Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்­லெண்ண சமிக்­ஞை­யாகவே இலங்கைக்கு வருகை தந்தேன் உல­கத்­த­மிழர் பேர­வையின் தலைவர் இமா­னுவேல்

Featured Replies

நல்­லெண்ண சமிக்­ஞை­யாகவே இலங்கைக்கு வருகை தந்தேன்

p18-9221f43917765da1e4479b2672169d733fdd9ccb.jpg

 

உல­கத்­த­மிழர் பேர­வையின் தலைவர் இமா­னுவேல் 
(ஆர்.ராம்)

உல­கத்­த­மிழர் பேர­வையின் தலைவர் அருட்­தந்தை இமா­னு வேல் அடி­களார் நல்­லெண்ண சமிக்ஞையை வெளிப்­ப­டுத்தும் முக­மாக இலங்­கைக்கு வருகை தந்­துள்ளார். சில தினங்­க­ளுக்கு முன்னர்  

இலங்­கைக்கு வருகை தந்­துள்ள அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க,

 வௌிவி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன, நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர உள்­ளிட்ட அர­சாங்­கத்தின் முக்­கிய அமைச்­சர்­க­ளையும், பிரித்­தா­னியா, அமெ­ரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மன் உள்­ளிட்ட முக்­கிய நாடு­களின் இரா­ஜ­தந்­தி­ரி­க­ளு­டனும் பிரத்­தி­யே­க­மான சந்­திப்­புக்­களை நடத்­தி­யுள்ளார்.

அத­னை­ய­டுத்து தற்­போது தனது தாய­க­மான யாழ்ப்­பா­ணத்­திற்கு சென்­றுள்ள அவர் அங்­குள்ள அர­சியல், சமூக, பொரு­ளா­தார நிலை­மை­களை நேரில் ஆராய்ந்து வரு­வ­தோடு பல்­வே­று­பட்ட தரப்­பி­னர்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யாடி வரு­கின்றார்.

குறிப்­பாக அடுத்த மாதத்தின் முற்­ப­குதி வரையில் யாழில் தங்­கி­யி­ருக்கும் அவர் மீண்டும் கொழும்பு திரும்பும் சந்­தர்ப்­பத்தில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க மற்றும் இலங்­கைக்­கான இந்­திய உயர்ஸ்­தா­னிகர் ஆகி­யோ­ருடன் விசேட சந்­திப்­புக்­களை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

தனது இலங்கை விஜயம் குறித்து "கேச­ரிக்கு" பிரத்­தி­யே­க­மாக தகவல் தரு­கையில்,

நான் எனது மக்­க­ளுக்­காக புலம்­பெ­யர்ந்த மண்ணில் குர­லெ­ழுப்பி பல்­வேறு செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்து வந்தேன். கடந்த காலங்­களில் எனக்கு இலங்­கைக்கு வரு­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது. நான் இறு­தி­யாக சுனாமி அனர்த்தம் இடம்­பெற்­றி­ருந்த சம­யத்­தி­லேயே இலங்­கைக்கு வரு­கை­தந்­தி­ருந்தேன்.

தற்­போது ஆட்சி மாற்றம் இடம்­பெற்­றது. புதிய ஆட்­சி­யா­ளர்­களின் எமக்கு தெரி­வித்த உறு­தி­மொ­ழிகள் தொடர்­பில நாம் தீவி­ர­மாக ஆராய்ந்தோம். அவர்­க­ளி­டத்தில் கடந்த கால அர­சாங்­கங்­க­ளி­டத்­தி­லி­ருந்து முன்­னேற்­ற­க­ர­மா­ன­தொரு சிந்­த­னையும் தமிழ் மக்கள் தொடர்­பான ஆழ­மா­ன­தொரு கரி­ச­னையும் இருப்­பதை அவ­தா­னித்தோம்.

அத்­துடன் இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச நாடுகள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரி­டத்­திலும் வழங்­கிய உறு­தி­மொ­ழி­க­ளையும் அவ­தா­னித்தோம். அதன் பின்னர் அவர்கள் எம்­மு­டனும் (உல­கத்­த­மிழர் பேர­வை­யு­டனும்) பேச்­சு­வார்த்­த­களை நடத்­தி­யி­ருந்­தனர். இரண்டு சந்­தர்ப்­பங்­களில் அப்­போ­தி­ருந்த வௌிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர எம்மை இலங்­கைக்கு வருகை தரு­மான அழைப்­பினை விடுத்­தி­ருந்தார்.

குறிப்­பாக நாம் அர­சாங்­கத்தின் முற்­போக்­கான செயற்­பா­டு­க­ளுக்கு ஆத­ர­வினை வழங்கி வரு­வ­தோடு தேயைான இடங்­களில் எமது சுட்­டிக்­காட்­டு­தல்­க­ளையும் மேற்­கொண்டு வரு­கின்றோம்.

அந்­த­வ­கையில் இறு­தி­யாக நடை­பெற்­றி­ருந்த வௌ்ளப் பெருக்கு மண்­ச­ரிவு அனர்த்­தத்தின் போது நாம் 18இற்கும் அதி­க­மான வைத்­தி­யர்­களை அவ­ர­ச­சி­கிச்­சை­களை வழங்­கு­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு உத­வி­ய­ளிப்­ப­தற்­காக அனுப்­பி­வைத்­தி­ருந்தோம்.

இந்­நி­லை­யி­லேயே நான் அர­சாங்­கத்தின் அழைப்­பினை ஏற்­றுக்­கொண்டும் நல்­லெண்ண சமிக்­ஞையை வௌிப்­ப­டுத்தும் வகை­யிலும் தற்­போது அர­சியல், பொரு­ள­தார ரீதி­யாக காணப்­ப­டு­கின்­றன கடு­மை­யா­ன­தொரு சூழலை நேரில் ஆராய்­வ­தற்­கு­மா­கவும் இலங்­கைக்கு வரு­கை­தந்­துள்ளேன்.

சில தினங்­க­ளாக கொழும்பில் தங்­கி­யி­ருந்­த­போது பல்­வேறு தரப்­பி­னர்­க­ளையும் சந்­தித்­தி­ருந்தேன். இருப்­பினும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­ந­யக்கா, இந்­திய உயர்ஸ்­தா­னிகர் ஆகி­யோரைச் சந்திப்பதற்கு வாய்ப்புக்கள் கிட்டியிருக்கவில்லை. விரைவில் அவர்களையும் சந்திக்கவுள்ளேன்.

தற்போது எனது தாயக பூமியல் சுமார் 21 ஆண்டுகளுக்கு பின்னர் தங்கியிருந்து இங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்து வருகின்றேன். இங்கும் பலதரப்பட்ட மக்களை எனது உறவிர்களையெல்லாம் நாள்தோறும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றேன். எமது மக்களின் எதிர்காலம் தொடர்பான சிறந்ததொரு திட்டமிடலுக்கு இது வலுவானதாக இருக்கும் என்றும் நம்புகின்றேன் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-18#page-1

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் இவர்களுடைய மாய வலையில் விழுந்து மகிழ்ந்து  நற்சான்றிதழையும் குடுத்து வாழ்த்தி  விட்டு போங்கோ. வந்தது தான்  வந்தனீங்கள் எங்கட சுமந்து, சமந்து அவாளையும் சந்திச்சு சுகம் விசாரிச்சுக்கொண்டு  போங்கோ. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.