Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நாட்டின் 'தேசிய கீதம்' இசைக்கும்போது நடக்கும் பிரதமர்..!

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எண்டாலும் பாருங்கோ.....சனம் தங்கடை வாழ்க்கையிலை இதையும் மறக்க மாட்டினம் எல்லோ...:cool:

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ் -மட்டக்களப்பு சிறையில் மனைவிக்கு நடந்த கொடுமை கணவனின் பரபரப்பு புகார்! Vhg டிசம்பர் 09, 2024 யாழ்ப்பாண சிறையில் தனது மனைவி உதயகலாவுக்கு கொடுமைகள் நடப்பதாக தயாபராஜ் என்பவர் இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தயாபராஜ் உதயகலா தம்பதியினர் யுத்தம் முடிந்த பின்னர் பல்வேறு நிதிக்குற்றச்சாட்டுக்களிற்கு உள்ளாகியிருந்தனர். பின்னர் இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தமிழகம் தப்பிச் சென்றனர். அங்கு ஓராண்டு சிறைவாசம் அனுபவித்த பின்னர், முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சமயத்தில், மீண்டும் சட்டவிரோத இலங்கைக்குள் நுழைந்திருந்தனர். பின்னர் சர்வமக்கள் கட்சியென்ற பெயரில் உதயகலா ஒரு அமைப்பை ஆரம்பித்திருந்தார். மேலும் தனது மனைவி மீது தகாத துஸ்பிரயோக முறைகளை சிறையில் நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள்ளே சிறைச்சாலை ஆட்கள் இருக்கும் போதே சிறைச்சாலை அதிகாரிகளால் ஆடைகளைக் கழட்ட வைத்து மானபங்கம் செய்துள்ளனர் இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மனித உரிமை ஆனைக்குழுவில் முறைப்பாடு செய்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.   https://www.battinatham.com/2024/12/blog-post_74.html   உதயகலா தொடர்பான பழைய செய்தி..   தயாபரராஜா, உதயகலா தம்பதியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் இலங்கை   கப்பம் பெறுதல், பாரிய பண மோசடி; வட மாகாண மக்களிடம் பாரிய பண மோசடியில் ஈடுபட்டதன் பின்னர் இந்தியாவின் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள தயாபரராஜா. உதயகலா தம்பதியினரை கைதுசெய்வதற்கு இன்டர்போலின் உதவியை நாட தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். உதயகலா என்னும் மேற்படி பெண் வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக ஆட்கடத்துவதுடன் தொடர்புடைய முக்கிய புள்ளியென்பதும் அவரினால் ஏமாற்றப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது.  மோதல்களைத் தொடர்ந்து மன்னாரில் தலைமறைவாகியிருந்த மேற்படி தம்பதியினர் எவ்வித ஆவணங்களுமின்றி தமிழ்நாட்டிற்கு சட்ட விரோதமாக சென்றவேளை தனுஷ்கோடியில் வைத்து தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த செய்திகள் தம்பதியினரின் படங்களுடன் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து இவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள் உதயகலாவிடம் தாம் இழந்த பணத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை மேற்கொண்டு ள்ளனர். இத்தம்பதி மீது பண மோசடி, கப்பம் தொடர்பாக வடக்கு. கிழக்கு நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளதுடன்.  சிலவற்றில் இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இவர்கள் குழந்தைகளுடன் படகு மூலம் தமிழகத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது. இத்தம்பதிக்கு எதிராக வட மாகாணத்திலுள்ள நீதிமன்றங்களில் மட்டும் 11 வழக்குகளுக்கு மேல் பதிவாகியுள்ள தாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சாவகச்சேரி நீதிமன்றம் மேற்படி தம்பதியினரை இன்டர்போல் உதவியுடன் கைது செய்யுமாறு நீதி அமைச்சைக் கோரியுள்ளது. சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்ததை அறிந்து கொண்ட இவர்கள் 2011 ஆம் ஆண்டு குறித்த இளைஞனின் குடும்பத்தவர்களுடன் தொடர்பு கொண்டு 10 இலட்சம் ரூபாவினை பெற்றுத் தந்தால் மகனை விடுவித்து தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி அக்குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொழுப்புக்கு வந்தபோது ரயில் நிலையத்திலிருந்து அவர்களை அடையாளம் தெரியாத இடமொன்றுக்கு அழைத்துச் சென்று தடுத்து வைத்ததுடன் இம்மூவரையும் விடுவிப்பதாயின் 30 இலட்சம் ரூபா தரப்பட வேண்டுமெனவும் அச்சுறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் 28 இலட்சம் ரூபாவினை செலுத்தியே தம்மை விடுவித்துக் கொண்டதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதற்கமைவாகவே சாவகச்சேரி நீதிமன்றம் இன்டர்போலின் உதவியை நாடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நீதியமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளது. எல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர் ஒருவரின் முன்னாள் மனைவியான உதயகலா எனும் குறித்த நபர் பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பாரிய பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவரிடமிருந்து தாங்கள் இழந்த பணத்தை மீளப் பெற்றுத்தர உதவவேண்டுமெனக் கோரியும் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய கொன்சியூலெர் அலுவலகத்திற்கு மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.  பாதிக்கப்பட்டவர்கள் உதயகலா தங்களை கொழும்பிலுள்ள வி. எப். எஸ். க்ளோபல் யு. கே. வீஸா விண்ணப்பப்படிவங்கள் வழங்கும் நிலையத்திற்கு நேரில் அழைத்துச் சென்று பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வழங்கி தங்களை ஊக்குவித்ததாகவும் தெரிவித்தனர். உதயகலா மூன்று மாத காலப் பகுதிக்குள் மாத்திரம் பிரிட்டனில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல மில்லியன் ரூபாய்களை அபகரித்துள்ளார். அத்துடன் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நேர்மையான பயணி என்பதனை நிரூபிப்பதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் மேலதிகமாக 2 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அறவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பிரித்தானியா செல்வதற்குத் தயாரான நிலையிலிருந்த நபர்களை நீர்கொழும்பிலுள்ள ஒரு விடுதியில் தங்க வைத்த பின்னர் தலா 2 ஆயிரம் டொலர்கள் வீதம் அறவிட்டுள்ளார். விமான நிலையத்திற்கு வருமாறும் தான் முன்கூட்டியே அங்கு வந்து தேவையான வேலைகளை முன்னெடுப்பதாகவும் கூறிச் சென்றார். விடுதியில் தங்கியிருந்தவர்கள் விமானம் நிலையம் சென்று தேடியபோது உதயகலாவை அங்கு காணாது அப்போது தான் தாங்கள் ஏமாந்ததனை அவர்கள் உணர்ந்தனர். எங்கு தேடியும் உதயகலா பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. உதயகலா தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒரு இலங்கை அதிகாரி கூறுகையில், தமிழ்நாட்டு பொலிஸார் இவரை கைதுசெய்திருக்காவிட்டாலும் இவர்களது கைது பற்றிய செய்தியினை இலங்கை இராணுவம் பிரபல்யப் படுத்தி இருக்காவிட்டிருந்தால் இவர் இலகுவாக மேற்குலக நாடொன்றிற்கு தப்பிச் சென்றிருப்பது உறுதியென்றார். மே 05 ஆம் திகதி தனுஷ்கோடியில் சட்டவிரோதமாக வந்திறங்கிய 05 சிறுவர்கள் உள்ளிட்ட 10 தமிழர்களுடனேயே உதயகலா இருந்துள்ளார். சட்டவிரோத ஆட் கடத்தல் தொடர்பில் விரிவான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும். உதயகலாவின் இரண்டாவது கணவரான கதிரவேல் தயாபரராஜாவையும் எம்மால் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. இவர் 2009 ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக காணாமற்போனோர் பெயர்ப் பட்டியலில் இடம்பிடித்தவர் ஆவார்.   http://archives.thinakaran.lk/2014/05/16/?fn=n1405166
    • சத்தியமூர்த்தியை கேள்வி கேட்பவர் கவனம் காவல்துறையில் முறைப்பாடு குடுத்துவிடுவார். 
    • மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் மானியத்தில் மாற்றம் ! ShanaDecember 10, 2024     மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் மானியத்திற்காக அடுத்த 5 மாதங்களுக்கு மாதாந்தம் 9,375 ரூபாய் வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்ட விரைவு சிறிய மீன்பிடி படகுகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட உள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். மீனவர்களுக்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் மானியத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் காலத்திற்கும் டீசல் மானியம் லீட்டருக்கு 25 ரூபா வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியால் மீனவர்கள் சந்தித்து வரும் சிரமங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த ஒக்டோபர் 1ம் திகதி முதல் டீசல், மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்திருந்தது. இதன்போது, டீசல் மானியம் லீட்டருக்கு 25 ரூபாவும், மண்ணெண்ணெய் லீட்டருக்கு 25 ரூபாவும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 15 லீட்டர் என்ற அடிப்படையில் ஒரு மாதத்தில் 25 நாட்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மானியம் நடைமுறையில் இருந்த போது இனங்காணப்பட்ட குறைபாடுகளுக்கு அமைவாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட புதிய மானிய முறைமைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு... 04. பொருளாதார நெருக்கடியால் மீன்பிடித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் குறைத்து மீன்பிடித் துறையை இயல்புநிலைக்குக் கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் - 2024   பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் குறைத்து மீன்பிடித் துறையை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் நோக்கில் 2024.10.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 06 மாதகாலத்திற்கு எரிபொருளாக டீசலைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் படகு உரிமையாளர்களுக்கு ஒரு லீற்றருக்கு 25-ரூபாவாகவும், மற்றும் எரிபொருளாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்துகின்ற கடற்றொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 15 லீற்றர் மண்ணெண்ணெய் வீதம் மாதமொன்றுக்கு உயர்ந்தபட்சம் 25 நாட்களுக்கு மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 25-ரூபாவாகவும் 'மீன்பிடித்துறையை இயல்புநிலைக்குக் கொண்டு வரும் கொடுப்பனவாகப்' பெற்றுக் கொடுப்பதற்கு 2024.08.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, எரிபொருளாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்துகின்ற சிறிய படகுகளுக்குரிய இச்சலுகையை வழங்குவதற்கு மிகவும் வசதிப்படுத்தும் நோக்கில் மீன்பிடி மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இயங்குநிலையிலுள்ள சிறிய மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கு மாதாந்தம் 9,375-ரூபா கொடுப்பனவு 'மீன்பிடித் துறையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான கொடுப்பனவாக' 2024.11.01 ஆம் திகதி தொடக்கம் 05 மாத காலத்திற்கு வழங்குவதற்கும், டீசல் மீன்பிடிப் படகு உரிமையாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற சலுகைகளை முற்கூட்டியவாறே வழங்குவதற்கும் மீன்பிடி, நீரியல்வள மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.   https://www.battinews.com/2024/12/blog-post_898.html  
    • தமிழ் மக்கள் மீதான அரச‌ அடக்குமுறைகளினால் தமிழ் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள்   தமிழ் மக்கள் மீது அரச இராணுவத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட மிக கொடூரமான படுகொலைகளோ அல்லது தமிழ் மக்கள் தமது தாயகப்பகுதிகளில் இருந்து பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டமையோ தமிழ்ப் போராளிகளைச் சோர்வடையச் செய்யவில்லை.  அவர்கள் இராணுவத்திற்கும், பொலீஸாருக்கும் எதிரான கண்ணிவெடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தத் தொடங்கினார்கள். மார்கழி 18 ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 8 பொலிசாரும் வாகனச் சாரதியும் கொல்லப்பட்டனர். மறுநாளான மார்கழி 19 ஆம் திகதி பதவியா குடியேற்றத்திற்கு அண்டிய பகுதியில் இரு இராணுவ வாகனங்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் இரு அதிகாரிகளும் இரு படை வீரர்களும் கொல்லப்பட்டனர்.   இராணுவத்தினர் மீதான தாக்குதல்களுக்கு பதிலளிக்க யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் புதிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இராணுவம் நடத்திய சுற்றிவளைப்பில் 1000 தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். மட்டக்களப்பில் 400 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் திருகோணமலையில் தமிழர்களை மிகவும் மோசமாக அரசு நடத்தியிருந்தது. ஒலிபெருக்கிகள் ஊடாக அறிவித்தல் ஒன்றினை மேற்கொண்ட இராணுவம் திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் அமைந்திருந்த கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாற்றுக் கேணி, காயடிக்குளம், கோட்டைக் கேணி, நாயாறு மற்றும் அளம்பில் ஆகிய பகுதிகளில் வசித்துவரும் தமிழர்களை 24 மணித்தியாலத்திற்குள் அங்கிருந்து வெளியேறிச் செல்லவேண்டும் என்று  கட்டளையிட்டது. இக்கிராமங்களில் இருந்து வெளியேறிய தமிழ் மக்கள் முல்லைத்தீவு நோக்கி இடம்பெயர்ந்து சென்றதுடன் அங்கு அமைக்கப்பட்ட அகதி முகாம்களிலும், கோயில்களிலும் தஞ்சமடைந்தனர்.  தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்திய பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கு இதனைத் தவிர வேறு தெரிவுகள் அரசாங்கத்திடம் இல்லையென்று கூறியதுடன், பயங்கரவாதிகளுக்கெதிராக ரொக்கெட்டுக்கள், விமானக் குண்டுகள் மற்றும் நடுத்தர ஆட்டிலெறி எறிகணைகள் ஆகியவற்றையும் பாவிப்பது அவசியம் என்று கூறினார்.  தனது அறிக்கைகள், பேச்சுக்கள் ஆகியவற்றி லலித் அதுலத் முதலி தொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் சொல்லி வந்தார். அதுதான் போர்க்களத்தில் இராணுவம் திறமையாகச் செயற்பட்டு வருகிறது எனும் விடயம். புதுவருட தினத்தில் அவர் நாட்டு மக்களுக்கு வழங்கிய செய்தியில், "நாம் வென்று கொண்டு வருகிறோம், பயங்கரவாதிகளை அடிபணியவைப்பதில் வெற்றிபெற்று வருகிறோம்" என்று கூறினார். அக்காலப்பகுதியில் இராணுவத்தின் ஆட்பல எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டது. 12,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் பயங்கரவாதிகளுக்கெதிரான போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். இவர்கள் பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும்போது மிகவும் திறமையாகப் பயிற்றப்பட்டவர்கள் என்றும் நவீன ரக ஆயுதங்களை அவர்கள் போரில் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.  அரசால் புதிதாக உருவாக்கப்பட்ட விசேட பொலீஸ் கொமாண்டோ படைப்பிரிவான விசேட அதிரடிப்படையினரின் முதலாவது அணிக்கான பயிற்சிகளை ரவி ஜெயவர்த்தன ஒழுங்கு செய்திருந்தார். மேலும் 1985 ஆம் ஆண்டு தை முதலாம் வாரத்தில் அறிவித்தல் ஒன்றினை மேற்கொண்ட ஜெயார், மணலாற்றில் அமைக்கப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றத்தினைப் பாதுகாக்க 50 முதல் 100 வரையான சிங்கள ஊர்காவற்படையினரைத் தான் ஈடுபடுத்தவுள்ளதாகத் தெரிவித்தார். அரசாங்கம் தனது படையினரின் எண்ணிக்கையினையும், பலத்தையும் அதிகரித்து வந்த அதேவேளை போராளிகளும் தம்மைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டு வந்தனர்.இராணுவ ஆய்வாளரான தாரகி சிவராமின் கூற்றுப்படி அக்காலத்தில் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் கையே ஓங்கியிருந்தது என்று கூறமுடியும். 1983 ஆம் ஆண்டு தமிழர் மேல் நடத்தப்பட்ட இனக்கொலை, அதனைத் தொடர்ந்து வந்த ஏனைய படுகொலைகள், தமிழர்களை அவர்களது தாயகத்தில் விரட்டியடித்தமை போன்ற நடவடிக்கைகளால் போராளி அமைப்புக்களில்  இணையும் தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.  "ஒரு பூனையும், ஒரு மணியும் சில உத்திகளும்" என்கிற தலைப்பில் 1997 ஆம் ஆண்டு சித்திரை 20 ஆம் திகதி தாரகி அவர்கள் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன்படி 1983 ஆம் ஆண்டு தமிழினக் கொலைக்கு முன்னர் வரை அடிப்படை ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டிருந்த தமிழ்ப் போராளிகளின் எண்ணிக்கை வெறும் 800  பேர்தான் என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் 1984 முதல் 1985 வரையான காலப்பகுதியில் தமிழ்ப் போராளி அமைப்புக்களில் போர்க்களத்திற்கு அனுப்பப்படக்கூடிய இளைஞர் யுவதிகளின் எண்ணிக்கை 44,800 ஆகக் காணப்பட்டதாக தாரக்கி குறிப்பிடுகிறார். அவரது கணிப்புப்படி ஒவ்வொரு அமைப்பிலும் இருந்த போராளிகளின் எண்ணிக்கை பின்வருமாறு குறிப்பிடபட்டிருந்தது. அக்காலப்பகுதியில் பெரிய அமைப்பாக விளங்கிய புளொட்டின் தமிழ்நாட்டு பயிற்சி முகாம்களில் பயிற்சிகளின் ஈடுபட்டிருந்தோரின் எண்ணிக்கை 6,000, அதேவேளை வடக்குக் கிழக்கின் பல பயிற்சிமுகாம்களிலும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தோரின் எண்ணிக்கை 12,000. டெலோ அமைப்பின் 4,000 போராளிகள் தென்னிந்திய பயிற்சிமுகாம்களில் பயிற்றப்பட்டு வந்தவேளை வடக்குக் கிழக்கில் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தோரின் எண்ணிக்கை 2,000. சுமார் 7,000 போராளிகளைக் கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அணியில் 1500 பெண்போராளிகளும் காணப்பட்டனர். புலிகள் அமைப்பில் 3,000 இற்கும் குறைவான போராளிகள் காணப்பட்ட அதேவேளை ஈரோஸ் அமைப்பில் 1800 போராளிகள் சேர்ந்திருந்தனர்.  மீதமானவர்கள் சிறிய ஆயுதக் குழுக்களில் அங்கத்தவர்களாக இருந்தனர்.  1983 ஆம் ஆண்டு இனக்கொலை பல தமிழ் இளைஞர்களை சினங்கொண்டு ஆயுத அமைப்புக்களில் இணைய உந்தித் தள்ளியிருந்தது. இவ்வாறு ஆரம்பத்தில் இணைந்துகொண்டவர்கள் வடக்கையும், தெற்கையும் சேர்ந்தவர்கள். தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், கைதுகள், சித்திரவதைகள், பலவந்தமான வெளியேற்றங்கள் ஆகியவை கிழக்கு மாகாணத்திலிருந்தும் இளைஞர்களை ஆயுத அமைப்புக்களில் இணைந்துகொள்ள உந்தியிருந்தது.   தமிழ்ப் பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட அரசு முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினைப் பலப்படுத்தவே உதவின என்பதனை அரசு அன்று உணர்ந்துகொள்ளவில்லை. ஆகவே 1985 முதல் 1986 வரை தனது பாணியில் படுகொலைகள், கைதுகள், சித்திரவதைகள், பலவந்தமான வெளியேற்றங்கள் என்று பல்வேறு கொடூரங்களைத் தமிழ் மக்கள் மீது அது கட்டவிழ்த்து வந்தது.  
    • அநீதிகளுக்கு எதிரான எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்; ஆதவ் அர்ஜுனா அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசியிருந்தார். இது கூட்டணி கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் துணைப்பொதுச்செயலாளர் அக்கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளதாவர். அதில் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளதாவது, “ஆயிரம் கைகள் மறைத்தாலும்…! ‘அதிகாரத்தை அடைவோம்’ என்று திருமாவளவன் எந்த முழக்கத்தோடு இந்த கட்சியைக் கட்டமைத்தாரோ அந்த அதிகாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் எனது பயணத்தைக் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்தேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து கொள்கை உறுதிப்பாட்டுடன் கட்சியை அடுத்தகட்டத்திற்கு வளர்த்தெடுக்கும் பணியினையே நான் முழுமையாக மேற்கொண்டேன். கட்சியின் பிரச்சார வியூகத்தையும் கொள்கை வழியிலேயே கட்டமைத்தேன். நான் கட்சியில் என்ன பணி செய்தேன் என்பதை அடிமட்ட தொண்டர்களாய் களமாடும் நிர்வாகிகள் நன்கு அறிந்திருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த தொண்டர்களின் குரலாக நான் எப்போதும் இருப்பேன். தலைவரின் கையெழுத்திட்ட துணைப் பொதுச்செயலாளர் என்கிற பொறுப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற போது என்ன மனநிலையில் இருந்தேனோ, அதே மனநிலையில் இப்போது தலைவரின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள எனது இடைநீக்கம் குறித்த கடிதத்தையும் எதிர்கொள்கிறேன். தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பதே நேர்மையான மக்கள் அரசியலாக இருக்கும் என்ற எனது உள்ளார்ந்த எண்ணத்தை தொண்டர்கள் மத்தியில் இப்போதும் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை’ என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன். மக்களே ஜனநாயகத்தின் நீதிபதிகள். கருத்தியல் பேசிக்கொண்டு ஊழலை உருவாக்கும் போலி கருத்தியல்வாதிகளை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்திக் காட்டுவோம். மத பெரும்பான்மைவாதம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமைத்தனம், சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல், எளிய மக்களுக்கு எதிரான ஆதிக்க மனநிலை என இந்த சமூகத்தில் தொடர்ந்து நடந்துவரும் அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும். புரட்சியாளர் அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அரசியல் பயணத்தைத் துவங்கினேன். அந்த கொள்கைகளின் வழியில் எனது பயணம் எப்போதும் தொடரும். புரட்சியாளர் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல், ‘சிந்திப்பதற்கான சுதந்திரமே, உண்மையான சுதந்திரம்’ என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டு புதிய ஜனநாயகத்தை உருவாக்குவோம். எனது சிறுவயதிலிருந்து ஏமாற்றம், தோல்விகள், இழப்புகள் எனக் காலம் தந்த நெருக்கடிகளே என்னை உத்வேகத்துடன் பயணிக்கச் செய்தன. கட்சித் தலைமையின் இந்த நடவடிக்கையினையும் அந்த காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன். ஆயிரம் கைகள் மறைத்தாலும்… ஆதவ(ன்) மறைவதில்லை!” இவ்வாறு ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.   https://thinakkural.lk/article/313458  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.