Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நாடுகளின் தேசிய கீதங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நண்பர்களே!

தமிழீழ தேசிய கீதத்தை எழுதும் போட்டியொன்றை விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தமை நீங்கள் அறிந்திருக்கக் கூடியதே. இது வரை அப்படி ஒரு தேசிய கீதம் இயற்றப்பட்டதாகவோ யாரும் பரிசு பெற்றதாகவோ நான் அறியவில்லை. இங்கு கவி வடிக்கும் பல கவிஞர்களின் திறமையையும் கண்டு வியந்த நான் ஏன் நீங்கள் அதற்கு முயற்சி செய்யக்கூடாது என்று கேட்கிறேன்?

தமிழீழ தேசிய கீதம் மிக எளிமையான சொற்களால் ஆனதாக இருக்கவேண்டும். ஆக, இது வரை நாம் அறிந்த இலகுவான தமிழ்ச் சொற்களின் கோர்வையே தமிழீழ தேசிய கீதமாக மலரப்போகிறது. ஆனால், அது எதைச் சொல்லப்போகிறது, சொல்ல வேண்டும் என்பதே கேள்வி.

எனவே, பல்வேறு நாடுகளின் தேசிய கீதங்களையும் தமிழில் சேகரிப்போமென ஒரு முயற்சியைத் தொடங்குகின்றேன். சேகரிக்கப்படும் கீதங்களின் தமிழ் மொழிபெயர்ப்பையும் சேகரிக்கவேண்டும். அது ஏலவே இல்லாதபோது, இங்குள்ள ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதை தமிழில் மொழிபெயர்த்துப் போட வேண்டும். இப்படி எல்லா தேசிய கீதங்களையும் தமிழில் தரும் ஒரு இணையத்தளம் எங்கேனும் உள்ளதா என்று தேடிப்பார்த்தேன். இல்லை என்றே தோன்றுகிறது. அப்படி இருந்தாலும் சொல்லுங்கள். எங்களுக்கு வேலை மிச்சம். அந்தந்த நாட்டு மொழிகளிலும் ஆங்கிலத்திலும் எல்லா நாட்டு தேசிய கீதங்களும் விக்கிபீடியாவிலுள்ளது.

நான் உங்களிடம் வேண்டி நிற்பது இதைத்தான். ஆங்கிலம் சரளமாக தெரிந்தவர்கள் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்தப் பகுதியில் வராத ஒரு நாட்டின் தேசியகீதத்தை விக்கிபீடியாவில் எடுத்து அதை தமிழில் மொழி பெயர்த்து ஆங்கில கீதத்தையும் தமிழ் கீதத்தையும் இந்தப் பகுதியில் போடுங்கள்.

இந்த முயற்சி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என உங்கள் கருத்தையும் தவறாது தெரிவியுங்கள்.

எந்தெந்த தேசிய கீதங்கள் ஏலவே சேர்க்கப்பட்டுவிட்டன என்பதை உங்கள் வசதிக்காக இங்கு பட்டியலிடுகின்றேன்.

  1. "இந்தியா "
  2. "சிங்கப்பூர்"
  3. "சிறிலங்கா"
  4. "கனடா"
  5. "ஐக்கிய இராச்சியம் "
  6. "அவுஸ்திரேலியா "
  7. "கிழக்கு தீமோர்"
  8. "மொன்ரநிக்ரோ"
  9. "ஜேர்மன்"
  10. "ஜப்பான்"
தமிழீழ கொடி வணக்கப் பாடல்

ஏறுது பார் கொடி ஏறுது பார்

ஏறுது பார் கொடி ஏறுது பார் -இங்கே

ஏறுது பார் கொடி ஏறுது பார்

தமிழ் ஈழத்தின் வேதனை தீர்த்த கொடி

எட்டுத் திக்கிலும் மானத்தை சேர்த்த கொடி

காலத்தை வென்றுமே நின்ற கொடி

புலி காட்டிய பாதையில் சென்ற கொடி

செக்க நிறத்திலே வேங்கை நடுவிலே

ஏறிடும் கொடியிது

தமிழ் மக்களைக் காத்தநம் மானமாவீரரை

வாழ்த்திடும் கொடியிது

புலிவீரத்தின் கொடியிது மாவீரரின் கொடியிது

எத்தனை எத்தனை வேங்கைகள் பக்கத்தில்

ஏறிய கொடியிது

பெரும் சத்திய வேள்வியில் செத்தவர் மீதினில்

சாத்திய கொடியிது

தமிழீழத்தின் கொடியிது

புலியேந்திய கொடியிது

சாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய

சாதனைக் கொடியிது

சங்கு ஊதிமுழங்கிட ஊர்மனை யாவிலும்

உலவிய கொடியிது

சமதர்மத்தின் கொடியிது

எங்கள் தாயவள் கொடியிது

தமிழ்தேசத்தின் கொடியிது எங்கள்

தேசியக் கொடியிது

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறீலங்கா தேசிய கீதம்

Mother Lanka we worship Thee!

Plenteous in prosperity, Thou,

Beauteous in grace and love,

Laden with corn and luscious fruit

And fragrant flowers of radiant hue,

Giver of life and all good things,

Our land of joy and victory,

Receive our grateful praise sublime,

Lanka! we worship Thee.

Thou gavest us Knowledge and Truth,

Thou art our strength and inward faith,

Our light divine and sentient being,

Breath of life and liberation.

Grant us, bondage free, inspiration.

Inspire us for ever.

In wisdom and strength renewed,

Ill-will, hatred, strife all ended,

In love enfolded, a mighty nation

Marching onward, all as one,

Lead us, Mother, to fullest freedom

ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா

நமோ நமோ நமோ நமோ தாயே

நல்லெழில் பொலி சீரணி

நலங்கள் யாவும் நிறை வான்மணி லங்கா

ஞாலம் புகழ் வள வயல் நதி மலை மலர்

நறுஞ்சோலை கொள் லங்கா

நமதுறு புகலிடம் என ஒளிர்வாய்

நமதுதி ஏல் தாயே

நமதலை நினதடி மேல் வைத்தோமே

நமதுயிரே தாயே - நம் ஸ்ரீ லங்கா

நமோ நமோ நமோ நமோ தாயே

நமதாரருள் ஆனாய்

நவை தவிர் உணர்வானாய்

நமதோர் வலியானாய்

நவில் சுதந்திரம் ஆனாய்

நமதிளமையை நாட்டே

நகு மடி தனையோட்டே

அமைவுறும் அறிவுடனே

அடல்செறி துணிவருளே - நம் ஸ்ரீ லங்கா

நமோ நமோ நமோ நமோ தாயே

நமதோர் ஒளி வளமே

நறிய மலர் என நிலவும் தாயே

யாமெல்லாம் ஒரு கருணை அனைபயந்த

எழில்கொள் சேய்கள் எனவே

இயலுறு பிளவுகள் தமை அறவே

இழிவென நீக்கிடுவோம்

ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி

நமோ நமோ தாயே - நம் ஸ்ரீ லங்கா

நமோ நமோ நமோ நமோ தாயே

தமிழாக்கம் இணையத்தில் சுட்டது.

"முதற் பக்கத்திற்குத் தாவ"

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனேடிய தேசிய கீதம்

O Canada!

Our home and native land!

True patriot love in all thy sons command.

With glowing hearts we see thee rise,

The True North strong and free!

From far and wide,

O Canada, we stand on guard for thee.

God keep our land glorious and free!

O Canada, we stand on guard for thee.

O Canada, we stand on guard for thee.

ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ !

உந்தன் மைந்தர்கள் உண்மைத் தேச பக்தர்கள் !

நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய்

நீ எழல் கண்டுவப்போம் !

எங்கு உள்ள நாம் ஓ கனடா

நின்னைப் போற்றி அணிவகுத்தோம் !

எம்நிலப் புகழைச்சுதந்திரத்தை

என்றும் இறைவன் காத்திடுக !

ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம் !

ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம் !

தமிழாக்கம் இணையத்தில் சுட்டது.

முதற் பக்கத்திற்குத் தாவ

Edited by பண்டிதர்

நல்ல முயற்சி! யாழ் கள கவிஞர்களும் தங்கள் திறமையை இங்கு காட்டலாம். தமிழீழ தேசியகீதமாக இல்லாவிட்டாலும் தமிழீழ தேசப்பற்றுப் பாடல்களில் இவை அடக்கப்பட முடியும்! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

United Kingdom

God save our gracious Queen!

Long live our noble Queen!

God save the Queen!

Send her victorious,

Happy and glorious,

Long to reign over us,

God save the Queen.

Thy choicest gifts in store

On her be pleased to pour,

Long may she reign.

May she defend our laws,

And ever give us cause,

To sing with heart and voice,

God save the Queen.

இறைவா கீர்த்தி மிக்க நம் அரசியைக் காத்திடு

சீமாட்டி எங்கள் அரசி என்றும் என்றும் வாழ்கவே

இறைவா நம் அரசியைக் காத்திடு

வெற்றி அள்ளி வழங்கிடு

உவகைபொங்க அற்புதமாய்

நீண்ட காலம் நம்மை ஆள

இறைவா நம் அரசியைக் காத்திடு

அவர் பெறுதற்கரிய பரிசு

அவரை என்றும் ஆராதித்திடு

அவர் நீண்ட காலம் ஆள்க

அவர் எங்கள் நீதி காக்க

என்றும் எங்கள் வழி காட்ட

இதயத்தாலும் வாயாலும் அவரைப் பாட

இறைவா நம் அரசியைக் காத்திடு.

தமிழ் மொழியாக்கம் செய்தது யாமே. கட்டாயம் பிழை இருக்கும். யாராவது ஆங்கில வித்தகர்கள் மனம் வைத்தால் திருத்திப் போடுங்கள். மேலும், பிரித்தானிய தேசிய கீதத்தை யாராவது ஏற்கனவே தமிழுக்கு மாற்றியிருப்பார்கள். லட்சக்கணக்கான நம்மவர்களுள்ளனரே. எங்காவது கண்டிருந்தால் போடுங்கள்.

மேலும், மொழிபெயர்ப்பு இசைக்கு ஏற்ப பாடக்கூடியதாக செய்யவில்லை. கீதத்தின் கரூத்து என்ன என்பதை மட்டுமே மொழிபெயர்க்க முயன்றேன்.

"முதற் பக்கத்திற்குத் தாவ"

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவுஸ்திரேலிய தேசியகீதம்

Australians all let us rejoice,

For we are young and free;

We’ve golden soil and wealth for toil;

Our home is girt by sea;

Our land abounds in nature’s gifts

Of beauty rich and rare;

In history’s page, let every stage

Advance Australia Fair.

In joyful strains then let us sing,

Advance Australia Fair.

Beneath our radiant Southern Cross

We’ll toil with hearts and hands;

To make this Commonwealth of ours

Renowned of all the lands;

For those who’ve come across the seas

We’ve boundless plains to share;

With courage let us all combine

To Advance Australia Fair.

In joyful strains then let us sing,

Advance Australia Fair.

அவுஸ்திரேலியர் நாம் களிப்போமே

நாம் இளமையுடனும் சுதந்திரத்துடனும் இருப்பதற்கே

நம்மிடம் தங்கமண்ணும் உழைப்புச் செல்வமும் உள்ளதே

எங்கள் வீடது கடலால் சூழ்ந்ததே

எங்கள் தேசம் இயற்கை வளங்கள் நிறைந்ததே

அவை அழகும் விலையுயர்ந்ததும் அரிதுமானவையே

வரலாற்றின் பக்கங்களில் ஒவ்வொரு கட்டங்களிலும்

அவுஸ்திரேலியாவின் செம்மை ஓங்கட்டும்!

நாம் களிப்படைந்து பாடுவோம்

அவுஸ்திரேலியாவின் செம்மை ஓங்கட்டும்!

தென்சிலுவை தாரகைகளின் கீழ்

நாம் உழைத்திடுவோம் இதயசுத்தியுடன்

எங்கள் எல்லாருக்கும் உரிய இந்தச் செல்வத்தை

எல்லாத் தேசங்களிலும் சிறந்ததாக்கவே!

கடல் கடந்து வந்த மக்களாய்

நாம் பகிர்ந்து கொள்ள பலவும் உள்ளவே!

உறுதியுடன் நாங்கள் சேருவோம்

அவுஸ்திரேலியாவின் செம்மை ஓங்கவே!

நாம் களிப்படைந்து பாடுவோம்

அவுஸ்திரேலியாவின் செம்மை ஓங்கட்டும்!

தமிழ் மொழியாக்கம் செய்தது யாமே. கட்டாயம் பிழை இருக்கும். யாராவது ஆங்கில வித்தகர்கள் மனம் வைத்தால் திருத்திப் போடுங்கள். மேலும், அவுஸ்திரேலியதேசிய கீதத்தை யாராவது ஏற்கனவே தமிழுக்கு மாற்றியிருப்பார்கள். லட்சக்கணக்கான நம்மவர்களுள்ளனரே. எங்காவது கண்டிருந்தால் போடுங்கள்.

மேலும், மொழிபெயர்ப்பு இசைக்கு ஏற்ப பாடக்கூடியதாக செய்யவில்லை. கீதத்தின் கரூத்து என்ன என்பதை மட்டுமே மொழிபெயர்க்க முயன்றேன்.

முதற் பக்கத்திற்குத் தாவ

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கப்பூர் தேசிய கீதம்

Come, fellow Singaporeans

Let us progress towards happiness together

May our noble aspiration bring

Singapore success

Come, let us unite

In a new spirit

Let our voices soar as one

Onward Singapore

Onward Singapore

சிங்கப்பூர் மக்கள் நாம்

செல்வொம் மகிழ்வை நோக்கியே

சிங்கப்பூரின் வெற்றிதான்

சிறந்த நம் நாட்டமே

ஒன்றிணைவோம் அனைவரும்

ஓங்கிடும் புத்துணர்வுடன்

முழுங்குவோம் ஒன்றித்தே

முன்னேறட்டும் சிங்கப்பூர்

முன்னேறட்டும் சிங்கப்பூர்

தமிழாக்கம் இணையத்தில் சுட்டது.

முதற் பக்கத்திற்குத் தாவ

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய தேசிய கீதம்

Thou art the ruler of the minds of all people,

dispenser of India's destiny.

Thy name rouses the hearts of Punjab, Sindh, Gujarat, the Maratha country,

in the Dravida country, Utkala (Orissa) and Bengal;

It echoes in the hills of the Vindhyas and Himalayas,

it mingles in the rhapsodies of the pure waters Jamuna and the Ganges.

They chant only thy name,

they seek only thy blessings,

They sing only thy praise.

The saving of all people waits in thy hand,

thou dispenser of India's destiny.

Victory, Victory, Victory, Victory to thee.

எல்லா மக்களின் மனதையும் ஆளுகின்ற இறைவா வெற்றி உங்களுக்கே!

பாரதத்தின் விதியை அறிந்து ஆளுகின்றவனே

பாரதம் என்றாலே மனதிலே உதிப்பது பஞாப், சிந், குஜராத், மஹாராஷ்ட்ரா

திராவிடர், ஒரிஸா, வங்காலம்

விந்தியா மலைகள், ஹிமாச்சலம், யமுனை நதி, கங்கை நதி

மலைகளிளே எதிரொலிக்கிறது, நதிகளிலே கலக்கிறது, இந்திய கடல்கள் ஓதுகின்றது (பாரதத்தின் பெயரை)

உங்களை புகழ்ந்து போற்றுகின்றோம்

உங்களின் அருளை கேட்கிறோம்

உங்களை போற்றி பாடுகிறோம்

பாவங்களில் இருந்து மக்களை காப்பது உங்கள் கையில் உள்ளது

பாரதத்தின் விதியை அறிந்து ஆளுகின்றவனே

ஜெயம் உங்களுக்கே!!

தமிழாக்கம் இணையத்தில் சுட்டது.

முதற் பக்கத்திற்குத் தாவ

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு தீமோர்

Fatherland, fatherland, East Timor our Nation

Glory to the people and to the heroes of our liberation

Fatherland, fatherland, East Timor our Nation

Glory to the people and to the heroes of our liberation

We vanquish colonialism, we cry: down with imperialism!

Free land, free people, no, no no to exploitation.

Let us go forward, united, firm and determined

In the struggle against imperialism, the enemy of people,

until final victory, onward to revolution.

தந்தை நாடு, தந்தை நாடு, கிழக்கு தீமோர் எங்கள் நாடு

மக்களுக்கும் விடுதலை மாவீரர்க்கும் கீர்த்தி

தந்தை நாடு, தந்தை நாடு, கிழக்கு தீமோர் எங்கள் நாடு

மக்களுக்கும் விடுதலை மாவீரர்க்கும் கீர்த்தி

நாம் காலனித் துவத்தைத் தடுப்போம், நாம் ஆதிக்கம்

வீழ்கவென கோஷமிடுவோம்!

சுதந்திர தேசம், சுதந்திர மக்கள், இல்லை, இல்லை சுரண்டல் இல்லையே

நாங்கள் ஒற்றுமையாய், உறுதியாய், திடசங்கற்பத்துடன் முன்னேறுவோம்

ஆதிக்க சக்திகளுக்கும் மக்களின் எதிரிகளுக்கும் எதிரான போராட்டத்தில்

இறுதி வெற்றி அடையும் வரை, புரட்சி வெடிக்கும் வரை.

தமிழ் மொழியாக்கம் செய்தது யாமே. கட்டாயம் பிழை இருக்கும். யாராவது ஆங்கில வித்தகர்கள் மனம் வைத்தால் திருத்திப் போடுங்கள்.

மேலும், மொழிபெயர்ப்பு இசைக்கு ஏற்ப பாடக்கூடியதாக செய்யவில்லை. கீதத்தின் கரூத்து என்ன என்பதை மட்டுமே மொழிபெயர்க்க முயன்றேன்.

முதற் பக்கத்திற்குத் தாவ

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொன்ரநிக்ரோ

O, bright dawn of May

Our mother Montenegro

We are sons of your rocks

and keepers of your honesty

We love you, the rocky hills

And your awesome gorges

That never came to know

The chains of shameful slavery.

While our unity gives wings

to our Lovćen cause

Proud shall be, celebrated will be

Our dear homeland.

A river of our waves,

Jumping into two seas,

Will bear voice to the ocean,

That Montenegro is for eternity.

ஓ, பிரகாசமான மே விடிவு

எங்கள் தாய் மொன்ரநிக்ரோ

நாங்கள் உந்தன் பாறைகளின் பிள்ளைகள்

உந்தன் நேர்மையின் காப்பர்கள்

நாங்கள் உங்களை காதலிக்கிறோம்,

கல்மலைகளே மனதைக்கவரும் கணவாய்களே

அதனால் என்றும் நாங்கள் அறியவில்லை

இலச்சையற்று தொடர்ந்த அடிமைத்தனங்களை

எமது ஒற்றுமை இறகுகளை தந்தபோது

எங்கள் லொவ்சென்* மார்க்கத்திற்கு

பெருமை எங்கணும் கொண்டாட்டமெங்கணும்

எங்கள் அருமைத் தாய்நாடே

எமதலைகளின் ஒரு ஆறு

கடலில் பயும் போது

அது சமுத்திரத்திடம் சொல்லிநிற்கிறது

மொன்ரநிக்ரோ விற்கு என்றும் அழிவில்லையென

*லொவ்சென் என்பது அங்குள்ள ஒரு மலை

தமிழ் மொழியாக்கம் செய்தது யாமே. கட்டாயம் பிழை இருக்கும். யாராவது ஆங்கில வித்தகர்கள் மனம் வைத்தால் திருத்திப் போடுங்கள்.

மேலும், மொழிபெயர்ப்பு இசைக்கு ஏற்ப பாடக்கூடியதாக செய்யவில்லை. கீதத்தின் கரூத்து என்ன என்பதை மட்டுமே மொழிபெயர்க்க முயன்றேன்.

முதற் பக்கத்திற்குத் தாவ

Edited by பண்டிதர்

இங்கிலாந்து தேசியகீதம் அரசியின் துதிபாடலாக மட்டுமே இருக்குதே அன்றி தேசிய கீதமாய் தெரியவில்லை

நல்ல முயற்சி என்னாலான உதவிகளை நானும் செய்வேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்து தேசியகீதம் அரசியின் துதிபாடலாக மட்டுமே இருக்குதே அன்றி தேசிய கீதமாய் தெரியவில்லை

ஆம்.

இங்கிலாந்து மன்னர் ஒரு அரசனாக இருந்தால் (ஒரு கதைக்கு எலிசபெத் இறந்து சார்ல்ஸ் வந்தால்) "queen" என்ற இடத்தில் "king" என்று மாற்றிப்போட்டு பாடுவார்கள். :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மன் தேசிய கீதம்

Unity and Law and Freedom

For the German fatherland;

For these let us all strive,

Brotherly with heart and hand.

Unity and right and freedom

Are the pledge of happiness.

|: flourish in this fortune's blessing,

flourish, German fatherland. :|

ஒற்றுமை, நீதி, சுதந்திரம்

ஜேர்மன் தந்தை நாட்டுக்கு

இதற்காக நாமெல்லோரும் பாடுபடுவோம்

இதயசுத்தியுள்ள சகோதரத்துவத்துடன்

ஒற்றுமை, உரிமை, சுதந்திரம்

என்பனவே சந்தோசத்தின் அடிப்படை

செழித்திடு இந்த அதிருஷ்டத்தின் ஆசியில்

செழித்திடு, ஜேர்மன் தந்தை நாடே

தமிழ் மொழியாக்கம் செய்தது யாமே. கட்டாயம் பிழை இருக்கும். யாராவது ஆங்கில வித்தகர்கள் மனம் வைத்தால் திருத்திப் போடுங்கள்.

மேலும், மொழிபெயர்ப்பு இசைக்கு ஏற்ப பாடக்கூடியதாக செய்யவில்லை. கீதத்தின் கரூத்து என்ன என்பதை மட்டுமே மொழிபெயர்க்க முயன்றேன்.

முதற் பக்கத்திற்குத் தாவ

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜப்பான் தேசிய கீதம்

May your Imperial reign

Continue for a thousand years,

And last for eight thousand generations,

Until pebbles

Turn into boulders

Covered in moss.

உனது ஆதிக்கம் இருக்கட்டும்

இன்னும் ஆயிரம் வருடங்களுக்கு

அது இன்னும் எட்டாயிரம் தலைமுறைக்கு நீடிக்கட்டும்

கூழாங்கற்கள்

பாறையாகி

பாசியில் மறையும் வரை!

தமிழ் மொழியாக்கம் செய்தது யாமே. கட்டாயம் பிழை இருக்கும். யாராவது ஆங்கில வித்தகர்கள் மனம் வைத்தால் திருத்திப் போடுங்கள்.

மேலும், மொழிபெயர்ப்பு இசைக்கு ஏற்ப பாடக்கூடியதாக செய்யவில்லை. கீதத்தின் கரூத்து என்ன என்பதை மட்டுமே மொழிபெயர்க்க முயன்றேன்.

முதற் பக்கத்திற்குத் தாவ

Edited by பண்டிதர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.