Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் புத்தகத் திருவிழாவை ஆரம்பது வைத்தார் வட மாகாண முதலமைச்சர்

Featured Replies

நல்லூர் புத்தகத் திருவிழாவை ஆரம்பது வைத்தார் வட மாகாண முதலமைச்சர்

யாழ்.நல்லூர் கந்தசுவாமி  ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவினை முன்னிட்டும்  இந்திய சுதந்திர தின 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டும்  இந்தியத் துணைத்தூதரகமும் யாழ்.மாநகர சபையும் இணைந்து நடாத்தும் புத்தகத் திருவிழா வை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரம்பது வைத்தார்.

cv-wikneshwaran.jpg

இந்த புத்தகத் திருவிழா நல்லூரிலுள்ள யாழ்.மாநகர சபை சுகாதாரப் பணிமனையில் நேற்று மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிகழ்வுக்கு இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன், வட மாகாண மகளீர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, வடக்குக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள், முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபை உறுப்பினர்கள், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.இந்த புதகத் திருவிழா எதிர்வரும் 21 ஆம் திகதி வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இடம்பெறவுள்ளது.

http://www.virakesari.lk/article/23073

  • தொடங்கியவர்
‘அலைபேசியால் அழிவு நிச்சயம்’
 

 

“அலைபேசிகள், நிச்சயம் எமது உடல் உறுப்புகளில் தாங்கங்களை ஏற்படுத்தும்” என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ் புத்தகத் திருவிழா, மாநகரசபை சுகாதாரப் பணிமனையில், நேற்று நடைபெற்றத. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனை பூரணத்துவம் அடையச் செய்கின்றது. சில காலங்களுக்கு முன்னர் படித்தவர்கள் வசிக்கின்ற பலர் வீடுகளில் ஒரு சிறிய நூலகமொன்றில் புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு ஒரு தொகைப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களும் அருகில் உள்ள நூல் நிலையங்களுக்கு சென்று சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும் பகுதியான நேரங்களை வாசிப்பில் செலவு செய்வார்கள். இலத்திரனியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்கள் புத்தகங்களைத் தேடிப் போய் வாசிப்புப் பழக்கங்களில் ஈடுபடுகின்ற நிலையை மாற்றிக்கொண்டு தமக்குத் தேவையான தரவுகளை இணையத்தளங்களின் ஊடாக இலகுவில் சேகரித்து விடுகின்றார்கள். இதனால் கூடுதலான நேரம் மீதப்படுத்தப்படுகின்றது. தேவையான தரவை நேரடியாகச் சென்று பெறக்கூடிய வழிமுறைகள் காணப்படுகின்றன. அதனால் புத்தகங்களை துரவி ஆராய்ந்து விடயங்களைத் தேடுகின்ற பழக்கம் ஓரளவு கைவிடப்பட்டுவிட்டது என்றே குறிப்பிட வேண்டும்.

“இது ஒரு வகையில், நேரத்தை மீதப்படுத்துவதாக அமைந்துள்ள போதிலும் தீமைகளும் கூடவே இருக்கச் செய்கின்றது. புத்தகங்களை கூடுதலாக வாசிக்காமையால் இன்றைய இளைஞர், யுவதிகளிடம் வாசிப்பு பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் உச்சரிப்புக்களில் தவறுகள் ஏற்படுகின்றன. ஆகவே, மொழியின் பாவனை மருவிச் செல்கின்றது. முறையான இலக்கணத்துடன் கூடிய சொல் வடிவங்களில் நாட்டம் குறைகின்றது.

“அலைபேசி பாவனை என்பது, எமது உடலில் மூளையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனை உடனடியாக அறிந்து விட முடியாது. ஆனால், காலப்போக்கில் இதன் தாக்கங்கள் உணரப்படுகின்ற வேளையில் எமது மூளையில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் அளவிட முடியாதவை. தினமும் பல்லாயிரக்கணக்கான மின்காந்த அலைகள் எமது மூளையினூடாக குறுக்கும் நெடுக்கும் செலுத்தப்படுகின்றன. இவைகள் நிச்சயம் எமது உடல் உறுப்புகளில் தாங்கங்களை ஏற்படுத்தும்” என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/அலைபேசியால்-அழிவு-நிச்சயம்/71-202267

10 hours ago, நவீனன் said:

இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன்

தமிழினப் படுகொலைகாரர்களுக்கு, போர்க்குற்றவாளிகளுக்கு இங்கு என்ன வேலை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.