். மேலும் இந்­தி­யாவும் கூட்­ட­ணியின் கூட்டு வலி­மை­பெற வேண்டும் என்று கரு­து­வ­தா­கவும் இவர் தெரி­வித்­தி­ருந்­த­மையும் கவ­னத்தில் கொள்­ளத்­தக்­க­தாகும்.

அமைச்சர் திகாம்­ப­ரத்தின் கருத்து

தமிழ் முற்­போக்குக் கூட்­டணி இணக்­கப்­பாட்­டுடன் ஒரு­மித்து செயற்­பட்டு வரு­கின்ற நிலையில் அமைச்­சரும், கூட்­ட­ணியின் பிர­தித்­த­லை­வரும், தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலை­வ­ரு­மான பி.திகாம்­பரம், தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணியின் கட்­சிகள் ஒன்­றுடன் ஒன்று கலந்து கூட்­டணி என்­பது தனி­யொரு கட்­சி­யாக செயற்­பட வேண்­டிய அடுத்­த­கட்டம் உத­ய­மா­கி­விட்­டது. அதேபோல் எமது கூட்­ட­ணியின் தொழிற்­சங்­கங்­க­ளான தொழி­லாளர் தேசிய சங்கம், மலை­யக தொழி­லாளர் முன்­னணி, ஜன­நா­யக தொழி­லாளர் காங்­கிரஸ் ஆகி­யன ஒன்­றுடன் ஒன்று இணைக்­கப்­பட்டு தமிழ் முற்­போக்கு கூட்­டணி என்­கிற அர­சியல் கட்­சியின் தொழிற்­சங்­க­மாக புதிய பதி­வு­செய்­யப்­பட்ட பொதுப் பெயரில் செயற்­பட வேண்­டிய காலமும் உத­ய­மா­கி­விட்­டது என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

மேலும் தமிழ் முற்­போக்குக் கூட்­ட­ணி யின் அங்­கத்­துவ கட்­சி­களை இணைத்துக் கொண்டு கூட்­ட­ணி­யாக இரண்டு வரு­டங்­களை கடந்­து­விட்டோம். இந்தக் கூட்­டணி சாத்­தி­ய­மா­காது என்று ஆரு­டங்கள் கூறி­ய­ வர்­களை வாய­டைக்க செய்­து­விட்டு, நாம் எமது இனத்தின் நலன், எதிர்­காலம் ஆகி­ய­வற்றை மாத்­திரம் கருத்­திற்­கொண்டு ஐக்­கி­யத்தை தொடர்ந்து நிலை­நாட்டி வந்­துள்ளோம். இது ஒரு சாதனை என்­ப­தனை வர­லாறு பதிவு செய்யும் என்று நம்­பு­கின்றேன். தனி நபர், தனிக்­கட்சி நலன்­களை விட சமூ­க­ந­லனே பெரிது என்­பது வர­லாறு எங்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுத்த பாட­மாகும். எனவே, அடுத்த உறு­தி­யான முற்­போக்கு முடி­வு­களை எடுத்து அடுத்த கட்­டத்­துக்குள் அடி­யெ­டுத்து வைக்க நாம் முடிவு செய்­துள்ளோம். இந்­நாட்டில் செயற்­படும் ஏனைய அர­சியல் கட்­சி­க­ளுக்கு தமிழ் முற்­போக்குக் கூட்­டணி ஏற்­க­னவே பல முன்­னு­தா­ர­ணங்­களை காட்­டி­யுள்­ளது. இது அதில் இன்­னு­மொரு மைல்­கல்­லாக அமையும். எமது இந்த முற்­போக்கு நிலைப்­பா­டு­களை எமது இன, சமூக நலனை நாடும் அனை­வரும் வர­வேற்­பார்கள் என்று நான் திட­மாக நம்­பு­கின்றேன். மக்கள் நலன்­களை விட சொந்த நலன்­க­ளையே முன்­னி­லைப்­ப­டுத்தும் பிற்­போக்­கா­ளர்கள் மட்­டுமே தம் இருப்­புக்கு ஒட்­டு­மொத்­த­மாக ஆபத்து என்று எதிர்ப்­பார்கள். இந்த எதிர்ப்­புகள் எம்மை எதுவும் செய்­து­வி­டாது. எம்மை நம்பும் இலட்­சக்­க­ணக்­கான நல்ல உள்­ளங்­களின் ஆத­ர­வுடன் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி எதிர்­கா­லத்­திற்குள் வீறு­நடை போடும் என்­கிறார் திகாம்­பரம்.

அத்­தோடு, கூட்­டணி ஒரே கட்­சி­யா­கவும், தொழிற்­சங்­கங்கள் ஒரே சங்­க­மா­கவும் மாற்­ற­ம­டைய வேண்­டி­யதன் அவ ­சியம் தொடர்பில் கூட்­ட­ணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், இரா­ஜாங்க அமைச்சர் இரா­தா­கி­ருஷ்ணன் ஆகி­யோ­ரிடம் திகாம்­பரம் கலந்து பேசி­யி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இது­வி­ட­ய­மாக புரிந்­து­ணர்வும், கொள்கை ரீதி­யான பொது உடன்­பாடும் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அமைச்சர் பி.திகாம்­பரம் வலி­யு­றுத்­து­கின் றார். இந்­நி­லையில், பல கட்­சிகள் கூட்­டாக இணைந்து செயற்­ப­டு­கின்­ற­மையால் கட்­சியின் தனித்­துவம் பேணப்­படும் என்றும் கட்­சிகள் பல ஒன்­றி­ணைந்து ஒரே அர­சியல் கட்­சி­யாக செயற்­ப­டு­வதால் பிரச்­சி­னைகள் தலை­தூக்­கக்­கூடும் என்றும் விமர்­ச­னங்கள் மேலெ­ழுந்து வரு­கின்­ற­மையை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது.

சவால்­களும் சங்­க­டங்­களும்

பல கட்­சிகள் கூட்­டாக செயற்­ப­டு­வ­தென்­பதே ஒரு பெரிய காரி­ய­மாகும். கருத்­தொ­ரு­மிப்பு, விட்­டுக்­கொ­டுப்பு, அர்ப்­ப­ணிப்பு என்­கிற ரீதியில் கட்­சிகள் நடந்­து­கொள்­கையில் அங்கு இணக்­கப்­பாடு தோற்றம் பெரு­கின்­றது. முரண்­பாடு மறை­கின்­றது. சமூக அபி­வி­ருத்திக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கின்­றது. எனினும், விட்­டுக்­கொ­டுப்பு, புரிந்­து­ணர்வு இல்­லாத நிலையில் விரி­சல்­களும் வேறு­பா­டு­களும் தலை­தூக்­கு­கின்­றன. நாட்டில் இப்­போது கூட்­டாக இணைந்து செயற்­படும் சில கட்­சிகள் கூட இந்த நிலை கார­ண­மாக இப்­போது பிரி­வ­டையும் நிலையில் உள்­ளன. இன்றோ, நாளையோ, நாளை மறு நாளோ பிள­வு­களும் பிரி­வு­களும் ஏற்­ப­டலாம் என்று நாட்கள் எண்­ணப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இத­னி­டையே பல கட்­சிகள் ஒரே கட்­சி­யாக மாற்றம் பெறு­கையில் சவால்­களும் சங்­க­டங்­களும் அதி­க­மா­கவே இருக்கும் என்­ப­தனை மறுப்­ப­தற்­கில்லை. அமைச்சர் திகாவின் கருத்­தின்­படி கட்­சிகள் ஒரே அர­சியல் கட்­சி­யா­கவும், தொழிற்­சங்­கங்கள் ஒரே தொழிற்­சங்­க­மா­கவும் உரு­மாற்றம் பெறு­வது சிறந்­ததே. எனினும், இதன் விளை­வுகள் எவ்­வாறு அமையும் என்று சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது. குறிப்­பாக, ஒவ்­வொரு தொழிற்­சங்க காரி­யா­ல­யங்­க­ளிலும் குறைந்­தது மூன்று, நான்கு பேர் தொழில் புரி­கின்­றார்கள். மூன்று தொழிற்­சங்­கங்களும் ஒன்­றி­ணைக்­கப்­ப­டு­கையில் ஒரே­யொரு தொழிற்­சங்க காரி­யா­லயம் மட்­டுமே அமைக்­கப்­படும் நிலையில் சில உத்­தி­யோ­கத்­தர்கள் தொழில்­களை இழக்­கக்­கூடும். இவ்­வாறு தொழில் இழப்போர் தொடர்பில் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது? இது ஒரு பாரிய பிரச்­சி­னை­யே­யாகும். தொழிற்­சங்­கங்­களின் மூல­மாக கிடைக்­கின்ற சந்­தாப்­பணம் கட்­சியின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு பெரிதும் கைகொ­டுக்­கின்­றது. மூன்று தொழிற்­சங்­கங்­களும் ஒன்­றி­ணைக்­கப்­ப­டு­மி­டத்து கட்­சி­களின் அர­சியல் செயற்­பாடு எவ்­வாறு அமையும்? சாத்­தி­யப்­ப­டுமா? கட்­சி­களின் சாதா­ரண அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க சவால்கள் தோன்றும்.

கட்­சிகள் ஒன்­றி­ணைக்­கப்­பட்­டதன் பின் னர் தலை­மைத்­துவ ரீதி­யான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டலாம். தலைவர் யார், செய­லாளர் யார், என்­பதில் விட்­டுக்­கொ­டுப்­புகள் எந்­த­ள­வுக்கு அமையும்? அதி­க­ளவு அங்­கத்­தி­னர்­களை கொண்ட கட்சி தலை­மைத்­துவ ரீதியில் எந்­த­ளவு அணு­கு­மு­றை­களை பின்­பற்றும் என்ற கேள்­வியும் எழு­கின்­றது. மேலும் ஒவ்­வொரு கட்­சி­யிலும் தொழிற்­சங்­கத்­திலும் மேல் மட்­டத்தில் பல சம்­பள உத்­தி­யோ­கத்­தர்கள் இருக்­கின்­றார்கள். இவர்­களின் நிலைமை என்­ன­வாகும்? மாற்­றீ­டாக இவர்­க­ளுக்கு என்ன செய்­யப்­பட இருக்­கின்­றது? கட்­சி­யி­னையும், தொழிற்­சங்­கத்­தி­னையும் வளர்த்­தெ­டுப்­ப­தற்கு பலர் பல்­வேறு தியா­கங்­களை புரிந்­தி­ருக்­கின்­றார்கள். இவர்­களின் தியா­கங்கள் கட்­சி­களும் தொழிற்­சங்­கங்­களும் ஒன்­றி­ணைக்­கப்­ப­டு­வ­தனால் மழுங்­க­டிப்பு நிலைக்கு உள்­ளா­குமா என்­பது குறித்தும் ஆழ­மாக நோக்க வேண்­டிய ஒரு தேவையும் இங்கு காணப்­ப­டு­கின்­றது. தொழி­லாளர் தேசிய சங்கம், மலை­யக மக்கள் முன்­னணி, ஜன­நா­யக மக்கள் முன்­னணி என்­பன முற்­றாக கலைக்­கப்­பட்டு ஒரு புதிய கட்சி உரு­வாக்­கப்­ப­டுமா? அல்­லது கட்­சி­களின் அங்­கத்­த­வர்­களை உள்­ள­வாறே சேர்த்­துக்­கொண்டு புதிய கட்சி உரு­வாக்­கப்­ப­டுமா? இது சாத்­தி­ய­மா­குமா?

தொழிற்­சங்க அர­சியல், உரிமை சார்ந்த அர­சியல் என்­ப­வற்­றுக்­கி­டையில் ஒரு பொது­வான இணக்­கப்­பாடு எட்­டப்­பட்டு மூன்று கட்­சி­களும் உடன்­பாடு காணுமா? மாறு­பட்ட கருத்­தினை கொண்­டதாக மலை­யக மக்­க­ளுக்­கான தனி­யான அதி­ கார அலகு விட­யத்தில் அர­சியல் கட்­சி கள் இருந்து வரு­கின்­றன. இத்­த­கைய பல விட­யங்­களில் ஒரு உடன்­பாடு எட்­டு­ வ­தற்கு வாய்ப்­புள்­ளதா என்று பல கோண ங்­க­ளிலும் சிந்­திக்க வேண்டி இருக்­கின்­றது. கட்சித் தலை­வர்கள் மட்­டத்தில் ஒரே அர­சியல் கட்சி ஒரே, தொழிற்­சங்கம் என்ற விடயம் ஆரா­யப்­பட்­டி­ருக்­கின்­றது. எனினும் கட்­சியின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை உள்­ளிட்ட கீழ்­மட்ட உறுப்­பி­னர்­களின் கருத்­துக்கள் முறை­யாக உள்­வாங்­கப்­பட வேண்டும் என்­பதும் பலரின் எதிர்­பார்ப்­பாக இருக்­கின்­றது. பல கட்சி முறை என்­பது ஜன­நா­ய­கத்தின் முக்­கிய அம்­ச­மாகும். இது வலு­வி­ழந்து ஒரே கட்­சி­முறை போலெ­ழும்­பு­கையில் வேறு­பட்ட சிந்­த­னைகள், செயற்­பா­டு­களை கொண்­ட­வர்­க­ளுக்கு என்ன நடக்கும்? அவர்­களின் கருத்­துக்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­கப்­ப­டுமா என்ற சந்­தே­கமும் மேலெ­ழும்­பு­கின்­றது. ஒரே கட்­சி­யா­னது தொழிற்­சங்க அர­சி­ய­ல­மைப்பையா? அல்­லது உரிமை சார்ந்த அர­சி­ய­ல­மைப்பையா? முன்­னெ­டுக்­கப்­போ­கின்­றது என்­பதும் தெளி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும். தமிழ் முற்­போக்குக் கூட்­டணி கூட்­டுக்­கட்­சி­களின் அமைப்­பாக இருக்கும் போது உரை­ய­கத்­தன்மை ஓர­ள­வா­வது காண ப்­படும் என்­பது -----சிலரின் கருத்­தாக இருக்­கின்­றது. கொள்­கைக்­காக ஒன்­றி­ணை­வதும் பிரிந்து செல்­வதும் இங்கு காணப்­படும். இது ஒரு பிரச்­சி­னை­யா­காது. தனிக்­கட்சி என்னும்போது இந்த ஜன­நா­யகத் தன்மை எவ்­வாறு அமையும் என்றும் இவர்கள் மேலும் கருத்து வெளி­யிட்­டுள்­ளனர்.

தொழிற்­சங்­கங்கள் மூன்றும் ஒன்­றி­ணைக்­கப்­ப­டு­வ­தனை விரும்­பா­த­வர்­களும் இருக்­கத்தான் செய்­கின்­றனர். இத்­த­கைய அதி­ருப்­தி­யா­ளர்கள் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸுடன் இணைந்து கொள்ளும் வாய்ப்பு அதி­க­மா­கவே இருக்­கின்­றது. இதனால் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் மேலும் பல­ம­டையும். இன்னும் சில வேளை­களில் அதி­ருப்­தி­யா­ளர்கள் வேறு ஒரு தொழிற்சங்­கத்­திற்கு செல்ல விரும்­பாது மௌனித்­து­வி­டவும் கூடும். ஒவ்­வொரு கட்­சியின் மீதும் அதீத தனிப்­பற்று கொண்­ட­வர்கள் இவர்­க­ளா­கவும் இருப்­பார்கள். கூட்­டுக்­கட்­சிகள் இணைந்து அர­சியல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது வேறு. ஒன்­றி­ணைந்து தனிக்­கட்­சியின் ஊடாக அர­சியல் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தென்­பது வேறு. இதில் எதனை உசி­த­மா­னது என்று மக்கள் கரு­து­கின்­றனர் என்­கிற கருத்து அறி­யப்­ப­டுதல் வேண்டும்.

கட்­சி­களின் ஒன்­றி­ணைவு தொடர்பில் சாதக விளை­வுகள் இருப்­ப­தா­கவும் பொது மக்­க­ளுக்கு இது குறித்த விழிப்­பூட்­டல்கள் உரி­ய­வாறு முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்றும் தமிழ் முற்­போக்குக் கூட்­டணி மற்றும் மலை­யக மக்கள் முன்­னணி என்­ப­வற்றின் செய­லாளர் நாயகம் ஏ. லோரன்ஸ் தெரி­விக்­கின்றார். இது தொடர்பில் இன் ­னொரு கோணத்­திலும் அவர் பார்வை செலு த்தி இருக்­கின்றார். பல கட்­சிகள் சமூக பிரச்­சி­னைக்­காக ஒன்­று­ப­டு­வது வர­வேற்­கத்­தக்­கது. புரிந்­து­ணர்­வுடன் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படல் வேண்டும். எல்லா அமைப்­புக்­களும் ஒன்று சேர்ந்தால் வளங்கள் ஒரே இடத்தை நோக்கி ருசிக்­கப்­படும். பல்­வேறு வித­மான திற­மை­யுள்­ள­வர்­களும் வரு­வார்கள். திகாம்­பரம் வீட­மைப்பு குறித்து காத்­தி­ர­மான பணி­களை முன்­னெ­டுக்­கின்ற வேளையில் இரா­தா­கி­ருஷ்ணன் கல்வி அபி­வி­ருத்­திக்கு பங்காற்றுகின்றார். மனோ கணேசன் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பிரச்சினைகளை கொண்டு சென்று தீர்வுக்காக குரல் கொடுக்கின்றார். இவ் வாறு திறமைமிக்கவர்களின் சங்கமம் சிறப்பம்சமாகும். ஒன்றிணைவு குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் முன் னெடுக்கப்பட வேண்டும். சாதக பாதக விளைவுகள் ஆராயப்பட வேண்டும். மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்து செல்வது நல்லது. அது தனியான ஒரே கட்சியாகவா அல்லது கூட்டுக்கட்சிகளாகவா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்றார் லோரன்ஸ்.

சமூக நலன் கருதி கட்சிகள் ஒன்றி ணை வதால் தப்பில்லை. நல்லாட்சி அர சாங் கத்திற்கு மலையக மக்கள் அதிக மாக வாக்களித்தார்கள். ஆனால் இவர்க ளுக்கு கிடைக்கும் நன்மைகள் மிகக் குறைவு. அரசுடன் இணைந்துள்ள தமிழ் முற் போக்குக் கூட்டணி மலையக மக்களின் நலன் கருதி கூடுதலான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். வெறுமனே சுயநலனுக்காக கூட்டுசேரக்கூடாது. அரசியல் இலாபம் கருதிய செயற்பாடு கண்டிக்கத்தக்கது என்கிறார் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ்.சதாசி வம். மூன்று கட்சிகளும் தனிப்பட்ட கொள்கைகளை விட்டுக்கொடுத்து ஒன்றி ணைவது சாத்தியமா என்று சியாட் அமைப்பின் இணைப்பாளர் பொன்.இராஜநாதன் கேள்வி எழுப்புகின்றார். மேலும் மேல்மட்டம் சம்மதித்தாலும் கீழ்மட்டத்தினர் சம்மதிப்பார்களா? தங் களது அபிலாஷைகளை பூர்த்திசெய்யவே கட்சிகள் ஒன்றிணைய முயற்சிக்கின்றன. மக்களின் நலன்களை பேணுவதற்கி ல்லை. வாக்கு வங்கியை தக்க வைக்கும் நடவ டிக்கையே இது என்கிறார் இராஜநாதன்.

மக்களின் நலன்களுக்காக ஒன்றிணைவு ஏற்படுமானால் வரவேற்கத்தக்கது என்கிறது ஜே.வி.பி. இக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகர் இது பற்றி கூறுகையில், முரண்பாடுகளுக்கு மத்தியில் கட்சிகள் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. மக் களை ஏமாற்றும் நடவடிக்கையின் ஒரு கட்டம் இதுவாகும். தலைமைத்துவம் இழுபறிகள் ஒன்றிணைவதால் கூடும். ஒருவரை மீறி இன்னொருவர் செல்ல முற் படும் நிலையில் மக்கள் நலன் பேணப் படாது. கூட்டு ஒப்பந்தம் மற்றும் தொழி லாளர் உரிமை தொடர்பில் அரசில் அங்கம் வகிக்கும் த.மு. கூட்டணியினர் காத்திர மான பங்காற்றவில்லை. எனவே மக்களின் நலன் கருதி ஒன்றிணைவார்களா என்பது சந்தேகமே என்கிறார் இராமலிங்கம் சந்திர சேகர். எவ்வாறாயினும் எல்லாவற்றையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-08-05#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.