Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடந்து வந்த பாதையை திரும்பி பாருமேன்!

Featured Replies

நடந்து வந்த பாதையை திரும்பி பாருமேன்!

 
 

வடக்கு அர­சி­யல் மீண்­டும் உச்­சக் கொதி­நி­லைக்­குச் சென்று கொண்­டி­ருக்­கின்­றது. 2015ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் முத­ல­மைச்­சர் விïக்னேஸ்வரன் எடுத்த முடி­வால் வந்த விளைவு, வடக்கு அர­சி­யல் அடிக்­கடி கொந்­த­ளித்து தமி­ழர் ஒற்­று­மைக்கு வேட்டு வைத்­துக் கொண்­டு­தான் இருக்­கின்­றது.

அமைச்­சர்­கள் மீதான விசா­ரணை விவ­கா­ரத்­து­டன் உச்­சக்­கட்ட வில்­லங்­கம் தொடங்­கி­யது. முத­ல­மைச்­சர்மீது ஆளும் கட்­சி­யில் ஒரு தரப்­பி­னரே அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை கொண்டு வரு­கின்ற அளவுக்கு அந்த வில்­லங்­கம் நீண்டு – விரிந்து – படர்ந்­தது. இந்த விவ­கா­ரம் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரின் தலை­யீட்டால் தற்­கா­லி­க­மாக அமிழ்த்­தப்­பட்­டது. நிரந்­த­ர­மா ­கத் தீர்த்து வைக்­கப்­ப­ட­வில்லை.

தமிழ் அரசுக் கட்சியைக் கவிழ்க்கலாமென்ற முனைப்பில்
ஈ.பி.ஆர்.எல்.எப்.

தண்­ணிக்­குள் அமிழ்ந்த பந்து அமுங்­கிப்­போன விசை­யை­ யும் சேர்த்து சீறி மேலெ­ழும்பி வரு­வ­து­போல், வடக்கு அமைச்­ச­ரவை விவ­கா­ரம் சந்­திக்கு வந்­துள்­ளது. இந்த விட­யத்தை சந்தி சிரிக்க வைக்க வேண்­டும் என்­ப­தி­லும், தரு­ணம் பார்த்து தமிழ் அர­சுக் கட்­சியை கவிழ்த்து விடலாமென்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சி­யி­னர் குறி­யாய் இருக்­கின்­ற­னர்.

சந்­திப்­புத் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பின் தலை­வர் மற்றும், பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ள் மாவை.சோ.சேனா­திராசா, செல்­வம் அடைக்­க­ல­நா­தன், த.சித் தார்த்தன் ஆகி­யோர் எது­வுமே தெரி­விக்­கா­மல் அமை­தி­யாக இருக்க, முந்­திக் கொண்ட முந்­தி­ரிக் கொட்­டை­போல ஈ.பி. ஆர்.எல்.எவ். அமைப்­பின் தலை­வர் சுரேஸ் பிரே­ம­சந்­தி ­ரன் மாத்­தி­ரம் ஒரு­த­லைப்­பட்­ச­மான அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தார்.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி மீதான குற்றச்சாட்டு மாத்­தி­ரமே அந்த அறிக்­கை­யில் வரிக்கு வரி கூறப்­பட்­டுள் ளது. ‘தமிழ் மக்­க­ளின் நலன்­க­ளின் அடிப்­ப­டை­யி­லி­ருந்து புதிய அர­ச­மைப்பு, மீள்­கு­டி­யேற்­றம், காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பிரச்­சினை, அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை போன்ற பல பிரச்­சி­னை­கள் குறித்து விவா­திக்­கப்­பட வேண்­டிய சூழ­லில், அவை­யெல்­லா­வற்­றை­யும் ஒதுக்­கித்­தள்ளி ஒரு அமைச்­சுப் பத­விக்­காக நீண்­ட­நே­ரம் வலி­யு­றுத்­து­வ­தா­னது, தமிழ் அர­சுக் கட்சி பத­வி­க­ளின் மீது கொண்­டுள்ள அக்­க­றை­யையே வெளிப்­படுத்­து­கி­றது.

வேட்­பு­மனுக் கையளிப்புச் செய்­கின்­ற­போது ஆச­னங்­கள் சம­னா­கப் பிரிக்­கப்­பட்­டிருந்­தால் தமிழ் அர­சுக் கட்சி இன்று மிக­வும் பல­வீ­ன­மான கட்­சி­யா­கவே இருந்­தி­ருக்­கும். ஏனைய கட்­சி­கள் ஐக்­கி­யத்­தின்­மேல் கொண்ட பற்­று­று­தி­யின் கார­ண­மாக தமி­ழ் அர சுக் கட்­சிக்கு பல விட்­டுக்­கொ­டுப்புக்­க­ளைச் செய்­தி­ருந்­தன. இதன் கார­ண­மா­கவே தமிழ் அர­சுக் கட்­சிக்கு 15 ஆச­னங்­கள் கிடைத்­தி­ ருந்­தன.

பழையவற்றை
மறந்து தமிழ் அரசுக் கட்சியை குறைகூறுகிறார் சுரேஷ்

மாகாண மற்­றும் நாடா­ளு­மன்­றத்­தில் கிடைத்த ஆச­னங்­களை வைத்து தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­யைத் தீர்க்க வேண்­டிய தமிழ் அர­சுக் கட்­சி­யி­னர், அதனை விடுத்து, அமைச்­சுப் பத­வி­க­ளைப் பெற்­றுக்­கொள்­வ­தி­லும், ஏனைய பத­வி­க­ளை­யும் சலு­கை­க­ளை­யும் பெற்­றுக்­கொள்­வ­தி­லுமே ஆர்­வ­மாய் இருக்­கின்­ற­னர்.

தமிழ் அர­சுக் கட்­சி­யி­னர் அற்ப சொற்பப் பத­வி­க­ளுக்­கா­க­வும் சலு­கை­க­ளுக்­கா­க­வும் விலை­போ­கா­மல் இனி­யா­வது தமிழ் மக்­க­ளின் நலன்­க­ளில் அக்­கறை செலுத்தி, தமிழ் மக்­க­ளின் அபி­லா­சை­க­ளை­யும் உரி­மை­க­ளை­யும் வென்­றெ­டுப்­ப­தற்கு முன்­வ­ர­வேண்­டும் என்று ஈழ மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி எதிர்­பார்க்­கின்­றது’ என்று அறிக்­கை­யின் இறு­திப் பந்­தி­க­ளில் சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் கேட்­டி­ருந்­தார்.

தமிழ் அர­சுக் கட்சி பத­விக்­கா­க­வும் – சலு­கைக்­கா­க­வும் சோரம் போகின்­றது என்று சொல்­கின்ற சுரேஸ் பிரே­ம­சந்­தி­ர­னும் அவ­ரது கட்­சி­யி­ன­ரும் எப்­ப­டிப்­பட்­ட­வர்­கள்? இந்­திய இரா­ணு­வத்­தி­னர் அமை­திப் படை­யாக வந்து தமி­ழர் தேசத்தை ஆக்­கி­ர­மித்தபோது அதில் ஒட்­டிக் கொண்­ட­வர்­கள் யார்? தமி­ழ­ரின் விடு­த­லையே மூச்சு – வீச்சு என்று புறப்­பட்­ட­வர்­கள், அந்­தத் தமிழ் மக்­க­ளையே கொலை செய்­தது ஏன் ? தங்­கள் உயிர் மீது கொண்ட ஆசை கார­ண­மாக, கூலிப் படை­யா­க­வும் – ஒட்­டுக் குழு­வா­க­வும் மாறி தமிழ் மக்­க­ளையே மண்­டை­யில் போட்ட துர்ப்­பாக்­கி­ய சம்பவங்களை அவ்­வ­ளவு இல­கு­வில் எவரா­லும் மறந்து விட­மு­டி­யாது.

மகிந்த ராஜ­பக்ச மீன்­பிடி அமைச்­ச­ராக இருந்தபோது அவ­ரது பிரத்தி யேகச் செய­லா­ள­ராக இருந்­த­வர் சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன். பதவி ஆசை இல்­லா­மலா அல்­லது சலுகை ஆசை இல்­லா­மலா சிங்­கள அமைச்­ச ­ரின் செய­லா­ள­ராக இருந்­தார்? இவை அவர் நடந்து வந்த பாதை­யின் ஆரம்­பச் சுவ­டு­கள்.

வடக்கு மாகா­ண­ச­பைத் தேர்­தல் நடக்­கின்­றது. மகிந்த அர­சின் நெருக்­க­டி காரணமாக மக்­கள் எழுச்சி கொண்டு கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளிக்­கின்­றார்­கள். ஆட்­சி­யைப் பிடித்து விடு­கின்­றார்கள். மாகா­ண­ச­பை­ யில் முதல் குடுமி பி­டிச் சண்டை ஏன் தொடங்­கி­யது ? தொடக்­கி­ய­வர்­கள் யார்? இவற்றை யெல் லாம் மக்­கள் மறந்து போவ­தற்கு காலம் ஒன்­றும் பெரி­தாக கழிந்துவிடல்லை.

மகிந்­த­வின் குடும்ப அர­சி­யலை எதிர்த்து மேடை மேடை­யா­கப் பரப் புரை செய்த கூட்­ட­மைப்­புக்கு கரும் புள்­ளியை உரு­வாக்­கும் வகை­யில், சுரேஸ்­பி­ரே­ம­சந்­தி­ரன் தனது தம்­பியை அர­சி­யல் களத்­துக்கு கொண்டு வந்­தார். அவரை வெற்றி பெற வைப்­ப­தற்­கும் பெரும்­பா­டு­பட்­டார். அதில் வெற்­றி­யும் கண்­டார்.

தனது தம்பிக்கு
அமைச்சுப் பதவி பெற
முயன்றார் சுரேஸ்

அமைச்­சுப் பத­வி­கள் முத­ல­மைச் ச­ரால் தீர்­மா­னிக்­கப்­பட்டு வழங்­கப்­பட்­டd. ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்­பில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்ற ஐங்­க­ர­ நே­ச­னுக்கு அந்­தக் கட்சி சார்­பான அமைச்­சர் பதவி வழங்­கப்­பட்­டது. தனது தம்­பி­யான சர்­வேஸ்­வ­ர­னுக்கு அமைச்­சுப் பதவி வழங்­க­வில்லை என்­ப­தற்­காக சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் போர்க் கொடி தூக்­கி­னார். ஒற்­று­மை­யாக நடக்க வேண்­டிய பத­வி­யேற்பு விழா துண்­டா­கிப் போனது.

சுரேஸ்­பி­ரே­ம­சந்­தி­ரன் தம்­பிக்கு அமைச்­சுப் பதவி கேட்டு அதை வழங்­க­வில்லை என்­ப­தால்­தான் பத­வி­யேற்­புக்கு வர­வில்லை என்று முத­ல­மைச்­சர் விக்­னேஸ் வ­ரன் கூடக் கூறி­யி­ருந்­தார். தம்­பிக்கு அமைச்­சுப் பதவி கேட்­டேன் என்­பதை சுரேஸ் பிரே­ம­சந்­தி­ர­ னும் ஒப்­புக் கொண்­டி­ருந்­தார்.

சுரேஸ் பிரே­ம­சந்­தி­ர­னுக்கு பதவி ஆசை இல்­லா­மலா தனது தம்­பிக்கு அமைச்­சுப் பதவி கேட்­டார்? எந்­தச் சலு­கை­யும் பெற விரும்­பா­மலா தம்­பிக்கு அமைச்­சுப் பதவி பெற்­றுக் கொடுக்க வேண்­டும் என்று ஒற்­றைக் காலில் நின்­றார்?
இதற்கு ஆகப் பிந்­தி­ய­தாக நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு சுரேஸ்­பி­ரே­ம­சந்­தி­ரன் தோல்­வி­ய­டைந்­தி­ருந்­தார்.

இதன் பின்­னர் பின்­க­த­வால் உள்­நு­ழை­வ­தற்கு (2010 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தேசி­யப் பட்­டி­யல் ஆச­னம் ஊடாக எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரிவு செய்­யப்­பட்­ட­தால், அவரை பின்­க­த­வால் உள்­நு­ழைந்த உறுப்­பி­னர் என்று சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் விளிப்­ப­வர்) கடு­மை­யாக முயற்­சித்­தார்.

பதவி ஆசை இல்­லா­மலா இந்த முயற்­சியை சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் எடுத்­தார்? தற்­போது தனது தம்­பிக்கு அமைச்­சுப் பதவி கிடைத்­த­தும், சுரேஸ் பிரே­ம­சந்­தி­ரன் பம்மி­விட்­டார் என்று, அவ­ரு­டன் இப்­போது கூட இருந்து குரல் கொடுக்­கும் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் கூடச் சாடி­யி­ருந்­தார்.

சுரேஸ்­பி­ரே­ம­சந்­தி­ரன் மற்­ற­வர்­களை நோக்கி விரல் நீட்ட முன்­னர், தான் எப்­ப­டிப்­பட்­ட­வர்? தனது கட்சி எப்­ப­டிப்­பட்­டது? கடந்து வந்த பாதை எப்­ப­டிப்­பட்­டது? என்­ப­தைச் சிந்­தித் தால் சிறப்­பா­னது. கண்­ணாடி வீட்­டுக்­குள் நின்று கொண்டு கல்­லெ­றி­யக்­கூ­டாது. கவ­னம்!

http://newuthayan.com/story/17926.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.