Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தால் வாங்கு கேட்டு வாங்காதே!...சீதனச் சாவுகள் ஏராளம் ஏராளம்

Featured Replies

தந்தால் வாங்கு கேட்டு வாங்காதே!

 
 
தந்தால் வாங்கு கேட்டு வாங்காதே!
 

பாரதி வந்த பின்­னும் பாட்­டிலே மட்­டும் பெண்­ண­டி­மைத்­த­னம் பேசு­கி­ற­வர்­க­ளா­க­வும், பேணு­கி­ற­வர்­க­ளா­க­வும் எமது சமு­தா­யத்­தி­னர் விளங்­கு­கின்­ற­னர்.

அண்­மை­யில் எனது காது­கள் வழி சென்று மூளை­யில் இறங்கி, இத­யத்தை இறுக்­கிய சம்­ப­வங்­கள் இரண்டு. ஒன்று மாண­வர்­கள் ஆறுபேரின் அவ­லச் சாவு, மற்­றை­யது சீத­னம் தொடர்­பான முரண்­பாடு கார­ண­மாக தவ­றான முடி­வெ­டுத்து தனது உயிரை மாய்த்த ஒரு இளம் பெண்ணின் சாவு.

சீதனச் சாவுகள் ஏராளம் ஏராளம்

பெண்­கள் சீத­னம் தொடர்­பான முரண்­பா­டு­கள் கார­ண­மாக தவ­றான முடி­வெ­டுத்து மாண்ட கதை­கள் எமது நாட்­டில் குறை­வில்­லா­மல் படிக்­கக் கிடைக்­கும். அது­மட்­டு­மன்றி, படிக்க வராத , கவ­னத்­துக்கு எட்­டாத கதை­கள், காவி­யங்­கள் ஏரா­ளம்.

அது­மட்­டு­மன்றி, பெண்­ண­டி­மைத்­த­னத்­துக்­கான போராட்­டங்­கள் பாடல்­க­ளி­லும், வாய்­மொ­ழி­க­ளி­லும், மக­ளிர் தினத்­தி­லும் மட்­டுமே உயிர்­பெற்று, பின்­னர் அதே­வே­கத்­தில் மறைந் தும் விடு­கின்­றன. செயற்­பாட்டு வடி­வில் எது­வும் முன்­னெ ­டுக்­கக்­கப்­ப­டு­வ­தில்லை.

சீத­னம் என்­பது, தமி­ழர் தம் வாழ்க்­கை­யின் புரை­யோடி­ப் போன கலாச்­சார மரபுதான். அது எவ்­வாறு எமது கலா­சா­ரத்­துக்­குள் உள்­ளெ­டுக்­கப்­பட்­ட­தென்­றால், ஒரு பெண்­ணைப் பெற்ற பெற்­றோர்­கள் அவ­ளுக்­குத் திரு­ம­ணம் செய்து கொடுத்து கண­வன் வீட்­டுக்கு அனுப்­பும்­போது தாங்­கள் ஆசை­யா­யும் பாச­மா­யும் வளர்த்த தமது பெண்­ணுக்கு அன்­ப­ளிப்பு வழங்­கும் நோக்­கு­டன் சில­வற்றை பரி­ச­ளித்­தார்­கள்.

அன்பை பரி­ச­ளித்­தார்­கள், சில பொருள்­க­ளைப் பரி­ச­ளித்­தார்­கள். அதில் தாய் வீட்­டுச் சீத­ன­மாக அம்மி, குழவி, கட்­டில், சமை­ யல் பொருட்­கள் , பாத்­தி­ரங்­கள் எனத் தமது மகள் பிறி­தொரு வீட்­டில்( மண­ம­கன்) வாழப் போகி­றாளே என எண்ணி அவ­ளுக்­கான பொருள்­களை அனுப்பி வைத்­தார்­கள், பின்­னர் காலப்­போக்­கில் நகை­க­ளைப் பரி­ச­ளித்­தார்­கள் , நிலங்­க­ளைப் பரி­ச­ளித்­தார்­கள், பணத் தைப் பரி­ச­ளித்­தார்­கள்.

இவை­யெல்­லாவற்றையும் பெண்­ணைப் பெற்ற பெற்­றோர்­கள் தங்­கள் இயல்பு வரம்­புக்­குள் எட்­டும்­ப­டியே செய்து வந்­தார்­கள், அவை மண­ம­கன் கேட்­டுக் கொண்­ட­தன் பேரி­லேயோ, நிபந்­தனை விதித்தோ வழங்­கப்­பட்­ட­தல்ல.

ஆனால், இன்று யாழ்ப்­பா­ணத்­தா­னின் நிலை­யென்ன? உல­குக்கு பண்பு, வர­லாறு, வீரம், வாழ்­வி­யல் எல்லாவற் றைப் போதித்த தமி­ழர்(யாழ்ப்­பா­ணத்­தார்) இப்­போது பெண்­ண­டி­மைத்­த­னம், ஒடுக்­கு­மு­றை­க­ளைப் போதிக்க விளை­
கிறார்­களா? என எண்­ணத் தோன்­று­கி­றது. அவ்­வாறு இங்கு நடக்­கும் கல்­யா­ணச் சந்­தை­யிலே சீத­னப் பேரம் சூடு­பி­டிக்­கத் தொடங்­கி­விட்­டது.

கல்­யா­ணச் சீத­னம் என்ற சொல்­லின் அர்த்­தம் இழந்து, ஒரு பேரம் பேசும் சொல்­லாக உரு­வெ­டுத்­துள்­ளது அல்­லது சமூ­கத்­தில் களை பெருக்­கெ­டுத்­துள்­ளது.இதைக் களைந்­தால் தான் சமூ­கம் துளிர்­விட ஆரம்­பிக்­கும்.

இளம்பெண்ணின் சாவு சாதாரணமானது அல்ல

அண்­மை­யில் ஒரு இளம் பெண் கல்­யா­ணம் எல்­லாம் பொருந்தி முற்­றான பின்­ன­ரும், மண­ம­கன் தரப்­பி­னர் அதிக சீத­னம் கேட்­ட­ப­டி­யால் மன­மு­டைந்து தவ­றான முடிவு எடுத்­துத் தமது உயிரைத் தாமே போக்­கிக் கொண்­டார்.

இந்­தச் செய்தி யார்­யா­ருக்­கெல்­லாம் தெரி­யும், அல்­லது தெரிந்­தி­ருந்­தும் சாதா­ர­ண­மான விட­யம் என கடந்து போவ­தால், இது தான் எமத சமூ­கத்­தின் வழ­மை­யான இயல்பு என நிறுவ முயல்­கி­றோமா? தவ­றான முடி­வெ­டுத்து தமது உயிரை மாய்த்த அந்த யுவதி தாய் தந்தை இல்­லா­த­வர், படித்து கொழும்­பில் வேலை செய்­கி­றார்.

அந்த யுவ­தி­யின் அக்­காவே யுவதிக்குத் திரு­ம­ணம் பேசி வைத்­தி­ருந்­தார். சீத­னம் தொடர்­பான பேச்­சுக்­கள் முன்­னரே இடம்­பெற்று அவ­ளும் தனது புது வாழ்க்கை பற்றி எத்­த­னையோ கன­வு­க­ளு­டன் பொழு­து­களை இன்­ப­மாய் கடந்­தி­ருப்­பாள், புடவை நகை­கள் வாங்கி தனது திரு­மண வாழ்க்கை குறித்து அவ­ளது மனம் எவ்­வ­ளவு தூரம் புழகாங்கிதம் அடைந்­தி­ருக்­கும்.

இது இவ்­வா­றி­ருக்க மண­ம­கன் தரப்­பி­னர் ஏற்­க­னவே இணங்­கிக் கொண்­ட­தை விட மேல­தி­க­மாக சீத­னப்­ப­ணம் கேட்­கவே அவள் மன­மு­டந்­து­விட்­டாள், பெற்­றோரை இழந்த அவ­ளுக்கு அவ­ளது அக்கா தானே கடன் பட்டு சீத­னம் தரச் சம்­ம­தித்­தாள். இப்­போது அதற்கு அதிக சீத­னம் கேட்­டால் அக்கா என்ன பண்­ணு­வாள்? எனக்­காக சிர­மப்­ப­டு­வாள் , நான் அவ­ளுக்கு பார­மாய் இருக்­க­கூ­டாது என்­று­தானே அவள் தவ றாக முடிவெடுத்து தனது உயி ரைத் தானே பறித் தி­ருக்­கி­றாள்.

அவள் தனது எதிர்­கால வாழ்க்கை குறித்து என்­ன­வெல்­லாம் கனவு கண்­டி­ருப்­பாள், அவ­ளின் வாழ்க்­கையை பறித்­தது எது? மேல­தி­க­மா­கக் கோரிய ஓரிரு இலட்­சங்­கள் மாத்­தி­ரமா? அல்­லது எமது சமூ­கமா?
எவ்­வ­ளவு தொகை என்­பது கணக்­கி­லில்லை. என்ன என்­பது தான் கதை..

ஒரு பெண்­பிள்­ளையைப் பெற்று அவளை வளர்த்­துப் படிக்க வைப்பித்து, அவள் வய­துக்கு வந்­த­வேளை கவ­னிப்பு, பிரத்­தி­யேக கவ­னிப்பு , எவ்­வ­ளவோ இடங்­கள் ஏத்தி இறக்கி பெற்­றோர் படிப்­பித்து ஆளாக்கி விட்ட பிற­கும் அவளை கரை சேர்க்க ஏன் இந்த சமூ­கம் தடை­யாக இருக்­கி­றது என புரி­ய­வில்லை.

ஆண்­களை வலி­மை­யாய் படைத்­தது பெண்ணைக் காக்­கவே என்­பது மறைந்து, இன்று பெண் கன்னி கழி­ய­வும் சீதன சந்­தை­யில் தகப்­பன் காசு கொடுக்க வேண்­டிய செயலை எப்­படி நாம் விப­ரிக்க? ஆண் என்­ப­வன் யார்? அவ­னது வலு என்ன? அவன் எவ்­வாறு செயற்­பட வேண்­டும்? உழைத்து ஒரு பெண்­ணுக்­குச் சாப்­பாடு போட்டு அவ­ளின் வாழ்க்­கையைப் பொறுப்­பெ­டுக்­காத எந்த ஒரு ஆணும் தன்னை ஒரு குடும்­பத் தலை­வன் என்று கூறிக்­கொள்ள முடி­யுமா?

மாப்பிள்ளைகளின் இன்றைய விலை நிலவரம்

இன்­றைய கால­கட்­டத்­தில் யாழ்ப்­பா­ணத்­தில் கல்­யா­ணச் சந்­தை­யில் மாப்­பிள்­ளைக்­கான ‘ரேட்’­டைத் தெரிந்து கொள்­வது பய­னு­டை­யது.

1. வேலை வெட்­டி­யில்­லாத மாப்­பிள்ளை – 8 லட்­சம் பணம், நகை 15பவுண், வீடு 1

2. கூலி வேலை மாப்­பிள்ளை – 10 லட்­சம் பணம் , நகை 15 பவுண், வீடு 1

3. தனி­யார் துறை சிறு சுய கடை மாப்­பிள்ளை – 15 லட்­சம் பணம் , நகை 20 பவுண், வீடு 1, வீட்­டுப் பாத்­தி­ரம்

4.தனி­யார் துறை மாப்­பிள்ளை – 18–20 லட்­சம் பணம் , நகை 25 பவுண், வீடு– 1, மோட்­டார் சைக்­கிள்– 1

5.அரச சிற்­றூ­ழி­யர் –18–20 லட்­சம் பணம் , நகை 20‍/25 பவுண், வீடு 1

6.அரச வேலை மாப்­பிள்ளை – 30 லட்­சம் பணம் , நகை –30 பவுண், வீடு –1 , வளவு – 1, மோட்­டார் சைக்­கிள் / கார்

7.டாக்­டர் மாப்­பிள்ளை – 80–100 லட்­சம் பணம் , நகை 30 பவுண், வீடு யாழ்ப்­பா­ணத்­தில் 1, கொழும்­பில் வீடு –1 , கார் – 1

8.இஞ்­சீ­னி­யர் மாப்­பிள்ளை – 80–100 லட்­சம் பணம் , நகை 30 பவுண், வீடு யாழ்ப்­பா­ணத்­தில் 1, கொழும்பில் வீடு 1, கார் 1.

என இன்­னும் பட்­டி­யல் நீள­லாம், இது நகைச்­சு­வைத் தரவு என நீங்­கள் மன­துக்­குள் சிரித்­தால் உங்­க­ளைப்­போல முட்­டாள் வேறு எவ­ரும் இருக்க முடி­யாது. இவ்­வாறு அமை­கி­றது தற்­போ­தைய மாப்­பிள்­ளைச் சந்தை நில­வ­ரம்.

இது இவ்­வா­றி­ருக்க பெண்­ணைப்­பெற்றவர்­கள் பெண்ணை படிப்­பிக்­கவே எல்­லாச் சொத்­தும் அழிந்து விட, திருமணத்துக்காக வெளி­நாட்டு உற­வு­க­ளி­டம் பல்­லுக்­காட்ட விளை­கி­றார்­கள்; ஓடாய்த் தேய்­கி­றார்­கள்.

ஆண்­கள் பிள்­ளை­களை பெறு­வ­தில் மட்­டும் தங்­கள் ஆண்­மை­களை நி­ரூ­பித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். உண்­மைச்­சம்­ப­வங்­களை ஆதா­ர­மாக தர முனை­கி­றேன்

ஆதா­ரம் – 1

எனது சக நண்­பன் ஒரு­வன். அரச வேலை பார்க்­கி­றான், கை நிறையச் சம்­ப­ளம், அவ­னுக்­கொரு தங்கை,
அவளோ மருத்­து­வம் படிக்­கி­றாள், நாளை அவள் ஒரு மருத்துவர், அவ­னது பெற்­றோர் பிள்­ளை­களை ஆளாக்­கவே சொத்­துக்­களை செல­வ­ளித்­து­விட்­ட­னர். அது­தான் சரி­யும் கூட.

எனி­னும் நண்­பன் அவ­ளுக்குச் சீத­னம் சேர்க்­கவே தன் வேலை­யைத் துறந்­து­விட்டு வெளி­நாட்­டுக்கு உழைக்க செல்ல ஆயத்­த­மா­கி­றான்.

நான் கண்­டித்­தேன். ‘‘நல்ல வேலை ஏன் விடு­கி­றாய்? உன் தங்கை டொக்­ரர் தானே? பிற­கென்ன குறை? விடு கவ­லையை’’ என்­றேன். அவ­னது பதிலோ ‘‘இல்லை அவ­ளுக்கு சீத­னம் எதிர்­பார்­பார்ப்­பார்­கள் வீடு வாங்க வேண்­டும், நகை சேர்க்க வேண்­டும், சீத­னம் சேர்க்க வேண்­டும் ஆகவே நான் வெளி­நாடு சென்­றா­கத்­தான் வேண்­டும்’’ என்­றான்.

டொக்­ரர் பெண் அவள். அவ­ளது அண்­ணனே இவ்­வ­ளவு தூரம் கவலை கொள்­கி­றான் என்­றால் பல தங்­கை­கள் அக்­காக்­களை கொண்ட தம்­பி­கள் அண்­ணன்­மார், தந்­தை­மார் எவ்­வ­ளவு சிந்­திப்­பார்­கள்.

எவ்­வ­ளவு ஓடாய்த் தேய்ந்து உழைப் பார்­கள், இவர்களின் குருதி யைத்தானே மாப்­பிள்ளை சீத­ன­மாக உறுஞ்­சு­கி­றான், அவ்வா றானவர்கள் வெட்­கம்­கெட்­ட­வர்­கள் என்று எடை போடுங்­கள்.

ஆதா­ரம் 2

பல தெரிந்த நண்­பர்­க­ளும் தெரி­யாத நண்­பர்­க­ளும் சீதன மோகத்­துக்­காக தாம் உயி­ராய்க் காத­லித்த காத­லி­மாரை கைவிட்டு பிரி­வதைப் பார்த்­தி­ருக்­கி­றேன். நீங்­க­ளும் இது­போன்ற சம்­ப­வங்­க­ளை­அ­றிந்­தி­ருக்­க­லாம்.

இது எமது சமூ­கத்­தின் கோளாறா? அல்­லது சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வர்­க­ளின் கோளாறா என்ற வினா தொக்கு நிற்­கும் போது இது சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­ப­வர்­க­ளின் கோளாறே என உறு­தி­யாக கூற­லாம்.

ஏனெ­னில் விடு­த­லைப் புலி­க­ளின் ஆட்­சிக்­கா­லத்­தில் தமி­ழர் தம் பிர­தே­சத்­தில் சாதிய ஒடுக்கு முறை அல்­லது இவ்­வா­றான சீதன ஒடுக்­கு­மு­றை­களோ இல்­லாது இருந்­ததை எவ­ரா­லும் மறுக்­க­மு­டி­யாது.எனவே தற்­போது சமூ­கத்தை வழி ந‌டத்­தும் ஆணி­வேர்­க­ளில் பிழை­யி­ருக்­கி­றது.

இன்று சீத­னக் கொடு­மை­யால் உயிர் துறக்­கும் பெண்­க­ளை­விட திரு­ம­ணம் ஆன­பின்­பும் சீத­னம் கேட்டு அடி­வாங்­கும் / அவஸ்­தைப்­ப­டும் பெண்­களே அதி­கம்.

அதை­விடச் சீத­னம் இல்­லா­த­த­னால் திருமண வய­தை­யும் தாண்­டிய முதிர் கன்னி­கள் இப்­போ­தும் எமது சமூ­கத்­தி­டையே இருப்­பது எமது கண்­க­ளுக்­குப் புலப்­ப­ட­வில்­லையா? அல்­லது அவர்­கள் மீது இந்த சமூ­கம் பார்­வைச் செலுத்­த­வில்­லையா?

சீத­னம் கேட்­போரை அணுகிக் கேட்­டால் உண்மை வெளிக்­கும். சொல்­வார்­கள் “மக­னுக்கு வாங்­கி­னால்­தானே மக­ளுக்கு கொடுக்­க­லாம்” ஆக வாங்­கி­னால் கொடுக்­க­லாம் என்ற ‘கொன்­செப்றை’ மாத்தி “வாங்­கத்
தே­வை­யில்லை; ஆகவே கொடுக்­க­வும் தேவை­யில்லை” என்ற நிலைப் பாட்டை ஏன் எங்­கள் சமூ­கம் இன்­ன­மும் இனம்­கா­ண­வில்லை?

அன்­றும் சரி இன்­றும் சரி ஆண்­பிள்­ளையைத் தான் முத­லா­வ­தாக பெற்­றெ­டுத்­து­விட்டு பின்­னர் பெண்­பிள்ளை பெற எல்­லா­ருமே ஆசைப்­ப­டு­கி­றார்­கள். தொடர்ச்­சி­யாக பெண்­பிள்­ளை­களை பெற்­ற­வர்­கள்கூட எங்கே உழைக்­க­வும் சீத­னம் கொடுக்­க­வும் எனக்­கொரு ஆண்­ம­கன் மீட்­ப­னாக வேண்­டும் என்று வேண்­டு­தல் செய்து ஆண் மக்­களை அடைந்­த­வர்­க­ளும் உண்டு.

இந்­தச் சமூ­கம் ஒரு­வ­னுக்­கொ­ருத்தி என்ற வரை­மு­றையை வைத்­த­தன் அர்த்­தம் அவ­ளோடு அள­வான சொத்­தோடு இன்­ப­மாய் வாழ்தல் என்ற எடு­கோளை முன்­னி­றுத்­தித்­தான்.

இன்று பல பெற்­றோர்­கள் எங்­கள் மகள் யாரை­யா­வது காத­லித்­தால் ஒரு மாதிரி சீத­னம் இல்­லா­மல் முடித்­துக் கொடுத்­தி­ட­லாம் என்று எண்­ணத்­தக்க நிலை. ஆனால் வெளியே யாரும் காட்­டிக் கொள்­ள­மாட்­டார்­கள்.

எமது கலாசா­ரம் பிழை­யென நான் வாதி­ட­வில்லை, எமது மர­பு­கள் தவறென நான் வாதி­ட­வில்லை, எமது இனத்­தின் மர­பு­கள் ஏதோ நன்­மைக்­கா­கவே உரு­வாக்­கப்­பட்­டன. சீத­னம் என்ற பொரு­ளு­ட­மை­யும் நன்­மை­கா­கவே உரு­வாக்­கப்­பட்­டது.

ஆனால் எமது இனத்­தின் கூர்ப்பு வழி வந்­த­வர்­கள் அதனை விகா­ரத்­துக்கு இட்­டுச் சென்­றதே இன்று விவ­கா­ர­மாக மாறி­யுள்­ளது. ஆண் என்­ப­வன் தன்னை நம்பி கரம்­பி­டிக்­கும் ஒரு பெண்­ணின் வாழ்க்­கையை தனது உழைப்­பில் நிறை­வேற்றி வாழ வைக்க வேண்­டும்.

இன்­றைய எமது தமிழ்ப் பெண்­கள் ஆண்­களை விட அக்­க­றை­யாக, திறமை­யா­கப் படிக்­கி­றார்­கள், நல்ல வேலை செய்­கி­றார்­கள்,கை நிறை­யச் சம்­பா­திக்­கி­றார்­கள் ஆண்­களைவிட பெண்­கள் அதி­வே­க­மாக கல்­வி­யி­லும் பொரு­ளா­தா­ரத்­தி­லும் மேம்­பட்­டு­விட்­டார்­கள், அவர்­களே அவர்­க­ளுக்­கான சீத­னத்தை சேர்த்­து­க்கொள்­கி­றார்­கள், லோன் போட்டு வீடு கட்டி சீத­னம் கொடுக்­கி­றார்­கள், இதில் பாரதி கண்ட புதுமை பெண்ணை இங்கே காண்­கி­றோம்.

காலக்­கொ­டுமை என்­ன­வென்­றால் இவ்­வா­றான் பெண்­க­ளி­ட­மும் அதிக சீத­னம் கறக்க எமது மாப்­பிள்­ளை­மார் தரப்பு முயல்­வ­து­தான்.

பெண்­க­ளின் அசுர வேக வளர்ச்­சி­யால் இன்­னும் சில தசாப்­தங்­க­ளில் பெண்­க­ளுக்கு சீத­னம் கொடுத்து ஆண்­கள் திரு­ம­ணம் செய்­யும் காலம் வரும் என்­ப­தில் வியப்­பில்லை..அது­தான் நேர்த்­தி­யும் கூட. நான் சீத­னம் வாங்­கு­வது தவறு என வாதி­ட­வ­ர­வில்லை. ‘‘தந்­தால் வாங்கு‍‍, கேட்டு வாங்­காதே”

கு.மது­சு­தன்

http://newuthayan.com/story/25604.html

 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வேற...

இங்க புலம் பெயர்ந்த இடத்திலேயே... மகளுக்கு வீடு.... மகனுக்கு வீடு..... என்று வாங்கித் துளைக்கிணம்.....

சீதனம் வாங்குவது நோகாமல் நொங்கு எடுப்பது மட்டுமல்ல.....

சமூகத்தின் ஈகோ பிரச்னை...

எனக்கு தெரிந்து ஒரு யாவாரி.... தீவுப் பகுதி..... கொழும்பில் யாவாரம்... கொழுத்த பணம்... குடும்பத்தில் படிப்பு வாசமே இல்லை.

எனது நண்பன் .... டாக்டர்.....

கொழும்பு.... வீடு... யாழ்ப்பாணத்தில் வீடு... கார்.... வங்கியில் ஒரு கோடி.... காணிகள் மகள் பெயரில்...

ஆவென்று வாயைப் பிளந்தார்.

சொன்னேன்.... பணம் வேறு.... குடும்பம் வேறு.... உனக்கு உவமை (பொருத்தம்) இல்லாவிடில்..... சீரழிவு என்றேன்.

பொறாமை என்று நினைத்திருக்கலாம்..... கட்டினார்....

ஒரு சபை சந்திக்கு கூட்டிக் கொண்டு போய்...எனது மனைவி, அதாவது டாக்டரின் மனைவி என்று சொல்லக் கூடிய அடிப்படை நாகரிகம் கூட பெண்ணுக்கு தெரியவில்லை. 

நொந்து போய்..... வெறுத்துப் போனார். ஆனால்...அந்த பெண்ணும் பாவம்.... மேல் மடட இடங்களுக்கு போய்... நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்றால், ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் கணவரின் பேச்சு என்றால்.....

நான்.... வரவில்லை... தலைவலி.... நீங்கள் போங்கோ....  

கலியாணம் என்பது இருவருக்கிடையே அல்ல. இரு குடும்பங்களுக்கிடையே என்பது முக்கியமானது.

பணத்தினை தான் கட்டுவேன் என்றால்..... பெண் எதுக்கு? 

சிங்கம், புலி, சிறுத்தை, காட்டுநாய்கள், நரிகள் இல்லாவிடில்.... தாவரவுண்ணிகள் பெருகிவிடும்.... இந்த மிருகங்களால்... இயற்கை சமநிலை பேணப் படுகின்றது.

இயறக்கை சமநிலை என்பது இந்த ஆண்.. பெண் விசயத்திலும் உண்டு. 

இலங்கையில் போரில் ஆண்கள் இறந்ததால், வெளி நாடுகள் போனதால், ஆண்களுக்கு தட்டுப்பாடு. இருப்பவர்களுக்கு நல்ல டிமாண்ட். இந்த டிமாண்டை... 40 வயதுக்கு மேலானவர்களும் பயன் படுத்துகின்றனர். வெளி நாடுகளில் இருந்து போபவர்களும் பயன்படுத்துகின்றனர்.

பெண்களை மதிக்காமல்... கவுரவக் கொலை செய்த மத்திய கிழக்கில்... குறிப்பாக சவூதியில்.... பெண்கள் குறைவு.... எடுக்க சீதனம் கொடுக்க வேண்டும்.

இந்தியாவில், சீனாவில் பெண் சிசுக்கள் கருவிலே அழிக்கப் படுவதால்
... பெண் இல்லாமல்... வெகு விரைவில் அவலப்பட போகின்றனராம்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.