Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் வாள்வெட்டு : 4 பேர் வைத்தியசாலையில்

Featured Replies

கிளிநொச்சியில் வாள்வெட்டு : 4 பேர் வைத்தியசாலையில்

 

கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக  இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாள்வெட்டு தாக்குதல் இன்று மதியம் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் மதுபோதையில் நின்ற  நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம்  காரணமாக  ஏற்பட்டதாக  கிளிநொச்சி பொலிஸார்  குறிப்பிட்டனர்.

கிளிநொச்சியில் வாள்வெட்டு :  4 பேர் வைத்தியசாலையில்

எனினும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக எவரையும் கைதுசெய்யவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

 

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/swollen-in-Kilinochchi--4-people-in-the-hospital

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் பதற்றம்

 

கிளிநொச்சி பரந்தன் சந்திக்கு அருகில் பதற்றமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக ஐ.பி.சி. தமிழ்  செய்தியாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக  இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்தே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

 

குறித்த வாள்வெட்டு சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – பாரதிபுரம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு முன்பாக இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மதுபோதையில் நின்ற  நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம்  காரணமாக  இந்த வாள்வெட்டு சம்பவம் ஏற்பட்டதாக  கிளிநொச்சி பொலிஸார்  குறிப்பிட்டனர்.

இந்நிலையில் வாள் வெட்டு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் இராணுவ முகாமிற்குள் ஒடி மறைந்ததாகவும் அவர்களை கைது செய்யுமாறு கோரியும் பரந்தன் சந்தியில்  மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

இதனையடுத்தே அங்கு பதற்றமான சூழல்நிலை ஏற்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Tense-situation-near-Kilinochchi-Paranthan-

  • தொடங்கியவர்

மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் ; இரு குழுக்கள் இடையே வாள் வெட்டாக மாறியது

 

 

கிளிநொச்சியில் இன்று (17)  பிற்பகல் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வா் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் பின்பகுதியில்  உள்ள நான்காம் வாய்க்கால் வீதியிலேயே இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

குறித்த விடுதியில் இரு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது  அவா்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது இரு குழுக்களுக்கிடையேயான மோதலாக மாறி வாள்வெட்டில் முடிந்துள்ளது.

இதன்  போது படுகாயமடைந்த நால்வரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை  பிரிவில் அனுமதிக்கப்பட்டு  அதில் ஒருவா் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூவரும் அவசர சிகிச்சை பிரிவில்  சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இவா்களுக்கும் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் வைத்தியசாலையினா் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரியும்,  சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரியுமான உப பாிசோதகர் சுமனசிறி தலைமையிலான குழுவினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

http://www.virakesari.lk/article/24565

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:

வாள் வெட்டு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் இராணுவ முகாமிற்குள் ஒடி மறைந்ததாகவும் அவர்களை கைது செய்யுமாறு கோரியும் பரந்தன் சந்தியில்  மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

ஆங், இங்க நிக்குது வாள் வெட்டு. எப்பிடி போலீசார் வருவினம் விசாரணைக்கு. எல்லாம் கூடிப் பேசி நடக்கிற நாடகந்தானுங்கோ. ஒரு இனத்தை குடிச்சுவராக்கி தங்களது இருப்பை தக்க வைக்க இவ்வளவு நாடகம். 

 

12 hours ago, நவீனன் said:

இந்நிலையில் வாள் வெட்டு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் இராணுவ முகாமிற்குள் ஒடி மறைந்ததாகவும் அவர்களை கைது செய்யுமாறு கோரியும் பரந்தன் சந்தியில்  மக்கள் ஒன்று கூடியுள்ளனர்.

தமிழர் பகுதியில் நடைபெறும் வாள்வெட்டு சம்பவங்கள் 99% ஆனவை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகளால் சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளின் துணையுடன் நடைபெறுகிறது.

தறிகெட்டு திரியும் தமிழ் இளைஞர்களை / பாடசாலை மாணவர்களை 2009 முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளைத்துப்போட்ட சிங்கள-பௌத்த முப்படைப் பயங்கரவாதிகள் இந்தக் குழுக்களை (ஆவா குழுக்களை) வடமாகாணத்தின் 40 க்கு மேற்பட்ட பகுதிகளில் உருவாக்கியுள்ளனர்.

  • தொடங்கியவர்

சாரா­யம் குடிக்குமி­டத்­தில் ஏற்­பட்ட முறுகல் முடிந்தது வாள்­வெட்­டில்

4 பேர் படு­கா­யம்; பரந்­த­னில் நேற்­றுச் சம்­ப­வம்

 

பரந்­தன் மதுபானசாலை­யில் ஏற்­பட்ட முறு­கல் வாள்­வெட்­டில் முடிந்­தது. இரு கும்­பல்­க­ளுக்கு இடையே ஏற்­பட்ட இந்த மோத­லில் 4 பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். அவர்­கள் கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டனர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

வாள்­வெட்டு பரந்­தன் நான்­காம் வாய்க்­கால் சாலை­யில் நேற்­று­மாலை இடம்­பெற்­றது. 8 மோட்­டார் சைக்­கிள்­க­ளில் வந்த கும்­பல் ஒன்று தம்மை வெட்­டி­யது என்று காய­ம­டைந்­த­வர்கள் பொலி­ஸா­ருக்கு வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ள­னர்.

பரந்­த­னில் மது­பான சாலை­யி­லேயே இந்­தப் பிரச்­சினை ஆரம்­பித்­துள்­ளது. அங்கு சுமார் 25 வயது மதிக்­கத்­தக்க இளை­ஞர் கும்­ப­லுக்­கும் 23 வய­துக்கு உட்­பட்­ட­தாக மதிக்­கத்­தக்க மற்­றொரு கும்­ப­லுக்­கும் இடையே சாரா­யம் குடித்­துக்­கொண்­டி­ருந்­த­போது வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டுள்­ளது. அங்­கி­ருந்து அவர்­கள் சென்­ற­பின்­ன­ரும் முறு­கல் நீடித்­தது.

25 வயது மதிக்­கத்­தக்க கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் வயல் ஒன்­றில் உழவு இயந்­தி­ரம் மூல­மாக உழு­து­கொண்­டி­ருந்­த­னர். அங்கு இரு­த­ரப்­பி­ன­ரும் அலை­பே­சி­யில் கதைத்­துள்­ள­னர் என்று அத­னால் முறு­கல் முற்­றி­ய­தா­க­வும் விசா­ர­ணை­யில் கூறப்­பட்­டுள்­ளது. அத­னை­ய­டுத்து 23 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள் என்று மதிப்­பி­டப்­ப­டும் கும்­பல் 8 மோட்­டார் சைக்­கிள்­க­ளில் சென்று வய­லில் வைத்து வாள்­வெட்டு நடத்­தி­யுள்­ள­னர்.

அந்­தச் சம்­ப­வங்­க­ளின்­போது 6 பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். வாள்­வெட்­டுக்கு இலக்­கான 4 பேர் கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். ஒரு­வர் சாதா­ரண மருத்­துவ விடு­திக்கு மாற்­றப்­பட்­டார். 3 பேர்­அ­வ­சர சிகிச்­சைப் பிரி­வில் வைத்­துக் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கின்­ற­னர். 2 பேர் சிறு­கா­ய­ம­டைந்­த­னர்.

வாள்­வெட்டு நடத்­திய கும்­பல் அங்­கி­ருந்து தப்­பிச் சென்­று­விட்­டது. பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கப்­பட்­டது. சம்­பவ இடத்­துக்­குச் சென்ற கிளி­நொச்சி பொலிஸ் நிலை­யக் குற்­றத்­த­டுப்பு பதில் பொறுப்­ப­தி­காரி உப பரி­சோ­த­கர் சும­ன­சிறி தலை­மை­யி­லான குழு­வி­னா் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர்.

“வாள்­வெட்டு நடத்­திய கும்­பல் பரந்­த­னில் உள்ள இரா­ணுவ முகாம் ஊடா­கத் தப்­பிச் சென்­றது என்று கூறப்­பட்­டது. அது தொடர்­பில் பொலி­ஸார் குறித்த முகா­முக்­குச் சென்று நில­மை­யைக்­கூறி விசா­ரித்­துள்­ள­னர். இரா­ணு­வத்­தி­னர் தமது முகாம் வளா­கத்­துக்­குள் தேடிப் பார்த்­த­னர். எவ­ரும் இல்லை. இரா­ணுவ முகா­முக்­குள் புகுந்­த­னர் என்ற தக­வல் வதந்தி” என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். விசா­ர­ணையை அடுத்து அந்த முகா­மின் இரா­ணு­வத்­தி­னர் உசா­ர­டைந்து முகா­முக்கு வெளியே பாது­காப்­பில் ஈடு­பட்­ட­னர்.

“இரா­ணுவ முகா­முக்கு அரு­காக உள்ள பாதை­யால் வாள்­வெட்­டுக் கும்­பல் தப்­பிச் சென்­றது என்று கூறப்­பட்­டுள்­ளது. வாள்­வெட்டு நடத்­தி­ய­தா­கக் குற்­றஞ்­சாட்டி 4 பேரின் பெயர் விவ­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை. விசா­ரணை தொடர்­கி­றது” என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

http://newuthayan.com/story/29590.html

  • தொடங்கியவர்

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நேற்றைய தினம் மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரந்தனில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் பின்பகுதியில் உள்ள நான்காம் வாய்க்கால் வீதியிலேயே நேற்றைய தினம் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விடுதியில் இளைஞர்கள் இருவர் மது அருந்திக் கொண்டிருந்த போது, அவா்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறி வாள்வெட்டில் முடிந்துள்ளது.

இதன்போது படுகாயமடைந்த நால்வரும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அதில் ஒருவர் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரியும் சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரியுமான உப பாிசோதகர் சுமனசிறி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Arrested-suspect-in-kilinochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.