Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் ஏன் தனிநாட்டுக் கொள்கைக்கு தள்ளப்பட்டார்கள்

Featured Replies

தமிழர்கள் ஏன் தனிநாட்டுக் கொள்கைக்கு தள்ளப்பட்டார்கள்

Published by RasmilaD on 2017-08-14 08:47:43

 

Related image

புதிய அரசியலமைப்பில் மறைமுகமாக அதிகாரப் பரவலை முன்னெடுக்க ஒரு போதும் நாம் முயற்சிக்கவில்லை. சுயநல அரசியல் கருத்துக்களை இனியும் முன்வைக்க வேண்டாம்.  சமஷ்டியே வேண்டாம் என்று போராடிய தமிழர்கள் ஏன் தனி நாட்டுக் கொள்கைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள் என்று தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பிரிவினை வாதத்தையும், ஆயுத கலாசாரத் தையும், அரசியல் கொலைகளையும் தெற் கில் ஆரம்பித்துவிட்டு, வடக்கின் மேல் பழிசுமத் தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

அரசியல் மற்றும்

 அரசியல் தலைமைத்துவம் தொடர்பிலான கற்கைக்கான நிகழ்வு நேற்று இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

இந்த நாட்டின் பாரளுமன்ற உறுப்பினர்களின் பிரதான தகுதியாக மும்மொழி தேர்ச்சி இருக்க வேண்டும். மக்களுக்கு இதனைக்  கூற முன்னர் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மும்மொழிககளையும் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லாவிடின்  நாட்டை சரியாக வழிநடத்த முடியாது. சிங்கள மக்களின் மனதை தமிழர்களும், தமிழர்களின் மனதை சிங்களவர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும். 

ஒவ்வொரு இன மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துகொள்ள மொழி தேர்ச்சி அரசியல் தலைமைகளுக்கு இருக்க வேண்டும். 

மேலும் அரசியல் அமைப்பு மூலமாக தமிழ் மக்களுக்கு திருட்டுத்தனமாக சமஷ்டியை வழங்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளதாக தமிழ் பத்திரிகை ஒன்றில் செய்தியை நான் அவதானித்தேன். ஆனால் இந்த காரணத்தை அவர் எவ்வாறு முன்வைத்தார் என்று எமக்கு விளங்கவில்லை. 

அவர் இருக்கும் இடத்தில் இருதே நாமும் அரசியல் அமைப்பு குறித்து கலந்துரையாடி வருகின்றோம். அவ்வாறு இருக்கையில் பிரிவினைக்கு அமைவான எந்த முயற்சிகளும் மறைமுகமாக எவரும் முன்னெடுக்கவில்லை. தமிழ் மக்களை வேறு ஒரு ரீதியில் சித்தரிக்க இந்த கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றதா என்பது தெரியவில்லை. ஆனால் இன்று தமிழ் மக்களின் கருத்துக்கள் சிங்கள பத்திரிகைகளில் இடம்பெறுகின்றன.

இவர்கள் சமஷ்டி கருத்துக்களை முன்வைத்து அரசியல் செய்கின்றனர். ஆனால் முதலில் சமஷ்டி என்பது தெற்கில் இருந்தே உருவாக்கப்பட்டது. தெற்கில் இருந்தே வடக்குக்கு இந்த கருத்துக்கள் சென்றது. 

ஆனால் அப்போது வடக்கில் இருந்த அரசியல் தலைமைகள் இந்தக்கருத்தினை நிராகரித்தன. சமஷ்டி வேண்டாம் ஒன்றை ஆட்சிக்குள் வாழ வேண்டும் என்ற கருத்துக்களை தமிழர்கள் முன்வைத்தனர். 

அரசுக்கு எதிராக ஆயுத போராட்டம் ஒன்று தெற்கில் இருந்தே உருவாக்கப்பட்டது. 1971 இல் உருவாக்கப்பட்ட போராட்டங்கள் 1983 ஆம் ஆண்டில் பலமடைந்தது. அதன் பின்னரே வடக்கில் ஆயுத போராட்டம் தோன்றியது. பிரபாகரன் போன்றவர்கள் அதன் பின்னரே உருவாகினர். ஆயுதத்தையும் ஏந்தினர். அதேபோல் அரசியல் கொலைகள் வடக்கில் உருவாக்கப்படவில்லை. அதுவும் தெற்கிலேயே உருவாக்கப்பட்டன. அனைத்து கலவரமும் தெற்கில் இருந்தே உருவாக்கப்பட்டது.  சமஷ்டியே வேண்டாம் என்று போராடிய தமிழர்கள் ஏன் தனி நாட்டுக் கொள்கைக்கு தள்ளபட்டார்கள் என்பதை அனைவரும் சிந்தித்து பாருங்கள். 

கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு இன்று அனைத்து பழியையும் வடக்கில் போட்டுவிட்டனர். கொலை செய்தனர், சமஷ்டி கோரிக்கையினை முன்வைத்தனர், அரசியல் கொலைகளை செய்தனர் என்று அனைத்து குற்றங்களையும் வடக்கில் சுமத்தி வருகின்றனர். உண்மைகளை முதலில் பெரும்பான்மை சமூகம் தெரிந்துகொள்ள வேண்டும். 

வரலாற்றை மாற்றியமைக்க முடியாது. அவை என்னவென்பதை இளம் அரசியல்வாதிகள் தெரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் இந்த நாடு சிங்கள நாடு எனவும், சிங்களவர்களுக்கே உரிமை உள்ளது என்றும் தமிழர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் எனவும் அண்மையில் ஒரு பெளத்த பிக்கு என்னிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் நான் மஹா வம்சத்தை முன்வைத்து பேசினேன். எனக்கு வரலாற்றுடன் ஒப்பிட்டும் பேச தெரியும். ஆனால் நாம் நல்லிணக்கத்தை உருவாக்கவே முயற்சிகின்றோம். 

இந்த நாட்டில் பெரும்பான்மை சிங்களவர்கள், பௌத்தம் பிரதான மதம் என்பதில் எமக்கு எந்த சிக்கலும் இல்லை. அதை நாம் ஏற்றுகொள்ள தயாராக உள்ளோம். ஆனால் எஞ்சிய மதங்களும் இனங்களும் இணைந்தால் மட்டுமே நாடு பூரணமடையும். மாறாக முழுமையான நாட்டினை உருவாக்க முடியாது. 19 இனங்கள், 3 மொழிகள், நான்கு மதங்கள் இந்த நாட்டில் உள்ளன. அதை மறுக்க முடியாது. இந்த நாடு அனைத்து தரப்பினருக்கும் உரித்தானது என்பதை சிங்கள மக்கள் ஏற்றுகொள்ள வேண்டும். அதேபோல் அரசியல் ரீதியான அதிகார பகிர்வு அவசியமாகும். அப்போதே பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மத்திய அதிகாரங்கள் மாகாணங்களுக்கு செல்ல வேண்டும். 

இது வடக்குக்கு மட்டும் அல்ல தென் பகுதிக்கும் மத்திய மாகாணத்துக்கும் செல்ல வேண்டும். அப்போதே தீர்வு என்ற விடயத்தை சிந்திக்க முடியும்.  இந்த நாட்டில் பொலிஸ், பாராளுமன்றம், அமைச்சரவை, தேர்தல்கள் அணைக்குழு என அனைத்துமே அவசியமான ஒன்றாகும். இவற்றை நிராகரிக்க முடியாது. அதை இளம் அரசியல் சமூகத்தினர் உணர்ந்து அரசியலுக்கு வரவேண்டும் என அவர் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/23126

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.