Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜேதாஸ தொடர்பில் விரைவில் முடிவெடுப்பேன்

Featured Replies

விஜேதாஸ தொடர்பில் விரைவில் முடிவெடுப்பேன்

02-0694020133862d2e642cbd2da06ca96b5393145a.jpg

 

பிரதமர் அறிவிப்பு; பதவி நீக்கம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் முடிவெடுத்ததாகவும் தகவல்

(எம்.எம்.மின்ஹாஜ்)

விஜேதாஸ ராஜபக் ஷ பிரச்சினைகள் குறித்து விளக்கமளிப்பதற்கு அளித்த கால அவகாசம் நிறைவடைந்து விட்டது. ஆகவே இனிமேல் தீர்மானம் எடுக்கும் தருணம் வந்துள்ளது. இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு

 

நடத்தி விரைவில் விஜேதாஸ ராஜபக்ஷ குறித்து தீர்மானத்தை அறிவிப்பேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார். 

 

 

இதனை அடுத்து நேற்று இரவு 9.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்ததை அடுத்து விஜயதாஸ ராஜபக்ஸவை பதவியில் நீக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டதாக தெரியவருகின்றன. இது குறித்து அறிவிப்பு விரைவில் விடுக்கப்படும் என அரசாங்க மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

விஜயதாஸ ராஜபக்ஸ தொடர்பில் ஆராய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவினால் மலிக் சமரவிக்கிரம தலைமையில் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.எனினும் இந்த குழுவிற்கு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ எந்தவொரு விளக்கத்தை அளிக்க முன்வரவில்லை என பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது மலிக் சமரவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்தே பிரதமர் குறித்த அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளதாக தெரிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று மாலை 6.30 அலரி மாளிகையில் கூடியது. எனினும் இந்த குழு கூட்டத்தின் போது அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பங்கேற்கவில்லை என்பது குறிப்பிட்டாக வேண்டும்.

இந்த குழு கூட்டத்தின் போது விஜயதாஸ ராஜபக்ஷ விவகாரம் தொடர்பில் பரவலாக ஆராயப்பட்டன. இதன்போது செயற்குழு கூட்டத்தில் எதிர்ப்பு வெளியிட்ட அஜித் பீ பெரேரா, ரன்ஜன் ராமநாயக்க உள்ளிட்டோர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு பெரும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது மலிக் சமரவிக்கிரம. மங்கள சமரவீர மற்றும் ரவிந்திர சமரவீர ஆகிய மூவரை கொண்ட குழு நியமிக்கப்பட்டது.இந்த குழுவின் அறிக்கை எவ்வாறு அமையும் என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் பெரும் எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரசிங்க குழுவிற்கு விஜயதாஸ ராஜபக்ஷ ஏதும் தெளிவுப்படுத்தல் செய்தாரா என கேட்டார். இதன்போது விஜயதாஸ ராஜபக்ஷ எமது குழுவிற்கு எந்தவொரு வாக்குமூலமும் வழங்கவில்லை என அமைச்சர் மலிக் சமரவிக்கிரம குறிப்பிட்டார்.

இதனையடுத்து விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு அளித்த கால அவகாசம் நிறைவடைந்து விட்டது. இனி இறுதி தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தீர்மானம் எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

இதன்படி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு நேற்று இரவு 9.30 அளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சென்றுள்ளார். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம், கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்கிரம மற்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் சென்றுள்ளனர்.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிற்கு விவகாரம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி குழு கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் நேற்று .இரவு 9.30 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்ததை அடுத்து விஜயதாஸ ராஜபக்ஸவை பதவியில் நீக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவருகின்றன. இது குறித்தான அறிவிப்பு பெரும்பாலும் இன்றைய தினம் வெளிவரும் சாத்தியம் உள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-08-22#page-1

  • தொடங்கியவர்

விஜேதாசவின் பதவிகளைப் பறிக்க முடிவு செய்தது ஐ.தே.க.!!

 
 
விஜேதாசவின் பதவிகளைப் பறிக்க முடிவு செய்தது ஐ.தே.க.!!
 

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச வகிக்கும் சகல அமைச்சரவை பதவிகளில் இருந்தும் அவரை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் தலைமை அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார்.

செயற்குழுவின் தீர்மானத்துக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பிலிருந்து தவறியுள்ளார் என்று அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளை திருத்திக்கொள்வதற்காக நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதும், அதனை செயற்படுத்த விஜயதாச தவறியுள்ளார். அதனால் இந்த தீர்மானத்துக்கு செயற்குழு வந்தது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/21788.html

கடத்தல்காரர்களையும், கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களும், ஊழல்வாதிகளையும்  பாதுகாக்கும் விஜேதாச ராஜபக்சவுக்கு பௌத்த உயர்பீடங்கள் அனைத்தும் ஆதரவு வழங்கியதன் மூலம் இலங்கையில் சமூகவிரோத செயல்களின் மூலவர் இந்த பௌத்த உயர்பீடங்கள் தான் என்று மக்கள் முடிவுசெய்வதை தவறென்று யாரும் கூறமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.