Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசின் பிரச்சாரத்தை சில எறிகணைகள் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர்: இக்பால் அத்தாஸ்

Featured Replies

அரசின் பிரச்சாரத்தை சில எறிகணைகள் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர்: இக்பால் அத்தாஸ்

[ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 16:45 ஈழம்] [அ.அருணாசலம்]

சிறிலங்கா அரசினால் கிழக்கு மாகாணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை கடந்த வாரம் இடம்பெற்ற மோட்டார் எறிகணைத் தாக்குதலின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர் என்று 'சண்டே ரைம்ஸ்' வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தனது ஆய்வில் அவர் மேலும் தொவித்துள்ளதாவது:

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மணிக்கு 373 கி.மீ (201 நொட்ஸ்) வேகமுடைய தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செஸ்னா போரோன் C-55 ரக விமானம் மட்டக்களப்பில் உள்ள விமானப் படைத்தளத்தில் யு.என்.எச்.சி.ஆர் பிரதிநிதிகளை தரையிறக்கியது. ஆனால் அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் பலத்த சத்தத்துடன் நான்கு எறிகணைகள் அருகாமையில் வீழ்ந்து வெடித்தன.

அருகில் வீழ்ந்த ஒரு எறிகணையினால் விமானத்தின் இறக்கைப்பகுதி சிறு சேதமடைந்தது. மேலதிக சேதங்களை தடுப்பதற்காக விமானம் பாதுகாப்பு பரிசோதனைகள் கூட செய்யப்படாது அவசரமாக அம்பாறை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. அது திருத்த வேலைகளுக்காக தற்போது அம்பாறையில் தரித்து நிற்கிறது.

இதனிடையே அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஒரு எம்.ஐ-17 உலங்குவானூர்தியும், அதனைப் பின்தொடர்ந்து பெல் - 212 ரக உலங்குவானூர்தியும் காலை 7.30 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி பயணமாகின. இராஜதந்திரிகளும், அமைச்சரும், அரச அதிகாரிகளும் எம்.ஐ 17 உலங்குவானூர்தியில் அமர்ந்திருந்தனர்.

இந்தப் பயணம் கிழக்கு மாகாணத்தின் களநிலவரம் தொடர்பாக இராஜதந்திரிகளுக்கு நல்லதொரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என மகிந்த சமரசிங்க நம்பியிருந்தார். காலை 8.30 மணியளவில் மட்டக்களப்பின் வான்வெளியை அடைந்த இரு உலங்குவானூர்திகளின் தரையிறக்கத்தையும் கட்டுப்பாட்டுக் கோபுர அதிகாரிகள் நிறுத்தி வைத்திருந்தனர்.

எனவே வான்வெளியில் இரு வானூர்திகளும் வட்டமிட்டபடி இருந்தன. அதன்போது அமைச்சர் சமரசிங்க அருகில் அமர்ந்திருந்த வடக்கு - கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜயவிக்கிரமவிடம் நாம் இறங்கும் இடத்தை தவறவிட்டு விட்டோமா? என கேட்க எனக்கும் குழப்பமாக உள்ளதாக அவர் பதிலளித்திருந்தார்.

25 நிமிடங்களின் பின்னர் எம்.ஐ - 17 உலங்குவானூர்திக்கு விமானப்படைத் தளத்தில் இருந்து இரு கி.மீ தொலைவில் உள்ள வெபர் விளையாட்டு மைதானத்தில் தரையிறங்க அனுமதி கிடைத்தது. 8.55 மணிக்கு தரையிறங்கிய உலங்குவானூர்தியில் இருந்து அமைச்சர், வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநர், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலிய தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று அதிகாரிகள் மற்றும் இரு படையினர் ஆகியோர் இறங்கிய நிலையில் பாரிய சத்தங்களுடன் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின.

எறிகணைகள் வீழ்வதாக சிறப்பு அதிரடிப்படையினர் கூச்சலிட்டனர். எல்லோரும் சிதறி ஓடினார்கள். அருகில் இருந்த பவள் கவச வாகனத்திற்குள் எற எத்தனித்தனர். ஒரு சமயத்தில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் வேட்டி தடக்கி கீழே அவர் வீழ்ந்து விட்டார். எனினும் ஜப்பானிய தூதுவர் மகிந்த சமரசிங்கவை மீட்டு கவச வாகனத்தில் ஏற துணைபுரிந்தார்.

இயந்திரத்தை நிறுத்தாது வைத்திருந்த உலங்குவானூர்தியின் ஓட்டி மிகுதியான பயணிகளை இறங்கவேண்டாம் என உரத்த சத்தத்தில் கூச்சலிட்டதுடன் உலங்குவானூர்தியை மேலெழுப்பி மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்த பெல் - 212 உலங்குவானூர்தியுடன் 40 கி.மீ தொலைவில் உள்ள வாழைச்சேனை முகாமுக்கு சென்றனர்.

தரையிறங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் வாகனங்களில் ஏறிய போதும் ஜேர்மன் மற்றும் இத்தாலிய தூதுவர்களை காணவில்லை. அவர்கள் காயமடைந்ததாக செய்திகள் பரவின. பின்னர் தலையில் சிறு காயமடைந்த இத்தாலிய தூதுவருடன் ஜேர்மன் தூதுவர் வந்து சேர்ந்தார்.

இந்த தகவல்களை விமானப்படை எயர் மார்சல் டொனால்ட் பெரேரா அரச தலைவரின் ஆலோசகரான பசில் ராஜபக்சவிற்கு தெரியப்படுத்தினார். பசில் ராஜபக்ச உடனடியாக அந்த தகவலை சீனாவில் உள்ள அரச தலைவர் மகிந்தவிற்கு தெரியப்படுத்தினார். மகிந்த ராஜபக்ச இந்த சம்பவம் இடம்பெற்றது தொடர்பாக மிகுந்த ஆத்திரமடைந்தார்.

பின்னர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோரை தொடர்பு கொண்ட பசில் ராஜபக்ச, இராஜதந்திரிகள் பாதுகாப்பாக திரும்புவதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டிருந்தார்.

எம்.ஐ-17 உலங்குவானூர்தி மேலெழுந்த சில நிமிடங்களில் மேலும் பல எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. அதில் ஒரு உலங்குவானூர்தி தரித்து நின்ற இடத்தில் குறி தவறாது வீழ்ந்து வெடித்தது. எனவே உலங்குவானூர்தியின் ஓட்டி சாதூர்யமான முடிவு உலங்குவானூர்தியையும் இராஜதந்திரிகளையும் காப்பாற்றியது.

எறிகணைகளின் புகைகள் அடங்குவதற்கு முன்னர் படையினரால் தொப்பிக்கல பகுதியை தவிர கிழக்கின் மிகுதிப் பகுதிகள் விடுவிக்கப்பட்டு விட்டன என்ற பிரச்சாரத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டு விட்டன.

மட்டக்களப்பின் இதயப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதலே இதற்கு காரணம். கிழக்கில் அமைதி திரும்பிவிட்டது. வழமையான அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகின்றது என உலகின் முன்னணி நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்துச் சென்று காண்பிக்க முயன்ற வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்று விட்டது.

சில நூறு யார் தூரத்தில் இருந்த கெரில்லாக்கள் இந்த தாக்குதலை ஒருங்கிணைத்துள்ளனர். எறிகணைகள் வீழ்வதை அவதானித்தாலே அதனை குறித்த இலக்கை நோக்கி ஒருங்கிணைக்க முடியும். சில நிமிடங்களில் மட்டக்களப்பு செய்தி உலகெங்கும் பரவிவிட்டது.

விடுதலைப் புலிகளே இது தொடர்பான பிரச்சார தொடர்புகளை முதலில் முன்னெடுத்தவர்கள் ஆவார்கள். சம்பவம் இடம்பெற்ற 3 மணிநேரத்தில் விடுதலைப் புலிகளின் அறிக்கை 12.36 மணியளவில் வெளிவந்து விட்டது.

அதில் சம்பவத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் மாட்டின் டின் கடோகாஹ் விடுதலைப் புலிகளின் ஐக்கிய நாடுகள் சபைக்கான அதிகாரியான எம்.பாவரசனை தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்ததால் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் உடனடியான நடவடிக்கையால் தாக்குதல் நிறுத்தப்பட்டது குறித்து மாட்டின் பாவரசனுக்கு தனது நன்றியை தெரிவித்ததுடன், இந்த பயணம் தொடர்பாக முன்னர் விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்காத தமது தவறையும் ஒத்துக்கொண்டிருந்தார்.

அரச இயந்திரம் விடுதலைப் புலிகளை விட விரைவாக இயங்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதன் அறிக்கை 2.17 மணிக்கே வெளிவந்தது. அவர்களின் தொலைத் தொடர்பு வசதிகளில் பாரிய பிரச்சனைகள் இருந்துள்ளன. ஆனால் இப்படியான மிகப்பிந்திய பிரச்சாரங்களால் அரசின் இயங்குதன்மை இழக்கப்படுகின்றது.

இராஜதந்திரிகளின் மட்டக்களப்பு பயணம் விடுதலைப் புலிகளுக்கு தெரிந்து தான் தாக்குதலை நடத்தியதாக அரச தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் இராஜதந்திரிகளை குறிவைத்து விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியதாக தான் நம்பவில்லை எனவும், எனினும் விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொள்வதாகவும் இணைத்தலைமை நாடுகளின் தலைவரும் அமெரிக்கத் தூதுவருமான றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

நான் அங்குள்ள உண்மையான நிலையை அறிந்துள்ளேன். ஊடகத்துறையின் வெற்றிகளுக்கும், இராணுவ வெற்றிகளுக்கும், உண்மை நிலைமைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டேன் என தனது பெயரை குறிப்பிட விரும்பாத இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வவுணதீவுப்பகுதி அல்லது எருமைத்தீவில் இருந்தே வாகனங்களில் பொருத்தப்பட்ட 81 மி.மீ மோட்டார்கள் எறிகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருந்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

துருப்புக்காவி வாகனங்கள் மூலம் வாழைச்சேனை முகாமுக்கு வேகமாக கொண்டு செல்லப்பட்ட இராஜதந்திரிகளுக்கு வாகரையை கைப்பற்றியது தொடர்பாக ஒரு உற்சாகமான உரையை வழங்குமாறு அமைச்சர் 23 ஆம் படைப்பிரிவுத் தளபதி தயா ரட்னாயக்காவை கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் எல்லோரும் கொழும்புக்கு திரும்பினர்.

முன்னணி நாடுகளின் எல்லா தூதுவர்களும் கிழக்கு மாகாணம் தொடர்பாக சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களில் உள்ள தவறுகளை தமது நதடுகளுக்கு நிச்சயமாக தெரிவிப்பார்கள். மேலும் தம்மை அழைத்துச் சென்றவர்கள் தமது உயிருக்கு உரிய பாதுகாப்பை அளிக்கத் தவறிவிட்டதையும் அவர்கள் எடுத்துரைப்பர்.

அவர்கள் தமது அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் உண்மையை மறைக்கப்போவதில்லை. எனவே சில மோட்டார் எறிகணைகளை பயன்படுத்தி அரசின் நம்பகத்தன்மைக்கு சவால் விட்டதுடன் அதில் விடுதலைப் புலிகள் வெற்றிபெற்றும் விட்டார்கள்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=30977

வடிவேலு அய்யா, உங்கள் கோவணம் கிடைத்துவிட்டதா ?

இலங்கையின் சிவில் யுத்தம் பற்றி சர்வதேசத்துக்கான தெரிவிப்பு * வெபர் மைதானச் சம்பவம் (-பீஷ்மர்-)

ஏறத்தாழ 2 வாரங்களுக்கு முன்னர் பி.பி.சி.யில் நடந்த ஒரு சர்வதேச அரசியல் விமர்சன நிகழ்ச்சியில் உலகில் சிவில் யுத்தங்கள் நடைபெறும் நாடுகள் பற்றிப் பேசும்பொழுது அந்த விமர்சகர் சேர்பியா போன்ற நாடுகளுடன் இலங்கையையும் சேர்த்துக் கூறினார்.

இதற்குப் பதிற்குறியாகவோ சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி அவர்கள் இலங்கையில் சிவில் யுத்த நிலை இல்லையென வற்புறுத்திக் கூறினார். சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வெபர் மைதானத்திற் சென்று இறங்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகள் சென்ற ஹெலிகொப்டர் மீதான எறிகணைத் தாக்குதல் பெருத்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவத்தின் முக்கிய அம்சம் விடுதலைப்புலிகள் அந் நடவடிக்கைக்குப் பொறுப்பேற்றுத் தமது மன வருத்தத்தைத் தெரிவித்ததுடன் மாத்திரமல்லாமல் இப்படியான பயணங்கள் மேற்கொள்ளப்படும் போது தங்களுக்கும் அறிவித்தல் வழங்கப்பட வேண்டுமென கூறியுள்ளமையாகும்.

சர்வதேச நிலைப்பட ஊடகச் செய்திகளாக வராவிட்டாலும் இது நிச்சயமாக சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள ஒரு செய்தியாகும். இந்தச் சம்பவத்தின் போது சிகிச்சையளிக்கப்பட வேண்டிய அளவுக்கு காயப்பட்ட இத்தாலிய தூதுவர் விடயமாக இத்தாலிய வெளிவிவகார அமைச்சு இலங்கையிடமிருந்து விளக்கம் கோரியிருப்பதாக சில பத்திரிகைச் செய்திகள் வெளிவந்துள்ளன. நேற்று, நேற்று முன்தினம் வெளியான செய்திகள் இராஜதந்திரிகள் தலைநகருக்கு வெளியே செல்லும் பொழுது, கடைப்பிடிக்க வேண்டிய, கடைப்பிடிக்கப்பட வேண்டிய நியமங்கள் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளன.

எவ்வாறு நோக்கினாலும் இது இலங்கையைப் பொறுத்தவரையில் அதன் இன்றைய உள்ளூர் நிலைமை பற்றிய ஒரு சர்வதேச எடுத்துரைப்பாகவே அமைந்துள்ளது. கிழக்கிலங்கையில், குறிப்பாக வாகரைப் பகுதியில் ஏற்பட்ட சனப்பெயர்வுகள் காரணமாக தோன்றியுள்ள புதிய நிலைக்கு வேண்டிய நிதி உதவிகளைப் பெறுவதற்கு மகிந்த சமரசிங்கவின் தலைமையில் அமெரிக்க, கனேடிய, இத்தாலிய, யப்பானிய, ஜேர்மனிய தூதுவர்களும் ஐ.நா. ஒருங்கிணைப்பாளரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

வெபர் மைதானத்தில் விழுந்த எறிகணையைப் பற்றிப் பேசுவதற்கு முன்னர் இத்தகையதொரு பாரிய சர்வதேசக் குழுவை ஜனாதிபதி நாட்டிலே இல்லாத பொழுது கூட்டிச் சென்றிருக்கலாமா என்பது முதலாவது வினாவாகின்றது. இரண்டாவது இத்தகைய முக்கிய தூதுவர்களை கூட்டிச் செல்லும் பொழுது வெளிவிவகார அமைச்சு மேற்கொண்ட பூர்வாங்க நடவடிக்கைகள் யாவை என்பதாகும். ஏனெனில், படுவான்கரைப் பக்கத்திலிருந்து மட்டக்களப்புப் பகுதிக்குள் எறிகணைகள் விழுவதென்பது அன்று மாத்திரம் நடந்ததொரு சம்பவமல்ல. மட்டக்களப்பு நகரம் தாக்கப்படவில்லையே. அல்லாமல் வாழைச்சேனையை அண்மித்த பல இடங்களில் ஏற்கனவே, எறிகணைத் தாக்குதல்கள் நடந்தமை பற்றியும் அத்தகைய தாக்குதல்கள் சிலவற்றின் பொழுது அரச சார்பற்ற நிறுவனங்களே சிரமத்துக்குள்ளாகியிருந்தன என்பது தெரிந்த செய்தியாகும். அப்படியானால் இந்தச் செயலுக்குப் பின்புலமாக அமைந்த உளவியல் எடுகோள்கள் யாவை என்பவை அவசியமாகின்றன.

மிக மிக சுருக்கமாக சொன்னால் இந்த நடவடிக்கை மூலம் அரசாங்கம் ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களைச் சாதிக்க விரும்பியிருந்தது எனக் கூறலாம். முதலாவது, வாகரைப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தை உலகறிய மேற்கொள்தல். இரண்டாவது, கிழக்கு முழுவதும் திருமலை முதல் மட்டக்களப்பு உட்பட அம்பாறை வரை அரசாங்க கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதென்பதைக் காட்டுவதற்காகும். இந்த இரண்டாவது அம்சம் மிக முக்கியமாகும். அரசாங்கம் சொல்பவற்றை ஏற்றுக்கொள்ளாதவர்களும் ஏற்க விரும்பாதவர்களும் கூட கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது என்பதை ஏற்றுக்கொண்டேயிருந்தார்கள். அந்த நிலைப்பாட்டில் இந்தச் சம்பவம் சில கேள்விக்குறிகளை இப்பொழுது தோற்றுவித்துள்ளது. விடுதலைப்புலிகள் இச்சம்பவத்துக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதிலும் ஒரு அரசியல் இலாபம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டதாகவே கூற வேண்டும். ஏனெனில், சம்பவத்துக்கான பொறுப்பை ஏற்கும் பொழுது தங்களுக்கு இதற்கான தகவலைத் தெரிவித்திருக்க வேண்டுமெனக் கூறியுள்ளனர். இதுபற்றி அரசாங்க பேச்சாளர் மிகுந்த கோபத்துடன் பதில் கூறியிருந்தாலும் நேற்று வெளியான செய்திகள் யூ.என்.பி. அவ்வாறு புலிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதனைக் கூறியுள்ளது.

நிலைமை சற்று குழப்பமடைந்துள்ளது. தலைநகருக்கு வெளியே 3 மைல் தூரத்துக்கு அப்பால் அந்நிய நாட்டு இராஜ தந்திரிகள் செல்லக்கூடாது என்பது ஒரு சர்வதேச வழக்கு நியமம். நேற்றைய தலைப்புச் செய்திகள் அதனை மீண்டும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக கூறுகின்றன. அப்படியானால், மகிந்த சமரசிங்கவுடன் சென்றவர்கள் வெளிவிவகார அமைச்சின் அங்கீகாரமில்லாமலேயே சென்றனரா? நிலைமை மேலும் மேலும் குழப்பமடைகின்றது.

இந்தப் பின்புலத்திலேயே இவ்விடயம் பற்றிய சர்வதேச பதிற்குறிகளை நோக்க வேண்டியுள்ளது. பிரிட்டன், ஜேர்மனி போன்ற நாடுகள் மாத்திரமல்லாது ஐ.நா.வின் செயலாளரும் இதுபற்றிய செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கைகள் ஒவ்வொன்றும் இலங்கை அரசாங்கத்துக்கு அதிகம் தெம்பு தருவதாக இல்லை. வெளிவந்த அறிக்கைகள் எல்லாமே சம்பவத்தைக் கண்டிப்பதுடன் நின்றுவிடாமல் அடுத்த அம்சமாக இரு பகுதியினரும் இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் யுத்தநிறுத்த சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டுமென்று கூறியுள்ளனர். வெளிநாட்டு அமைச்சரும், அரச சார்பற்ற நிறுவனங்களும் விடுதலைப்புலிகளை சர்வதேச சமூகம் கண்டிக்க வேண்டுமென்று சொல்ல சர்வதேச சமூகமோ கண்டிப்பதுடன் நின்றுவிடாமல் யுத்தநிறுத்தத்தையும் சமாதான பேச்சுவார்த்தைகளையும் சிபாரிசு செய்துள்ளது.

இது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடுகளுக்கு பெரிதும் உதவுவதாகக் கூற முடியாது. இலங்கையில் நிலைமை இவ்வாறிருக்க இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் தமிழகத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் கட்டாய கவனிப்புக்கு உள்ளாகின்றன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான திருவாளர்கள் சிவாஜிலிங்கமும் சிறிகாந்தாவும் தமிழகத்தில் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில் இலங்கை அரசாங்கத்தின் படைக் கொள்வனவு நடவடிக்கைகள் பாகிஸ்தான் முதல் சீனா வரை செல்வதை எடுத்துக் கூறி இந்தியா இலங்கையின் தேசியப் பிரச்சினையில் தீர்மானகரமான செல்வாக்கை பிரயோகிக்க வேண்டுமெனக் கூறியுள்ளனர். இந்தக் கோரிக்கையில் இலங்கை நிலைப்பட்ட பிராந்திய நிலைப்பட்ட சிரத்தை தென்படுவது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

ஏனெனில், அண்மையில் இலங்கை பற்றிய தமிழக சிரத்தை பற்றி பல பிரச்சினைகள் இலங்கை மட்டத்தில் கிளப்பப்பட்டன.

இதனை விட இன்னொரு நடவடிக்கையும் முக்கியமானதாகும். அதை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மேற்கொணடுள்ளார். கலைஞர் கருணாநிதியை சந்தித்த அவர், இந்தியாவிலுள்ள மொழிவாரி மாநிலங்கள் போன்றவொரு தீர்வினை இலங்கை பற்றி எடுக்கவேண்டுமெனவும் அதனைக் கலைஞர் ஏற்றுக் கொண்டு அது பற்றிப் புதுடில்லிக்கு தெரிவிப்பதற்கு இணங்கியுள்ளதாகவும் அச்செய்தி கூறியுள்ளது. இந்தச்செய்தியின் பொழுது தமிழர்கள் இலங்கையில் படும் கஷ்டங்கள் பற்றியும் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் கலைஞரிடம் கூறியதாகவும் சொல்லப்படுகின்றது.

1988 இன் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் சிபார்சுகள் போதாதென்று அவற்றுக்கும் மேலாக எவ்வெவற்றை செய்யலாமென்பது பற்றி இலங்கை அரசாங்கமே ஒத்துக் கொண்டுள்ள நிலையில் இந்தியாவில் மொழிவாரி மாநில முறைமையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது பெருத்த சிரமங்களை ஏற்படுத்தலாம். கலாநிதி நேசையா போன்றவர்களே பிரதேச ஆட்சிச் சபையைக் கலைக்கும் அதிகாரமுள்ள ஆளுநர் நியமனத்தை ஓர் அங்கமாகக் கொண்ட தற்போதைய இந்திய முறைமை இலங்கைக்குப் பொருந்தாது என்பதனை வன்மையாக எடுத்துக் கூறியுள்ளனர். நிலைமை இவ்வாறிருக்க தமிழகத்தின் கவனத்தைத் திசை திருப்ப முனையும் செயற்பாடுகள் இலங்கை நிலைப்பாடே எத்துணை ஆரோக்கியமற்றதென்பது மனங்கொள்ளப்பட வேண்டும்.

"சாண் ஏற முழம் சறுக்கும்" அரசியலில் இனியாவது தமிழ் அரசியல்வாதிகள் சிலர் ஈடுபடாமலிருக்க கடவுளைப் பிரார்த்திப்போமாக.

http://www.thinakkural.com/news/2007/3/4/a...s_page22626.htm

...\\அதில் சம்பவத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் மாட்டின் டின் கடோகாஹ் விடுதலைப் புலிகளின் ஐக்கிய நாடுகள் சபைக்கான அதிகாரியான எம்.பாவரசனை தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்ததால் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது...\\

ஆக ஒரு சில எறிகணைகள் உலகத்தின் உறக்கத்தைக் கலைத்து விட்டது. இனி மகிந்தனுக்கு மேலும் தலைவலிகள் கூடும் என எதிர்பார்கலாம். விடுதலைப் புலிகள் மறுபடியும் தமது செயல் திறனை வெளிப்படுத்தி விட்டார்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா

வேனில் எழுதிய ''சிறிலங்காவை நம்பி ஆபத்தில் சிக்கிய வெளிநாட்டுப் பிரதிநிதிகள்''

-வி.வேனில்-

விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிப்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கு சாத்தியமானதாக அமையப் போவதில்லை, விடுதலைப்புலிகளின் தாக்குதல் வலுவை குறைத்து மதிப்பிடமுடியாது. அவர்கள் எந்த வேளையிலும் பெரும் தாக்குதல்களை நடாத்தலாம் என்பாதாக சில தினங்களுக்கு முன்னர் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் கருத்துத் தெரிவித்திருந்தமை நினைவிருக்கலாம்.

அவ்வாறு கருத்துத்தெரிவித்த அவர் உட்பட ஜெர்மன், இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களும் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான அமைச்சர் மகிந்த சமரசிங்கவுடன் நேற்று மட்டக்களப்பிற்கு உலங்கு வானூர்தியில் பயணித்து விடுதலைப்புலிகளின் எறிகணை வீச்சில் சிறு காயங்களுடன் தப்பிய சம்பவம் அதிர்ச்சியளிக்கும் ஒன்றுதான்.

நடைபெற்ற சம்பவத்தினால் உலங்குவானூர்தியில் பயணம் செய்த வெளிநாட்டுப்பிரதிநிதிகளுக்

இலங்கை அரசின் பொருளாதாரத் துறையில் வீழ்ச்சி இராணுவ வல்லாண்மை மேலோங்கியதாகக்

காண்பிக்கப்பட எடுக்கப்பட்ட முயற்சி உள்நாட்டுப் பாதுகாப்பின் தளம்பல் இவையெல்லாம்

ஒருசில எறிகணைகளால் உலகுக்குத் தெரியப்படுத்தியது விடுதலைப்புலிகளின் அனைத்துத் துறை

யின் மேலாண்மையை எடுத்துக் காட்டிவிட்டது.

அரசின் பிரச்சாரத்தை சில எறிகணைகள் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர்: இக்பால் அத்தாஸ்

[ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 16:45 ஈழம்] [அ.அருணாசலம்]

"சிறிலங்கா அரசினால் கிழக்கு மாகாணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை கடந்த வாரம் இடம்பெற்ற மோட்டார் எறிகணைத் தாக்குதலின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர்" என்று 'சண்டே ரைம்ஸ்' வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

இன்றைய தனது ஆய்வில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

"கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மணிக்கு 373 கி.மீ (201 நொட்ஸ்) வேகமுடைய தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செஸ்னா போரோன் C-55 ரக விமானம் மட்டக்களப்பில் உள்ள விமானப் படைத்தளத்தில் யு.என்.எச்.சி.ஆர் பிரதிநிதிகளை தரையிறக்கியது. ஆனால் அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் பலத்த சத்தத்துடன் நான்கு எறிகணைகள் அருகாமையில் வீழ்ந்து வெடித்தன.

அருகில் வீழ்ந்த ஒரு எறிகணையினால் விமானத்தின் இறக்கைப்பகுதி சிறு சேதமடைந்தது. மேலதிக சேதங்களை தடுப்பதற்காக விமானம் பாதுகாப்பு பரிசோதனைகள் கூட செய்யப்படாது அவசரமாக அம்பாறை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. அது திருத்த வேலைகளுக்காக தற்போது அம்பாறையில் தரித்து நிற்கின்றது.

இதனிடையே அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஒரு எம்.ஐ-17 உலங்குவானூர்தியும், அதனைப் பின்தொடர்ந்து பெல் - 212 ரக உலங்குவானூர்தியும் காலை 7.30 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி பயணமாகின. இராஜதந்திரிகளும், அமைச்சரும், அரச அதிகாரிகளும் எம்.ஐ-17 ரக உலங்குவானூர்தியில் அமர்ந்திருந்தனர்.

இந்தப் பயணம் கிழக்கு மாகாணத்தின் களநிலவரம் தொடர்பாக இராஜதந்திரிகளுக்கு நல்லதொரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என மகிந்த சமரசிங்க நம்பியிருந்தார். காலை 8.30 மணியளவில் மட்டக்களப்பின் வான்வெளியை அடைந்த இரு உலங்குவானூர்திகளின் தரையிறக்கத்தையும் கட்டுப்பாட்டுக் கோபுர அதிகாரிகள் நிறுத்தி வைத்திருந்தனர்.

எனவே வான்வெளியில் இரு உலங்குவானூர்திகளும் வட்டமிட்டபடி இருந்தன. அப்போது, அமைச்சர் மகிந்த சமரசிங்க அருகில் அமர்ந்திருந்த வடக்கு - கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜயவிக்கிரமவிடம் நாம் இறங்கும் இடத்தை தவறவிட்டு விட்டோமா? எனக் கேட்க எனக்கும் அதுதான் குழப்பமாக உள்ளதாக அவர் பதிலளித்திருந்தார்.

25 நிமிடங்களின் பின்னர் எம்.ஐ - 17 உலங்குவானூர்திக்கு விமானப்படைத் தளத்தில் இருந்து இரு கி.மீ தொலைவில் உள்ள வெபர் விளையாட்டு மைதானத்தில் தரையிறங்க அனுமதி கிடைத்தது. 8.55 மணிக்கு தரையிறங்கிய உலங்குவானூர்தியில் இருந்து அமைச்சர், வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநர், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலிய தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று அதிகாரிகள் மற்றும் இரு படையினர் ஆகியோர் இறங்கிய நிலையில் பாரிய சத்தங்களுடன் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின.

எறிகணைகள் வீழ்வதாக சிறப்பு அதிரடிப்படையினர் கூச்சலிட்டனர். எல்லோரும் சிதறி ஓடினார்கள். அருகில் இருந்த பவள் கவச வாகனத்திற்குள் எற எத்தனித்தனர். ஒரு சமயத்தில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் வேட்டி தடக்கி அவர் கீழே வீழ்ந்து விட்டார். எனினும் ஜப்பானிய தூதுவர் மகிந்த சமரசிங்க விழாமல் தடுத்து கவச வாகனத்தில் ஏற துணை புரிந்தார்.

இயந்திரத்தை நிறுத்தாது வைத்திருந்த உலங்குவானூர்தியின் ஓட்டி மிகுதியான பயணிகளை இறங்கவேண்டாம் என உரத்த சத்தத்தில் கூச்சலிட்டதுடன் உலங்குவானூர்தியை மேலெழுப்பி மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்த பெல் - 212 உலங்குவானூர்தியுடன் 40 கி.மீ தொலைவில் உள்ள வாழைச்சேனை முகாமுக்கு சென்றனர்.

தரையிறங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் வாகனங்களில் ஏறிய போதும் ஜேர்மன் மற்றும் இத்தாலிய தூதுவர்களை காணவில்லை. அவர்கள் காயமடைந்ததாக செய்திகள் பரவின. பின்னர் தலையில் சிறு காயமடைந்த இத்தாலிய தூதுவருடன் ஜேர்மன் தூதுவர் வந்து சேர்ந்தார்.

இந்த தகவல்களை முப்படைகளின் பிரதம அதிகாரியான ஏயார் மார்சல் டொனால்ட் பெரேரா அரச தலைவரின் ஆலோசகரான பசில் ராஜபக்சவிற்கு தெரியப்படுத்தினார். பசில் ராஜபக்ச உடனடியாக அந்த தகவலை சீனாவில் உள்ள அரச தலைவர் மகிந்தவிற்கு தெரியப்படுத்தினார். மகிந்த ராஜபக்ச இந்த சம்பவம் இடம்பெற்றது தொடர்பாக மிகுந்த ஆத்திரமடைந்தார்.

பின்னர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோரை தொடர்பு கொண்ட பசில் ராஜபக்ச, இராஜதந்திரிகள் பாதுகாப்பாக திரும்புவதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டிருந்தார்.

எம்.ஐ-17 உலங்குவானூர்தி மேலெழுந்த சில நிமிடங்களில் மேலும் பல எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. அதில் ஒன்று உலங்குவானூர்தி தரித்து நின்ற இடத்தில் குறி தவறாது வீழ்ந்து வெடித்தது. எனவே உலங்குவானூர்தியின் ஓட்டி சாதூர்யமான முடிவு உலங்குவானூர்தியையும் இராஜதந்திரிகளையும் காப்பாற்றியது.

எறிகணைகளின் புகைகள் அடங்குவதற்கு முன்னர் படையினரால் தொப்பிக்கல பகுதியை தவிர கிழக்கின் மிகுதிப் பகுதிகள் விடுவிக்கப்பட்டு விட்டன என்ற பிரச்சாரத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டு விட்டன.

மட்டக்களப்பின் இதயப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதலே இதற்கு காரணம். கிழக்கில் அமைதி திரும்பிவிட்டது. வழமையான அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகின்றன என உலகின் முன்னணி நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்துச் சென்று காண்பிக்க முயன்ற வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்று விட்டது.

சில நூறு யார் தூரத்தில் இருந்த கெரில்லாக்கள் இந்த தாக்குதலை ஒருங்கிணைத்துள்ளனர். எறிகணைகள் வீழ்வதை அவதானித்தாலே அதனை குறித்த இலக்கை நோக்கி ஒருங்கிணைக்க முடியும். சில நிமிடங்களில் மட்டக்களப்பு செய்தி உலகெங்கும் பரவிவிட்டது.

விடுதலைப் புலிகளே இது தொடர்பான பிரச்சார தொடர்புகளை முதலில் முன்னெடுத்தவர்கள் ஆவர். சம்பவம் இடம்பெற்ற 3 மணிநேரத்தில் விடுதலைப் புலிகளின் அறிக்கை பிற்பகல் 12.36 மணியளவில் வெளிவந்து விட்டது.

அதில் சம்பவத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் மாட்டின் டின் கடோகாஹ், விடுதலைப் புலிகளின் ஐக்கிய நாடுகள் சபைக்கான அதிகாரியான எம்.பாவரசனை தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்ததால் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் உடனடியான நடவடிக்கையால் தாக்குதல் நிறுத்தப்பட்டது குறித்து மாட்டின் பாவரசனுக்கு தனது நன்றியை தெரிவித்ததுடன், இந்த பயணம் தொடர்பாக முன்னர் விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்காத தமது தவறையும் ஒத்துக்கொண்டிருந்தார்.

அரச இயந்திரம் விடுதலைப் புலிகளை விட விரைவாக இயங்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதன் அறிக்கை 2.17 மணிக்கே வெளிவந்தது. அவர்களின் தொலைத் தொடர்பு வசதிகளில் பாரிய பிரச்சனைகள் இருந்துள்ளன. ஆனால் இப்படியான மிகப்பிந்திய பிரச்சாரங்களால் அரசின் இயங்குதன்மை இழக்கப்படுகின்றது.

இராஜதந்திரிகளின் மட்டக்களப்பு பயணம் விடுதலைப் புலிகளுக்கு தெரிந்து தான் தாக்குதலை நடத்தியதாக அரச தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் இராஜதந்திரிகளை குறிவைத்து விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியதாக தான் நம்பவில்லை எனவும், எனினும் விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொள்வதாகவும் இணைத்தலைமை நாடுகளின் தலைவரும் அமெரிக்கத் தூதுவருமான றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

நான் அங்குள்ள உண்மையான நிலையை அறிந்துள்ளேன். ஊடகத்துறையின் வெற்றிகளுக்கும், இராணுவ வெற்றிகளுக்கும், உண்மை நிலைமைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டேன் என தனது பெயரை குறிப்பிட விரும்பாத இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வவுணதீவுப்பகுதி அல்லது எருமைத்தீவில் இருந்தே வாகனங்களில் பொருத்தப்பட்ட 81 மி.மீ மோட்டார்கள் எறிகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

துருப்புக்காவி வாகனங்கள் மூலம் வாழைச்சேனை முகாமுக்கு வேகமாக கொண்டு செல்லப்பட்ட இராஜதந்திரிகளுக்கு வாகரையை கைப்பற்றியது தொடர்பாக ஒரு உற்சாகமான உரையை வழங்குமாறு அமைச்சர் 23 ஆம் படைப்பிரிவுத் தளபதி தயா ரட்னாயக்காவை கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் எல்லோரும் கொழும்புக்கு திரும்பினர்.

முன்னணி நாடுகளின் எல்லா தூதுவர்களும் கிழக்கு மாகாணம் தொடர்பாக சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களில் உள்ள தவறுகளை தமது நாடுகளுக்கு நிச்சயமாக தெரிவிப்பார்கள். மேலும் தம்மை அழைத்துச் சென்றவர்கள் தமது உயிருக்கு உரிய பாதுகாப்பை அளிக்கத் தவறிவிட்டதையும் அவர்கள் எடுத்துரைப்பர்.

அவர்கள் தமது அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் உண்மையை மறைக்கப்போவதில்லை. எனவே சில மோட்டார் எறிகணைகளை பயன்படுத்தி அரசின் நம்பகத்தன்மைக்கு சவால் விட்டதுடன் அதில் விடுதலைப் புலிகள் வெற்றிபெற்றும் விட்டார்கள்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Puthinam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகளை முன்கொண்டு வந்ததில் முதலில் தமிழ்நெற்க்கு தமிழர்கள் அனைவரும் நன்றி சொல்லவேண்டிய கடமை இருக்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் பெப்22 என்ற உங்களால் பதிவு செய்யப்பட்ட தலைப்பின் கீழ் என்னால் பதிவு செய்யப்பட்ட கருத்தில் ஏற்கெகெனவே தெரிவித்திருந்தேன்.அதாவது விடுதலைப்புலிகள் தமது ராஜதந்திர நகர்த்தலில் பெருவெற்றியை நோக்கி சென்றுகோண்டிருக்கிறார்கள் என்று, அந்த வெற்றியில் இதுவும் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சில மோட்டார் எறிகணைகளை பயன்படுத்தி அரசின் நம்பகத்தன்மைக்கு சவால் விட்டதுடன் அதில் விடுதலைப் புலிகள் வெற்றிபெற்றும் விட்டார்கள் என்பது மறைக்கமுடியாத உண்மையாகிவிட்டது.

அரசின் பிரச்சாரத்தை சில எறிகணைகள் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர்:

இக்பால் அத்தாஸ்

இதற்கு எமது ஆட்டுபால் அத்தாஸ் என்ன சொலிறார்? ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.