Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப்புலிகளில் சயனைட் அருந்தி வீரமரணமடைந்த முதல் போராளி யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று எமது விடுதலை(போராட்டம்) இயக்கம் பதிணெண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகத்தின் காரணமாக ஒரு புதிய பரிமாணத்துடன் உலக அரங்கில் சிறந்த(போராட்டமாகவும்) இயக்கமாகவும் மற்ற உலக விடுதலை இயக்கங்களிற்கு ஒரு அகராதியாகவும் தலை நிமிர்ந்து நிற்கிறது என்பதில் உலக தமிழினமே மகிழ்சியடையவேண்டிய ஒரு விடயமாகும்.

முக்கியமாக உலக அரங்கில் இயங்கிக்கொண்டிருக்கும் விடுதலை இயக்கங்களின் பின்புலங்களை அவதானித்தீர்கள் என்றால் ஏதாவது ஒரு நாடு உறுதுணையாக இருப்பதை அவதாணிக்கக்கூடியதாக இருக்கும்.

ஆனால் எங்களுடைய போராட்டத்தை இவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஆதரவானவர்கள் என்று எந்த நாட்டையும் குறிப்பிட்டுக்கூறமுடியாது. அதே நேரத்தில் எமது போராட்டத்திற்கு எதிரானவர்கள் மிக அதிகம் என்பதைத்தான் குறிப்பிடலாம்.

நான் சொல்ல வருவது என்னவென்றால் எமது விடுதலை இயக்கத்தின் வளர்ச்சிக்கும் போராட்டத்தின் வெற்றிகளுக்கும் காரணமானவர்கள் எமது மக்களும், போராளிகளும் தான்.

ஆதலால் தான் மண்ணிற்காக மரணித்த மைந்தர்களை மாவீரர்களாகவும், ஆதரவாக இருக்கின்ற முன்னோடிகளுக்கு நாட்டுப்பற்றாளர், மாமனிதர் போன்ற கௌரவங்கள் கொடுக்கப்படுகின்றன.

இருந்தாலும் எனது மனதில் ஒரு சந்தேகம் நெருடிய வண்ணமிருக்கின்றன.

நான் அறிந்தவரையில் தமிழீழ விடுதலைப்புலிகளில் சயனைட் அருந்தி முதலில் வீரமரணமடைந்த போராளி சரியான முறையில் கௌரவிக்கப்படவில்லை என்பது தான் என்னுடைய கருத்து. இவர் யாரென்று தெரியாதவர்களே அதிகம்பேர் உள்ளோம். நான் குறிப்பிடுவது பொன். சிவகுமார் அல்ல என்பதையும் உங்களுக்கு தெரிவித்து உங்களிடம் இருந்து மேலதிகமான விபரங்களை எதிர்பார்க்கிறேன். இவர் ஆரம்பத்தில் யேர்மெனியில் இருந்து விடுதலைப்புலிகளுக்காக இயங்கியவர் என்றும் அறிந்துகொண்டேன். சில வேளைகளில் என் கணிப்பில் தப்பும் இருக்கலாம், தயவு செய்து நீங்க அறிந்தவற்றை கூறுங்கள்.

பகீன் ஆனால் அவரின் இராணுவ தரநிலை தெரியவில்லை லன்டனில் குடியுரிமை பெற்று தாயகத்தின் பால் காதல் கொன்டு பாலா அண்ணவுடன் தமிழகம் வந்து அங்கு தலைவரை நச்சரித்து தமிழீழம் வந்து கொஞ்சநாளிலேயே சுற்றிவளைப்பில் சயனைட் அருந்தி வீரகாவியமாணவர்

ஜேர்மனியில் அல்ல இங்கிலாந்தில் சாதாரணமானவராக குடியுரிமை பெற்று வாழ்ந்தவர்.அவரை பற்ரி அடேல் பாலசிங்கம் தனது விடுதலை வேட்கை புத்தகத்தில் எழுதியுள்ளார்

post-3161-1172874529_thumb.jpg

இணைக்கப்பட்ட இணைப்பைப்பார்க்கவும்.

42063116rj9.jpg

இணைப்பிற்கு நன்றி! இதை எங்கிருந்து பெற்றீர்கள்? பத்திரிகையிலிருந்தா?

இந்தப்படத்தின் பிரகாரம் திகதி அடிப்படையில் பார்த்தால் அமலதாஸ்தான் முதலில் தன்னுயிரை ஈய்ந்துள்ளார் ஆனால் பகீன் அவர்களையே முதன் முதலாக சயனைட் அருந்தி வீரகாவியமானதாக அடேல் அன்ரி சொல்லி இருகிறா ஒரே குழப்பமாய் இருக்குதே

இந்தப்படத்தின் பிரகாரம் திகதி அடிப்படையில் பார்த்தால் அமலதாஸ்தான் முதலில் தன்னுயிரை ஈய்ந்துள்ளார் ஆனால் பகீன் அவர்களையே முதன் முதலாக சயனைட் அருந்தி வீரகாவியமானதாக அடேல் அன்ரி சொல்லி இருகிறா ஒரே குழப்பமாய் இருக்குதே

Hi Eelavan,

When I was in eelam in early 90's, The Tigers, they mentioned that Baheen as their Maveerar gave his life for Tamileelam by taking Cynade.

Their list goes like this , Shankar, Baheen, Malathir, Miller ........ like this .

Hope ur confusion is cleared.

Dear friends, I am good in tamil but not in tamil typing. I am really sorry for typing in English.

Anban

Vazhga Thamizh... Vazhga Puli veeram.

  • 2 weeks later...

அமலதாஸ் பிடிபடும் போது சயந்தன் என்ற கராட்டி மாஸ்ரர், இயக்கப்போராளி, பரியோவான் கல்லூரி மானவர் ஓல்ட் பாக் ரோட்டில சய்னைட் அடித்து உடனடியாக் இறந்தார். அமலதாஸ் அரை உயிருடன் பிடிபட்டு பின்பு கோரமாக சித்திரவதை செய்து சாக்காட்டப்பட்டார். அதற்கு முன்பு எனக்குத்தெரிந்த வரை வாசனாக இருக்கவேன்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கேள்விக்குரிய விபரமான பதில் கருத்துடன் சந்திக்க ஆவலாகவுள்ளேன்.

சயந்தன் தான் இயக்கபெயர் வாசன் ஆமா அவர்தான் கராட்டி லெஜென்ட் . அவரில்ல முதலில அடிச்சது. வசாவிளான் பகுதியில நடந்தது என்று நினைக்கிரன். கொஞ்சம் பொருங்கோ சரியான விடையுடன் நானும் வாரன்.

வீரவேங்கை பகீன்

f_pagem_9820da8.jpg

அன்னலிங்கம் பகீரதன்

மண்டைதீவு

வீரமரணம்-18.05.1984

வீரவேங்கை பகீனுக்கு எப்போதும் சந்தேகம் இந்த சயனைட் வேலை செய்யுமாவென்று. தமது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள அடிக்கடி தனக்கு மேலுள்ள பொறுப்பாளரிடம் கேட்பார் "அண்ணை இது வேலை செய்யுமோ?" என்று

"அது வேலை செய்யும் போடா" என்று அந்தப் பொறுப்பாளரும் அவரை அனுப்பி வைப்பார். எத்தனை தரம் அந்தப் பொறுப்பாளர் பகீனிடம் கூறினாலும் அதில் அவருக்குத் திருப்தி யில்லை.

ஒரு நாள் நள்ளிரவு களைத்துப்போன நிலையில் பகீனின் பொறுப்பாளர் படுக்கைக்குச் செல்கிறார். அப்போதும் பகீன் அந்தப் பொறுப்பாளரிடம் வினவுகிறார் "அண்ணை, இது வேலை செய்யுமோ?" பொறுப்பாளருக்கு வந்ததே எரிச்சல் "வேலை செய்யாது போலக் கிடக்கு, உன்னிலைதான் ரெஸ்ற் பண்ண வேணும் போலக் கிடக்கு.. போய்ப் படடா" என்று அதட்டிவிட்டு அயர்கிறார் அந்தப் பொறுப்பாளர்.

ஆனால் 18.05.1984 அன்று புதிய சாதனை படைத்து மண்ணின் விடியலுக்கு மறைந்தார் வீரவேங்கை பகீன். எந்த சயனைட் மீது சந்தேகப்பட்டாரோ அந்த சயனைட் அருந்தி எதிரியிடம் பிடிபட்டு விடக்கூடாது என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் உயரிய இலட்சியத்திற்கு அமைய வீரச்சாவடைந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் சயனைட் அருந்தி களப்பலியான முதல் வீரவேங்கையாக வரலாற்றில் பதிந்து கொண்டார்.

அன்னலிங்கம் பகீரதன் இது வீரவேங்கை பகீனின் சொந்தப்பெயர். மண்டைதீவைச் சேர்ந்தவர். குடும்பச் சூழல் காரணமாக ஜேர்மனியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். தமிழீழத் தேசியத் தலைவர் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும் அளவிலா பற்றும் விசுவாசமும் மிக்க பகீன் ஜேர்மனியில் வசித்த காலத்திலேயே விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக வேலை செய்தார்.

பின்னர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கிருந்தவாறும் தாயக விடுதலைக்கு வலுச்சேர்த்தார். 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தமிழீழம் சிங்களக் காடையர்களால் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது தாங்கிக் கொள்ள முடியாத இந்த வேங்கை பறந்து வந்தது தாயகம் நோக்கி. தாயகத்தில் தலைவனின் அணியில் இணைநது பணியாற்றியது.

1983-1984 காலகட்டம் தமிழீழ வரலாற்றில் மிகவும் நெருக்கடி மிகுந்த காலம் தமிழீழத் தேசமெங்கும் சிங்களத்தின் கொடும் படைகளும், காட்டிக் கொடுப்போரும் நிறைந்த காலகட்டம். யார் வல்லவர், நல்லவர், நயவஞ்சகர் என்பது பிரித்தறிய முடியாத காலம். ஒரு விடுதலைப் போராளி இனங்கண்டு தரமறிந்து தன் செய்கருமம் ஆற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை. சுற்றும் சிறீலங்கா இராணுவ வல்லூறுகளுக்கு மத்தியில் தனது உந்துருளியில் சுழன்று பணியாற்றினார் பகீன்.

18.05.1984 அன்று அமைப்பின் அரசியல் பிரச்சார வேலைகளுக்காக வல்வெட்டித்துறையில் இவர் உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதியை முற்றுகையிட்டது சிங்கள இராணுவம். நிராயுதபாணியாய் நின்ற நிலையிலும் நிலை கலங்காத இளவேங்கை வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்து பாவனை செய்யத் தொடங்கினார். ஆனால் சிறீலங்கா இராணுவத்தால் இனங்காணப்பட்டு விட்டார். வெறிக்கூச்சலுடன் சூழந்து கொண்டனர் சிறீலங்காப் படைகள். தன்னைச் சித்திரவதை செய்து அமைப்பின் இரகசியங்களைக் கறந்து விடக் கூடாது, அதனால் விடுதலைக்குக் கேடாக தான் அமைந்து விடக்கூடாது என்ற கடுகதியில் சயனைட் அருந்தி ஈழத்தாயின் மடியை முதன் முதல் சயனைட் அருந்தி முத்தமிடுகிறார்.

"இந்த சயனைட் எங்கள் கழுத்தில் தொங்கும் வரைக்கும் உலகில் எந்த சக்திக்கும் அஞ்சமாட்டோம்" என்று யாழ் மீட்ட வீரன் கேணல் கிட்டு ஒரு பேட்டியின்போது குறிப்பிட்டிருந்தார். ஆம் எங்கள் பகீனும் இன்று விடியலின் துருவ நட்சத்திரங்களில் ஒன்றாய் அமைந்து பதினேழு வருடங்கள் கடந்து போயின. எனினும் பல ஆயிரம் பகீன்களின் பயணங்கள் இலட்சியத்தை நோக்கி நகருகின்றன.

மூலம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் நூற்றுக்கு நூறு வீதம் சரியான தகவல்....இவருடன் நான் நல்லாக நெருங்கி பழகியிருக்கிறேன்.

Edited by Valvai Mainthan

நானும் அப்படித்தான் நினைக்கின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.