Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேப்பாப்புலவிலுள்ள 2ரூட்/73.11 ஏக்கர் காணிகளை விடுவிப்பதை தாமதிக்க வேண்டாம்

Featured Replies

கேப்பாப்புலவிலுள்ள 2ரூட்/73.11 ஏக்கர் காணிகளை விடுவிப்பதை தாமதிக்க வேண்டாம்
 

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில், 111 ஏக்கர் மற்றும் 70ஏக்கர் 2ரூட்/73.11 ஏக்கர் காணிகள் எவ்வித தாமதமும் இன்றி விடுவிக்கப்பட்டு, மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்னவுக்கு ஞாயிற்றுக்கிழமை (13) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புனர்வாழ்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ஜனாதிபதியின் செயலாளர், முப்படைத் தளபதி கிரிஷாந்த டி சில்வா, இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆகியோருக்கும் அக்கடிதத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.   
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:   

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் என்ற, மேற்குறித்த விடயம் தொடர்பில் தங்களது 
MOD/PAC/01/L/938/AY இலக்கமிடப்பட்ட 09.08.2017 திகதியிடப்பட்டிருந்த கடிதம் நேற்று (12) எனக்குக் கிடைத்தது. தங்கள் பதிலுக்கு எனது நன்றிகள்.   

இந்த விடயம் பல்வேறு மட்டங்களில் அவதானத்துக்கும் உள்ளாகி வந்துள்ளது, இறுதியாகப் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் தலைமையில், புனர்வாழ்வு அமைச்சில் ஜூலை, 26, 2017 அன்று ஒரு கூட்டம் இடம்பெற்றிருந்தது.   

ஜூலை, 20 2017 அன்று நான் தங்களுக்கும் ஏனையோருக்கும் ஒரு பிரதியுடன் அதிமேதகு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் அனைத்தையும் உறுதி செய்கிறேன். எனது குறித்த கடிதத்துக்கு ஜனாதிபதியின் செயலாளர், 2017 ஜூலை 28 ஆம் திகதி SP/4/1 இலக்கமிடப்பட்ட கடிதத்தின் மூலம் பதிலளித்திருந்தார்.  

புனர்வாழ்வு அமைச்சில் ஜூலை 26ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், குறித்த இடத்திலிருந்து இராணுவம் வெளியேறுவதற்குத் தேவையான நிதியைத் தான், ஒரு சில நாட்களில் ஒதுக்கித் தருவதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.  

இந்தத் தீர்மானத்துக்கு, அமைய வெளியேறும் நடவடிக்கையானது தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். தீர்வு எட்டப்பட வேண்டிய விடயமாக இருப்பது 70 ஏக்கர் 2ரூட் காணி விடயமேயாகும்.   

தங்களது 09.08.2017 அன்று திகதியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 73.11 ஏக்கர் காணியே இது என்பது எனது கணிப்பாகும். இந்தக் காணி தொடர்பில் ஜூலை 20, 2017 அன்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த விடயங்களை உறுதி செய்கிறேன்.   

ஜனாதிபதியின் செயலாளரால் ஜூலை 28ஆம் திகதி அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் இந்த நிலைப்பாடு தொடர்பில் உறுதி செய்யப்பட்டிருந்தது.   

இந்தப் பின்னணியில், வெளியேறுவது தொடர்பில் தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரே விடயம் இந்த 70 ஏக்கர் 2ரூட் /73.11ஏக்கர் காணிப் பகுதியேயாகும்.   

இந்த மக்கள் சொந்தக் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு ஒரு தசாப்த காலம் கடந்து விட்டது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்து விட்டன. இந்த மக்கள் தமது காணிகளில் மீளக் குடியேறுவதை வலியுறுத்தி கடந்த 165 நாட்களாக இந்தக் காணிகளின் வாயிலின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டமானது மழையிலும் வெயிலிலுமாக மிகுந்த அவஸ்தைகளோடு இடம்பெற்று வருகின்றது.  

மக்களின் அனுமதியின்றி இந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களின் இடைவிடாத போராட்டங்களின் மத்தியிலும் சட்டரீதியாகப் பெறப்படாத இந்தக் காணிகளில் இராணுவம் தொடர்ந்தும் குடிகொண்டுள்ளது.   

இந்த நடவடிக்கையானது நிச்சயமாக சட்டஒழுங்குக் கட்டமைப்பை மீறும் செயலாகும்.   
மேலும், இராணுவத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய போதியளவு அரசகாணி குறித்த இடத்திலே காணப்படுகின்றது.

குறித்த 111 ஏக்கர் மற்றும் 70 ஏக்கர் 2ரூட்/73.11ஏக்கர் காணிகள் பெரும்பாலும் மக்களுக்கு உரித்தான, அவர்கள் வாழ்வதற்கும் ஏனைய சமூக, பொருளாதார தேவைகளுக்குமாகப் பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டு காலமாகப் பயன்படுத்தி வந்த காணிகளாகும். தாங்கள் பிறந்து வளர்ந்த மண் தொடர்பில் அவர்களுக்கு உரித்து உண்டு. 

இந்த மக்களுக்கு அவர்களது இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் உரிமையை இனிமேலும் மறுக்க முடியாது. அப்படிச் செய்வது அநீதி மாத்திரமல்ல, அது நற்செயலுக்கும், புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் பாதகமான செயற்பாடாக அமையும்.  

குறித்த 111 ஏக்கர் மற்றும் 70ஏக்கர் 2ரூட்/73.11 ஏக்கர் காணிகள் எவ்வித தாமதமும் இன்றி விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்ட வேண்டும் என நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன். இந்த விடயம் தங்களது மிக விரைவான கவனத்துக்குட்படுவதை நான் வரவேற்கிறேன் என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

http://www.tamilmirror.lk/செய்திகள்/கேப்பாப்புலவிலுள்ள-2ரூட்-73-11-ஏக்கர்-காணிகளை-விடுவிப்பதை-தாமதிக்க-வேண்டாம்/175-202304

  • தொடங்கியவர்

பிறப்புரிமையை மறுக்க முடியாது

 

ஜனா­தி­பதி,பாது­காப்பு செய­லா­ள­ருக்கு சம்­பந்தன் மீண்டும் அவ­சர கடிதம்
(ஆர்.ராம்)

கேப்­பா­ப்பு­லவு மக்­களின் பிறப்­பு­ரி­மையை மறுக்க முடி­யாது. தொடர்ச்­சி­யாக 165 நாட்­க­ளாக போராட்­டத்­தினை மேற்­கொண்டு வரும் அவர்­களை சொந்த நிலத்தில் குடி­யேற்­று­வ­தற்கு உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கின்றேன் என்று வலி­யு­றுத்தி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பாது­காப்புச் செய­லாளர் கபில வைத்­தி­ய­ரட்ன

ஆகி­யோ­ருக்கு எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் அவ­சர கடி­த­மொன்றை மீண்டும் அனுப்பி வைத்­துள்ளார்.  

முல்­லைத்­தீவு மாவட்டம், கேப்­பா­பி­ல­வி­லுள்ள இடம்­பெ­யர்ந்த தமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் எனத் தலைப்­பிட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கேப்­பா­ப்பி­ல­வி­லுள்ள இடம்­பெ­யர்ந்த தமிழ் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணிகள் தொடர்­பாக தங்­க­ளுக்கு (ஜனா­தி­பதி) 20 திகதி நான் எழு­தி­யுள்ளேன். தங்­க­ளது செய­லாளர் ஜூலை 28ஆம் திகதி அக் கடி­தத்­திற்குப் பதி­ல­ளித்­துள்ளார். பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் 09.08.2017அன்று எனக்குக் கடிதம் ஒன்று அனுப்­பி­யுள்ளார். அவ­ரது கடி­தத்­திற்கு 11.08.2017ஆம் திகதி அன்று கடி­த­மூலம் நான் பதி­ல­ளித்­தி­ருந்தேன். அவற்றின் பிர­திகள் இணைக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விடயம் தொடர்பில் தங்­க­ளது எண்­ணப்­பாட்­டினை நான் நன்­க­றிவேன்.

மக்­க­ளுக்குக் காணி­களை வழங்­கு­வது தொடர்பில் விரை­வான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வது அவ­சியம். இவர்கள் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்­த­வர்கள். இந்த மக்கள் தங்­க­ளது காணி­க­ளுக்குத் திரும்பிச் செல்ல விரும்­பு­கி­றார்கள். இவர்­க­ளது பிறப்­பு­ரிமை மறுக்­கப்­ப­ட­லா­காது. ஒரு தசாப்த காலத்­திற்கு மேலாக தங்­க­ளது காணி­க­ளி­லி­ருந்து இவர்கள் வௌியே­றி­யுள்­ளார்கள்.

ஆயுதப் போராட்டம் முடி­வ­டைந்து 8 வரு­டங்கள் கடந்­துள்­ளது. இந்தக் காணி­களின் வாயிலில் இந்தக் காணி­களை மீளத்­த­ரு­மாறு வேண்டி, இந்த மக்கள் கடந்த 165 நாட்­க­ளாக மழை­யிலும் வெயி­லிலும் போராட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கி­றார்கள். அவர்கள் உறு­தி­யுடன் இருக்­கி­றார்கள்.

மிகுந்த மரி­யா­தை­யுடன் நான் வேண்­டிக்­கொள்­வ­தென்­ன­வென்றால், கூடிய விரைவில் இந்தக் காணிகள் மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட வேண்டும்.

தாங்கள் இது தொடர்பில் ஒரு வழி­காட்­டலைக் கொடுக்க வேண்டும் என்று கேட்­டுக்­கொள்­கிறேன். தேவை­யேற்­படின் அதி­மே­தகு தாங்கள் இது தொடர்பில் முடி­வெ­டுக்கும் படி­யான ஒரு கூட்­டத்­தினை ஏற்­பாடு செய்­யு­மாறும் தய­வாக வேண்­டு­கிறேன். இது தொடர்பில் விரை­வான தீர்­வொன்­றினை நான் தய­வுடன் எதிர்­பார்க்­கிறேன் என்­றுள்­ளது.

இக்­க­டி­தத்தின் பிர­திகள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்சர் சுவா­மி­நாதன், ஜனா­தி­ப­தியின் செய­லாளர் ஒஸ்டின் பெர்­ணான்டோ, பாது­காப்புச் செய­லாளர் கபில வைத்­தி­ய­ரட்ன, முப்­படைத் தள­பதி ஜெனரல் கிரி­ஷாந்த டி சில்வா, இரா­ணு­வ­த­ள­பதி ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்க ஆகி­யோ­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரினால் பாது­காப்புச் செய­லா­ள­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கேப்­பா­பு­லவு காணி குறித்த விடயம் தொடர்பில் தங்­க­ளது ஆழு­னுஃீ­யுஊஃ01ஃடுஃ938ஃயுலு இலக்­க­மி­டப்­பட்ட 09.08.2017 திக­தி­யி­டப்­பட்­டி­ருந்த கடிதம் எனக்குக் கிடைத்­தது. தங்கள் பதி­லுக்கு எனது நன்­றிகள்.

இந்த விடயம் பல்­வேறு மட்­டங்­களில் அவ­தா­னத்­திற்கு உள்­ளாகி வந்­துள்­ளது, இறு­தி­யாக புனர்­வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­தனின் தலை­மையில், புனர்­வாழ்வு அமைச்சில் ஜூலை, 26 2017 அன்று ஒரு கூட்டம் இடம்­பெற்­றி­ருந்­தது.

ஜூலை, 20 2017 அன்று நான் தங்­க­ளுக்கும் ஏனை­யோ­ருக்கும் ஒரு பிர­தி­யுடன் ஜனா­தி­பதி அனுப்­பிய கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த விட­யங்கள் அனைத்­தையும் உறுதி செய்­கிறேன். எனது குறித்த கடி­தத்­திற்கு ஜனா­தி­ப­தியின் செய­லாளர் 2017 ஜூலை 28ஆம் திகதி ளுீஃ4ஃ1 இலக்­க­மி­டப்­பட்ட கடி­தத்தின் மூலம் பதி­ல­ளித்­தி­ருந்தார்.

புனர்­வாழ்வு அமைச்சில் ஜூலை 26ஆம் திகதி இடம்­பெற்ற கூட்­டத்தில் 111 ஏக்கர் காணியை விடு­விப்­ப­தற்­கான தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­துடன், குறித்த இடத்­தி­லி­ருந்து இரா­ணுவம் வௌியே­று­வ­தற்குத் தேவை­யான நிதி­யினை தான் ஒரு சில நாட்­களில் ஒதுக்கித் தரு­வ­தாக அமைச்சர் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்தத் தீர்­மா­னத்­திற்கு அமைய வௌியேறும் நட­வ­டிக்­கை­யா­னது தற்­போது இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்க வேண்டும். தீர்வு எட்­டப்­பட வேண்­டிய விட­ய­மாக இருப்­பது 70 ஏக்கர் 2ரூட் காணி விட­யமே. தங்­க­ளது 09.08.2017 அன்று திக­தி­யி­டப்­பட்ட கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த 73.11 ஏக்கர் காணியே இது என்­பது எனது கணிப்­பாகும். இந்தக் காணி தொடர்பில் 20ஆம் திகதி ஜூலை மாத­மன்று ஜனா­தி­ப­திக்கு அனுப்­பிய கடி­தத்தில் நான் குறிப்­பிட்­டி­ருந்த விட­யங்­களை உறுதி செய்­கிறேன்.

ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ரினால் ஜூலை 28ஆம் திகதி அனுப்­பப்­பட்­டி­ருந்த கடி­தத்தில் இந்த நிலைப்­பாடு தொடர்பில் உறுதி செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்தப் பின்­ன­ணியில், வௌியே­று­வது தொடர்பில் தீர்க்­கப்­ப­டாமல் இருக்கும் ஒரே விடயம் இந்த 70 ஏக்கர் 2ரூட் காணிப் பகு­தி­யே­யாகும்.

இந்த மக்கள் சொந்தக் காணி­களில் இருந்து வௌியேற்­றப்­பட்டு ஒரு தசாப்த காலம் கடந்து விட்­டது. ஆயுதப் போராட்டம் முடி­வ­டைந்து 8 வரு­டங்கள் கடந்து விட்­டன. இந்த மக்கள் தமது காணி­களில் மீளக் குடி­யே­று­வதை வலி­யு­றுத்தி கடந்த 165 நாட்­க­ளாக இந்தக் காணி­களின் வாயிலின் முன்­பாக போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கி­றார்கள். இந்தப் போராட்­ட­மா­னது மழை­யிலும் வெயி­லி­லு­மாக மிகுந்த அவஸ்­தை­க­ளோடு இடம்­பெற்று வரு­கின்­றது.

மக்­களின் அனு­ம­தி­யின்றி இந்தக் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. மேலும,் அவர்­களின் இடை­வி­டாத போராட்­டங்­களின் மத்­தி­யிலும் சட்­ட­ரீ­தி­யாகப் பெறப்­ப­டாத இந்தக் காணி­களில் இரா­ணுவம் தொடர்ந்தும் குடி­கொண்­டுள்­ளது. இந்த நட­வ­டிக்­கை­யா­னது நிச்­ச­ய­மாக சட்­ட­ஒ­ழுங்குக் கட்­ட­மைப்பை மீறும் செய­லாகும்.

மேலும், இரா­ணு­வத்தின் தேவையைப் புர்த்தி செய்ய போதி­ய­ளவு அர­ச­காணி குறித்த இடத்­திலே காணப்­ப­டு­கின்­றது. குறித்த 111 ஏக்கர் மற்றும் 70 ஏக்கர் 2ரூட் காணிகள் பெரும்­பாலும் மக்­க­ளுக்கு உரித்­தானவை, அவர்கள் வாழ்­வ­தற்கும் ஏனைய சமூக, பொரு­ளா­தார தேவை­க­ளுக்­கு­மாக பரம்­பரை பரம்­ப­ரை­யாக நூற்­றாண்டு கால­மாகப் பயன்­ப­டுத்தி வந்த காணி­க­ளாகும். தாங்கள் பிறந்து வளர்ந்த மண் தொடர்பில் அவர்­க­ளுக்கு உரித்து உண்டு.

இந்த மக்­க­ளுக்கு அவர்­க­ளது இடங்­க­ளுக்குத் திரும்பிச் செல்லும் உரி­மையை இனி­மேலும் மறுக்க முடி­யாது. அப்படிச் செய்வது அநீதி மாத்திரமல்ல, அது நற்செயலுக்கும், புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் பாதகமான செயற்பாடாக அமையும்.

குறித்த 111 ஏக்கர் மற்றும் 70ஏக்கர் 2ரூட் ஏக்கர் காணிகள் எவ்வித தாமதமும் இன்றி விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்ட வேண்டும் என நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன்.

இந்த விடயம் தங்களது மிக விரைவான கவனதிற்குட்படுவதை நான் வரவேற்கிறேன் என்றுள்ளது. இக்கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சுவாமிநாதன், பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்ன, முப்படைத் தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா, இராணுவதளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-14#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.