Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்மைத் துரத்தும் அந்த மூன்றாவது கண்! - ‘புரியாத புதிர்’ விமர்சனம்

Featured Replies

நம்மைத் துரத்தும் அந்த மூன்றாவது கண்! - ‘புரியாத புதிர்’ விமர்சனம்

 

கேமராக்கள் சூழ் உலகு இது. இங்கு எவ்வளவு பத்திரமாக இருந்தாலும், ஓடி ஒளிந்தாலும் ஆயிரமாயிரம் கண்கள் நம்மைக் கண்காணித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மொபைல் கேமராக்களால் ஏற்படும் பிரச்னைகள், சிக்கல்கள், பழிவாங்கல்களைப் பதிவுசெய்திருக்கிறது ‘புரியாத புதிர்.’
 

புரியாத புதிர்

 

வளரும் இசைக் கலைஞன் கதிர் (விஜய் சேதுபதி). பப் ஒன்றில் டிஜே-வாக இருக்கும் அர்ஜுனன் மற்றும் டிவி சேனல் ஒன்றில் வேலைசெய்யும் நண்பனுடன் வசித்துவருகிறார். மழை நாளொன்றில் விஜய் சேதுபதியின் கண்ணில்படும் காயத்ரிக்கும் விஜய் சேதுபதிக்கும் காதல். எல்லாம் சரியாக நகரும்போது, காதலியின் அந்தரங்க வீடியோ ஒன்று விஜய் சேதுபதியின் மொபைலுக்கு வருகிறது. அடுத்தடுத்து வரும் வீடியோக்களால் விஜய் சேதுபதி மன உளைச்சல் அடைகிறார். அமானுஷ்யத் தன்மை, மர்மம், காதலின் தவிப்பு என எல்லாம் கலந்த இந்த 'புரியாத புதிர்'  முடிச்சு என்ன என்பதுதான் கதை.

தொழில்நுட்ப வளரச்சியிப்இன்னொரு அபாய முகத்தையும் அது பெண்களின் வாழ்வைக் குலைக்கும் கொடூரத்தையும் முதல் படத்திலே அலசியிருக்கும் அறிமுக இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி கவனம் ஈர்க்கிறார். ஸ்கேண்டல் வீடியோக்களின் அடிப்படையை அழகான மெசெஜாகவும் த்ரில்லராகவும் படமாக்கியதற்குப் பாராட்டுகள். 

விஜய் சேதுபதி

இசைக் கலைஞன், இங்கிலீஷ் புத்தகம் படிப்பவர், கூலர்ஸ், நகரத்து இளைஞர் என விஜய் சேதுபதிக்குக் கொஞ்சம் வித்தியாசமான ரோல். நிறைய அதிர்ச்சி தரும் காட்சிகளில் வியர்த்துக்கொட்டி, மொட்டைமாடிக் காட்சியில் கதறி அழுது என நடிப்பில் சுவாரஸ்யத்துக்குக் குறைவில்லை. காயத்ரிக்கு அழகான கதாபாத்திரம், உணர்ந்து நடித்திருக்கிறார். விஜய் சேதுபதிக்கும் காயத் ரிக்குமான காதல் காட்சிகளில் கெமிஸ்ட்ரி அள்ளுகிறது. நண்பர்களும் தோழியும் என குறைந்தளவே கதாபாத்திரங்களில் நேர்த்தியாகக் கதை சொல்லியிருக்கிறார்.

அந்தரங்க வீடியோக்களை எடுப்பது யார் என்ற சஸ்பென்ஸை நீட்டித்தது வரை ஓகே. ஆனால் அந்த பிளாஷ்பேக் காட்சிகளில் க்ளிஷேக்கள் நிறைந்து சுவாரஸ்யம் மிஸ்ஸிங். இசை பாந்தமாய்ப் பொருந்துகிறது.

பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடிக்கலாம் ரகம். தீவிரமான காட்சி ஒன்று, பிறகொரு பாடல், மறுபடி த்ரில் என ஒரு கோடு போட்டுப் பயணிக்கும் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் வேகப்படுத்தியிருக்கலாம். 
 

போகிறபோக்கில் இன்னொரு பெண் இருக்கும் (நண்பனின் மேனேஜர் மனைவி) வீடியோவை காயத்ரி வெளியிடுவது மட்டும் சரியா? ஒரு அப்பார்ட்மெண்டில் கறுப்பாகவும் ஒல்லியாகவும் இருப்பவரை குற்றவாளியாகக் காட்டுவது, “இதுக்குத்தான் இவங்களுக்கு வீடு கொடுக்கக்கூடாதுங்றது” வசனம் போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம் பாஸ்.

 

புவனின் கத்தரி கச்சிதமாக வேலைசெய்திருக்கிறது. மர்மத்தில் செலுத்திய கவனத்தை பிளாஷ்பேக் பின்னணியில் அழுத்தம் கூட்டுவதற்கும் காட்டியிருக்கலாம். ஸ்கேண்டல் வீடியோக்களின் அபாயங்கள் குறித்துப் படங்கள் வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆண்களின் வக்கிரப்புத்தியை அம்பலப்படுத்துவதோடு, எல்லா வக்கிரங்களையும் துணிச்சலோடு பெண்கள் எதிர்கொண்டு போராடுவதாகவும் காட்சிப்படுத்தி இருக்கலாம்.

http://www.vikatan.com/cinema/movie-review/101100-puriyatha-puthir-movie-review.html

  • கருத்துக்கள உறவுகள்
ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் காயத்ரி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புரியாத புதிர்’. முதலில் ‘மெல்லிசை’ என்று தலைப்பு வைக்கப்பட்ட படம், பின்னாளில் ‘புரியாத புதிர்’ என மாற்றப்பட்டது. ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
 
1504270680-4458.jpg
 
 
lg.php?bannerid=0&campaignid=0&zoneid=32
நண்பனின் இசைக் கருவிகள் விற்கும் கடையைப் பார்த்துக் கொள்ளும் விஜய் சேதுபதிக்கு, இசையில் அதிக ஆர்வம். இசைக் கல்லூரியில் படித்த அவருக்கு, ஆல்பம் போடுவதில் விருப்பம். ஒருநாள் சிக்னலில் நின்றிருக்கும்போது பஸ்ஸில் இருக்கும் காயத்ரியைப் பார்த்ததும் இனம்புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது.
 
அந்த காயத்ரி, விஜய் சேதுபதி இருக்கும் கடைக்கே வருகிறார். அவர் ரெட் கலர் வயலின் ஆர்டர் செய்ய, டோர் டெலிவரிக்காக காயத்ரி வீட்டுக்கே நேரடியாகச் செல்கிறார் விஜய் சேதுபதி. அடுத்தடுத்த சந்திப்பில் அது காதலாக மாறுகிறது.
 
திடீரென காயத்ரியின் அந்தரங்க புகைப்படம் ஒன்று விஜய் சேதுபதியின் வாட்ஸ் அப்புக்கு வருகிறது. பதறித் துடிக்கும் விஜய் சேதுபதி, அந்த நம்பர் யாருடையது என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இன்னொரு நாள், ட்ரையல் ரூமில் காயத்ரி ஆடை மாற்றும் வீடியோ ஒன்று வருகிறது.

 

இடையில் விஜய் சேதுபதியின் நண்பன் ஒருவன் தற்கொலை செய்துகொள்ள, இன்னொருவன் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்படுகிறான். அடுத்து காயத்ரி குளிக்கும் வீடியோ ஒன்றுவர, கடைசியில் விஜய் சேதுபதி – காயத்ரியின் கட்டில் வீடியோவே வந்துவிடுகிறது. இதற்கெல்லாம் காரணம் யார் என்று தெரிய வரும்போது, விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன என்பது சஸ்பென்ஸ் க்ளைமாக்ஸ்.
 
வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும், கடைசிவரை அந்த சஸ்பென்ஸை கெட்டியாக வைத்திருக்கிறார் ரஞ்ஜித் ஜெயக்கொடி. முக்கியமான விஷயம், மூன்று வருடங்களுக்கு முன்பே இந்தப் படம் எடுக்கப்பட்டாலும், தற்போதைய காலகட்டத்திற்கும் அதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
 
வழக்கம்போல விஜய் சேதுபதி ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸாகிறார். பெண்ணின் அந்தரங்கப் புகைப்படம் வாட்ஸ் அப்பில் வந்தது என்று போலீஸிடம் கூட சொல்லத் தயங்கும் அந்த காட்சி, பெண்களின் மீது அந்த கேரக்டர் வைத்திருக்கும் மரியாதையைக் காட்டுகிறது. ஒவ்வொரு முறை வீடியோ வரும்போதும், அந்தப் பதற்றத்தை அப்படியே நமக்கு கடத்துகிறார்.
 
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ வெற்றியால், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் காயத்ரி. வேறு யாராவது நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அவ்வளவு மேக்கப்பையும் மீறி எப்போதும் துருத்திக் கொண்டிருக்கிற பருக்களால், அவர் அழகைக்கூட ரசிக்க முடியவில்லை.
 
கொஞ்ச நேரமே வந்தாலும், படத்தில் சொல்வது போல இறக்கை முளைக்காத தேவதையாகக் காட்சியளிக்கிறார் மஹிமா நம்பியார். படத்தை முழுவதுமாகத் தூக்கிச் சுமப்பது விஜய் சேதுபதி மட்டும்தான். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. ‘விக்ரம் வேதா’ அளவுக்கு இல்லையென்றாலும், சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசை ஓகே ரகம்தான். பாடல்கள் மனதில் ஒட்டவில்லை.
 
அடுத்தவர்களின் அந்தரங்கத்தை மற்றவர்களுக்குப் பகிர்ந்து இன்பமடையும் எல்லோருக்கும் சாட்டையைச் சுழற்றியிருக்கிறார் இயக்குநர். அனைவரும் அவசியம் பார்த்து, திருந்த வேண்டிய படம் ‘புரியாத புதிர்’.
 
  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
 
card-bg-img
 

புரியாத புதிர் நீண்ட நாளாய் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. பெயர் மாற்றப்பட்டு நாட்கள் நகர்ந்து போய் தற்போது வெளியாகியிருக்கிறது. படத்தின் பெயர் போல கதைக்குள் ஒளிந்திருக்கும் சம்பவம் என்ன, புதிர் புரியுமா என பார்ப்போம்.

கதைக்களம்

விஜய் சேதுபதி ஒரு கிடார் இசைக்கலைஞர். தன் நண்பனின் இசைக்கருவிகள் தொழிலை கவனித்து வருகிறார். வயலின் வாங்க கடைக்கும் வரும் ஹீரோயின் காயத்திரியின் நட்பு கிடைக்கிறது.

காயத்திரி இசை ஆசிரியையாக பணி செய்கிறார். இருவரும் நெருங்கிய நண்பர்களாக பின் காதல் மலர்கிறது. இவரின் அன்பான கல்லூரி தோழி ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்.

கதையின் ட்விஸ்ட் இங்கே தான். சமூக வலைதளக்குற்றங்கள், சைபர் கிரைம் என காயத்திரியை சுற்றுகிறது. மீராவாக நடித்திருக்கும் இவரின் பின்னணியில் நடக்கும் சம்பவங்கள் விஜய் சேதுபதிக்கு தெரியவர அவர் நிலை குலைந்து போகிறார்.

தன் நண்பன் தற்கொலை செய்துகொண்டது, காயத்திரி சம்பவம் என அடுத்தடுத்த நிகழ்வால் விஜய் சேதுபதியின் குணங்களில் வரும் திடீர் மாற்றம் காயத்திரிக்கு ஒரு ட்விஸ்ட். ஒரு கட்டத்தில் விசயம் இவருக்கு தெரியவர இவரும் தற்கொலைக்கு முயல்கிறார்.

விஜய் சேதுபதி தன் நிலையில் இருந்து மீண்டாரா, காயத்திரி உயிருக்கு என்னானது, சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார், அமானுஷ்யமா, திட்டமிட்ட சதியா என்பது புரியாத புதிரின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் சேதுபதி ஒரு நகரத்து இளைஞராக கலக்கியிருக்கிறார். அவரின் நடிப்பு, சூழ்நிலையால் குணம் மாறும்விதம் என டபுள் ஆக்ட் போல தோன்றும். அவரின் உடல் அசைவுகள், நடிப்பிற்கு உணர்வுகள் கொடுக்கிறது.

காயத்திரி விஜய் சேதுபதிக்கு பொருத்தமான ஜோடியாக மாறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இவரும் கதைக்கு ட்விஸ்டாக மாறியது எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.

விஜய் சேதுபதியின் படங்களில் ஹூயூமர் இருக்கும். ஆனால் இப்படத்தில் நண்பனாக அர்ஜுனன் வந்தாலும் பெரிதளவில் காமெடிகள் எதுவும் இல்லை. ஹீரோவுக்கு வைக்கப்படும் செக் சமீபத்தில் பரவி வரும் ப்ளூ வேல் கேம் போல தோன்றும்.

ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் தான் படத்தில் தனித்துவம். இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. அதற்கேற்ப பாடல்களும் ஓகே. இடையில் திடீரென வந்து கைதாகும் ரமேஷ் திலக் எங்கிருந்து வந்தார், எதற்காக வந்தார் என்பது சஸ்பென்ஸ்..

வேறொருவரின் தற்கொலையில் நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். தற்கொலை பிரச்சனைகளுக்கு தீர்வல்ல. பார்க்கும் பார்வை கூட தற்கொலைக்கு தூண்டும் என சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

க்ளாப்ஸ்

விஜய் சேதுபதியை பாராட்ட வேண்டும். கதை தேர்ந்தெடுத்த விதம், அதற்கு ஏற்ப மாறிய விதம், ரொமான்ஸ் என ஸ்கோர் அள்ளுகிறார்.

மீரா என்ற பெயர் காயத்திரிக்கு பொருந்தியதோடு விஜய் சேதுபதியுடன் கெமிஸ்ட்ரியில் இணையாக நடித்திருக்கிறார்.

இயக்குனர் கதையை காட்டிய விதம் கச்சிதம், இருக்கையின் நுனியில் உட்கார வைத்துள்ளது. ஆங்காங்கே கதைக்கு தேவையான பின்னணி இசை.

பல்பஸ்

கதையில் சில இடங்களில் லாஜிக் இடிப்பது போல தோன்றலாம்.

ரமேஷ் திலக் வந்துபோகும் காட்சி கதையின் பாதையை மாற்றுகிறதோ என தோன்றுகிறது.

மொத்தத்தில் புரியாத புதிர் கதைக்கு சரியான பெயர். அத்தனை பொருத்தம். புதிரின் உச்சம், உணர்ச்சியுடன் விளையாடுகிறது.

http://www.cineulagam.com/films/05/100856?ref=related_tag

  • தொடங்கியவர்

திரை விமர்சனம்: புரியாத புதிர்

 
ppjpg

சையமைப்பாளராகும் லட்சியத்தோடு வலம்வரும் விஜய் சேதுபதியும், இசை ஆசிரியையாகப் பணிபுரியும் காயத்ரியும், சில சந்திப்புகளில் காதலர்கள் ஆகின்றனர். பிறகு, விஜய் சேதுபதியின் போனுக்கு காதலியின் அந்தரங்க புகைப்படம் ஒன்று வருகிறது. அதிர்ச்சியடையும் அவர், அந்த எண் யாருடையது எனக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இதற்குள், ஜவுளிக்கடையின் ட்ரையல் அறையில் காயத்ரி புதிய சல்வாரை போட்டுப் பார்க்கும் காட்சியும் வீடியோவாக அவரது போனுக்கு வருகிறது. இதை அறிந்து தற்கொலைக்கு முயலும் காயத்ரியைக் காப்பாற்றி தன்னுடன் தங்கவைத்துக் கொள்கிறார்.

அடுத்து விஜய்சேதுபதியின் நெருங்கிய 2 நண்பர்களில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள, மற்றொருவர் போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறை செல்கிறார். காதலி, நண்பர்களைக் குறிவைத்துத் தாக்கும் அந்த மர்ம நபரை விஜய் சேதுபதியால் கண்டறிய முடிந்ததா? அவர் யார்? எதற்காக இப்படிச் செய்கிறார் என்பதற்கான பதில்தான் ‘புரியாத புதிர்’.

குற்ற உணர்ச்சியால் உந்தப்படும் முதன்மைக் கதாபாத்திரம் ஒன்றின் பழிவாங்கும் கதை. வழக்கமான பழிவாங்கல் கதை என்றாலும், அதற்கு திரைக்கதை அமைத்த விதத்தில் கவர்கிறார் அறிமுக இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி. ஆனால், பார்வையாளர்களை திசைதிருப்ப ராணி திலக் கதாபாத்திரத்தை நுழைத்திருப்பது, மர்ம ஆண்குரலைப் பயன்படுத்தியிருப்பது போன்றவை பலவீனமான பழைய உத்திகள்.

‘மெல்லிசை’ என பெயரிட்டு, 3 ஆண்டுகளுக்கு முன்பே படப்பிடிப்பு முடித்து, நீண்ட போராட்டத்துக்குப் பின்பு பெயர் மாறி வந்துள்ள திரைப்படம். அதனால், விஜய்சேதுபதி வழக்கமான துறுதுறுப்போடு, மிக இளமையாகவும் தெரிகிறார். இப்போதைய சூழலுக்கு கதை மிகச் சரியாகப் பொருந்துவதால், 3 ஆண்டு இடைவெளிகூட உறுத்தலாக இல்லை.

காதலியின் அந்தரங்க புகைப்படத்தை சைபர் கிரைம் போலீஸாரிடம் ஆதாரமாகக் கொடுக்க முடியாமல் தவிப்பதிலும், காதலியை எப்படியாவது இந்த இக்கட்டில் இருந்து மீட்டுவிடவேண்டும் என்று துடிப்பதிலும் தனித்து மிளிர்கிறார் விஜய் சேதுபதி. ‘‘கிஸ் பண்ணா கோவிச்சுப்பியா?’’, ‘‘காதலை சொல்லாத! சொல்லாம இருக்கறதுதான் அழகு’’ என வசனம் பேசும்போது கைதட்டல் அள்ளுகிறார்.

சிறிது நேரமே வரும் மஹிமா நம்பியார் அழகு. நடிப்பதற்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நாயகி காயத்ரியும் நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உழைப்பு தெரிகிறது; த்ரில்லர் காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. நாயகன், நாயகி இசைத்துறை கதாபாத்திரங்கள் என்பதால், பாடல்கள் இசையில் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். கேமரா நகர்வுகளை ஒரு உத்தியாகக் கையாண்டு, த்ரில்லர் உணர்வை அதிகப்படுத்த முடியும் என்பதில் வெற்றி பெற்றுவிடுகிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.

சிறந்த தகவல் தொடர்பு சாதனங்களான ஸ்மார்ட்போன்கள், சமூக வலைதளங்களை அடுத்தவர் அந்தரங்கத்தைப் பதியவும், பகிரவும் பயன்படுத்துபவர்களின் பொறுப்பற்ற அணுகுமுறையை, நேர்த்தியான திரைக்கதை மூலமாகச் சாடியதன் மூலம், தரமான த்ரில்லர் படமாக ஈர்க்கிறது ‘புரியாத புதிர்’.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19614605.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.