Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மெர்சல்' புதிய போஸ்டர் வெளியீடு: ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் பாடல்

Featured Replies

'மெர்சல்' புதிய போஸ்டர் வெளியீடு: ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் பாடல்

 

 
mersal

‘மெர்சல்’ படத்தின் புதிய போஸ்டர்

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மெர்சல்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

'மெர்சல்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் விஜய் - சமந்தா சம்பந்தப்பட்ட சில காட்சிகளையும் ஒரு பாடலையும் படமாக்கவுள்ளனர்.

தீபாவளி வெளியீடு என்று முடிவு செய்திருப்பதால், ஆகஸ்ட் 20-ம் தேதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் வெளியாகவுள்ளன. அதற்கு முன்னதாகவே ஒரே ஒரு பாடலை மட்டும் வெளியிட படக்குழு முடிவு செய்ததுள்ளது. ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என அறிவித்து, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்சல்' படத்தில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு, சத்யராஜ், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தங்களுடைய தயாரிப்பில் 100-வது படமாக பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

'மெர்சல்' பணிகளை முடித்துவிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article19456086.ece

  • தொடங்கியவர்

விஜய் - ஏ.ஆர். ரஹ்மான் மெர்சல் காம்போ: 'ஆளப்போறான் தமிழன்' பாடல் டீசர் இதோ!

 

'தெறி' ஹிட்டுக்குப் பிறகு விஜய் - அட்லி காம்போவில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'மெர்சல்'. இந்தப் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் வடிவேலு, சமந்தா, காஜல் அகர்வால், மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் போஸ்டர்கள் ஏற்கெனவே நல்ல வரவேற்பைப் பெற்றன.

ஆளப்போறான் தமிழன்


இந்தப் படத்தின் பாடல்கள் வருகின்ற 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் 'ஆளப்போறான் தமிழன்' பாடலின் டீசரை படக்குழுவினர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டுள்ளனர்.  இந்தப் பாடலின் முழு வெர்ஷன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையொட்டி, விஜய், ஆளப்போறான் தமிழன் ஆகியவற்றை ஹேஷ் டேக் ஆக்கி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

 

 

http://www.vikatan.com/news/cinema/98598-audio-teaser-of-aala-poraan-tamizhan-from-mersal-released.html

  • தொடங்கியவர்

‘ஆளப்போறான் தமிழன்’ பாடலில் மெர்சல் காட்டுகிறாரா ஏ.ஆர்.ரஹ்மான்? #MersalSongReview

 

ஏ.ஆர்.ரஹ்மான், விஜய். ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் களமிறங்கியிருக்கிறது மெர்சல் படத்தின் முதல் சிங்கிள். 

உதயா படத்திற்குப் பிறகு ‘அழகிய தமிழ் மகன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை. அப்போது விஜய்யும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து கொடுத்த ஒரு பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் “அப்ப பண்ணின விஜய் வேற. இப்ப பண்ற விஜய் வேறயா இருக்கார். அதுனால அவர் மூலமா எதும் நல்ல மெசேஜ் சொல்லணும்னு ‘எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே’னு ஓபனிங் சாங் வெச்சேன்” என்று சொல்லியிருந்தார்.

 

ஆளப்போறான் தமிழன் மெர்சல்

விஜய்யும் அதே பேட்டியில் “ஃபுல் ஸ்பீட்ல போகற அந்தப் பாட்டுல கடைசி பல்லவில கொஞ்சம் ரேஞ்ச் அதிகமா முடியும். ரொம்ப பிடிச்ச இடம் அது. நல்ல மெசேஜ் சொல்ற பாட்டு’ என்றிருந்தார். 

அதன்பிறகு இருவருமே வேறு வேறு உயரங்களை அடைந்திருக்கின்றனர். மெர்சல் படத்தின், இந்தப் பாடல் எப்படி இருக்கிறது?

பெண்கள் கோரஸ் பின் ஆண்கள் கோரஸ் என்று துவங்கும் பாடல் ‘ஆளப்போறான் தமிழன்’ என்று உயர்கிறது குரல்.

மிருதங்கம், நாதஸ்வரத்துடன் வரும் முதல் இடையிசை ஃப்யூஷன் வித்தியாசம் என்றால், அதைத் தொடர்ந்து வரும் பீட்ஸ் விஜய்க்கென்றே டான்ஸ் ஸ்பெஷலாக ரஹ்மான் கொடுத்திருக்க வேண்டும். 

பல்லவியின் மெட்டு, வழக்கமாகத்தான் இருக்கிறது. வரிகளில் கொஞ்சம் ஸ்பீடெடுக்கும் என்றால் இல்லை.  ஆனால் அதே ஸ்பீடில் போகும் பாட்டிலும் ஏ.ஆர். இசைக்கருவிகளை மாற்றி மாற்றி வசீகரிக்கிறார். பல்லவி முடிந்ததும், பழைய பாணி இசை உட்புகுகிறது. திரையில் காட்சியாக கவரலாம். திடீரென்று தபேலா இசையுடன் வரும் பெண்குரல் தொகையறா.. மயிலிறகு.

மீண்டும் ஸ்பீடெடுத்து பெண்கள் கோரஸில் பல்லவி.

’ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்’, ‘வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே’ வரிகளில் விவேக் பளிச்சிடுகிறார். வரிகளெல்லாமே எதோ ஒரு ஐடியாவுடனே எழுதப்பட்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.    

ஹீரோயிச இண்ட்ரோவாக விஜய்க்கு, வரிகளில் விவேக்கும், டான்ஸ் ஆடவென்றே பீட்ஸில் ரஹ்மானும்  விருந்து படைத்திருக்கிறார்கள். நிச்சயம் ஒரு செம மெலடியும் கொடுப்பார் என்று காத்திருக்கிறேன்.

பாடல் வரிகள்:-

கோரஸ்:
ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான்
மீச முறுக்கு
எங்க மண்ணு   தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

 பாடல்:

 ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
இன்னும் உலகம் ஏழ
அங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...

வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்

வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்

சரணம்: 
ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற  ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம்

தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
உன்மொழி சாயும் என்பானே
பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே
 
முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும் 

நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் அலையுமோ  நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

தமிழாலே ஒண்ணானோம்
மாறாது எந்நாளும்

http://www.vikatan.com/cinema/tamil-cinema/music-review/98695-how-is-arrahmans-aalaporaan-thamizhan-song-from-mersal-movie.html

  • தொடங்கியவர்

`மெர்சல்` பாடல் வெளியீடு: 'தமிழர்களுக்கான பாடல்' என விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் புகழாரம்

mersalபடத்தின் காப்புரிமைTWITTER

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `மெர்சல்` படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்` என்ற பாடலின் வரிகள் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ள நிலையில், இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை வெகுவாக புகழ்ந்து பல விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

`தெறி` படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய்-அட்லீ கூட்டணி இணையும் இரண்டாவது திரைப்படம் இது என்பதால், படபூஜையிலிருந்தே `மெர்சல்` திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதால், அவருடைய ரசிகர்களும் இந்த படப்பாடல்களை பெரிதும் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் `ஆளப்போறான் தமிழன்` என்ற பாடலின் வரிகள், ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த செய்தியை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் டிரெண்டாக்கினர்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை `ஆளப் போறான் தமிழன்` பாடலின் வரிகள் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில், சமூக வலைத்தளங்கள் #mersal மற்றும் #AalaPoraanTamizhan ஆகிய ஹேஷ் டாக்குகள் டிரெண்டாகின.

இந்த பாடல் முழுவதும் தமிழர்களின் பெருமைகள் இடம்பெற்றுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிபெறச் செய்த இளைஞர்களை பாராட்டுவது போல அமைந்துள்ளதாகவும் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

mersalபடத்தின் காப்புரிமைTWITTER

சிலர், இன்னும் ஒரு படி முன்னே போய், `வெற்றி மக வழிதான் இனி எல்லாமே` மற்றும் `ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்` போன்ற வழிகளை சுட்டிக் காட்டி, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அந்த பாடலில் குறிப்பிட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன.

 

inbarajanபடத்தின் காப்புரிமைINBARAJAN/FACEBOOK

விஜய் ரசிகர்களால் ஆளப்போறான் தமிழன் பாடல் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டாலும், `தமிழன் என்ற உணர்வை தூண்டிவிட்டு, அதன் மூலம் வியாபாரம் செய்ய நினைக்கிறார் விஜய்` எனவும் சிலர் தங்கள் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

டிவிட்டர் பதிவுபடத்தின் காப்புரிமைSAI LAKSHMIKANTH/FACEBOOK Mohammed Farhanபடத்தின் காப்புரிமைTWITTER

மெர்சல் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.

 

http://www.bbc.com/tamil/arts-and-culture-40890432

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

வெளியானது மெர்சல் படப் பாடல்கள்..!

 

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மெர்சல்' படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகின. 

mersal_19082.jpg

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் விஜய் இணைந்திருக்கும் இரண்டாவது படம் மெர்சல். இருவர் கூட்டணி அமைந்ததிலிருந்து ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பயங்கரமான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. விஜயின் 61-வது படமான மெர்சலை படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' மற்றும் 'நீதானே நீதானே' பாடல்கள் வெளியாகி வைரலாகியது. தற்போது இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. மெர்சல் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தின் பாடல்களை சாவன் இணையத்தில் கேட்கலாம். 

http://www.vikatan.com/news/cinema/99725-vijays-mersal-movie-songs-has-been-released.html

  • தொடங்கியவர்

"அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள்"- பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் 'மெர்சல்' பேச்சு

 
 

மெர்சல் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த விழாவில் விஜய்," எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும் தான்" என்று பேசினார் 

vijay

'தெறி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் விஜய் இணைந்திருக்கும் இரண்டாவது படம் 'மெர்சல்'. இருவரும் கூட்டணி அமைந்ததிலிருந்து ரசிகர்கள் மத்தியில் படத்துக்கு பயங்கரமான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. இந்தப் படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தின் 'ஆளப் போறான் தமிழன்' மற்றும் 'நீதானே நீதானே' பாடல்கள் வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர். ரகுமான், அட்லி, இயக்குநர் பார்த்திபன், எஸ்.ஜே சூர்யா, சுந்தர் சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 இந்த வருடம் நடிகர் விஜய் மற்றும் இசையமைப்பாளர் ரகுமான் ஆகியோருக்கு திரை உலகில் 25-ம் ஆண்டு ஆகும். விழாவில் பேசிய ரகுமான், "இந்த படத்தில் ஆழ போறான் தமிழன் என்ற பாடல் இருக்கு. அத உண்மை ஆக்கி காட்டுங்கள்" என்றார்.

 

 நிகழ்ச்சியில் நிறைவாக மேடை ஏறிய நடிகர் விஜய் தனது ஸ்டைலில் ரசிகர்களிடம் பேசினார். 100 வது படம் தயாரிக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் மற்றும் 25 வது வருடத்தில் அடியடுத்து வைக்கும் ரகுமான் -க்கு வாழ்த்துக்கள் சொல்லி பேச தொடங்கினார். அப்போது அவர், "வாழ்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்கும். அதை எல்லாம் எப்படி எடுத்துகிறீங்க ன்னு கேக்குறாங்க. அத விட்டு விலகி இருக்கிறது தான் சரியானதாக இருக்கும். ஆனாலும் அத்தனை எளிதாக வாழ விடமாட்டார்கள். நமது கடமை நம் வேலையை செய்வது மட்டும் தான். எதிரிகள் இல்லைனா வாழ்க்கை ரொம்பி போர் அடிச்சிடும் நண்பா" என்று பேசினார்.

http://www.vikatan.com/news/cinema/99730-they-do-not-let-you-live-so-easily--actor-vijay-in-audio-launch.html

  • தொடங்கியவர்

‘ரசிகர்களும் விஜய்யும் சேர்ந்தால் அவர்தான் சி.எம்’ - மெர்சல் விழாவில் பார்த்திபன் கொளுத்திய வெடி

 

விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் ‘ரசிகர்களும் விஜய்யும் சேர்ந்தால் அவர்தான் சி.எம்’ என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசியது பரபரப்பாகியுள்ளது.

 
 
201708202347342999_actor-parthipan-speec
 
விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் ‘ரசிகர்களும் விஜய்யும் சேர்ந்தால் அவர்தான் சி.எம்’ என நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசியது பரபரப்பாகியுள்ளது.

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். படத்தின் மீது அதீத எதிர்ப்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்தில் இருந்து ஆளப்போறான் தமிழன் என்ற ஒரு பாடல் மட்டும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

201708202347342999_1_mersal33._L_styvpf.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடந்தது. படக்குழுவினர் மட்டுமல்லாது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் விழா அரங்கில் குவிந்திருந்தனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான 'மெர்சல்' படத்தின் நான்கு பாடல்கள் விழா மேடையில் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் பேசிய நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், “ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் ஒன்னு சேர்ந்தா என்ன ஆகும்னு தெரியாது. ஆனா விஜய்யும் அவரது ரசிகர்களும் சேர்ந்தால் விஜய் தான் இனி சி.எம்.” என்றார். இதனை கேட்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். பின்னர் (கொஞ்சம் இடைவெளிவிட்டு) “சி.எம்னா கலெக்‌ஷன் மன்னன்” என்றார்.

201708202347342999_2_mersal222._L_styvpf

மேலும், சமீபத்தில் விஜய் ரசிகர்களால் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்ட போது, விஜய் நடந்து கொண்டவிதம் பாராட்டத்தக்கது எனவும் பார்த்திபன் பேசினார்.

ஏற்கனவே, விஜய் அரசியலில் களமிறங்குவார் என ஸ்கூப் நியூஸ்கள் ரெக்கை கட்டி பறந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், பார்த்திபனின் இந்த பேச்சு, அரசியல் மற்றும் சினிமா அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/08/20234732/1103456/actor-parthipan-speech-at-mersal-audio-launch.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.