Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருத்து வீடும் பொருந்தாத கருத்துக்களும்... பொதுமக்கள் குழப்பத்தில்

Featured Replies

பொருத்து வீடும் பொருந்தாத கருத்துக்களும்... பொதுமக்கள் குழப்பத்தில்

பொருத்து வீடு தொடர்பில் பல்வேறு தரப்புக்களால் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் மீள்குடியேற்ற அமைச்சால், வடக்கு கிழக்கில் 60 ஆயிரம் பொருத்து வீடுகள் அமைக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது.

பொருத்து வீடும் பொருந்தாத கருத்துக்களும்... பொதுமக்கள் குழப்பத்தில்

குறித்த வீடுகள் 20 லட்சம் பெறுமதியில் நவீன வசதிகள் கொண்டு ஒரு வாரத்தில் அமைக்கப்படும் என தெரிவித்து, யாழ் உரும்பிராய் பகுதியில் மாதிரி வீடு ஒன்றும் அமைக்கப்பட்டது.

அத்துடன் நாட்டின் ஜனாதிபதியால் இந்த வீடு திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடவும் அனுமதிக்கப்பட்டது.

குறித்த வீடு வடக்கு காலநிலைக்கும் பொதுமக்களின் வாழ்க்கை முறைக்கும் உகந்தது இல்லை என பல்வேறு பட்ட தரப்பினர் தமது எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.

பொருத்து வீடும் பொருந்தாத கருத்துக்களும்... பொதுமக்கள் குழப்பத்தில்

எதிர்ப்புக்கள் பலமடைந்த வண்ணம் இருந்த காரணத்தினால் குறித்த வீடு அமைக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ஒரு தரப்பினரால் இந்த பொருத்து வீடு மக்களுக்கு உகந்தது இல்லை என பிரச்சாரங்களும், பொருத்து வீடு தான் இனி வரும் காலங்களில் கிடைக்கும் கல்வீடு இல்லை என அமைச்சின் தரப்பினரால் பிரச்சாரங்களும் விரைவாக ஏட்டிக்கு போட்டியாக இடம்பெற்றது.

பொருத்து வீடும் பொருந்தாத கருத்துக்களும்... பொதுமக்கள் குழப்பத்தில்

இந்த நிலையில், வீடுகளே இன்றி தகர கொட்டகைக்குள் மழை, வெயிலில் துன்பப்பட்ட மக்கள், தாம் நின்மதியாக உறங்குவதற்கு ஒரு இடம் கிடைத்தால் போதும் என தெரிவிக்கும் நிலையில் இருந்தார்கள், மேலும் தமக்கு வேண்டாம் என்பதை மறுக்கும் நிலையில் கூட தாம் தற்போது இல்லை என்றும் தமது கருத்தை தெரிவித்து வந்தனர்.

மக்களின் இயலாமை நிலையை கருத்தில் கொண்டு, பிரதேச செயலகங்கள் ஊடாக பொருத்து வீட்டுக்கு விண்ணப்பிக்கும் படிவங்கள் வழங்கப்பட்டன.

கல்வீடு இல்லை என்ற பயத்தில் பொருத்து வீடு சரி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வீடற்றவர்கள் விண்ணப்பித்தார்கள்.

பொருத்து வீடும் பொருந்தாத கருத்துக்களும்... பொதுமக்கள் குழப்பத்தில்

பொருத்து வீடு அமைக்கும் பணிகள் எந்த தடை வந்தாலும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரும் அமைச்சின் தரப்புக்களும் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதில் கூட்டமைப்பினர் பொருத்து வீட்டை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

பின்னர் சில மாதங்களில் அதை திரும்ப பெற்றனர் .

இந்த நிலையில் வடக்கு கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகள் அமைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ள காரணத்தினால், அந்த வீட்டுத்திட்டம், ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் என அரச அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் நிலைப்பாடுகளை உணர்ந்த அரச அதிகாரிகள், பொருத்து வீட்டுக்கும் கல் வீட்டுக்கும் இடையில் நின்று படாத பாடுபடுகின்றனர்.

அதே போன்று பொருத்து வீட்டுக்கு விருப்பம் இன்றி விண்ணப்பித்த பொதுமக்கள், கல் வீட்டுக்கு விண்ணப்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த விடயம் எந்த வகையில் நிறைவேற்றப்படும் என்ற குழப்ப நிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சாதாரணமாக நிவாரணம் பெறுவதற்கே எத்தனையோ கடினமான செயற்பாடுகளை செய்ய வேண்டி உள்ளது.

இதில் இந்த அளவு சிக்கல் நிலையில் உள்ள பொருத்து வீடு, கல் வீட்டை எப்படி எங்கள் விருப்பத்துக்கு மாற்றி பெறுவதற்கு எமக்கு உதவுவார்கள் என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Which-house-is-in-the-north-province

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

பொருத்து வீடா கல்வீடா என்ற முடிவுக்கு கூட உதவ முடியாத தமிழர் தலைமைகள், இலங்கை தமிழ் மக்களுக்கு தம்மை தாமே ஆளும் சக்தி கிடைத்தால் எந்த ஒரு விடயத்துக்கும் எப்படி முடிவு காண போகிறார்கள்? இவர்களை சிங்களவர் தலைமைகளுடன் ஒப்பிடும் போது, அவர்களுக்கு  போரில் வெற்றி  பெற  இரக்கம்  இல்லாத   ஆனால்   போருக்கு   சர்வதேச ஆதரவை பெற்று    கொண்ட ஒரு தலைமை,   போருக்கு   பின் சமாதானம்   நிலை      நாட்ட   அதற்கும்   சர்வதேச ஆதரவை பெற்று  கொண்ட ஒரு தலைமை  என்று  மிகச்   சிறப்பான  தலைவர்கள்    இருக்கிறார்கள்.

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.