Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்­ளக சுய­நிர்­ணய உரிமையை அங்­கீ­க­ரித்து போதி­ய­ளவு சுயாட்­சியை வழங்க வேண்டும் : சம்­பந்தன்

Featured Replies

உள்­ளக சுய­நிர்­ணய உரிமையை அங்­கீ­க­ரித்து போதி­ய­ளவு சுயாட்­சியை வழங்க வேண்டும் : சம்­பந்தன்

 

 
 

தமிழ் மக்­க­ளுக்­காக தன்னை அர்ப்­ப­ணித்த அண்ணன் அமிர்­த­லிங்­கத்தின் பய­ணமே இன்­று­வரை தொடர்­கின்­றது. அத்­த­கைய அவரின் பய­ணத்­திற்கு முடிவு காணப்­ப­ட­வேண்­டு­மாயின்  இலங்­கையில் உள்ள தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும். அவ்­வாறு தீர்க்­கப்­ப­டா­விட்டால்  இந்­நாட்­டிற்கு ஓர் எதிர்­காலம் இல்லை. அதுவே உண்மை. ஆகவே இவை விரைவில் முடி­விற்கு வர­வேண்டும் என்று  எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

sampanthan-mp.jpg

மேலும் நாட்­டி­லுள்ள சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் ஒரு மாற்றம் ஏற்­பட்­டிக்­கின்­றது. தற்­போ­துள்ள இந்­நி­லைமை தொட­ரு­மாயின் தங்­க­ளுக்கும் அது எவ்­வித நன்­மை­யையும் தரப்­போ­வ­தில்லை என்­பதை அவர்கள் உணரத் தொடங்­கி­யுள்­ளார்கள். அத்­துடன் இந்­நாடு தற்­போ­துள்ள நிலையில் இருந்தும் பொரு­ளா­தார கஷ்­டங்­க­ளி­லி­ருந்து மீட்­கப்­பட வேண்­டு­மாயின் இங்­குள்ள பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

 

அமிர்­த­லிங்­கத்தின் 90 வது பிறந்­த­தினம் தொடர்­பான   நினைவுப் பேருரை நேற்று யாழ்ப்­பாணம்  பொது நூல­கத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  இரா.சம்­பந்தன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

 

அவர் மேலும்  உரை­யாற்­று­கையில்,

 

13 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தின் அடிப்­ப­டையில் நடை­பெற்ற மாகா­ண­சபைத் தேர்­தல்­களில் நாங்கள் போட்­டி­யி­ட­வில்லை. 1988 ஆம் ஆண்டு நாங்கள் பகி­ரங்­க­மாக ஒரு வி்டயத்தை கூறினோம்.  13 வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்தம் ஒரு முன்­னேற்­ற­க­ர­மா­னது. அதில் மாகா­ண­ச­பைகள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன. முத­ல­மைச்சர் அமைச்­சர்கள் உறுப்­பி­னர்கள் அதி­காரப் பகிர்வு என்­பன காணப்­ப­டு­கின்­றன. அந்த வகையில் அது முன்­னேற்­ற­க­ர­மா­னது ஆனாலும் அது எமது மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமைய முடி­யாத கார­ணத்­தினால் தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி அதனை நிரா­க­ரித்­தது.

 

தந்தை செல்­வா­வினால் ஆரம்­பிக்­கப்­பட்டு அமிர்­த­லிங்கம் அண்ணன் உடைய உத­வி­யுடன் பின்னர் அவரால் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்ட எமது பாதை மிகவும் கடி­ன­மான பாதை­யாக இருந்­துள்­ளது. எமது பிரச்­சி­னையை நாடு சுதந்­திரம் அடை­வ­தற்கு முன்­ன­ராக தீர்த்­தி­ருக்­க­வேண்டும். ஆனால் நாங்கள் உறு­தி­யாக இருந்த கார­ணத்­தினால் தமிழ் மக்கள் சார்பில் ஒரு அர­சியல் கட்சி உறு­தி­யாக இருந்து செயற்­பட்­டதன் கார­ணத்­தி­னாலும் அப்­பா­தையில் எமது மக்­களும் ஒற்­று­மை­யாக இருந்து பய­னித்­ததன் கார­ண­மா­கவும் இவ்­வ­ளவு தூரம் எமது இலக்கை நோக்கி நியா­ய­மான ஒரு பய­ணத்தை நாம் செய்­துள்ளோம். 

 

அண்ணன் அமிர்­த­லிங்கம் 1989 ஆம் ஆண்டு இறந்­தி­ருந்­தாலும் அவர் ஆரம்­பித்த அந்­தப்­பாதை அந்தப் பயணம் இன்று வரை தொடர்­கின்­றது. முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­காவின் காலத்தில் அர­சி­ய­ல­மைப்பு  திருத்தம் ஒரு  சட்­ட­மாக பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது.    அதில் பொதுப்­பட்­டியல் இருக்­க­வில்லை. இவற்­றை­விட பல விட­யங்கள் சம்­பந்­த­மாக அது மிகவும் தூரம் செல்­வ­தாக காணப்­பட்­டது. 

 

ரணில் விக்­கி­ர­சிங்­கவின் காலத்தில் ஒஸ்­லோவில் ஓர் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது.  உள்­ளக சுய­நிர்­ண­யத்தின் அடிப்­ப­டையில் தமிழ் மக்கள் வாழ்ந்து வரு­கின்ற பிர­தே­சங்­களில் ஒரு சமஷ்டி முறை­யி­லான ஆட்சி முறை குறித்து  ஆரா­யப்­பட வேண்டும் என்­ப­துவே ஒஸ்­லோவில் வெ ளியி­டப்­பட்ட அறிக்­கையின் சாராம்சம் என்­ப­துடன் அது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. 

 

இதே­போன்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ஷ­சவின் காலத்தில் அதி­கூ­டிய அதி­காரப் பகிர்­வுடன் தீர்வு வர­வேண்டும் மக்­க­ளி­னு­டைய பாது­காப்பு உறு­தி­செய்­யப்­பட வேண்டும் மக்­க­ளி­னு­டைய அடை­யா­ளங்­களும் உறு­தி­செய்­யப்­பட வேண்டும். அயல் நாடான இந்­தி­யாவின் அர­சியல் யாப்பை கற்­க­வேண்டும் போன்ற விட­யங்­களை   வலி­யு­றித்தி நிபுணர் குழு மற்றும் சர்­வ­கட்சிக் குழு தங்­க­ளது வரை­பு­களை சமர்ப்­பித்­தி­ருந்­தன. 

 

இவை அனைத்தும் அமர்த்­த­லிங்­கத்தின் காலத்­திற்குப் பின்னர் நடை­பெற்­றவை. ஆனால் இவ்­வ­ளவு தூரம் நாங்கள் பய­ணித்­ததன் கார­ணத்­தி­னாலும்   13 வது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தை தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி 1988 ஆம் ஆண்டு அதனை நிரா­க­ரித்து அது ஒரு முடி­வான தீர்­வாக அமை­யாது எனக் கூறி­யதன் கார­ணத்­தி­னா­லுமே  இக் கரு­மங்கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. 

 

இன்­றைக்கும் நாங்கள் இக் கரு­மத்தில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்றோம். எமது மக்­க­ளு­டைய இறை­மையின் அடிப்­ப­டையில் மக்­க­ளி­னு­டைய உள்­ளக சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு நாங்கள் சரித்­திர ரீதி­யாக வாழ்ந்து வந்து பிர­தே­சங்­களில் எமக்கு போதி­ய­ளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் வலி­யு­றித்­தி­வ­ரு­கின்றோம். 

 

மேலும் இலங்­கையில் ஏற்­ப­டுத்­தப்­படும் அர­சியல் தீர்­மா­னங்கள் இரா­ணு­வத்­தி­ன­ரு­டைய கை ஓங்­கு­வ­தனால் ஏற்­ப­டக்­கூ­டாது என்றும் அது அர­சியல் ரீதி­யா­கவே ஏற்­ப­ட­வேண்டும் என்­ப­தையே நாம் இந்­தி­யா­விற்கு தெளி­வாக கூறி­வ­ரு­கின்றோம். அத்­துடன் இக்­க­ருத்­தையே அமிர்­த­லிங்­கமும் தெ ளிவா­கவும் உறு­தி­யா­கவும் தெரி­வித்­தி­ருந்தார்.

 

சில தினங்­க­ளுக்கு முன்னர்  நாங்கள் அமெ­ரிக்­காவின் தெற்கு மற்றும் மத்­திய ஆசி­யாவின் உதவிச் செய­லா­ளரை சந்­தித்­தி­ருந்­த­போது இந்தக் கரு­மங்­களை அவர்­க­ளுக்கு தெளி­வாக விளக்­கிக்­கூ­றி­யி­ருந்தோம். எமக்கு எந்­த­வி­த­மான தீர்வு வேண்டும் என்­பதை அவ­ரி­டத்தில் தெரி­வித்­தி­ருந்தோம். இன்று சர்­வ­தேச சமூகம் எங்­க­ளு­டைய நிதா­ன­மான நியா­ய­மான போக்கின் அடிப்­ப­டையில் மிகவும் கூடு­த­லான ஆத­ர­வினை வழங்­கக்­கூ­டிய நிலமை ஏற்­பட்­டுள்­ளது.  

 

நாங்கள் தொடர்ச்­சி­யாக ஒரு ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­போதும் நியா­ய­மான தீர்­வொன்றைக் காண்­ப­தற்கு எப்­போதும் தயா­ராக இருந்­துள்ளோம்.  நாம் வைத்­தி­ருக்­கின்ற நிலைப்­பாடு நியா­ய­மா­னது நாங்கள் அநீ­தி­யாக எத­னையும் கேட்­க­வில்லை. நியா­ய­மற்ற முறை­யிலும் எத­னையும் கேட்­க­வில்லை. அதுவே எமது பல­மாகும்.   தற்­போது சர்­வ­தேச ஆத­ரவு பெரி­த­ளவில் நமக்கு உள்­ளது. அது அதி­க­ரித்­துக்­கொண்டும் வரு­கின்­றது. இவற்­றிற்­கெல்லாம் மேலாக எமது மக்கள் ஒற்­று­மை­யாக இருக்க வேண்டும். 

 

1956 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் எமது மக்கள் குறிப்­பிட்ட ஒரு கொள்­கைக்குப் பின்னால் ஒற்­று­மை­யாக இருந்­துள்­ளார்கள். அதனை நாம் மதிக்­கின்றோம் ஏனேனில் அது மிகவும் பெறு­ம­தி­யான ஒரு விடயம். அதனை எல்­லோரும் ஏற்­றுக்­கொள்­ள­வேண்டும். அத்­த­கைய ஒற்­று­மையை நாம் குலைத்­து­வி­டக்­கூ­டாது. நாங்கள் நியா­ய­மான கோரிக்­கையின் பின்­னா­லேயே ஒரு­மித்து நிற்­கின்றோம். இது தெளி­வாக வேண்டும். 

 

நாங்கள் வாழ்­வதும் மறை­வதும் சக­ஜ­மான ஒரு விடயம்.  அண்ணன் அமிர்­த­லிங்கம் சிறந்த ஒரு சட்­டத்­த­ரணி. ஆனால் அவர் தனது தொழி­லையோ தனது குடும்­பத்­தையோ சரி­வர கவ­னிக்­க­வில்லை.  மாறாக அவர் தன்னை முழு­மை­யா­கவே தமிழ் மக்­க­ளுக்­காக அர்ப்­ப­ணித்­தி­ருந்தார். அவர் இறக்கும் வரையில் இடம்­பெற்ற சலக கரு­மங்­க­ளிலும் அவர் பெரும் பங்­காற்­றி­யி­ருந்தார். அவர் மறைந்த பின்­னரும் அவ­ரது பய­ணமே இற்­றை­வரை தொடர்­கின்­றது. அவர் தொடக்­கி­வைத்த அவரின் பயணத்திற்கு விரைவில் ஒரு முடிவு வரும். எமது மக்களுக்கு நியாயமான நிதானமான ஒழுக்கமான ஒரு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும். அதனைப் பெற்றுத்தருவதற்கு சர்வதேச சமூகமும் அதன் பங்களிப்பைச் செய்யவேண்டும். 

 

சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு மாற்றம் ஏற்பட்டிக்கின்றது. அவர்களும் உணர்கின்றார்கள் இந்நிலமை தொடருமாயின் தங்களுக்கும் அது எவ்வித நன்மையையும் தரப்போவதில்லை என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள். இந்நாடு தற்போதுள்ள நிலையில் இருந்து மீட்கப்படவேண்டுமாயின் பொருளாதார கஷ்டங்களிலிருந்து நீக்கப்படவேண்டுமாயினும் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அந்த வகையில் இந்நாட்டிலுள்ள தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இந்நாட்டிற்கு ஓர் எதிர்காலம் இல்லை. அதுவே உண்மை. ஆகவே இவை விரைவில் முடிவிற்கு வரவேண்டும் என்றார்.   

http://www.virakesari.lk/article/23962

  • தொடங்கியவர்

தந்தை செல்வா அமைத்த பாதை­யி­லேயே தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் பய­ணம் தொடர்­கி­றது

 

தந்தை செல்­வா­வால் ஆரம்­பிக்­கப்­பட்டு தள­பதி அமி­ரால் தொட­ரப்­பட்ட பாதை மிகக் கடி­ன­மாக இருந்­தது. தமிழ் மக்­கள் சார்­பில் உறு­தி­யாக செயற்­பட்ட கட்­சி­யாக தமிழ் அர­சுக் கட்சி ஓர் நியா­ய­மான பாதை­யில் பய­ணித்­தது. அது இப்­போ­தும் தொடர்­கின்­றது.

இவ்­வாறு தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரும் இலங்­கை­யின் முத­லா­வது தமிழ் எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான அப்­பா­பிள்ளை அமிர்­த­லிங்­கத்­தின் 90ஆவது பிறந்த தின நினை­வில் எதிர்க் கட்­சிம் தலை­வர் இரா.சம்­பந்­தன் முதன்மை விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார். நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
தமிழ் மக்­க­ளுக்­கான தீர்வு அர­சி­யல் ரீதி­யாக ஏற்­பட வேண்­டுமே அன்றி இரா­ணுவ ரீதி­யான பலம் ஓங்­கு­வ­தன் அடிப்­ப­டை­யில் அமை­யக்­கூ­டாது என நாம் 1987ஆம் ஆண்­டி­லேயே கூறி­யி­ருந்­தோம்.

அமிரை நான் முதன்­மு­றை­யாக 1950ஆம் ஆண்­டில்­தான் சட்­டக்­கல்­லூ­ரி­யில் சந்­தித்­தேன். அப்­போது நான் முதல் ஆண்டு அமிர் இறுதி ஆண்டு. அப்­போது தமிழ்ச் சங்­கம் உரு­வாக்­கப்­பட்­டது. அதிலே அமிர் தலை­வ­ரா­க­வும் நான் உறுப்­பி­ன­ரா­க­வும் இருந்­தோம்.

1949ஆம் ஆண்டு தந்தை செல்வா இலங்கை தமிழ் அர­சுக் கட்­சியை ஆரம்­பித்­தார். அந்­தக் காலம் முதல் தமிழ் அர­சுக் கட்­சிக்­காக அமிர் உழைத்­தார். இந்த நாட்­டில் கூட்­டாட்சி (சம்ஷ்டி) இருக்க வேண்­டும் என தந்­தை­யும் அமி­ரும் உறு­தி­யாக இருந்­த­னர்.

வடக்கு கிழக்­கில் கூட்­டாட்சித் தீர்வை முன்­வைத்து மக்­க­ளி­டம் ஆத­ர­வைப்­பெற அவர்­கள் முயன்­ற­னர். அமி­ரின் வர­லா­றும் அர­சி­ய­லும் பின்­னிப் பிணைந்தது 1952ஆம் ஆண்டு நாடா­ளு­மன்ற தேர்­த­லில் தமி­ழ­ர­சுக் கட்சி இரு ஆச­னங்­களை மட்­டுமே வெற்­றி­யீட்­டி­யது. அதில் வன்­னி­ய­சிங்­கம், என்.ஆர். இரா­ச­வ­ரோ­த­யம் ஆகி­யோர் வெற்­றி­பெற்­ற­னர்.

அப்­போது கூட்­டாட்சித் தீர்வுக்கு மக்­க­ளி­டம் வர­வேற்­பில்லை. இதே­போன்று 1929ஆம் ஆண்டு டொன­மூர் முன்­பாக கண்­டி­யில் இருந்து சென்று கூட்­டாட்சியைக் கோரி­னர். இருப்­பி­னும் யாழ். இளை­ஞர் சங்­கம் உட்­பட பலர் கூட்­டாட்சியை அப்­போது கோர­வில்லை.

இத­னால் அன்று கூட்­டாட்சிக் கோரிக்கை ஏற்­றுக் கொள்­ளப்­ப­ட­வில்லை. இதன் பின்­னர் 1956ஆம் ஆண்­டுத் தேர்­த­லில் தமிழ் அர­சுக் கட்சி மிகப் பெரும் வெற்­றி­யைப் பெற்­றது. இதில் அமிர் வட்­டுக்­கோட்­டை­யில் வெற்றி பெற்­றார்.

அப்­போது சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இடம்­பெற்று தமி­ழர்­கள் புறக்­க­ணிக்­கப்­பட்ட காலம். இதன் பின் தமி­ழ­ரின் எதிர்ப்­பால் 1957ஆம் ஆண்­டில் பண்டா – செல்வா ஒப்­பந்­தம் செய்­யப்­பட்­டது. இதில் வடக்கு ஒரு பிராந்­தி­யம் கிழக்கு இரு பிராந்­தி­யம் என்­றும் இவை இணைந்த பகு­தி­யென இருந்­தது.

குடி­யேற்­றம் பிராந்­திய சபை­க­ளி­டமே ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. ஆனால் இன்று சிங்­க­ளத் தலை­வர்­கள் கூறு­கின்­ற­னர் இந்த ஒப்­பந்­தம் நிறை­வே­றி­யி­ருந்­தால் பிரச்­சினை என்றோ தீர்த்­தி­ருக்­கும் என்­கின்­ற­னர். அதில் மகிந்த , மைத்­திரி உள்­ளிட்­டோ­ரும் உள்­ள­டக்­கம்.

ஒப்­பந்த காலத்­தில் சத்­தி­யாக்­கி­ர­கம் இருந்து அதனை கிழிக்க வைத்­த­வர்­க­ளில் ஒரு­வரை அண்­மை­யில் நான் சந்­தித்­தேன். அப்­போது அவர் கூறி­னார். நாம் பெரும் தவறை இழைத்­து­விட்­டோம் என்­றார். இதன் பின்பு 1961ஆம் ஆண்டு சத்­தி­யாக்­கி­ர­கம் நடத்­தி­னோம்.

சகல மாவட்டச் செய­ல­கங்­கள் முன்­பா­க­வும் மறி­யல் செய்­தோம். இவற்­றில் அமி­ரின் முக்­கிய பங்கு இருந்­தது. இவ்­வாறு இடம்­பெற்ற போராட்­டத்­தால் சில வாரத்­தில் கைது செய்­யப்­பட்டு இரா­ணுவ முகா­மில் அடைக்­கப்­பட்­டோம்.

இதில் தந்தை செல்­வா­வு­டன் அமிர், அவ­ரது துணை­வி­யார் மங்கை , திருச்­செல்­வம் , நான் உட்­பட பனா­கொ­டை­யில் உள்ள இரா­ணுவ முகா­மில் அடைக்­கப்­பட்­டோம். பின் 1965ஆம் ஆண்டு டட்லி – செல்வா ஒப்­பந்­தம் இடம்­பெற்­றது. இதில் குடி­யேற்­றமே முக்­கிய விட­யம்.

அந்த ஒப்­பந்­தத்­தில் வடக்கு – கிழக்கு தமி­ழர் பிர­தே­சம், அங்கு பண்­பாட்­டை­யும் பாரம்­ப­ரி­யத்­தை­யும் பேண தமிழ் மக்­க­ளுக்கு உரித்­துண்டு என ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. அப்­போது இவற்றை சிங்­கள மக்­களை ஏற்க வைக்க வேண்­டும் என அமிர் பெரி­ய­ள­வில் பங்­காற்­றி­னார்.

1972ஆம் ஆண்டு புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றப்­பட்­டது. அப்­போது எமது சார்­பில் தர்­ம­லிங்­கம் பணி­யாற்­றி­னார். சுயாட்சி , பிராந்­திய கோரிக்­கை­கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டன. அப்­போது அர­சி­யல் அமைச்­சர் கொல்­வின் ஆர் டி சில்வா இருந்­தார்.

தேர்­த­லில் போட்­டி­யிட்டு அர­ச­மைப்பை மக்­கள் ஏற்­ற­தாக நிரூ­பிக்க வேண்­டும் என அவர் கோரி­னார். அது­மட்­டு­மன்றி தந்தை செல்வா பதவி விலகி இடைத்­தேர்­தல் மீண்­டும் இடம்­பெற்­றது. அதில் தந்தை செல்வா அமோக வெற்­றி­யீட்­டி­னார். பின் 1976ஆம் ஆண்­டில் வட்­டுக்­கோட்டைத் தீர்­மா­னம் நிறை­வே­றி­யது.

இதில் எமது இறைமையை பெற உரித்­துண்டு என நிரூ­பிக்­கப்­பட்டு உள்­ளக சுய நிர்­ணய அடிப்­ப­டை­யில் தீர்வை காணா­து­விட்­டால் வெளி­யக சுய­நிர்­ணய அடிப்­ப­டை­யில் எமது உரி­மையை பெறு­வ­தாக தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

அப்­போது 18 பேர் வெற்­றி­யீட்­டி­னோம். 1972ஆம் ஆண்டு அர­ச­மைப்­பில் தமிழ் மக்­க­ளுக்கு சுய­நிர்­ணய உரிமை வழங்­கி­யி­ருந்­தால் 1976ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்­டைத் தீர்­மா­னம் இருந்­தி­ருக்­காது. நாம் தனி­நாடு கேட்­டோம் 1976ஆம் ஆண்­டின் பின் உல­கத் தலை­வர்­க­ளைச் சந்­தித்­தோம்.

இந்­தி­ரா காந்­தி­யை­யும் சந்­தித்­தோம். அனை­வ­ருமே தனி­நாட்­டுக் கோரிக்­கையை ஏற்க மறுத்­த­னர். ஆனால் நியா­ய­மான உரி­மை­யோடு தீர்­வுக்கு உத­வு­வோம் என்­ற­னர். பன்­னாட்டு ஆத­ரவு இன்­மை­யால் அந்­தத் தீர்­மா­னத்தை முன்­னெ­டுக்­க­லாமா? எனச் சிந்­தித்­தோம். இளை­ஞர்­கள் ஆயு­தம் ஏந்­தி­னர். 1981ஆம் ஆண்­டில் ஜே.ஆர். மாவட்ட அபி­வி­ருத்தி சபையை நிறை­வேற்றி தேர்­தல் நடத்­தி­னார்.

மக்­கள் ஆத­ரவு உண்டு என்­ப­தனை நிரூ­பிக்க போட்­டி­யிட்டு வடக்கு கிழக்­கின் சகல மாவட்ட சபை­க­ளை­யும் கைப்­பற்­றி­னோம் (அம்­பாறை தவிர்ந்து). அதன்­மூ­லம் எப்­போ­தும் அ­மை­தி­யாக இப் பிரச்­சி­னை­யைத் தீர்க்கத் தயார் என நிரூ­பித்­தோம்.

தமி­ழீ­ழத்தை கோரிய பின்­பும் மாவட்ட சபை­யில் போட்­டி­யிட்டு நியா­ய­மான அமை­திக்கு வரத் தயார் என உல­குக்கு நிரூ­பித்­தோம். ஆயு­தப் போராட்­டத்தை ஏற்­கும் நிலமை இருந்­தது. இளை­ஞர்­கள் ஏமாற்­றப்­பட்­டி­ருந்­த­னர்.
தலை­வர்­கள் உட்­பட அனை­வ­ரும் ஏமாற்­றப்­ப­டு­வ­த­னால் வேறு வழி­யில்லை என்ற முடி­வுக்கு இளை­ஞர்­கள் வந்­த­னர்.

1983ஆம் ஆண்­டில் இனக் கல­வ­ரம் ஏற்­பட்­டது. அப்­போது இந்­திரா காந்­தி­யைச் சந்­தித்து நில­மை­யைக் கூறி­னோம். இந்­தி­யா­வின் நல்­லி­ணக்­கத்தை ஏற்­கு­மாறு ஜேஆ­ருக்கு அம்­மை­யார் தூது அனுப்­பி­னார். அதனை ஜே. ஆர் ஏற்­றார். கோபா­ல­சாமி. பார்த்­த­சா­ரதி ஆகி­யோர் சிறப்­புத் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டார்­கள். 1983 ஓகஸ்ட் 26அன்று அவர்­கள் வந்­த­னர். அப்­போது நானும் அமி­ரும் இந்­தி­யா­வில் இருந்து வந்­தோம்.

அனை­வ­ரும் கொழும்­புக்கு வந்­தோம். அது பயங்­க­ர­மான காலம் . பார்த்த சாரதி ஜே.ஆரு­டன் பேசி­னார். மாவட்ட சபைத் தேர்­தலை நடத்தத் தயார் என்­றார் ஜே.ஆர். அம்­மை­யார், அது போதாது வடக்கு -– கிழக்கு இணைந்த மாகாண சபை வேண்­டும் என்று கூறி­யி­ருந்­தார். 1983ஆம் ஆண்டு 9ஆம் மாதம் இந்­திரா காந்­தியை மீண்­டும் சந்­தித்­தோம். அலெக்­சாண்­டர், பார்த்த சாரதி , இந்­திரா காந்தி , நான், அமிர் ஆகி­யோர் ஒரு மணி நேரத்­துக்கு மேல் பேச்சு நடத்­தி­னோம்.

அதிலே அம்­மை­யார் , “போதிய சுயாட்சி வழங்­கப்­ப­ட­வேண்­டும். எனக்கு உங்­கள் தலை­வர்­க­ளில் நம்­பிக்­கை­யில்லை. ஜே.ஆரை நம்­ப­வில்லை. உங்­கள் கரு­மத்­தில் எங்­கள் நண்­பர்­கூட நேர்­மை­யாக நடப்­பார் என்று நான் நம்­ப­வில்லை” என்­றார்.

ஜே.ஆர் டில்­லிக்கு நவம்­ப­ரில் சென்றார். அவ­ரு­டன் இந்­திரா காந்தி பேசி­னார். இவற்­றின் அடிப்­ப­டை­யில் 1984ஆம் ஆண்டு அனைத்­துக் கட்சி மாநாடு கொழும்­பில் கூட்­டப்­பட்­டது. இவை அனைத்­தி­லுமே அமிர்­த­லிங்­கம் பங்­காற்­றி­னார். ஜன­வ­ரி­யில் கூடி மார்­கழி வரை இடம்­பெற்­றது . ஆனால் 1984ஆம் ஆண்டு ஒக்­டோ­பர் 24ஆம் திகதி இந்­திரா காந்தி கொலை செய்­யப்­பட்­டார்.

இத­னால் எவ்­வி­த­மான திருப்­தி­க­ர­மான முடி­வும் எட்­ட­வில்லை. அவ­ரது இறு­திச் சடங்கு சென்று ராஜீ­வை­யும் சந்­தித்­தோம். தாயா­ரின் கொள்­கையை கடைப்­பி­டிப்­பேன் என்­றும் தமிழ் மக்­களை கைவி­டேன் என்­றும் ராஜீவ் கூறி­னார் . அத­னால் திம்­பு­வில் பேச்சு ஆரம்­பிக்­கப்­பட்­டது. அதில் கூட்­டணி , இயக்­கங்­கள் சார்­பில் விடு­த­லைப் புலி­கள், ஈரோஸ் , ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் , ரெலோ ஆகி­யன பங்­கேற்­றன.

எமது தீர்வை வலி­யு­றுத்­தி­னோம். தனி இனம், வடக்கு– கிழக்கு தமி­ழர் தாய­கம் , சுய நிர்­ணய உரிமை , அனை­வ­ருக்­கும் அடிப்­படை உரிமை கோரி­னோம். ஒரு முடி­வும் எட்­ட­வில்லை. பிரச்­சினை தொடர்ந்த்து. 1986ஆம் ஆண்டு ஆரம்­பத்­தில் ராஜீ­வின் சிறப்­புத் தூது­வர்­க­ளாக நட்­வர் சிங் , சிதம்­ப­ரம் இங்கு வந்­த­னர்.

அதில் கூட்­ட­ணிக்­கும் அர­சுக்­கும் இடையே பேச்சு இடம்­பெற்­றது. அதுவே 13ஆம் திருத்­தத்­தின் ஆரம்­பப் பேச்சு. பேச்­சுக்­க­ளில் ரொனி டீமெல் , ரணில் , அமிர் , சிவ­சி­தம்­ப­ரம் ஆனந்­த­சங்­கரி , நான் ,ஜோசப் பர்­ரா­ஜ­சிங்­கம் போன்ற பலர் இருந்­தோம்.

பல நாட்­கள் பேச்சு இடம்­பெற்­றது. அதி­லேயே மாகாண சபைக்கு இணக்­கம் காணப்­பட்­டது. முதன் முத­லில் அரசு மாவட்ட சபையைத் தாண்டி மாகாண சபைக்கு முன்­வந்­தது. இதில்­இந்­தி­யா­வின் அக்­க­றைக்கு அமி­ரின் பங்கு முக்­கி­யம்.

வடக்கு கிழக்கு இணைப்­புத் தொடர்­பில் பிரச்­சினை இருந்­தது. கிழக்கை தமிழ் மாகா­ணம், முஸ்­லிம் மாகா­ணம் , சிங்­கள மாகா­ணம் என ப்பிரிக்­கவே அரசு முயன்­றது. முறி­ய­டிக்க ராஜீவை சந்­தித்து கோரிக்கை விட்­டோம் . 10 நாள்­க­ளானது சந்­திக்க முடி­யாது என்­ற­னர்.

பின்­னர் அழைப்பு வந்­தது. அமிர் , சிவ­சி­தம்­ப­ரம், நான் மூவ­ரும் ராஜீவுடன் இணைப்பு தொடர்­பில் பேசி­னோம். ஜே. ஆர் . மொழி ரீதி­யான பிரிப்­பைக் கூறி­னார். நாம் அப்­போது திரு­கோ­ண­மலை தொடர்­பில் விளக்கி ஏற்­றுக்­கொள்ள வைத்­தோம்.

விடை­பெ­றும்­போது நாம் கூறிய அனைத்­தும் உண்மை என்று நான் கூறி­னேன். உடன் ரமேஸ் பண்­டா­ரியை சந்­தி­யுங்­கள் என்று ராஜீவ் கூறி­னார். அதன் வழி­யி­லேயே இணைப்பு ஏற்­பட்­டது. 1987ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் 27ஆம் திகதி இந்­திய – இலங்கை ஒப்­பந்­தம் ஏற்­பட்­டது.

இலங்­கை­யில் வாழும் அனை­வ­ருக்­கும் தனிக் கலாச்­சா­ரம் உண்டு, வடக்கு – கிழக்­கில் சரித்­திர ரீதி­யல் தமி­ழர்­கள் வாழ்ந்த பகுதி. அவை இரண்­டும் இணைத்து ஒரு மாநி­ல­மாக வேண்­டும் எனக் கூறப்­பட்­டது. இவ்­வாறே அமிர்­த­லிங்­கம் போன்­றோர் பாடு­பட்­ட­னர்.

இந்த ஒப்­பந்தத்தின் பின்­னர் கொழும்­பில் செய்­தி­யா­ளர் மாநாடு இடம்­பெற்­றது. இதில் ஜே.ஆர் மற்­றும் ராஜீவ் ஆகி­யோர் பங்கு கொண்­ட­னர். பொது வாக்­கெ­டுப்பு நடத்­து­வது தொடர்­பில் என்ன நிலைப்­பாடு? என ராஜீவ்­வி­டம் கேட்க அதனை எதிர்ப்­பேன் என அவர் அன்றே கூறி­னார். துர­திர்ஷ்ட வச­மாக ராஜீவ் கொலை செய்­யப்­பட்­டார்.

13ஆம் அர­ச­மைப்­புத் திருத்­தம் மேற்­கொள்ள முயன்­ற­போது எதிர்த்­தோம். 12 விட­யத்தை திருத்­து­வ­தாக ஜே.ஆர் எழுத்­தில் வாக்­கு­று­தி­ய­ளித்­தார். நட­வர்­சிங் , குர்­சித் போன்­றோர் எம்மை சந்­தித்­த­னர். பின் எமது இளை­ஞர்­க­ளுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யில் போர் மூண்­டது.

http://newuthayan.com/story/25577.html

  • கருத்துக்கள உறவுகள்

பார்ரா.. அண்ணன் மீது பாசம் பொழியுற தம்பி.. அண்ணனின் கட்சியை கடாசிக் குப்பையில போட்டிட்டதை மறந்திட்டார்.

4 hours ago, நவீனன் said:

நாங்கள் தொடர்ச்­சி­யாக ஒரு ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­போதும் நியா­ய­மான தீர்­வொன்றைக் காண்­ப­தற்கு எப்­போதும் தயா­ராக இருந்­துள்ளோம்.  

அண்ணனும்.. தம்பியும் ஆயுதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கினமாமில்ல. 

4 hours ago, நவீனன் said:

ரணில் விக்­கி­ர­சிங்­கவின் காலத்தில் ஒஸ்­லோவில் ஓர் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது.  உள்­ளக சுய­நிர்­ண­யத்தின் அடிப்­ப­டையில் தமிழ் மக்கள் வாழ்ந்து வரு­கின்ற பிர­தே­சங்­களில் ஒரு சமஷ்டி முறை­யி­லான ஆட்சி முறை குறித்து  ஆரா­யப்­பட வேண்டும் என்­ப­துவே ஒஸ்­லோவில் வெ ளியி­டப்­பட்ட அறிக்­கையின் சாராம்சம் என்­ப­துடன் அது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. 

ஐயையோ.. அண்ணன்.. ஓஸ்லோ வரைக்கும் போனவராமில்ல.

போங்கடா.. போக்கத்தைப் பயலுவலா. 

ஆயுதம் எடுத்துப் போராடினவனை.. பயங்கரவாதி என்றியள் ஒரு பக்கம்..

1987 உடன்படிக்கையை.. அரைகுறை தீர்வின் திணிப்பு.. என்று.. நிராகரிச்சவனை.. குழப்பவாதி எண்டியள்..

நோர்வேயை இந்த பிரச்சனைக்குள்ள இழுத்து.. ஒஸ்லோ உடன்படிக்கை வரை.. கொண்டு போய்.. தமிழ் மக்களின் பிரச்சனையை சர்வதேச மயமாக்கிய விடுதலைப் புலிகளை.. உச்சரிக்கக் கூட தயங்கிற நீங்க எல்லாம்..

தமிழ் மக்களுக்கு.. சுயநிர்ணய உரிமையை இல்ல.. கோவணம் கட்டிற உரிமையைக் கூட பெற்றுக் கொடுக்க மாட்டியள்...

இதில....

தமிழின அழிப்புக்கு துணைபோன இனத்துரோகி.. அமிர்தலிங்கம்.. இவருக்கு அண்ணனாம்.. அண்ணன். tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.