Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் பின்னடைவுக்கு இனவாதமும் ஊழலுமே காரணம்

Featured Replies

இலங்கையின் பின்னடைவுக்கு இனவாதமும் ஊழலுமே காரணம்

 
இலங்கையின் பின்னடைவுக்கு இனவாதமும் ஊழலுமே காரணம்
 

ஊழல், மோச­டி­கள், மனித உரிமை மீறல் கள், இன­வா­தம் என்­பவை ஒரு நாட்­டில் மலிந்து காணப்­ப­டு­மா­யின், அந்த நாடு இழி நிலைக்­குத் தள்­ளப்­பட்­டு­வி­டும் என்­ப­தற்கு இலங்­கை ஒரு சிறந்த உதா­ர­ணமாகும்.

நாற்­பு­ற­மும் கட­லால் சூழப்­பட்டு ஐந்து வகை நிலங்­க­ளில் நான்­கைக் குறை­வின்­றிக் கொண்­டது இலங்கைத்தீவு. யாழ்.குடா­நாடு எதிர்காலத்தில் பாலை­வ­ன­மாக மாறி­வி­டு­மா­யின் ஐந்­தா­வது நில­மும் இங்கு அமை­யக் கூடும்.

ஏனென்­றால், யாழ். கு­டாநாடு பாலை­வ­ன­மாக மாறி விடு­மென நீண்ட கால­மா­கவே எதிர்வு கூறப்­பட்டு வரு­கின்­றமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

பல்­லின மக்­கள் வாழு­கின்ற நாடு என்ற வகை­யில் சிங்­க­ள­வர், தமி­ழர், முஸ்­லிம்­கள் ஆகிய மூன்று இனத்­த­வர்­க­ளும் நாட்­டின் முதன்மை இடத்தை வகித்து வரு­கின்­ற­னர்.

சிங்­கள மக்­கள் நாட்டின் மொத்தச் சனத் தொகை யில் சுமார் நான்­கில் மூன்று பங்­கி­ன­ரா­கக் காணப்­ப­டு­கின்­ற­னர். இவர்­க­ள்பெரும்­பான்­மை­யி­னர் எனவும், தமி­ழர்­க­ளும் முஸ்­லிம்­க­ளும் சிறு­பான்­மை­யி­னர் என்ற வரை­ய­றைக்­குள் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இலங்­கையை பீடித்­துள்ள சாபக்­கேடு இன­வா­தமே

இன­வா­தம் இந்த நாட்­டைப் பீடித்­துள்ள சாபக்­கேடு என்­று­தான் கூற­வேண்­டும். நாடு சுதந்­தி­ரம் அடைந்த நாளில் இருந்து, பெரும்­பான்மை சிங்­கள அர­சி­யல் தலை­வர்­க­ளால் கிர­ம­மாக ஓதப்­பட்­டு­வ­ரும் மந்­தி­ரம் இந்த இன­வா­தம்­தான். நீண்ட கொடிய போர் ஒன்­றுக்கு வழி­வ­குத்ததும் இந்த இன­வா­தம் தான்.

தற்­போ­தைய அரசு பத­வி­யேற்ற நாள் முதல், முந்தைய அர­சின் காலத்­தில் இடம்­பெற்ற ஊழல், மோச­டி­கள் தொடர்பாக முந் தைய அரசின் முக்­கி­யஸ்­தர்­கள் பலர் மீது குற்­றச்­சாட்­டுக்­க­ளும் தெரி­விக்­கப்­பட்­டன. ஆனால் இவர்­கள் மீதான விசா­ர­ணை­கள் ஆமை வேகத்­தி­லேயே நகர்ந்து கொண்­டி­ருந்­தன.

தற்­போது சிறிது சூடு­பி­டிக்க ஆரம்­பித் துள்­ள­போ­தி­லும், அவை வேகம் பெறுமா என்­பதை நம்­பத் தயக்­க­மாக உள்­ளது. முன்­னாள் முதற்­பெண்­ம­ணி­யான சிராந்தி மீதான விசா­ர­ணை­கள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அதில் பல மில்­லி­யன் ரூபா கொடுத்து அவர் கொள்­வ­னவு செய்த சொகுசு வீடு தொடர்­பான விசா­ரணை முக்கியமானது. தாம் தமது உற­வி­னர்­க­ளி­டம் கடன்­பெற்றே, குறித்த வீட்­டைக் கொள்­வ­னவு செய்ததா­கச் சிராந்தி விசா­ரணை அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­வித்­துள்­ளார்.

முறை­யான விசா­ர­ணை­ கள் இடம்­பெ­று­மா­யின் இந்த வீடு கொள்­வ­னவு விட­யத்­தில் சிராந்­தி­யால் தப்­பிக்க முடி­யாது. நிதி­ய­மைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வும் வீடு ஒன்­றைக் கொள்­வ­னவு செய்­தமை தொடர்­பா­கவே தமது அமைச்சர் பத­வியை இழக்க நேர்ந்தது.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­கள் குறித்­துப் பல திடுக்­கி­டும் தக­வல்­கள் வெளி­யா­கு­மென்ற எதிர்­பார்ப்பு நிலவி வரு­கின்­றது. ஆனால் இது விட­யத்­தில் கூட்டு அரசு முறை­யான விசா­ர­ணை ­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யுமா? என்ற கேள்­வி­யும் எழா­ம­லில்லை.

பரஸ்­ப­ரம் குற்­றச்­சாட்­டும் முன்­னாள் மற்­றும் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­கள்

மத்­திய வங்­கி­யின் பிணை­முறி ஊழல் விவ­கா­ரம் நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை வெகு­வா­கப் பாதித்து விட்­ட­தாக எதி­ர­ணி­யி­னர் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். ஆனால் மகிந்த ஆட்­சிக் காலத்­தில் நிகழ்ந்­த­தா­கக் கூறப்­ப­டும் ஊழல், மோச­டி­கள் தொடர்­பாக இவர்­கள் வாயே திறப்­ப ­தில்லை.

ஆனால் தற்­போ­தைய கூட்டு அர­சின் நிர்­வா­கத்­தி­லும் கறை­கள் பீடிக்க ஆரம்­பித்­துள்­ள­மை குறிப்பிடத்தக்கது. இறு­திப் போரின்­போது தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்­கள் மனித குலத்­தால் ஏற்­கத்­தக்­க­வை­ யல்ல.

இவை தொடர்­பாக ஐ.நா மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­ன­மும் நிறை­வேற்­றப் பட்­டது. ஆனால் குறித்த தீர்­மா­னம் தொடர்­பான விசா­ர­ணை­ கள் இடம்­பெ­ற­வில்லை. இடம்­பெ­று­மென்ற நம்­பிக்­கை­யும் மெல்ல மெல்­லக் குறைந்து வரு­கின்­றது.

கட­லால் சூழப்­பட்ட இந்த நாட்­டில் கடல் வளங்­க­ளுக்­குக் குறை­வில்லை. ஆனால் கடல் உண­வு­ களை இறக்­கு­மதி செய்ய வேண்­டிய பரி­தாப நிலை­யில் நாம் உள்­ளோம். அந்த அள­வுக்கு நிர்­வா­கச் சீர்­கே­டு­கள் நாட்­டில் மலிந்து காணப்­ப­டு­கின்­றன.

இலங்கை சிங்­கப்­பூர் போன்று மாற இங்கு இன­வா­தம் ஒழிய வேண்­டும்

இந்த நிலை­யில் இலங்­கை­யைச் சிங்­கப்­பூ­ராக்­கிக் காட்­டு­வோம் என இலங்­கைக்­கான சீனத் தூது­வர் தெரி­வித்­துள்­ளார். தமது நாடு இலங்­கைக்­கு­அ­திக உத­வி­களை வழங்­கு­மெ­ன­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார். ஏற்­க­னவே சீனா வழங்­கிய கடன் கார­ண­மான சுமை­யால் இலங்கை தடு­மாறி வரு­கின்­றது.

இந்­தக் கடன்­கள் அதிக வட்­டிக்கு ப் பெறப்பட்டுள்­ள­தாக முறைப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளமை இங்கு குறிப்­பி ­டத்­தக்­கது. இந்த நிலை­யில் அடுத்த 15 ஆண்­டு­க­ளுக்­குள் இலங்­கை­யைச் சிங்­கப்­பூர் போன்று மாற்­றிக் காட்­டு­வ­தாக இலங்­கைக்­கான சீனத் தூது­வர் தெரி­வித்­துள்­ள­மை நகைப்­புக்குரி­ய­தொன்­றா­கும்.

இலங்­கை, பொரு­ளா­தார ரீதி­யி­லும், வேறு துறை­க­ளி­லும் பிர­கா­சிக்க வேண்­டு­மா­னால், சகல இனத்­த­வர்­க­ளும் சம­மாக நடத்­தப்­பட வேண்­டும். இன­வா­தம் பூண்­டோடு ஒழிக்­கப்­பட வேண்­டும். சகல மட்­டங்­க­ளி­லும் ஊழல், மோச­டி­கள் இடம்­பெ­றா­த­வாறு கண்­கா­ணிக்­கப்­பட வேண்­டும்.

விளை­யாட்­டுத் துறை­யி­லும், அர­சி­ய­லி­லும் ஊழ­லும் மோசடி களும் கலந்­துள்­ள­தால் இலங்­கை ­யின் கிரிக்­கெட் அணி தொடர்த் தோல்­வி­க­ளைச் சந்­தித்து வரு­கின்­றது. மக்­கள் இன­வா­தி­க­ளை­யும் ஊழல்­வா­தி­க­ளை­யும் அர­சி­ய­லில் இருந்து முற்­றா­கவே புற­மொ­துக்­கி­விட வேண்­டும்.

எங்­கும் நேர்மை, எதி­லும் நேர்மை என்ற குறிக்­கோ­ளு­டன் இலங்­கை­யர்­கள் செயற்­பட வேண்­டும். அப்­போ­து­தான் சிங்­கப்பூரைவிட இலங்­கை­யால் சாதித்­துக் காட்ட முடி­யும்.

http://newuthayan.com/story/25857.html

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் ஆரோ சொல்லுகினம், மகிந்த படம் வேற... அட யாராப்பா அரசமரத்துக்கு கீழ ஒக்காந்தது என்று பார்த்தால்..... இது உதயனின் 'பிரசங்கம்'.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.