Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் தொடரும் புறக்கணிப்பு

Featured Replies

கிழக்கில் தொடரும் புறக்கணிப்பு

 

நான் முத­ல­மைச்­ச­ரா­வ­தற்கு ஆத­ரவு தாருங்கள். 4 அமைச்சர் பத­வி­க­ளையும் நீங்கள் எடுத்துக் கொள்­ளுங்கள். பொதுத் தேர்தல் வரும் போது முத­ல­மைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்யக் காத்­தி­ருக்­கிறேன். அப்­போது தமிழர் ஒருவர் முத­ல­மைச்­ச­ராக வரும் வாய்ப்பும் ஏற்­ப­டு­மென தயா­க­மகே கூறி­ய­போது அப்­போது எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்த தண்­டா­யுத பாணி, இவ்­வாறு கூறினார். சிறு­பான்மை இன­மா­கிய முஸ்லிம் மக்­களை புறம் தள்­ளி­விட்டு பேரி­ன­வாத கட்­சி­க­ளான உங்­க­ளோடு சேர்ந்து நாம் கிழக்கில் ஆட்சி அமைக்கத் தயா­ரா­க­வில்லை. முத­ல­மைச்சர் பதவி, மந்­தி­ரிப்­ப­த­வி­யென்­பன எங்­க­ளது நோக்­க­மு­மல்ல. கிழக்கு தமிழ்– முஸ்லிம் உற­வு­க­ளோடு வளர்க்கப்படவேண்டியது எனக் கூறி வந்த வாய்ப்பை உதறித் தள்ளினார்கள்.

கிழக்கு மாகாண சபையில் தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வில்லை. அவர்கள் திட்­ட­மிட்ட முறையில் ஓரங் கட்­டப்­ப­டு­கி­றார்கள். கிழக்கில் இன­வொற்­றுமை காப்­பாற்­றப்­பட வேண்­டு­மாயின் நீதி­யு­டனும், புரிந்­து­ணர்­வு­டனும் ஒவ்­வொரு இனமும் நடந்­து­கொள்ள வேண்டும். இவ்­வா­றா­ன­தொரு கருத்தை துணிச்­ச­லு­டனும் பவ்­வி­யத்­து­டனும் தெரி­வித்­தி­ருந்தார் அமைச்சர் மனோ கணேசன். மட்­டக்­க­ளப்பில் அண்­மையில் இடம்பெற்ற ஒரு வைப­வத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரு­ம­மொழி அமைச்சர் மனோ கணேசன் இக்­க­ருத்தைத் தெரி­வித்­தி­ருந்தார்.

அண்­மைக்­கா­ல­மாக கிழக்கு மாகாண சபையின் ஆட்சிப் போக்­குகள், நிர்­வாக கெடு­பி­டிகள், அர­சியல் ஆதிக்கம் தொடர்பில் தமிழ் மக்கள் மத்­தியில் அதி­ருப்­தியும், விரக்­தியும் வளர்ந்து கொண்­டி­ருப்­பது சாதா­ரண பொது­மக்­களின் பேச்சு வாக்­கி­லி­ருந்தே தெரிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

இந்த அதி­ருப்­தியின் இன்­னொரு வெளிப்­பா­டா­கவே கிழக்கு மாகாண சபை ஆட்சி அதி­காரம் நீடிக்­கப்­பட்டால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்கள் 11 பேர் உட்­பட தமிழ் உறுப்­பி­னர்கள் அனை­வ­ரது ஆத­ரவைக் கொண்டு கிழக்கு மாகா­ணத்தில் தமிழர் ஒருவர் முதல்வர் ஆக்­கப்­பட வேண்­டு­மென்ற வாதங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வதைக் காணு­கிறோம்.

இன்னும் சில தமிழ் அர­சியல் தலை­வர்கள் அடுத்த மாகாண சபைத் தேர்­தலில் தமிழர் ஒருவர் முதல்­வ­ராக வரக்­கூ­டிய வியூகம் வகுக்­கப்­பட வேண்­டு­மென்ற கருத்தும் கூறப்­ப­டு­வதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

இந்த முரண்­பா­டான கருத்­துக்கள் அல்­லது அதி­ருப்­தி­யான கருத்­துக்கள் அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக வரு­வ­தற்குக் காரணம் கிழக்கு மாகாண சபையின் போக்­குகள், அதன் நட­வ­டிக்­கைகள் என்­ப­ன­வற்றின் மீது தமிழ் மக்­க­ளுக்கு உண்­டா­கி­வரும் நம்­பிக்­கை­யீ­னங்­களும் வெறுப்­பு­க­ளுமே கார­ண­மாக இருக்­க­லா­மென்­பது ஓர­ளவு ஊகித்து அறி­யக்­கூ­டிய விட­யந்தான். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தங்கள் சகோ­தர இன­மான முஸ்லிம் மக்­க­ளுடன் சமா­தா­ன­மா­கவும், ஒன்­று­பட்டு வாழ வேண்­டு­மென்­ப­தற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் 11 உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தும் 7 உறுப்­பி­னர்­களைக் கொண்ட முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு விட்டுக் கொடுத்து முஸ்லிம் பெரு­மகன் ஒரு­வரை கிழக்கின் முதல்­வ­ராக ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கி­ற­போதும், தமிழ் மக்­க­ளுக்கு மாகாண சபை ஆட்­சியின் ஊடாக நீதியும் நியா­யமும் முறை­யாக கிடைக்­க­வில்­லை­யென்­பதே எனது அபிப்­பி­ரா­ய­மா­க­வுள்­ளது என மனோ கணேசன் தெரி­வித்­தி­ருக்கும் கருத்­தா­னது அனை­வ­ரது கவ­னத்­தையும் ஈர்க்கும் கருத்­தாகும்.

2015 ஆம் ஆண்டு நல்­லாட்­சிக்கு இலக்­க­ண­மாக தேசிய அர­சாங்கம் மத்­தியில் அமைக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து கிழக்கில் முன்­னீ­டாக தேசிய அர­சாங்­க­மொன்று அமைக்­கப்­பட்­டது. நல்­லாட்­சிக்கு சிறந்த உதா­ர­ண­மாக திகழ்­வது கிழக்கின் ஆட்­சி­யென கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அஹமட் பல மேடை­களில் கூறிப் பெரு­மைப்­ப­டு­வதைக் கேட்­டி­ருக்­கிறோம்.

2015 ஆம் ஆண்டு கிழக்கில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, முஸ்லிம் காங்­கிரஸ், த.தே.கூ. அமைப்பு ஒன்று சேர்ந்து தேசிய அர­சாங்­க­மொன்று அமைக்­கப்­பட்­ட­போது பல விட்டுக் கொடுப்­பு­களை மேற்­கொண்­ட­துடன் த.தே.கூ .அமைப்பின் இணை­வை­யிட்டு கிழக்­குவாழ் தமிழ் மக்கள் அதி­க­ளவு பெரு­மைப்­பட்டுக் கொண்­டார்கள். ஆனால் நாமொன்று நினைக்க ஆட்­சி­யா­ளர்கள் ஒன்று நினைக்­கின்­றார்கள் என்­பது போல் கிழக்கு மாகாண ஆட்சிப் போக்­குப்­பற்­றியும், அதன் அர­சியல் அதி­கார ஆதிக்கம் பற்­றியும், அதி­க­மாக தாங்கள் நட்­ட­ம­டை­கிறோம், பாதிக்­கப்­ப­டு­கிறோம். இன்னும் தெளி­வாக சொல்லப் போனால் ஓரங்­கட்­டப்­ப­டு­கின்­றோ­மென்ற முரண்­பா­டு­களும் முனைப்­புக்­களும் வளர்ந்துக் கொண்டு வரு­வ­தா­கவே தெரி­கின்­றது.

இத்­த­கைய விப­ரீ­த­மான கவ­லை­க­ளுக்கும் அதி­ருப்­தி­க­ளுக்கும் கார­ண­மென்­ன­வென்று பார்க்­கையில் ஆறு தசாப்த காலம் சிங்­கள மேலா­திக்­கத்தால் பாதிக்­கப்­பட்டுப் போய் நொந்து போயி­ருக்கும் தமிழ் மக்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­களில் அநீதி இழைக்­கப்­ப­டு­கி­றது. வளப்­பங்­கீட்டில் பார­பட்சம் காட்­டப்­ப­டு­கி­றது. இது போன்றே கல்வி, அபி­வி­ருத்தி, சுகா­தாரம், மருத்­துவம், கலா­சாரம் போன்ற அனைத்து மட்­டங்­க­ளிலும் கிழக்கு தமிழ் மக்­க­ளுக்கு திட்­ட­மிட்ட முறையில் குந்­தகம் விளை­விக்­கப்­ப­டு­கி­ற­தென்ற அபிப்­பி­ரா­யமும் விரக்­தியும் வேக­மாக பரவி வரு­வது கவலை தரு­கின்ற ஒரு விட­யந்தான்.

வேலை வாய்ப்­புகள் என்ற விவ­காரத்தில் கிழக்கு மாகா­ணத்தில் மிக மோச­மான நிலையில் பார­பட்சம் காட்­டப்­ப­டு­கி­றது. இன­வி­கி­தா­சாரம் பேணப்­ப­டு­வ­தில்லை. அர­சியல் அதி­காரம் ஒரு தரப்­பி­ன­ரிடம் இருக்­கின்ற துணிவின் கார­ண­மாக இவ்­வா­றா­ன­தொரு ஒதுக்­கல்­நிலை தீவி­ர­மாக அமுல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது என்ற அபிப்­பி­ராயம் கிழக்கில் வாழும் தமிழ் இளை­ஞர்­க­ளிடம் குடி­கொண்டு வரு­கின்­றது என்ற கருத்தை மாற்­றி­ய­மைக்க முடி­யாத அள­வுக்கு நிலை­மைகள் மோச­மாகி வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

குறிப்­பாக 2012 ஆம் ஆண்­டுக்குப் பின்­னுள்ள கிழக்கு மாகாண சபையில் இந்­நி­லை­மைகள் படு­மோ­ச­மாகி வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது. நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு முன் கிழக்கின் ஆளு­ந­ராக இருந்­தவர் கடும்­போக்­கு­வா­தி­யா­கவும், தமிழ் மக்கள் விரோத செயற்­பாட்­டா­ள­ரா­கவும் இருந்து வந்­துள்ளார்.

அவரை சாத­க­மாக வைத்துக் கொண்ட ஒரு சில கிழக்கு மாகாண அமைச்­சர்கள் தங்கள் அமைச்சு சார்ந்த நிய­ம­னங்­களில் ஓர­வஞ்­சனை காட்­டி­யது மாத்­தி­ர­மல்ல, திட்­ட­மிட்ட முறையில் இன ஓரங்­களை மிக கடு­மை­யாக மேற்­கொண்­டார்கள் என்ற கருத்தும் வெறுப்பும் இருக்­கத்தான் செய்­தது. குறித்த ஒரு நிய­ம­னத்தில் முகா­மைத்­துவ உத­வி­யாளர் நிய­மனம் ஒன்­றின்­போது தமிழ் மொழி­யா­ளர்கள் கிழக்கில் அதி­க­மாக இன விகி­தா­சா­ரத்­துக்கு மேலாக கட­மை­யாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று கூறிக்­கொண்டு ஏனைய இனத்­த­வரை விட கூடிய புள்­ளியை எடுத்த தேர்­வா­ளர்­க­ளுக்கு நிய­மனம் வழங்­காமல் மிக குறை­வான தேர்வு புள்­ளி­களை எடுத்­த­வர்­க­ளுக்கு இன வாரி­யான தடுப்புச் செய்து நிய­மனம் வழங்­கப்­பட்ட சம்­ப­வமும் கடந்த காலத்தில் இடம்­பெற்­றி­ருப்­பது மனக் கசப்பை உண்­டாக்­கிய ஒரு விட­ய­மாகும். இது போன்றே பட்­ட­தாரி நிய­மனம், சிற்­றூ­ழியர் நிய­மனம், அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் நிய­மனம், ஆசி­ரிய நிய­மனம் என ஏகப்­பட்ட நிய­ம­னங்­களில் தமிழ் இளை­ஞர்கள், யுவ­திகள் அக்­கா­லத்தில் புறக்­க­ணிக்­கப்­பட்­டார்கள் என்ற கருத்து இன்னும் இருந்து கொண்­டி­ருக்­கி­றது.

இதே­போன்­ற­தொரு நிலைதான் வளப்­பங்­கீட்­டிலும் காணப்­ப­டு­கி­றது என்ற அபிப்­பி­ராயம் கிழக்கு மாகா­ணத்தின் ஆட்சி நிலை­மை­களை மோச­மாக விமர்­சிக்கும் எண்­ணப்­பா­டு­களை உரு­வாக்கி வரு­கி­றது. அண்­மையில் அமெ­ரிக்க கடற்­ப­டை­யி­னரால் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு அபி­வி­ருத்­திக்கு தெரி­வான பாட­சா­லை­களில் ஒரு பாட­சாலை கூட தமிழ் பாட­சாலை தெரிவு செய்­யப்­ப­ட­வில்­லை­யென்ற சர்ச்சை கிழக்கு மாகாண சபையில் பாரிய வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு உள்­வாங்­கப்­பட்­டது என்­பது யாவரும் அறிந்த விட­ய­மாகும்.

அபி­வி­ருத்தி சார்ந்த நிதி ஒதுக்­கீ­டு­களில் உதா­ர­ண­மாக கிரா­மிய அபி­வி­ருத்தி, வீதி, சுகா­தாரம், நக­ர­ம­ய­மாக்கல் அபி­வி­ருத்தி ஒதுக்­கீ­டு­களில் சுமார் 80 சத­வீ­தத்­துக்கு மேற்­பட்ட நிதி ஒதுக்­கீ­டுகள் குறித்­த­வொரு இனத்­து­வம்சார் அபி­வி­ருத்­திக்கு ஒதுக்­கப்­ப­டு­கின்­றன. தமிழ்க்­கி­ரா­மங்கள் அவை சார்ந்த துறைகள் திட்­ட­மிட்ட வகையில் ஓரங்­கட்­டப்­ப­டு­வ­துடன் புறக்­க­ணிக்­கப்­ப­டு­கின்­றன என்ற கடு­மை­யான விமர்­ச­னங்கள் வீசப்­பட்டுக் கொண்­டே­யி­ருக்­கின்­றன.

கிழக்கின் முத­ல­மைச்சர் அடிக்­கடி ஒரு விட­யத்தை லாவ­க­மாக கூறு­வது வழக்கம். ஆட்சி அதி­காரம் கிழக்கில் முஸ்லிம் தரப்­பி­ன­ரிடம் இருக்­கி­றது. அதே­வேளை நிர்­வாக அதி­காரம் தமிழர் கையில் இருப்­ப­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இவ்­விரு போக்­கு­க­ளுக்கு இடையில் ஒரு சம­தன்மை பேணப்­பட வேண்டும். அப்­பொ­ழு­துதான் இன­வு­றவும் ஐக்­கி­யமும் தொலை­தூ­ரம்­வரை பேண முடி­யு­மெனக் கூறு­வது வழக்கம்.

கிழக்கின் இன்­றைய முத­ல­மைச்சர் நஸீர் அஹமட் ஆற்றல் உள்­ளவர், அறி­வாளி, எல்­லா­வற்­றுக்கும் மேலாக துணிச்­ச­லான ஆளுமை கொண்­டவர். இனத்­துவ ஐக்­கியம், புரிந்­து­ணர்வு, ஒற்­றுமை என்­ப­ன­வற்றில் ஆர்வம் கொண்­டவர். ‘யதார்த்­த­வாதி வெகு­சன விரோதி’ என்­பது போல் எதை­யுமே திட்­ட­வட்­ட­மான முடிவை மேற்­கொண்டு செயற்­ப­டுத்தும் போக்­காளர். அத்­த­கைய ஆளுமை கொண்ட நபர் ஒரு­வரின் தலை­மையின் கீழ் இனத்­துவ ஒற்­றுமை கட்டி வளர்க்­கப்­ப­ட­வில்­லை­யாயின் அது எக்­கா­லத்­தி­லுமே கொண்­டு­வ­ரப்­பட முடி­யாத ஒன்­றா­கி­விடும்.

தமிழ்த் தரப்­பி­னர்­களைப் பொறுத்­த­வரை எக்­கா­லத்­திலும் ஏனைய இனத்­த­வர்­க­ளுடன் ஒன்­றி­வாழ வேண்­டு­மென்ற உத்­த­ம­மான எண்ணம் கொண்­ட­வர்­க­ளா­கவே இருந்து வந்­துள்­ளார்கள். இதை அவர்கள் பல சந்­தர்ப்­பங்­களில் நிரூ­பித்தும் காட்­டி­யி­ருக்­கி­றார்கள்.

2012 ஆம் ஆண்டு தேர்தல் முடி­வுகள் அறி­விக்­கப்­பட்ட பின் ஆட்சி அமைக்­கப்­போ­வது யார்? தமிழர் தரப்­பி­னரா? அல்­லது முஸ்லிம் முத­ல­மைச்­சரா? இல்லை மஹிந்த ராஜபக் ஷ அணி­யி­னரா? ஆட்சி அமைக்கப் போகின்­றார்கள் என்ற பதற்றம் கிழக்கில் நில­விய காலத்தில் த.தே.கூட்­ட­மைப்பு கிழக்கில் 11 ஆச­னங்­க­ளையும், முஸ்லிம் காங்­கிரஸ் 7 ஆச­னங்­க­ளையும், எதிர்த்­த­ரப்­பினர் 17 ஆச­னங்­க­ளையும் மட்டும் கொண்­டி­ருந்த நிலையில் த.தே.கூ. அமைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் அவர்கள் பகி­ரங்­க­மாக ஓர் அழைப்பு விடுத்­தி­ருந்தார். வாருங்கள் கிழக்கில் சிறு­பான்மை சமூ­கத்தின் ஆட்­சியை நிறு­வுவோம். முத­ல­மைச்சர் பத­வியை நீங்கள் எடுத்துக் கொள்­ளுங்கள். ஏனைய எந்­த­வொரு அமைச்சும் எமக்கு வேண்­டா­மென அழைப்பு விடுக்­கப்­பட்­ட­போதும் அது உதா­சீனம் செய்­யப்­பட்­டது. ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்ற நிலையே காணப்­பட்­டது.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் முடிந்த கையுடன் கிழக்கு மாகாண ஆட்சி நிலை­வ­ரங்கள் மாறும் நிலை­யொன்று உரு­வா­கி­யது. அவ்­வே­ளையில் நடை­பெற்ற ஒரு சம்­ப­வத்தை இதில் பதிவு செய்து கொள்­ள­லா­மென்று நினைக்­கின்றேன்.

அம்­பா­றை­யி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்த கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் தயா­ க­மகே மற்றும் அவரது ஆத­ர­வா­ளர்கள் ஆட்சி பேரம் பேசு­வ­தற்­காக கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்­களை அழைத்­தி­ருந்தார். இப்­பேச்­சு­வார்த்தை உப்­பு­வெ­ளி­யி­லுள்ள தேவா­லய கூட­மொன்றில் இடம்­பெற்­றது. இப்­பேச்­சு­வார்த்­தையில் தற்­போ­தைய கல்வி அமைச்சர் சி.தண்­டா­யு­த­பாணி, உறுப்­பினர் ஜனார்த்­தனன் மற்றும் புத்­தி­ஜீ­விகள் கலந்து கொண்­டார்கள்.

அன்­றைய பேரம் பேசு­தலில் முக்­கிய விட­ய­மாகப் பேசப்­பட்ட விடயம் யாதெனில், நான் முத­ல­மைச்­ச­ரா­வ­தற்கு ஆத­ரவு தாருங்கள். 4 அமைச்சர் பத­வி­க­ளையும் நீங்கள் எடுத்துக் கொள்­ளுங்கள். பொதுத் தேர்தல் வரும் போது முத­ல­மைச்சர் பத­வியை இரா­ஜி­னாமா செய்யக் காத்­தி­ருக்­கிறேன். அப்­போது தமிழர் ஒருவர் முத­ல­மைச்­ச­ராக வரும் வாய்ப்பும் ஏற்­ப­டு­மென தயா­ கமகே கூறி­ய­போது அப்­போது எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்த தண்­டா­யுத பாணி இவ்­வாறு கூறினார்.

சிறு­பான்மை இன­மா­கிய முஸ்லிம் மக்­களை புறம் தள்­ளி­விட்டு பேரி­ன­வாத கட்­சி­க­ளான உங்­க­ளோடு சேர்ந்து நாம் கிழக்கில் ஆட்சி அமைக்கத் தயா­ரா­க­வில்லை. முத­ல­மைச்சர் பதவி, மந்­தி­ரிப்­ப­த­வி­யென்­பன எங்­க­ளது நோக்­க­மு­மல்ல. கிழக்கு தமிழ்– முஸ்லிம் உற­வு­க­ளோடு வளர்க்­கப்­ப­ட­வேண்­டி­யது எனக் கூறி வந்த வாய்ப்பை உதறித் தள்­ளி­னார்கள். தயா­ க­மகே கேட்டுக் கொண்­டது போல் ஆத­ரவு வழங்­கப்­பட்­டி­ருக்­கு­மாயின் நிலை­மைகள் மாறி­யி­ருக்கும். இவ்­வாறு பெருந்தன்மையோடு நடந்து கொள்பவர்கள் மீது, நீதியாகவும் நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்பதே கிழக்கு தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பாகும்.

கிழக்கு மாகாண சபை அடுத்த தேர்­த­லுக்கு தம்மை ஆயத்­தப்­ப­டுத்த வேண்­டிய தேவை அவ­ச­ர­மாக உரு­வாகி வரு­கி­றது. இவ்­வே­ளையில் தான் தமிழ்த் தரப்­பினர் எல்­லோரும் ஒன்­றி­ணைந்து தமிழர் ஒரு­வரை மாகாண முத­ல­மைச்­ச­ராகக் கொண்­டு­வர வேண்­டு­மென்ற கருத்தை முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், கிழக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மா­கிய கோவிந்தன் கரு­ணா­கரம் கூறி­யுள்ளார். இக்­க­ருத்தை வழி­மொ­ழி­வது போல் இன்னும் பல தமிழ்த் தலை­வர்கள் கூறிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இவை­பற்றி யாரும் எதிர்வு கூறவும் முடி­யாது, முடிவைக் காணவும் முடி­யாது.

 

எவ்­வா­றி­ருந்த போதிலும் இன்­றைய சூழலில் கிழக்கு தமிழ் மக்கள் விரக்­தி­யு­டனும், வெறுப்­பு­ட­னுமே மாகாண சபை நிர்­வா­கத்­தையும், போக்­கையும் நுகர்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள் என்ற உண்மை நிலையை யாரும் குறை கூற முடி­யாது. முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அண்­மையில் ஒரு செய்­தியைத் தெரி­வித்­தி­ருந்தார். கிழக்கில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து செயற்­ப­ட­வேண்­டு­மென்ற தீர்க்­க­மான கருத்தை வெளி­யிட்­டி­ருந்தார். எல்­லா­வற்­றையும் எல்லாத் தலைவர்களும் அனுசரித்தும், ஆராய்ந்தும் நடப்பதே அறிவுபூர்வமான செயலாகும். 

– திருமலை நவம் –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-09#page-2

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் அதிகம் கண் கெட்ட பின்னரே சூரிய நமஸ்க்காரம் செய்வ்வது  இனியென்ன அடுத்த திட்டத்திற்கு அரசியல் வாதிகள் தயாராகிவிட்டார்கள் தேர்த்தல் நாடகம் வந்தால் உசுப்பேற்றம் மீண்டும் பழய கிழவி கதவை தொறடி என்ற நிலைப்பாடுதான்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.