Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் மஹாநாயக்க தேரரிடம் எடுத்துரைப்பு

Featured Replies

தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் மஹாநாயக்க தேரரிடம் எடுத்துரைப்பு

 

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், மல்வத்து பீட மஹாநாயக்க தேரரை இன்று சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் தமது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மல்வத்து பீட மஹா நாயக்கருக்கு முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை குறித்த தமது ஆவணம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களில் மாறுபட்ட கருத்து வெளியிடப்படுவதாக தெரிவித்து, அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கமொன்றையும் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

http://newuthayan.com/story/27219.html

  • தொடங்கியவர்

விக்கி, மல்வத்து பீடம் திடீர் சந்திப்பு

 

விக்கி, மல்வத்து பீடம் திடீர் சந்திப்பு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுக்கும், மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்களுக்கும் இடையில் இன்று முக்கிய    கலந்துரையாடல் ஒன்று  இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் கண்டியில் இன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது  வடக்கு, கிழக்கு  தமிழ் மக்கள் எதிர்கொள்ளும்  பிரச்சினைகள்  தொடர்பாக மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்களிடம்   வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  எடுத்துரைத்துள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/wigneswaran-meeting-between-and-Malavattu-Faculty

 

 

சமஷ்டி நாட்டை பிரிக்கும் முறையல்ல; மஹாநாயக்கர்களுக்கு சி.வி விளக்கம்

 

சமஷ்டி நாட்டை பிரிக்கும் முறையல்ல; மஹாநாயக்கர்களுக்கு சி.வி விளக்கம்

சமஷ்டி முறை என்பது நாட்டை பிரிக்கும் ஒரு தீர்வுத்திட்டம் அல்லவெனவும் மாறாக அது நாட்டை ஒன்றுபடுத்தும் திட்டமென்பதை மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தியதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி தொடர்பில் தான் தெளிவான விளக்கத்தை அவர்களுக்கு வழங்கியதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுக்கும், மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்களுக்கும் இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கண்டியில் நடைபெற்ற இந்த இந்த சந்திப்பின்போது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்களிடம்   வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்  எடுத்துரைத்துள்ளார்.

இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர், அரசியலை தவிர்த்து பொதுவான விடயங்கள் தொடர்பிலேயே இன்றைய சந்திப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

இதேவவேளை, தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், தென் பகுதி ஊடகங்கள் வட பகுதி மக்கள் தொடர்பில் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/It-is-not-the-way-of-dividing-the-federal-state

  • தொடங்கியவர்

கண்டி மல்வத்த மகாநாயக்க தேரருடன் வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு

வடமாகாண முதலைமச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று கண்டி மல்வத்த மகாநாயக்க திப்பொட்டுவாவே தேரரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கண்டி மல்வத்த மகாநாயக்க தேரருடன் வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு Image captionகண்டி மல்வத்த மகாநாயக்க தேரருடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

தென்பகுதியில் பௌத்தர்களும் பௌத்த மகாநாயக்கர்களும் வடமாகாண முதலமைச்சரையும் வடமாகாண சபையையும் இனவாதிகள் என்ற நோக்கில் நோக்கப்படுகின்ற நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சருடன் வடமாகாண அமைச்சர்களான கந்தையா சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகியோரும் தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

முதலமைச்சர் குழுவினர் நாளை ஞாயிற்றுக்கிழமை அஸ்கிரிய பீடாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  •  

இந்தச் சந்திப்பின்போது மல்வத்த மகாநாயக்கருக்கு வடமாகாண முதலமைச்சர் தான் ஒரு இனவாதியல்ல என்பதை எடுத்துரைத்ததுடன், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ் மக்களுடைய அன்றாடப் பிரச்சனைகளுக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் முதலமைச்சர் மல்வத்த மகாநாயக்கருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி மல்வத்த மகாநாயக்க தேரருடன் வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், யுத்தம் காரணமாகவே வடக்கிலும் கிழக்கிலும் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் விதவைகளாகவும், வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டதனால், பெண்கள் குடும்பங்களுக்குத் தலைமைதாங்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.

வடக்கிலும் கிழக்கிலும் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதையும் அவர் மல்வத்த மகாநாயக்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.

தனது மூன்று குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த அமைச்சர் அனந்தி சசிதரன், தனது கணவர் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பதாகவும், அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து தனது பிள்ளைகள் நித்தம் தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதிருப்பதாகவும் கூறினார்.

கண்டி சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு எதிராக மூன்று வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு வழக்கில் அவருக்கு ஒரு வருடம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றைய இரண்டு வழக்குகளிலும் அவருக்குத் தண்டனையுடன் ஒரு வருடம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த 3 வழக்குகளிலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டிருப்பதன்படி 3 வருடங்கள் தனித்தனியே புனர்வாழ்வுக்குச் செல்ல வேண்டுமா அல்லது மூன்று வழக்குகளின் தீர்ப்புக்கு அமைய ஒரு வருடம் மாத்திரம் புனர்வாழ்வுப் பயிற்சிக்குச் செல்ல வேண்டுமா என்பது தெளிவில்லாமல் இருப்பதனால்தான் குழப்பமடைந்திருப்பதாக அந்தக் கைதி தெரிவித்துள்ளார்.

கைதிகளின் மனக்குறைகள், வழக்கு விசாரணைகள் தொடர்பான விடயங்கள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் சட்ட முரண்பாடுகள், சட்டரீதியான பிரச்சினைகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியதுடன், இது தொடர்பில் விசேடமாக சட்டத்தரணி ஒருவரை நியமித்து அந்த சிக்கல்கள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-41214440

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்

சி.வி.விக்­னேஸ்­வரன் இன்று அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரரை சந்­திக்­கிறார் .!

வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான குழு­வினர் இன்று பி.ப. 5.30 மணிக்கு அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர். 

Image result for சி.வி.விக்­னேஸ்­வரன் virakesari

குறித்த பேச்­சு­வார்த்­தை­யின்­போது யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள வடக்கு, கிழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் மிகுந்த அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது. அச்­சந்­திப்பில் வடக்கு மாகாண சபையின் உறுப்­பி­னர்கள் சிலரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இதே­வேளை முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தலை­மை­யி­லான குழு­வினர் நேற்றுக் காலை மல்­வத்த மகா­நா­யக்க தேரரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/24217

  • தொடங்கியவர்
’வடக்கு தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்’

 

“வடக்கிலுள்ள தமிழர்கள், பயங்கரவாதிகள் அல்லர்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

வடக்கு பகுதியிலுள்ள தமிழ்கள் தொடர்பில், தெற்கு பகுதியிலுள்ள மக்கள், தவறான எண்ணத்தைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், கண்டிக்கு, நேற்று (09) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். ஸ்ரீ தலதா மாளிகைளில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், மல்வத்தை மாகாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள சித்தார்த்தரை சந்தித்து நல்லாசி பெற்றுக் கொண்டார். இதையடுத்து, ஊடகவியலாளருக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, வடமாகாணத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு, அங்குள்ள மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினையை, நேரில் காணுமாறு, மல்வத்தை மாகாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கள சித்தார்த்தருக்கு, முதலமைச்சர் அழைப்பு விடுத்தார்.

கூட்டாட்சி அமைப்பதற்கான அழைப்பு, நாட்டை பிரிப்பதற்கான ஒரு நகர்வு அல்ல என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், நாட்டை பிரிப்பதற்கான எந்தவொரு நோக்கமும் தங்களுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

வடக்கு பகுதியில் என்ன நடக்கின்றது என்பதை, தெற்கு பகுதி மக்களுக்கு, சில ஊடகங்கள், தவறான தகவல்களை வழங்கி வருவதாகவும் வட பகுதியில் புத்தர் சிலைகளை வைப்பதற்கு, வடக்கு மக்களுக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால், அவை சட்டரீதியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதையே, மக்கள் விரும்புவதாகவும் இதன்போது முதலமைச்சர் கூறினார்.

மக்களுக்கு இடையே மோதல் ஏற்படும் வகையில், இந்து கோவிலொன்று அருகிலேயே, புத்தர் சிலைகளை, சட்டவிரோதமாக வைப்பதாலேயே, பிரச்சினைகள் ஏற்படுகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடக்கு-தமிழர்கள்-பயங்கரவாதிகள்-அல்லர்/71-203473

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.