Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் சகோதரர் லால் சிறிசேன காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்

Featured Replies

ஜனாதிபதியின் சகோதரர் லால் சிறிசேன காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்

பொலனறுவையில் இன்று    இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.  இன்று அதிகாலை இரு சகோதரர்கள்   பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, அதி சொகுசு வாகனம் ஒன்று  மோதி ஏற்பட்ட விபத்தில்     இருவர் உயிரிழந்திருந்தனர்.

இது குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில்  ஜனாதிபதியின்    சகோதரர் லால் சிறிசேன காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விபத்தினை ஏற்படுத்தி  வாகனத்தை தானே செலுத்தியதாக ஒப்புக்கொண்ட அவரை காவல்துறையினா்  தடுத்து வைக்கப்பட்டு   விசாரணைகள் மேற்கொள்கின்றனா்.

http://globaltamilnews.net/archives/40430

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஜனாதிபதியின் சகோதரருக்கு விளக்கமறியல்
 
பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர்களில் ஒருவரான நந்தசிறி பக்னரத்ண சிறிசேனவை, நாளை (11) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பொலன்னறுவை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பொலன்னறுவை, அதுமல்பிட்டியவில், கப் ரக வாகனமொன்றும் மோட்டார் சைக்களிளொன்றும் மோதிக்கொண்டதில், இருவர் உயிரிழந்தனர்.

நேற்று (09) காலை இடம்பெற்ற இந்த விபத்தின்போது படுகாயமடைந்த, மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்து வந்த 44 வயதுடைய சாரதி, பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததோடு, 59 வயதுடைய மோட்டார் சைக்களில் ஓட்டுநர், நேற்று மாலை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்தை ஏற்படுத்திய கப் ரக வாகனம், சம்பவம் இடம்பெற்ற இடத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்ததாகவும் எனினும் பின்னர், கப் ரக வாகனத்தின் சாரதி, பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஜனாதிபதியின்-சகோதரருக்கு-விளக்கமறியல்/175-203468

  • தொடங்கியவர்

சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­துங்­கள் – கடிந்து கொண்­டார் மைத்­திரி

சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­துங்­கள் – கடிந்து கொண்­டார் மைத்­திரி
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் சகோ­த­ரர் நேற்று முன்­தி­னம் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

விபத்தை ஏற்­ப­டுத்தி இரு­வர் உயி­ரி­ழக்க கார­ண­மாக இருந்த குற்­றச்­சாட்­டி­ லேயே அவர் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்.

அவ­ரைக் கைது செய்­வ­தற்கு முன்­னர், அர­சி­யல்­வாதி ஒரு­வர், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் அலை­பேசி ஊடா­கத் தொடர்பு கொண்­டுள்­ளார்.

விபத்­து­டன் உங்­கள் தம்பி தொடர்­பு­பட்­டுள்­ளார். நாங்­கள் என்ன செய்ய என்று அவ­ரி­டம் கேட்­டுள்­ளார்.

அதற்கு அரச தலை­வர், அதை ஏன் என்­னி­டம் கேட்­கி­றீர்­கள் ? இனி­மேல் இப்­ப­டி­யான விட­யங்­க­ளுக்கு என்­னைத் தொடர்­பு­கொள்ள வேண்­டாம்.

சட்­டம் ஒழுங்­கின்­படி உங்­கள் கட­மை­யைச் செய்­யுங்­கள், என்று கூறி அலை­பே­சி­யைத் துண்­டித்து விட்­டார் என்று அரச தலை­வர் அலு­வ­லக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

http://newuthayan.com/story/27822.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் சகோ­த­ரர் நேற்று முன்­தி­னம் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

விபத்தை ஏற்­ப­டுத்தி இரு­வர் உயி­ரி­ழக்க கார­ண­மாக இருந்த குற்­றச்­சாட்­டி­ லேயே அவர் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்.

அவ­ரைக் கைது செய்­வ­தற்கு முன்­னர், அர­சி­யல்­வாதி ஒரு­வர், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் அலை­பேசி ஊடா­கத் தொடர்பு கொண்­டுள்­ளார்.

விபத்­து­டன் உங்­கள் தம்பி தொடர்­பு­பட்­டுள்­ளார். நாங்­கள் என்ன செய்ய என்று அவ­ரி­டம் கேட்­டுள்­ளார்.

அதற்கு அரச தலை­வர், அதை ஏன் என்­னி­டம் கேட்­கி­றீர்­கள் ? இனி­மேல் இப்­ப­டி­யான விட­யங்­க­ளுக்கு என்­னைத் தொடர்­பு­கொள்ள வேண்­டாம்.

அப்பிடியெண்டால் மைத்திரியின்ரை மோன்காரனை எப்பவோ எல்லோ உள்ளுக்கை தள்ளியிருக்கோணும்? tw_smiley:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.