Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையகத்தில் மொழியுரிமை

Featured Replies

மலையகத்தில் மொழியுரிமை

 

இலங்­கையில் தமிழும் அர­ச­க­ரும மொழி­யா­க­வுள்­ளது. எனினும், நடை­மு­றையில் தமிழ் மொழிக்­கு­ரிய இடம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றதா? என்­பது கேள்விக் குறி­யா­கவே உள்­ளது. குறிப்­பாக, தமிழ் மக்கள் செறிந்து வாழும் மலை­யகப் பகு­தி­களில் அரச அலு­வ­ல­கங்­களில் தமிழ்­மொழி மூல­மாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதில் பல்­வேறு சிர­மங்கள் காணப்­ப­டு­கின்­றன. தமிழ் ஏட்­ட­ளவில் அர­ச ­க­ரும மொழி­யாக இருந்து வரு­வ­த­னையே அவ­தா­னிக்கக் கூடி­­ய­தாக உள்­ளது. இந்­நிலை மாற்­றப்­பட்டு மலை­யக மக்கள் தமிழில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள இட­ம­ளிக்­கப்­பட வேண்டும் என்று மலை­யக புத்­தி­ஜீ­விகள் கோரிக்கை விடுத்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாக உள்­ளது.

மொழி என்­பது மனி­தனின் கண்­டு­பி­டிப்­பு­களுள் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கின்­றது. கருத்து பரி­மாற்­றங்­க­ளுக்கு கை கொடுப்­ப­தோடு மனி­தர்­க­ளி­டையே தொடர்­பு­களை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் மொழி உந்து சக்­தி­யாக அமை­கின்­றது. உலகில் பல்­வேறு மொழிகள் காணப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொரு மொழிக்கும் ஒவ்­வொரு தனித்­து­வமும், மதிப்பும் காணப்­ப­டு­கின்­றது. உல­கி­லுள்ள பல மொழிகள் இப்­போது வழக்­கி­லுள்­ள­தையும் இங்கு குறிப்­பிட்­டாதல் வேண்டும். ஒவ்­வொரு மதத்­திற்கும் நாம் மதிப்­ப­ளிப்­பதை போன்று ஒவ்­வொரு மொழி­யையும் நாம் மதிக்க கற்று கொள்­ளுதல் வேண்டும். மொழியின் ஊடாக புரிந்­து­ணர்வு வலுப்­பெ­று­கின்­றது. தொடர்­பாடல் மேலோங்­கு­கின்­றது. ஒருவன் பல மொழி­க­ளையும் தெரிந்து வைத்­தி­ருப்­ப­தா­னது பல நன்­மை­க­ளையும் அவ­னுக்கு பெற்­றுக் ­கொ­டுப்­ப­தாக அமையும் என்று புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்­து­கின்­றனர். பல்­லின மக்கள் வாழ்­கின்ற ஒரு நாட்டில் ஒவ்­வொரு இனத்­த­வரி­னதும் மொழி உரி­மை­யா­னது உரி­ய­வாறு பாது­காக்­கப்­பட வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும். இது இல்­லா­த­போது முரண்­பாட்டுச் சூழ்­நி­லைகள் மேலோங்­கு­வ­தற்கு மொழி அடிப்­ப­டை­யாக அமைந்து விடும் என்­ப­த­னையும் மறுப்­ப­தற்­கில்லை.

இலங்­கையின் கடந்­த­ கால முரண்­பாட்டு சூழ்­நி­லை­க­ளிலும் மொழியின் ஆதிக்கம் என்­பது அதி­க­மா­கவே இருந்­தது என்­ப­தனை யாவரும் அறிவர். இந்த முரண்­பாட்டு சூழ்­நி­லை­களால் எமது மக்கள் அதி­க­மான துன்ப துய­ரங்­க­ளையும் அனு­ப­வித்து விட்­டனர். இன்னும் அனு­ப­வித்து கொண்டும் இருக்­கின்­றனர். மொழியின் மகத்­து­வத்­தினை யாவரும் புரிந்­து­ கொள்ள வேண்டும். அதற்கு உரிய இடத்­தினை வழங்­கவும் முன்­வ­ருதல் வேண்டும். மொழி­களின் வரி­சையில் தமி­ழுக்­கென்று தனிச்­சி­றப்­புகள் பல உள்­ளன. உலக மொழி ஆராய்ச்­சி­யா­ளர்­களில் சிலர் தமிழ் மொழியே உலகின் முதல் ­மொழி என்று கூறி­யுள்­ளனர். பெயர், சிறப்பு, எழுத்து சிறப்பு, சொற்­ சி­றப்பு, தொன்­மைச்­சி­றப்பு, ஒலிச்­சி­றப்பு, எளி­மை சி­றப்பு என்று பல்­வேறு சிறப்­பு­க­ளையும் கொண்­ட­தாக தமிழ்­மொழி விளங்­கு­கின்­றது. தமிழின் சிறப்­பையே தம் வாழ்வின் சிறப்­பாகக் கருதி, அல்லும் பகலும் அய­ராது உழைத்­த­வர்­களில் முத்­த­மிழ்க்­கா­வலர் கி.ஆ.பெ.விசு­வ­நாதம் முதன்­மை­யா­ன­வ­ராக கரு­தப்­ப­டு­கின்றார்.

கல்வி மற்றும் அர­சாங்கம் என்­ப­வற்றில் தேசிய மொழிகள் இரண்­டி­னதும் (சுய­பாஷை) பயன்­பாட்­டிற்­கான ஒரு விவாதம் கால­னித்­து­வத்­துக்கு எதி­ரான தமிழ் அடிப்­படை மாற்­றத்­தினை வேண்­டு­ப­வர்கள் ஒன்­றி­ணைந்த யாழ்ப்­பாண இளைஞர் காங்­கி­ர­ஸி­னா­லேயே எழுப்­பப்­பட்­ட­தாக நூல் ஒன்றில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. காங்­கிரஸ் பல்­லி­னத்­துவம் மற்றும் மத ­சார்­பற்­ற­து­மான சமு­தாய நீதி உணர்வு கொண்ட இலங்கை தேசி­ய­ வா­தத்தை ஆத­ரித்­துள்­ளது. இலங்கை இளைஞர் காங்­கிரஸ் 1924இல் அதன் முத­லா­வது வரு­டாந்த கூட்­டத்தில் சிங்­கள பாட­சா­லை­களில் தமிழை கற்­பித்தல் மற்றும் அதே­போன்று தமிழ் பாட­சா­லை­களில் சிங்­க­ளத்தை கற்­பித்தல் என்­ப­வற்றின் மூலம் கல்­வியின் இரு­மொழி தன்­மையை முன்­மொ­ழிந்­தது. துர­திஷ்­ட­மாக யாழ்ப்­பாண இளைஞர் காங்­கி­ரஸின் அர­சியல் செல்­வாக்கு மற்றும் கருத்­தி­யல்கள் என்­பன 1930இன் நடுப்­ப­கு­தி­களில் டொனமூர் அர­சியல் திட்ட காலப் பகு­தியின் பின்­னி­ருந்த பழை­மை ­வாத தமிழ் காங்­கி­ர­ஸினால் மழுங்­க­டிக்­கப்­பட, சுய­பா­ஷைக்­கான கோரிக்கை சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளுடன் இணைந்­த­தொன்­றா­கி­யது. இந்த கால­கட்­டத்தில் தமிழ் அர­சியல் தலை­வர்கள் பிர­தான கோரிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு சிங்­க­ள­வர்­களை அனு­ம­திப்­பதில் திருப்­தி­ய­டைந்­த­துடன் சிங்­க­ள­வர்­க­ளுக்கு என்­னென்ன நன்­மைகள் கிடைக்­கின்­ற­னவோ அவற்றை தமிழ் மொழிக்கும் வேண்­டி ­கொள்­வ­தோடு தங்கள் பங்கை மட்­டுப்­பத்தி கொண்­ட­தா­கவும் செய்­திகள் வலி­யு­றுத்­து­கின்­றன.

சுய­பாஷை கோஷம் பின்னர் ‘தனிச் சிங்­கள’ இயக்­க­மாக உரு­மாறி போன­மையும் நினைவு கூரத்­தக்க ஒரு விட­ய­மாக உள்­ளது.

1956இன் தனிச் சிங்­கள சட்டம்

1950 களில் முன்­னணி பிரச்­சி­னை­யா­கிய தமிழர் சிங்­க­ள­வ­ரு­டைய மொழி உரிமை பிரச்­சி­னை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே எதிர்ப்­புகள் வளர்ந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 1944 இல் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன சிங்­களம் சில வருட காலத்­துக்குள் அர­ச ­க­ரும மொழி­யாக்­கப்­பட வேண்டும் என்று தெரி­வித்­தி­ருந்தார். 1951 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கா ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­லி­ருந்து பிரிந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்­சி­யினை நிறு­வினார். பண்­டா­ர­நா­யக்­காவின் முதற்­கட்சி அறிக்கை பின்­வ­ரு­மாறு அமைந்­தி­ருந்­தது. சிங்­க­ளத்­தையும், தமி­ழையும் உட­ன­டி­யாக அர­ச ­க­ரும மொழி­யாக்க வேண்டும். அப்­பொ­ழு­துதான் இந்­நாட்டு மக்கள் தமது சொந்த நாட்­டி­லேயே அந்­நி­ய­ராக இருக்கும் நிலை ஒழியும். சிங்­களம் மூலமும் தமிழ் மூலமும் கல்வி கற்றோர் இன்று வாழ்க்­கையின் கடை நிலையில் இருப்­ப­தற்கு முடிவு கட்­டலாம் என்று அந்த அறிக்கை அமைந்­தி­ருந்­தது. எனினும், முன்னர் சம அந்­தஸ்­துக்­காக வாதா­டிய பண்­டா­ர­நா­யக்கா பின்னர் ‘சிங்­களம் மட்டும்’ என்ற நிலைக்கு வலுச்­சேர்த்தார். தனிச்­சிங்­கள சட்டம் பாதக விளை­வு­களை தரும் என்று பலரும் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தனர். மொழி­களின் சம உரி­மையை ஏற்­றுக்­கொள்­ளுதல் எமது நாட்டின் சுதந்­தி­ரத்­திற்கும் அதன் கூட்டு ஒற்­று­மைக்கும் வழி­யாகும் என்ற நிலைப்­பாட்டில் சிலர் இருந்­தனர்.

இரத்தம் வடியும் துண்­டிக்­கப்­பட்ட இரு சிறு அர­சுகள் ஒரு அர­சி­லி­ருந்து தோன்­றக்­ கூடும். அண்­மையில் வெளி­யே­றிய ஏகா­தி­பத்­தி­ய­வா­திகள் மீண்டும் எம்மை ஏப்­பம்­விட ஏது­வா­கலாம் என்றும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும், எல்­லா­வற்­றையும் தாண்டி ‘தனிச்­சிங்­கள சட்டம்’ உருப்­பெற்­றது. ‘சிங்­கள மொழியே இலங்­கையின் ஒரே அர­ச­ க­ரும மொழி­யாகும்’ என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு 1956 இல் அரச கரும மொழிச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இச்­சட்டம் தமிழ் அல்­லது ஆங்­கில மொழிகள் பற்றி வெளிப்­ப­டை­யாக எத­னையும் குறிப்­பி­ட­வில்லை. ஆயினும், உத்­தி­யோ­கபூர்வ தேவை­க­ளுக்­காக டிசம்பர் 31, 1960 வரை ஆங்­கில மொழியின் பாவ­னையை மறை­மு­க­மாக அனு­ம­தித்­தது. வெறு­மனே மூன்று பகு­தி­களை மட்டும் கொண்­டி­ருந்த இச் ­சட்­ட­வாக்கம் அதன் சுருக்­க­மான தன்­மைக்கு நேரெ­தி­ரான வர­லாற்று முக்­கி­யத்­துவம் கொண்­ட­தாக இருந்­த­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

1956 ஆம் ஆண்டின் தனிச் சிங்­கள சட்டம் தொடர்பில் கருத்துத் தெரி­வித்­தி­ருந்த அ.அமிர்­த­லிங்­கம், ‘தனிச் சிங்­களம்’ எனும் கொள்கை இந்த நாட்டின் பொது வாழ்க்­கையில் தமிழ் மொழியை அதற்­கு­ரிய ஸ்தானத்தில் இருந்து வெறு­மனே விலக்கி வைப்­பதை மட்டும் கரு­த­வில்லை. ஆனால், அது இந்த நாட்டின் தமிழ் மொழி பேசும் மக்­களை இலங்­கையின் அர­சியல், பொரு­ளா­தாரம் மற்றும் கலா­சார வாழ்க்கை என்­ப­வற்றில் இருந்தே வெளியே தள்­ளி­வைத்­துள்­ளது என்று (1964) கருத்து வெளி­யிட்­டி­ருந்தார். உண்­மையில் தமிழ் மக்­களை எல்லா துறை­க­ளிலும் ஓரம் கட்டும் நோக்­கி­லேயே இன­வா­திகள் ‘தனிச் சிங்­கள’ சட்­டத்­திற்கு வலு­ச்சேர்த்­தி­ருந்­தனர்.

மொழி ரீதி­யான பார­பட்­சமே வடக்கு, கிழக்கு தமிழ் சமூ­கத்தின் சுய­நிர்­ணய கோரிக்­கைக்கு பங்­க­ளிக்­கின்ற முக்­கி­ய­மான குறை­பா­டென்­பது பொது­வாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட ஒன்­றாகும். உதா­ர­ண­மாக 1976ஆம் ஆண்டில் கொண்­டு­வ­ரப்­பட்ட வட்­டுக்­கோட்டை தீர்­மானம் தமிழர் விடு­தலை கூட்­ட­ணியை ஆரம்­பித்து, அதனை இறை­மை­யுள்ள சோஷ­லிச தமி­ழீழ அர­சொன்­றுக்­கான பிரி­வி­னை­வாதப் போராட்­டத்தில் இணைத்­த­துடன், தனிச் சிங்­களக் கொள்கை தமி­ழர்கள் மீது ‘தாழ்வு முத்­திரை’ ஒன்று குத்­து­வ­தாக தனி­யாக குறிப்­பிட்டுக் காட்­டி­யது என்­கிறார் பா.ஸ்கந்­த­குமார். 1956 தனிச் சிங்­கள சட்டம் உரு­வாக்­கப்­பட்டு, அது உணர்­வு­பூர்­வ­மாக அமு­லாக்­கப்­பட்­டது. சிங்­கள மொழி மூலம் அரச சேவையில் இணை­யா­த­வர்கள் சிங்­க­ளத்தை படிக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டனர். சிறு­பான்­மை­யி­னரை வலிந்து சிங்­கள மொழியை ஏற்­கும்­படி நிர்ப்­பந்­திப்­பது இனக் கல­வ­ரத்­துக்கு வழி­வ­குக்கும் என்ற லெஸ்­லியின் வார்த்­தைகள் இங்கு காற்றில் பறக்­க­வி­டப்­பட்­டன. ஒரு குறிப்­பிட்ட கால அவ­கா­சத்துள் சிங்­கள மொழியில் தேர்ச்­சியை பெறா­த­போது (தேவை­யான மட்­டத்­திற்கு) சேவையில் இருந்து நீக்­கப்­பட்­டனர். தமிழ் மொழியில் கல்­வியை பெற்­ற­வர்கள் சிங்­கள மொழியில் பரிச்­ச­ய­மின்மை அல்­லது அதனை கற்க மறுத்­தமை கார­ண­மாக சிவில் சேவை­க­ளுக்கு விண்­ணப்­பிக்க ஊக்கம் செலுத்­தாது இருந்­த­மையும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும். இதனால் அரச சேவையில் தமி­ழர்­களின் பிர­தி­நி­தித்­துவம் படிப்­ப­டி­யாக வீழ்ச்சி கண்­டது.

குறிப்­பாக, 1956 இல் நிர்­வாக சேவையில் தமி­ழர்­களின் பிர­தி­நி­தித்­துவம் 30 சத­வீ­த­மாக இருந்­தது. 1965 இல் இது இரு­பது வீத­மாக வீழ்ச்சி கண்­டது. 1970 இல் ஐந்து வீத­மாக மேலும் வீழ்ச்சி கண்­டது. இது­போன்றே எழு­து­வி­னைஞர் சேவையில் 1956 இல் 50 வீத­மாக இருந்த தமிழர் பிர­தி­நி­தித்­துவம் 1965 இல் 30 வீத­மாக வீழ்ச்சி கண்­டது. 1970 இல் இது ஐந்து வீத­மாக இருந்­தது. தனிச் சிங்­கள சட்டம் இப்­ப­டி­யெல்லாம் தமி­ழர்­களை ஓரம் கட்­டி­யது. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் நிர்­வாக மொழி­யாக கணி­ச­மான அள­வுக்கு தமிழ் மொழி­யையும் பயன்­ப­டுத்­து­வதை அனு­ம­திக்கும் தமிழ் மொழி விசேட விதிகள் சட்­ட­மூலம் 1958 இல் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இச்­சட்டம் சிங்­கள தேசி­ய­ வா­தி­களால் கடு­மை­யாக எதிர்க்­கப்­பட்­டதால் வலு­வற்­று­போ­னது.

1972, 1978 அர­சி­ய­ல­மைப்பு

1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­புகள் சிங்­கள மொழி­யையே முதன்­மைப்­ப­டுத்தி இருந்­தன. 72 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பு சிங்­கள மொழி அர­ச­ க­ரும மொழி என்று குறிப்­பிட்­டது. இதற்கு முன்னர் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் சிங்­கள மொழி அர­ச­ க­ரும மொழி­யாக இருந்­தாலும் அது பாரா­ளு­மன்ற சட்­ட­மா­கவே இருந்து வந்­தது. இந்த அர­சி­ய­ல­மைப்பின் மூலம் முதன் முத­லாக அதற்கு அர­சி­ய­ல­மைப்பு அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது. அதே­வேளை, தமிழ் ­மொ­ழியின் உப­யோகம் 1958 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க தமிழ்­மொழி விசேட ஏற்­பா­டுகள் சட்­டத்­திற்கு இணங்க இருக்கும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால், இதனை அர­சி­ய­ல­மைப்பின் ஒரு ஏற்­பா­டாக எந்த வகை­யிலும் பொருள் கொள்­ளக்­கூ­டாது என்றும் கூறப்­பட்­டது. இந்த நிலை­யா­னது தமிழ் மொழிக்­கு­ரிய அந்­தஸ்­தினை அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக வழங்­கு­வ­தற்கு ஆட்­சி­யா­ளர்கள் விரும்­ப­வில்லை என்­ப­த­னையே சுட்­டிக்­காட்­டு­வ­தாக புத்தி ஜீவிகள் குறிப்­பி­டு­கின்­றனர்.

1978 ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்பில் ஆரம்­பத்தில் சிங்­கள மொழி அர­ச ­க­ரும மொழி­யா­கவும் சிங்­க­ளமும் தமிழும் இலங்­கையின் தேசிய மொழி­யா­கவும் இருக்கும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது. எனினும் பின்னர் 1987 இல் கைச்­சாத்­தி­டப்­பட்ட இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்­திற்கு அமைய அர­சியல் அமைப்பில் கொண்டு வரப்­பட்ட 1 ஆவது திருத்­தத்­திற்­க­மைய சிங்­க­ளமும் தமிழும் இலங்­கையின் அர­ச­ க­ரும மொழி­யா­கவும் ஆங்­கிலம் இலங்­கையின் இணைப்பு மொழி­யா­கவும் இருக்கும் என்றும் கூறப்­பட்­டது. மேலும் பாரா­ளு­மன்ற சட்­டத்தின் மூலம் இவ் ஏற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்ள வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தப்­பட்­டது. கல்வி மொழியை பொறுத்­த­வரை இலங்கை மக்கள் ஏதா­வது ஒரு தேசிய மொழியில் கல்­வி­யினை மேற்­கொள்­ளலாம் என்று கூறப்­பட்­டது. எனினும் தேசிய மொழிகள் அல்­லாத ஒரு மொழியை கல்வி மொழி­யாக கொண்­டி­ருக்­கின்ற ஓர் உயர் கல்வி நிறு­வ­னத்­திற்கு இது ஏற்­பு­டை­யது ஆகாது எனவும் கூறப்­பட்­டது.

ஏட்­ட­ளவில் தமிழ்­மொழி உரிமை

இந்த நாட்டில் தமிழும் அர­ச ­க­ரும மொழி­யாக உள்­ளது என்று நினைத்து நாம் பெரு­மைப்­பட்டு கொள்ள முடியும். இது உண்­மையில் வர­வேற்­கத்­தக்­கதும் ஆகும். ஆனாலும், தமிழ்­மொழி அர­ச ­க­ரும மொழி­யாக இருந்தும் நடை­மு­றையில் சாத்­தி­யப்­பாடு என்­பது ஏனோ இன்னும் குறை­வா­ன­தா­கவே இருந்து வரு­கின்­றது. இதற்கு பல்­வேறு கார­ணங்கள் கூறப்­ப­டு­கின்­றன. பெரும்­பா­லான அலு­வ­லர்கள் தமிழ் மக்­களின் மொழி ரீதி­யான உரி­மை­களை அங்­கீ­க­ரித்து மதிப்­ப­ளிக்க கரி­சனை இல்­லா­துள்­ளனர். இது ஒரு வருந்­தத்­தக்க விட­ய­மாகும். தமிழ் மொழி 1987 இல் அரச கரும மொழி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட போதும் இம் ­மொ­ழியை ஒரு அர­ச­க­ரும மொழி­யாக அமுல்­ப­டுத்­து­வதில் ஈடு­பா­டின்மை காணப்­ப­டு­வதும் பெரும் குறை­பா­டாகும் என்று புத்தி ஜீவிகள் சுட்­டிக்­காட்டி இருக்­கின்­றனர். ஒதுக்­கப்­பட்ட நிதி மற்றும் ஆளணி நிலை­மைகள் போது­மா­ன­வை­யாக இல்­லாத போதிலும் அரச கரும மொழிக் கொள்­கையை அமுல்­ப­டுத்­து­வ­தற்­காக சம்­பந்­தப்­பட்ட அலு­வ­ல­கங்­களால் அவை கேட்டுப் பெறப்­ப­ட­வில்லை என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­ நி­லை­மை­யா­னது தமிழ் மொழி அமுல்­ப­டுத்­தலை உறு­திப்­ப­டுத்­து­வ­தி­லான சம்­பந்­தப்­பட்­ட­வர்­களின் ஆர்­வ­மின்மை மற்றும் பற்­று­று­தி­யின்மை போன்­ற­வற்­றுக்கு பங்­க­ளிப்பு செலுத்­து­வ­தாக இருப்­ப­தா­கவும் என். செல்­வ­கு­மாரன் போன்­ற­வர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

அர­ச­க­ரும மொழிகள் ஆணைக்­குழு தமது அறிக்­கையின் தமிழ் மொழி அமு­லாக்கல் நிலை­மைகள் குறித்து பின்­வ­ரு­மாறு வலி­யு­றுத்தி இருந்­தது. இரண்டு அரச கரும மொழி­க­ளையும் நிர்­வாக மொழி­க­ளாக பயன்­ப­டுத்­து­வ­தற்கு பணிக்­கப்­பட்ட பிர­தேச செய­லாளர் பிரி­வுகள் தமிழ்­மொழி பேசு­வோர்­க­ளுக்கு இது­வரை திருப்­தி­யா­னதோர் சேவையை வழங்க தவ­றி­யுள்­ளது. குறிப்­பிட்ட ஓர் பிர­தேச செய­லாளர் பிரிவில் அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான வச­தி­களை வழங்­காது சிங்­களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்­டு­மொ­ழி­க­ளையும் நிர்­வாக மொழி­க­ளாக பயன்­ப­டுத்­துதல் வேண்­மென வெறு­மனே பணிப்­பது பய­னற்­றது. . இந்த திருப்­தி­யற்ற நிலைமை விரைவில் சீர் செய்­யப்­பட வேண்­டிய தேவையைக் கொண்­டுள்­ளது என்று ஏற்­க­னவே அர­ச­க­ரும மொழிகள் திணைக்­களம் வலி­யு­றுத்தி இருந்­தது. இதே­வே­ளையில் அர­சாங்கம் நிர்­வாக மொழி­யாக பயன்­ப­டுத்­தப்­படும் பகு­தி­களில் தமிழ் மொழியில் தொடர்­பா­டல்­களைப் பெறவும் மற்றும் தொடர்­பா­டு­வ­தற்கும் மற்றும் அலு­வல்­களை மேற்­கொள்­வ­தற்­கு­மான வச­தி­களை அப்­ப­கு­தி­களில் உள்ள பிர­ஜை­க­ளிற்கு வழங்­கு­வ­தற்கு பொதுவில் தவ­றி­யுள்­ளது. அலு­வலர் ஒரு­வ­ரினால் நிறை­வேற்­றப்­பட்டு வழங்­கப்­படும் ஆவ­ணங்­களின் தமிழ் மொழிப்­பெ­யர்ப்­பு­களை பெறு­வ­தற்கு போது­மான வச­திகள் இல்லை. தமிழ் நிர்­வாக மொழி­யாக இருக்கும் பகு­தி­களில் இதே சேவை­களை சிங்­கள மொழியில் பெறு­வ­தற்கும் இடர்­பா­டுகள் எதிர்­கொள்­ளப்­ப­டு­வ­தாக கருத்­துகள் ஏற்­க­னவே முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­பதும் குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும்.

தமிழ் மொழி அமு­லாக்கம் குறித்து மேலி­டத்தில் இருந்து வரும் கடி­தங்­களை சில அதி­கா­ரிகள் அக்­கறை செலுத்­தாது வெறு­மனே கிடப்பில் போடு­கின்­றனர். வெறு­மனே சுற்று நிருப கோவை­களில் கோவைப்­ப­டுத்தி வைக்­கின்­றனர். இவ்­வி­டயம் நோக்­கத்­தக்­க­தாகும். சுற்று நிரு­பத்தில் உள்ள தமிழ் மொழி அமு­லாக்­க­லுக்கு வலுச் சேர்க்கும் விட­யங்­களை உரி­ய­வாறு அமுல்­ப­டுத்­தா­ விட்டால் அதி­கா­ரி­க­ளுக்கு தண்­டனை வழங்கும் செயற்­பாடு முன்­வைக்­கப்­ப­டுதல் வேண்டும். இவ்­வாறு தண்­டனை வழங்கும் செயற்­பா­டுகள் முன்­வைக்­கப்­ப­டா­மையின் கார­ண­மாக ஏனோ தானோ மன­பான்­மையில் அதி­கா­ரிகள் நடந்து கொள்­வ­தனை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. பொறுப்­பின்றி அதி­கா­ரிகள் செயற்­ப­டு­கின்­றனர். எனவே சுற்­று­நி­ரு­பத்தை மீறு­கின்ற அதி­கா­ரி­க­ளுக்கு தண்­ட­னைகள் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும் என்று கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருப்­ப­த­னையும் எம்மால் அவ­தா­னிக்கக் கூடி­யதாய் உள்­ளது.

தமிழும் மலை­ய­கமும்

மலை­யக பகு­தி­களில் தமிழ் மக்கள் அதி­க­மாக வாழ்­கின்­றனர். பெருந்­தோட்­டங்­களை பலர் வாழ்­வி­ட­மா­கவும் கொண்­டுள்­ளனர். மலை­ய­கத்தில் அரச மற்றும் தனியார் அலு­வ­ல­கங்கள் பல­வுள்­ளன. எனினும், இங்கு தமிழ்­மொ­ழியின் அமு­லாக்கல் நடை­முறைப் பயன்­பாடு என்­பது எவ்­வா­றுள்­ளது? என்று நோக்கும் போது நிலைமை இன்னும் திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை. அலு­வ­லங்­க­ளுக்கு செல்லும் தமிழ் மக்கள் தமிழில் கரு­ம­மாற்ற முடி­யாத ஒரு நிலை­மையே இன்றும் காணப்­ப­டு­கின்­றது. அலு­வ­ல­கங்­க­ளுக்கு செல்லும் எம்­மக்கள் சிங்­க­ள­மொழி புரி­யாது விழித்துக் கொண்டு உரிய கரு­மங்­களை நிறை­வேற்ற முடி­யாது திக்கு முக்­கா­டு­கின்­றனர். தமிழ் மற்றும் சிங்­களம் என்ற இரு­மொழி பரிச்­சயம் மிக்க தொடர்­பாடல் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் பல இடங்­களில் காண முடி­வ­தில்லை. இதன் கார­ண­மாக பல்­வேறு சிர­மங்­க­ளுக்கும் மத்­தியில் மலை­யக தமிழ் மக்கள் அலு­வ­ல­கங்­க­ளுக்குச் சென்று பணி­களை நிறைவு செய்து கொண்டு வரு­கின்­றனர்.

அரச அலு­வ­ல­கங்­களில் இருந்து வரும் கடி­தங்கள் மற்றும் சுற்று நிரு­பங்கள் என்­பன பல சந்­தர்ப்­பங்­களில் தனிச் சிங்­கள மொழி­யி­லேயே காணப்­ப­டு­வதும் தெரிந்த விட­ய­மாகும். கடி­ன­மான சிங்­கள சொற்­களைக் கொண்­ட­தாக இக்­க­டி­தங்­களும் சுற்று நிரு­பங்­களும் சில சந்­தர்ப்­பங்­களில் அமைந்து விடு­கின்­றன. இந்­நி­லை­யா­னது தமிழ் அதி­கா­ரிகள் தரப்பில் மொழி ரீதி­யான சிக்­கல்­க­ளுக்கு இட்டுச் செல்­கின்­றது. சிங்­கள அதி­கா­ரி­க­ளிடம் தமிழ் அதி­கா­ரிகள் கடி­தங்­க­ளையும் சுற்று நிரு­பங்­க­ளையும் தூக்கிக் கொண்டு விளக்கம் கேட்டு அலைந்து திரியும் இக்­கட்­டான நிலை­மையும் இதனால் ஏற்­ப­டு­கின்­றது.

இதே­வேளை ஆசி­ரி­யர்­க­ளுக்­கென்று நடாத்­தப்­படும் கருத்­த­ரங்­குகள், அதிபர் கூட்­டங்கள் உள்­ளிட்ட மேலும் பல நிகழ்­வுகள் சில இடங்­களில் தனிச்­சிங்­க­ளத்­தி­லேயே நடாத்­தப்­ப­டு­வ­தாக ஏற்­க­னவே குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இதனால் அதி­பர்­களும், ஆசி­ரி­யர்­களும் உரிய விடயம் தொடர்பில் போதி­ய­ளவு விளக்­கத்­தினை பெற்­றுக்­கொள்­வ­தற்கு முடி­யாத நிலைக்கு உள்­ளா­கின்­றனர். இந்­நி­லை­மை­யா­னது பாட­சா­லையின் அபி­வி­ருத்தி, மாணவர் அபி­வி­ருத்தி போன்ற பல விட­யங்­க­ளிலும் தாக்­கத்­தினை உண்டு பண்­ணு­வ­தாக உள்­ள­மையும் தெரிந்த விட­ய­மாகும். சில சந்­தர்ப்­பங்­களில் சிங்­கள மொழிக்­கேற்ப தமிழ் மொழி பெயர்ப்பு சில வழங்­கப்­பட்­டாலும் அவைகள் எந்­த­ள­விற்கு பூர­ணத்­து­வம்­மிக்­க­தாக இருக்கும் என்று சிந்­திக்க வேண்­டியே இருக்­கின்­றது. தாய்­மொ­ழி­யி­லேயே நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இதுவே பய­னு­று­தி­மிக்­க­தாக அமையும்.

சில காரி­யா­ல­யங்­க­ளிலும், பேருந்­து­க­ளிலும் பெயர்ப்­ப­ல­கைகள் தனிச்­சிங்­கள மொழியிலேயே காணப்படுகின்றன. இதுவும் பாதக விளைவுகளையே ஏற்படுத்துவதாக அமையும். உரிய இடங்களுக்குச் செல்வது தொடர்பில் இதனால் பல சிக்கல்களும் ஏற்படும். பெரும்பாலும் அலுவலகங்களுக்குச் செல்லும் சில தமிழர்கள் வேலை இலகுவிற்காகவும், காரியத்தை சீக்கிரம் முடிப்பதற்காகவும் தனக்கு தெரிந்த அரைகுறை சிங்கள மொழியிலேயே கருமங்களை மேற்கொள்ள முனைகின்றனர். இது பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் போய்விடுகின்றது. இதனால் அலுவலகங்கள் தமிழ் மொழி அமுலாக்கல் தொடர்பாக உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியவதில்லை. இந்நிலையில் தமிழர்கள் தமிழிலேயே காரியமாற்ற முனைதல் வேண்டும். தமிழ் தெரிந்த உத்தியோகத்தர்களை பெற்றுக்கொள்ள ஒன்றிணைந்த அழுத்தத்தினை பிரயோகிக்கவும் வேண்டும். மலையக அரசியல் வாதிகள், புத்திஜீவிகள், அரசசார்பற்ற அமைப்புகள் போன்ற பல முக்கிய தரப்பினர்களின் ஒத்துழைப்பினையும் இதற்கென்று பெற்றுக்கொள்ள முடியும்.

சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்றவற்றை மட்டும் கருத்தில் கொண்டு தமிழ் உத்தியோகத்தர் சிலர் சிங்கள மொழியையும், சிங்கள உத்தியோகத்தர் சிலர் தமிழ் மொழியையும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சமூக ஒற்றுமை, புரிந்துணர்வு, அபிவிருத்தி என்பவற்றை வளர்த்தெடுக்கவும் மொழி ஆளுமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் மொழியுரிமைகளை அங்கீகரிப்பதற்கு உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையின் அவசியத்தை புத்திஜீவிகள் வலியுறுத்தி இருக்கின்றனர். இவ்விதமானதோர் நோக்கு அரசியலமைப்பு ஏற்பாடுகளை வடிவமைக்கும் போதும் மற்றும் அமுல்படுத்தலின் போதும் மனதிருப்பின் அது ஒவ்வொருவரினதும் மொழியுரிமைகளை மதிக்கவும், அவர்கள் நம் உரிமைகளை அனுபவிக்கவும் வழிவகுக்கும். மொழியுரிமைகளை அனுபவிப்பது நிர்வாக செளகரியங்கள் அல்லது அரசியல் சந்தர்ப்ப வாதங்கள் அல்லது அவற்றின் நன்மைகளில் தங்கி இருத்தல் கூடாது. பிரஜைகள் மற்றும் அவர்களது உரிமைகள் என்பன தேசியக் கொள்கையின் கருவாக இருப்பதுடன் கவனத்திற்குரியனவாகவும் இருத்தல் வேண்டும். நிர்வாக அமைப்புகளின் செளகரியம் இரண்டாம் பட்சமானது என்பதுடன் அது பிரஜைகளின் உரிமைகளை புறந்தள்ளுவதாக அமைதல் கூடாது என்றும் மேலும் வலியுறுத்தல்கள் இடம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

துரை­சாமி நட­ராஜா

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-09-09#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.