Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது கொள்கையே மோதலுக்கு காரணம்

Featured Replies

எமது கொள்கையே மோதலுக்கு காரணம்

Published by RasmilaD on 2017-08-14 08:44:44

 

Image result for விஜ­ய­தாச ராஜபக் ஷ virakesari

சாதா­ரண விட­யங்கள் என கருதி கைவிட்ட அர­சியல் விட­யங்­களே இறு­தியில் மிகப்­பெ­ரிய அழிவை ஏற்­ப­டுத்­தி­யது. வடக்கு, கிழக்கு ஆயுத மோத­லுக்கும் இளைஞர் புரட்­சிக்கும் எமது அர­சியல் கொள்­கையே கார­ண­மாக அமைந்­தது என்று நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ தெரி­வித்தார். 

இவற்றை மாற்­றி­ய­மைக்க  நல்­ல­தொரு வாய்ப்பு கிடைத்­துள்­ளது. இன­வாதம் என்­பதை விடுத்து இன ஐக்­கி­யத்தில் இலங்­கை­யர்கள் என்ற அடிப்­ப­டையில் முன்­செல்ல வாய்ப்­புகள் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்­பிட்டார். 

அர­சியல் மற்றும் அர­சியல் தலை­மைத்­துவம் தொடர்­பி­லான கற்­கைக்­கான ஆரம்ப நிகழ்வு நேற்று இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் இடம்­பெற்­றது. இதில்  அதி­தி­யாக கலந்­து­கொண்ட அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக்ஷ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

இந்த நாட்டில் இன­வாதம் பல­ம­டைய டொனமூர் அர­சியல் அமைப்பே கார­ண­மாக அமைந்­தது. வெளி­நாட்­ட­வரின் கொள்­கையில் இலங்­கையில் இன­வாதம் பலப்­ப­டுத்­தப்­பட்­டது என்­பதே உண்­மை­யாகும். இதனை  இன்றும் நாம் அனு­ப­வித்து வரு­கின்றோம். பிரித்­தா­னிய ஆதிக்­க­வா­திகள் இந்த கொள்­கையை வேண்­டு­மென்றே இலங்­கையில் உரு­வாக்­கினர். அவர்­க­ளது ஆதிக்­கத்தை தக்­க­வைக்க இதனை முன்­னெ­டுத்­தனர். அவர்கள் உரு­வாக்­கிய இன­வாத, பிரி­வி­னை­வாத கொள்­கையில் இருந்து மீண்டு எழ­மு­டி­யாத நிலையில் இன்றும் அதில் இருந்து தப்­பிக்க நாம் முயற்­சித்து வரு­கின்றோம்.  

உலகில் எங்கும் இல்­லாத அளவில் இலங்­கையில் மட்­டுமே பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இன அடிப்­ப­டையில் தெரிவு செய்ய வேண்டும் என்ற கொள்­கையை உரு­வாக்­கிக்­கொ­டுத்­தனர். ஒவ்­வொரு இனத்­த­வ­ருக்கும் தனித்­த­னி­யாக பிரித்து வைக்­கப்­பட்ட அர­சியல் கொள்கை உரு­வாக்­கப்­பட்­டது. இவ்­வாறே ஜன­நா­யகம் எமது நாட்டில் உரு­வாக்­கப்­பட்­டது. 

இந்த கொள்கை வேறு எந்த நாட்டில் இருக்­கின்றதா என்­பது எனக்கு தெரி­யாது. இந்த அர­சியல் செயற்­பாடே இலங்­கையில் இளைஞர் கிளர்ச்சி, வடக்கு கிழக்கின் யுத்தம், இன­வாத முரண்­பா­டுகள் அனைத்­திற்கும் கார­ண­மாக அமைந்­தது. சிறிய முரண்­பா­டுகள் என கருத்தி கைவிட்ட பிரச்­சி­னைகள் இறுதியில் மிகப்­பெ­ரிய அழிவு வரையில் சென்­ற­மையே உண்­மை­யாகும்.  இன்றும் நாம் இன­வா­தத்தை அடிப்­ப­டை­யாக வைத்தே அர­சியல் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். 

எமது பிரி­வி­னை­வாத அர­சியல் நகர்­வு­களே இன்­று­வ­ரையில் தீர்வு ஒன்றை சிந்­திக்க முடி­யாத நிலை­மைக்கு தள்­ளியுள்ளது. இவற்றில் இருந்து விரை­வாக மீள வேண்டும். இப்­போதும் இவை சாதா­ரண பிரச்­சி­னைகள் என கரு­தினால் பாரிய அழிவில் முடி­வ­டையும். 

 புகழைத் தேடும்  அர­சியல் பயணம் நாட்­டுக்கு ஒரு­போதும் பொருந்­தாது. ஆனால் இன்று இலங்கை இந்த நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. அதற்கு விருப்பு அர­சியல் கொள்­கையே பிர­தான கார­ண­மாகும். இன்று இலங்­கையில் மூன்று அர­சியல் செயற்­பா­டுகள் உள்­ளன.

 பாரா­ளு­மன்ற அர­சியல், மாகா­ண­சபை அர­சியல், பிர­தே­ச­சபை அர­சியல் என மூன்று அர­சியல் உள்­ளன. ஆனால் இன்று அவை அனைத்தும் ஒன்­றாக மாறி­யுள்­ளது. இதில் இருந்து எம்மால் விடு­பட முடி­யாத நிலையில் உள்ளோம். இப்­போது இவற்றை மாற்­றி­ய­மைக்க வாய்ப்பு கிடைத்­துள்­ளது. இன­வாதம் என்­பதை விடுத்து இன ஐக்­கி­யத்தில் இலங்­கை­யர்கள் என்ற அடிப்­ப­டையில் முன்­செல்ல வாய்ப்புகள் அமைந்துள்ளன. நாம் எமது நாட்டுக்காகவும். மக்களுக்காகவும், நாட்டின் வளங்களுக்ககவும் அரசியல் செய்கின்றோம். இனிவரும் இளம் அரசியல் பரம்பரையும் இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என்பதே எம் அனைவரதும் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/23125

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.