Jump to content

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்! - ஓர் உண(ர்)வுப் பயணம்


Recommended Posts

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்! - ஓர் உண(ர்)வுப் பயணம்

 

 

120p21.jpg

றிமுகமே தேவையில்லாதவர். ‘ஒரு கைப்பிடி அளவு’ என்று சொல்லி, முதல் முறை சமைப்பவர்களுக்குக் கூட புரிந்துவிடக் கூடிய எளிய மொழியில் சமையல் படைக்கும் வாத்தியார். இந்தியாவிலேயே ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜியில் பி.ஹெச்.டி பெற்ற முதல் செஃப் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர். தனியார் தொலைக்காட்சிகளில் சமையல் புரோகிராம்களை நடத்தி ஹிட்டடித்து வருபவர். நமக்காக ‘ஃபுட் டிராவல்’ பற்றி பேசவிருக்கிறார். அவர் பயணித்த பாதைகள், அங்கு நடந்த சுவையான சம்பவங்கள், அங்கே கற்ற புது ரெசிப்பிகள் என்று உங்களுடன் இனி ஒவ்வொரு இதழிலும் உண(ர்)வுப்பூர்வமாக பயணிக்க வருகிறார், செஃப் தாமு.

120p1.jpg

 தினமும் அதிகாலையில எழுந்து குளிர்ந்த தண்ணீர்ல குளிச்சுட்டு சந்தனம் குங்குமம் வைச்சு... மதியம் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கிட்டு சாயந்திரம் கோவிலுக்குப் போய் பஜனை பாடல்கள் பாடுறது அத்தனை சுகம். கூடவே தொண்டை கெடாம இருக்க சுக்கு காபி. ஆஹா... மலைக்குப் போறதுக்கு 10 நாட்களுக்கு முன்னாடி 20 ஐயிட்டங்களோட ஐயப்பப் பக்தர்களுக்கு விருந்து படைப்பேன். கோவிலுக்குப் போய் இருமுடி கட்டிட்டு அப்படியே கட்டுசாதமும் கட்டிக்கிட்டு சென்னை யில இருந்து கோட்டயத்துக்கு டிரெயின் ஏறினா, பம்பையில கால் வைக்க மறுநாள் மதியமாகிடும்.

120p3.jpg

அங்க பக்திமயத்தோட குளிச்சுட்டு எழுந்தா அங்கங்க சுக்கு காபி கொடுப்பாங்க. அந்த குளிருக்கு நல்ல இதமா இருக்கும். அதே குளிர்ல இருமுடியை தலையில ஏந்திக்கிட்டு ஏழு கிலோ மீட்டர் நடந்தே போவோம். கையில ஆளுக்கொரு குளுக்கோஸ் தண்ணியை வெச்சுகிட்டாதான் நடக்க முடியும். உடம்பு சோர்வாகுறப்ப எல்லாம் குளுக்கோஸை குடிச் சுட்டு அப்படியே 18 படியேறி ஐய்யப்பனை தரிசிக்கிற அந்த நிமிஷம் இருக்கே... அப்பப்பா, வார்த்தையில விளக்க முடியாத மெய் சிலிர்க்கிற தருணம் அது!

கோவில்ல உள்ள இன்ன பிற பிரகாரங் களையும் வணங்கிட்டு, அப்படியே கோவில்ல கொடுக்குற கைக்குத்தல் அரிசிக் கஞ்சியை சாப்பிட்டுட்டு இன்னபிற அபிஷேகங்களைப் பார்த்துட்டு கீழ இறங்கினா அகோர பசியெடுக் கும். தரிசனம் முடித்து இங்கே வயிறு காலியாகி வரும் பக்தர்களுக்கு சுடச்சுட பரோட்டாவும், கடலைக்கறியும் தருவாங்க. தக்காளி சேர்க்காத அந்த கடலைக்கறியை பரோட்டாவோட சேர்த்து பிசைஞ்சு சாப்பிடுறப்ப அருமையா இருக்கும்.

இ்தை அவங்க எப்படி செய்றாங்கனு கேட்டு நான் தெரிஞ்சுக்கிட்டேன். உங்களுக்கும் அதையே சொல்லி தர்றேன். அந்த பரோட்டாவைச் சாப்பிட்டு கீழிறங்கி அப்படியே கோட்டயம் வந்து அங்கிருந்து சென்னை வந்தால், ஹப்பா சொல்ல முடியாத ஆனந்தத்தை அனுபவித்துவிட்டு வந்த அனுபவம் கிடைக்கும்.

நான் பயணித்த இடங்கள், சாப்பிட்ட ரெசிப்பிக்கள், கற்றுக்கொண்ட விஷயங்கள் எல்லாத்தையும் தொடர்ந்து பேசலாம்”

- பயணிப்போம்

Link to comment
Share on other sites

 

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!

ஓர் உண(ர்)வுப் பயணம் சக்க பிரதமன்! 

 

யப்பன் கோயிலுக்கு மாலை போட்டு போயிருந்த அனுபவத்துடன், ரெசிப்பியையும் பக்தி மணம் கமழ கடந்த இதழில் சொல்லியிருந்தார் செஃப் தாமு. இந்த இதழில், இன்னொரு பயண அனுபவத்தை, மற்றுமொரு ரெசிப்பியுடன் பகிர்கிறார்.

‘‘என் மனைவியின் தோழியுடைய மகள் கல்யாணம், மார்த்தாண்டத்துல 2013-வருஷம் நடந்துச்சு. நாகர்கோவில்ல இருந்து கார்ல மார்த்தாண்டம் போனோம். வழியெங்கும் பச்சைபசேல் வயல்கள், வீடு பக்கத்துலயே ஓடுற ஓடை, பசுமையான புல்வெளி, அதில் மேயும் மாடுகள், சுத்தமான காத்து, பறவைகள்னு சொர்க்கத்துக்கு போன ஃபீல்.

aval12b.jpg

வழியில தக்கலைங்கற ஊர்ல நண்பர் அரேஞ்ச் பண்ணியிருந்த வீட்டுல தங்கினோம். வீட்டுக்கு முன்ன சலசலனு ஓடை. அதுல இறங்கி ஆசை தீர குளிச்சு முடிச்சுட்டு வந்தா... சுக்குக் காபி, ஆப்பம் வித் மட்டன் கறி, வெஜிடேரியன்களுக்கு வெஜ் தோசை, வெஜிடபிள் ஸ்டீவ்னு கேரளா ஸ்டைல்ல கொடுத்தாங்க. செம சூப்பரா இருந்துச்சு. வீட்டுத் திண்ணையில உட்கார்ந்து காலை தொங்கப் போட்டு, ஓடையில கால்களை நனைச்சுக்கிட்டு உட்கார்ற சுகம் இருக்கே ஆகா! அப்படியே மீன் எல்லாம் காலை கடிச்சு கடிச்சிட்டு ஓடும். கிச்சுக்கிச்சு மூட்டின மாதிரி கிளுகிளுப்பான அனுபவம். மிளகுக் கொடிகள், தென்னை மரங்கள்... ‘வீட்டைச் சுத்தி தோட்டமா... தோட்டத்துக்குள்ள வீடா!’னு அவ்வளவு அழகா இருந்துச்சு. அப்படியே திற்பரப்பு அருவியில போய் கண்ணு சிவக்க சிவக்க குளியலைப் போட்டுட்டு, மறுபடியும் கார்ல பயணம்.

ஒரு பெரிய சர்ச்சுலதான் கல்யாணம். அந்த சர்ச்... பார்க்க ரொம்ப பிரமிப்பா இருந்துச்சு. மதிய விருந்து ஆரம்பமாச்சு. செம பசியோட இலை முன்ன உட்கார்ந்தேன். உப்புல ஆரம்பிச்சி சாப்பாடு, அவியல், அடை, ரசம், மோர், நேந்திரங்காய் சிப்ஸ், நேந்திரன்பழ சிப்ஸ், பொரியல்னு வளைச்சு வளைச்சு சாப்பிட்டு, ‘அவ்ளோதான் முடிஞ்சுது அப்பாடா’னு நிமிர, ‘இல்லைங்க இன்னும் இருக்கு’னு சொல்லி மறுபடியும், அடை பிரதமன், சக்க பிரதமன், பால்பாயசம்னு ஆரம்பிச்சு மொத்தம் 28 வெரைட்டி உணவுகள். அட அட அடடா... ஒவ்வொண்ணும் அவ்வளவு சுவை. சாப்பிட்டுட்டு நிமிர முடியாம குனிஞ்சே நடந்து போற அளவுக்கு வெளுத்துக் கட்டினேன்.

aval12a.jpg

எனக்கு ரொம்பப் பிடிச்சது சக்க பிரதமன். அதை வாழை இலையில ஊத்தி, வாழைப்பழத்தைப் பிசைஞ்சு, கூடவே அப்பளத்தையும் உடைச்சுப் போட்டு பிசைஞ்சு சாப்பிடுறாங்க. நாங்களும் அந்த ஸ்டைலை ஃபாலோ பண்ணி சாப்பிட்டோம். தேவாமிர்தமா இருந்துச்சு. இந்த சக்க பிரதமனை எப்படி செய்றாங்கனு ஸ்பாட்லேயே கேட்டு மனசுல ஏத்திக்கிட்டேன். மார்த்தாண்டத்திலிருந்து மனசே இல்லாமதான் சென்னைக்குத் திரும்பி வந்தோம்.

பயணிப்போம்

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!

கோயில் வாசல் கம்மங்கூழ்!ஓர் உண(ர்)வுப் பயணம்

 

ன்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு டிரிப்பும், ஒவ்வொரு அனுபவத்தைத் தந்துட்டேதான் இருக்கு. அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்ன போயிட்டு வந்த மாசாணி அம்மன் கோவில் பத்தியும், அங்க குடிச்ச கம்மங்கூழ் பத்தியும் இந்த இதழில் பேசப்போறேன்...

p12.jpgபொள்ளாச்சி பக்கத்துல உள்ள மாசாணி அம்மனைக் கும்பிட்டு வரணும்கிறது ரொம்ப நாளா மனசுக்குள்ள ஓடிட்டே இருந்த விஷயம். நேரம் அமையவே, சில வாரத்துக்கு முன்ன சென்னையில இருந்து கோவைக்கு ஃப்ளைட்ல போய், அங்கிருந்து கார்ல பொள்ளாச்சி போனேன். காலையிலயே கிளம்பிட்டதாலே, புல்வெளிப் பனித்துளிகளை ரசிக்கறதுக்காக வழியில காரை நிறுத்தினேன். என்னா அழகு, அமைதி... சொர்க்க பூமிதான் இந்த பொள்ளாச்சி. அந்தப் பனித்துளியை எடுத்து மெதுவா கையில விட்டு ரசிச்சுக்கிட்டே நின்னேன். மறுபடியும் கார்ல ஏறி வாழைத்தோப்பு, தென்னந்தோப்பு எல்லாத்தையும் வழிநெடுக ரசிச்சிக்கிட்டே போனேன்.

சரியா ஏழேமுக்கால் மணிக்கு கோவிலுக்குள்ள நுழைஞ்சு, கண் குளிர சாமி தரிசனம் முடிச்சு வெளியில வந்தேன். அந்தக் காலை வேளையிலேயும் கடை எல்லாம் திறந்து வெச்சிருந்தாங்க. என்னை அடையாளம் கண்டுக்கிட்டு நிறைய பேர் வந்து பேசினாங்க. அங்க கம்மங்கூழ் கடை வெச்சிருந்த அண்ணாதுரை, என்னைக் கைபிடிச்சு தன் கடைக்குக் கூட்டிட்டு போய், கம்மங்கூழ் கொடுத்தார். அதைக் குடிச்சுட்டு பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்னு பிளான்ல இருந்தேன். ஆனா, அதுக்கு தேவையே இல்லாம போயிட்டுது!

ஒரு குட்டி மண் கலயத்துல கம்மங்கூழ், கடிச்சுக்க மோர் மிளகாய், கொத்தவரங்காய் வத்தல்... கூடவே புதினா துவையல் வெச்சுக் கொடுத்தார். ஒரு வாய் கம்மங்கூழ் குடிச்சு, ஒரு கடி மோர் மிளகாய். அப்புறம் ஒரு மடக்கு கூழ், ஒரு கடி கொத்தவரங்காய் வத்தல்... ஒரு மடக்கு கூழ், கொஞ்சம் புதினா துவையல்னு மொத்தக் கூழும் போன இடம் தெரியல. அமிர்தம்னா என்னன்னு அன்னிக்குத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். கம்மங்கூழ் குடிச்ச உடனே அப்படி ஒரு குளிர்ச்சி உடலுக்கு வந்ததையும் உணர்ந்தேன். மதியம் ஒரு மணி வரைக்கும் பசியே எடுக்கல. நம்ம முன்னோர்கள் கொடுத்த அற்புதத்துல ஒண்ணுதான் இந்த கம்மங்கூழ்.

நான் குடிச்சதுக்கு கடைசி வரை காசு வாங்கிக்கவே இல்லை அண்ணாத்துரை. 'உடலுக்கு இதமான உணவைக் கொடுத்த அவர் நல்லாயிருக்கணும’னு மாசாணி அம்மன்கிட்ட வேண்டிக்கிட்டேன். வழக்கம்போல, அற்புதமான அந்த ரெசிப்பியையும் கேட்டு மனசுல ஏத்திக்கிட்டேன். அதை இங்க அப்படியே உங்களுக்கும் பரிமாறுறேன்.

பயணிப்போம்

படம்: வீ.சக்தி அருணகிரி

கம்மங்கூழ்

தேவையானவை: கம்பு - 2 டம்ளர், மோர் - 6 கிளாஸ், உப்பு  தேவையான அளவு, தண்ணீர்  வேக வைக்க‌, சின்ன வெங்காயம்  ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய்  ஒன்று

p13.jpg

செய்முறை: கம்பை உடைத்து உமியை நீக்கிக் கொள்ளுங்கள். கம்பை தண்ணீரில் அலசி எடுத்து பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். நன்கு கொதித்து திக்காக வரும்போது (தொட்டுப் பார்த்தால் கைகளில் ஒட்டக்கூடாத பதம்) அதனை எடுத்து உருட்டித் தண்ணீரில் போட்டு விட வேண்டும். தண்ணீரில் கரையாமல் அப்படியே இருக்கும் கம்பு உருண்டை. மற்றொரு பாத்திரத்தில் மோரை ஊற்றிக் கடைந்து... உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கலக்கவும். தண்ணீரில் இருக்கும் கம்பு உருண்டையை தேவைக்கேற்ப எடுத்து, மோரில் சேர்த்துக் கட்டியில்லாமல் நன்கு கரைத்து வெங்காயம், மோர் மிளகாய், கொத்தவரங்காய் வத்தலோடு பரிமாறுங்கள்.

இந்த கூழ், மனதிருப்தி, உடல் குளுமை தந்து சொர்க்கத்துக்கு அழைத்து செல்லும் உங்களை!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சிங்கப்பூர் மீன் தலைக்கறி!

 

'செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!

ஓர் உண(ர்)வுப் பயணம்

வ்வொரு முறையும் தான் மேற்கொண்ட பயணங்கள், அவற்றில் ஏற்பட்ட உணர்வுகள், கற்றுக்கொண்ட ரெசிப்பிக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் டாக்டர் செஃப் தாமு, இந்த முறை பகிர்ந்துகொண்டது சிங்கப்பூர் பயணம் பற்றி.

p28.jpg'இன்டர்நேஷனல் குக்கிங் காம்படீஷன் சிங்கப்பூர்ல மூணு மாசத்துக்கு முன்ன நடந்தது. இந்தியாவுல இருந்து ஒரே ஜட்ஜ்... நான் மட்டும்தான். சென்னையில இருந்து சிஙக்ப்பூருக்கு மிட் நைட்ல ஃப்ளைட். அரக்க பறக்க சாப்பிடாம கிளம்பி, ஏர்போர்ட் போய் பிரெட்பஜ்ஜி, காபி சாப்பிட்ட பிறகுதான் உயிர் வந்துச்சு.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ல ஏறி உட்கார்ந்ததும் மட்டன் கிரேவி, ரைஸ், ஹாஃப் பரோட்டா கொடுத்தாங்க. வாவ்..! என் நினைவுல இருந்து இன்னமும் அந்த ருசி மறந்து போகல.

காலை 6.30 மணிக்கு சிங்கப்பூர்ல லேண்ட் ஆனேன். ரூம் போய் ரெடியாகி, என் ஃப்ரெண்டோட போனது பிரமாண்டமான ஒரு ஃபுட் கோர்ட்டுக்கு. அங்க உள்ள ஒரு ஸ்பெஷல் கடையில சிங்கப்பூர் கம் சைனீஸ் ஃபுட்ஸ் ப்ளஸ் சீ ஃபுட் கிடைக்கும்னு கூட்டிக்கிட்டுப் போய் உட்கார வெச்சார். என் ஃப்ரெண்ட் ஒவ்வொண்ணா ஆர்டர் பண்ண, எல்லாம் டேபிளுக்கு வர ஆரம்பிச்சது. எல்லா காய்கறிகளும் போட்டு ஒரு வெஜ் கிரேவி, ஸ்பைஸி சில்லி கிராப், சைனீஸ் பிரான் எல்லாம் செம்ம... செம்ம டேஸ்ட். அதுவும் தலை மற்றும் வாலோட குக் பண்ணியிருந்த அந்த பிரான் ஆசம்.

சிங்கப்பூர்ல பிரபலமான 'மீன் தலைக் கறி’ (Fish Headcurry)  டேஸ்ட் பண்றீங்களா, ஏன்னா, உலகத்துல வேற எங்க தேடினாலும் இந்த டிஷ் கிடைக்காதுனு ஹைஃப் ஏத்திவிட்டார் ஃபிரெண்ட். எப்படி யெஸ் சொல்லாம இருக்க முடியும்? அங்க கிடைக்கிற மீனோட தலை ஒரு கிலோவுல ஆரம்பிச்சு இரண்டரை கிலோ வரைக்கும் இருக்குது. தாரளமா ஒரு தலையை மூணுல இருந்து நாலு பேர் சாப்பிடலாம்.

அட்டகாசமான டெக்கரேஷனோட அதை கொண்டு வந்து வெச்சு, ரைஸும் கொடுத்தாங்க. ஃபிஷ் தலைக்கறியில வெண்டைக்காய், கத்திரிக்காய் எல்லாம் போட்டு ஒரு கிரேவி மாதிரி இருந்துச்சு. அதை ரைஸோட சேர்த்து சாப்பிட்டப்ப, சொர்க்கத்துக்கே போன ஃபீல். இதெல்லாம் முடிச்சுட்டு நிமிர்ந்தா, ஐஸ் கச்சாங்னு ஒண்ணு கொடுத்தாங்க. ஐஸ்ஸை துருவி, கலர் தண்ணி போட்டு கொடுத்தாங்க. சிங்கப்பூர், மலேசியாவுல கிடைக்கிற இந்த ஐட்டம் செம்ம. இதுல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம், அவங்க உணவுகள்ல எதுலேயுமே அஜினமோட்டோ சேர்க்கல. அட நல்ல விஷயமா இருக்கேனு ஆச்சரியப்பட்டுப் போனேன்.

இந்த மீன் தலைக்கறி அந்த ஊர்ல எப்படி செய்றாங்க தெரியுமா? கிரேவி உள்ள பாத்திரத்தின் நாலா பக்கமும் இரும்புக் கம்பி கட்டி  வெச்்சிருக்காங்க. இந்தக் கம்பிகள் சிலதுல குறுக்கா கயிறு கட்டி அதுல மஞ்சள்தூள், உப்பு கலந்த மீன் தலைய பாத்திரத்தில் இருக்கும் கிரேவியில் படுற மாதிரி தொங்க விடுறாங்க. அடுப்பு கீழ எரிஞ்சுக்கிட்டே இருக்க, யார் கேட்கிறாங்களோ அப்ப எல்லாம் கயிறுல உள்ள மீனை எடுத்து கிரேவியோட கொடுக்கிறாங்க. அவங்ககிட்ட நான் கேட்டு தெரிஞ்சுக்கிட்ட மீன் தலைக்கறி ரெசிப்பி உங்களுக்காக இதோ.

தேவையானவை:

p29.jpg

மீன் தலை - 1 கிலோ (வஞ்சிரம், கொடுவா போன்றவகை மீன்களில் பெரிய மீன்களின் தலையாக வாங்க வேண்டும்)

வெண்டைக்காய் - கால் கிலோ (முழுதாக போடவும்)

கத்திரிக்காய் -கால் கிலோ (இரண்டாக வெட்டவும்)

நாட்டுத்தக்காளி் கால் கிலோ (இரண்டாக வெட்டவும்)

சின்னவெங்காயம் - கால் கிலோ (உரித்துக்கொள்ளவும்)

புளி - 200 கிராம் (கரைக்கவும்)

மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) -4 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

எண்ணெய்- 2 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு 

வெல்லம் - சிறிதளவு

தாளிக்க:

கடுகு- 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை- சிறிது

செய்முறை:

மீன் தலையைக் கழுவி உப்பு, மஞ்சள்தூள் தடவி ஊற விடவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இதில் வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி, சின்னவெங்காயம் போட்டு வதக்கவும். இத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டுக் கிளறவும். புளிக்கரைசல் இதில் ஊற்றி, கூடவே 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கலவை திக்காக வரும்போது, அதில் மீனைப் போடவும். மூன்று நிமிடம் கழித்து வெல்லம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். மீன் தலை 3 நிமிடம்தான் வேக வேண்டும். இட்லி, தோசை, சாதத்துக்கு அருமையான காம்பினேஷன் இந்தத் தலைக் கறி.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!

வெஜிடபிள் ஷாஷ்லிக்

 

ஓர் உண(ர்)வுப் பயணம்

ப்போது அழைத்தாலும் உற்சாகமாகப் பேசும் செஃப் தாமு இம்முறை தன்னுடைய துபாய் பயண அனுபவத்தை சுவாரஸ்யமாகப் பகிர்கிறார்.

p118.jpg'’போன மாசம் ஒரு கான்ஃபரன்ஸுக்காக துபாய் போயிருந்தேன. ஹோட்டல் ஜுமேராவில ரெஸ்ட் எடுத்துட்டு சாயங்காலம் நாலு மணி வாக்குல தனித்தனி ஜீப்புல ஒட்டுமொத்தமா 25 பேர் பாலைவனத்துல ரைட் போனோம். வாழ்க்கையில முதல்முறையா கண்ணுக்கெட்டின தூரம் வரைக்குமான பாலைவனம், அங்கங்க ஒட்டகத்தைப் பார்த்த அனுபவம் ஆசம் ஆசம். அரை மணி நேர பயணம் எப்படி கடந்து போச்சுனே தெரியலை. பாலைவனத்துலேயே ஒரு இடத்துல ஹால்ட் போட்டோம். துபாய் பாரம்பர்ய நடனத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கும்போதே அங்கேயே அடுப்பு வைச்சு சமைச்சுக்கிட்டு இருந்தாங்க.

அங்க வீசின காற்று, மணல் எதையும் தங்களை பாதிக்காதபடி அருமையான ஏற்பாடுகளோட அவங்க சமையல் செய்ஞ்சுக்கிட்டு இருந்ததையே ஆச்சர்யமா பார்த்துக்கிட்டு இருந்தேன். துபாயைப் பொறுத்தவரை அரபு உணவுகள் பிரபலம். குறிப்பா தந்தூரி உணவுகள் மிக பிரபலம்.  

பயங்கர பசியோட உட்கார்ந்த எனக்கு பல வித உணவுகளைப் பரிமாறினாங்க. அதுல வெஜி்டபிள் ஷாஷ்லிக், தந்தூரி கபாப் ரெண்டும் அருமை அருமை. ஒரு வழியா டின்னரை முடிச்சுட்டு  மனநிறைவோட பத்து மணிக்கு ஹோட்டலுக்குத் திரும்பிப் போற வழியில தடம் மாறின எங்க ஜீப், பாலைவனத்துல மாட்டிகிருச்சு. எங்க திரும்பினாலும் பாலைவனம் மட்டும்தான் தெரியுது, பாதை சுத்தமா தெரியலை. போச்சுடா நம்ம வாழ்க்கை இன்னைக்கு இங்கதானானு நினைச்சுக்கிட்டு இருக்கிறப்ப முன்னாடி போன ஜீப் எப்படியோ எங்களைக் கண்டுபிடிச்சிட்டாங்க. பிறகு ஒருவழியா ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

இந்த திகிலுக்கு நடுவுல ஒர் ஆறுதல் நான் அருமையா சாப்பிட்டு கேட்டு கத்துக்கிட்ட வெஜிடபிள் ஷாஷ்லிக் டிஷ் எப்படி செய்றதுனு உங்களுக்குச் சொல்லித் தர்றேன். நோட்ஸ் எடுத்துக்கோங்க என்றபடி ரெசிப்பியைச் சொன்னார் செஃப் தாமு.

வெஜிடபிள் ஷாஷ்லிக் (vegetable shashlik)

தேவையானவை:

பனீர் - 200 கிராம் (பெரிய துண்டுகளாக நறுக்கவும்)

தயிர் - ஒரு கப்

இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - 3 டீஸ்பூன்

எண்ணெய்- 2 டீஸ்பூன்

காய்ந்த வெந்தய இலை- சிறிதளவு

சாட் மசாலா - அரை டீஸ்பூன்

சன்னா மசாலா - அரை டீஸ்பூன்

குங்குமப்பூ - ஒரு கிராம் (விருப்பப்பட்டால்)

வெங்காயம், குடமிளகாய் - 150 கிராம் (க்யூப் சைஸில் நறுக்கவும்)

p119.jpg

செய்முறை:

தேவையானவற்றில் உள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற விடவும்.
ஒரு பூந்தொட்டியை எடுத்து அதில் கால்வாசி மண், கால்வாசி அடுப்புக்கரியைப் போட்டு நிரப்பவும். அடுப்புக் கரியைப் பற்ற வைக்கவும்.
அனைத்தையும் ஊறிய ஒரு வெங்காயம், குடமிளகாய், பனீர் என வரிசையாகச் செருகவும். இப்படி அனைத்து வெங்காயம், குடமிளகாய் பனீர் துண்டு அனைத்தையும் படத்தில் உள்ளது போல ஒன்றன் பின் ஒன்றாகச் செருகி வைக்கவும்.
குச்சியின் இரண்டு முனைகளிலும் சிறிது இடைவெளி விடவேண்டும். இந்தக் குச்சியை நெருப்பு எரியும் பூந்தொட்டியின் மீது குறுக்குவாக்கில் வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து குச்சியை லேசாகத் திருப்பி விடவும். வேகும் போது பனீர், வெங்காயம், குடை மிளகாயின் மீது லேசாக எண்ணெயை ஃபுட் ஃபிரஷால் தடவி விடவும். இந்த டிஷ்ஷில் பனீர் இருப்பதால், ‘பனீர் டிக்கா’ என்றும் சொல்லலாம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

கிரில்டு சிக்கன் வித் மஷ்ரூம் சாஸ்

 

“சமீபத்தில் என் மகளைப் பார்க்க லண்டன் போயிருந்தேன். அங்கு சாப்பிட்ட அருமையான உணவுப் பற்றி இந்தமுறை சொல்றேன்” என ஆரம்பிக்கிறார் செஃப் தாமு..

p78b.jpg



“போட் ரைடிங் எல்லாம் போயிட்டு, ஃபிரெஞ்சு ரெஸ்டாரெண்ட்க்கு போனோம். ‘கேண்டில் லைட் டின்னர்’ சாப்பிட்டோம். அங்க எல்லா உணவுகளும் பிரமாதம். அங்க ஒரு மேங்கோ ஜூஸ் குடிச்சேன். சுகர் சேர்க்காமலேயே அவ்வளவு அருமையா இருந்துச்சு. அது தான் ஆச்சரியம் ! அப்பறம் கிரில்டு சிக்கன் வித் மஸ்ரூம் சாஸ் டிஸ் சாப்பிட்டேன். அட அட .. என்ன ருசி ! அதுகூட நல்ல ரெட் கலர் கேரட் பாயில் பண்ணினது அப்பறம் கார்லிக் பிரெட் வித் கார்லிக் சாஸ் கொடுத்தாங்க. அந்த அருமையான  உணவை எப்படி செய்யுறதுனு சொல்றேன்..

p78a%281%29.jpg

கிரில்டு சிக்கன் வித் மஷ்ரூம் சாஸ்

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!

ஓர் உண(ர்)வுப் பயணம்

தேவையானவை :

சிக்கன் (லெக் பீஸ் அல்லது பிரெஷ்ட் பீஸ்) - அரை கிலோ
எலுமிச்சைச் சாறு- 1
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஷ்ரூம்- 200 கிராம்
மைதா- 50 கிராம்
வெண்ணெய்- 50 கிராம்
பால் - 400 மில்லி
பச்சைப் பட்டாணி - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 50 கிராம்
ஆலிவ் ஆயில் - ஆறு டீஸ்பூன்

p78c.jpg

செய்முறை :

சிக்கனை சுத்தம் செய்து நறுக்கி நன்கு கையால் அடிக்கவும். அது ஃபிளாட் ஆன பின், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகுத்தூள் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.  பின், 8 நிமிடம் தோசை கல்லில் புரட்டி எடுக்கவும். வெண்ணெய், மைதாமாவு, பால் சேர்த்து  கலக்கி சாஸ் தயாரித்துக்கொள்ளவும். மஷ்ரூமை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொண்டு, கலக்கி வைத்தியிருக்கும் சாஸுடன் சேர்க்கவும். அதை சிக்கன் மீது ஊற்றிவிடவும். பின், பட்டாணியை வேக வைத்து சிறிதளவு வெண்ணெய், மிளகுத்தூள், போட்டுப் புரட்டி தனியாக வைத்துக்கொள்ளவும். அதேபோல், உருளைக்கிழங்கை மசித்து சிறிதளவு வெண்ணெய், மிளகுத்தூள், உப்பு சேர்த்து புரட்டி வைக்கவும். ஒரு வெள்ளை பிளேட்டின் நடுவில் சாஸ் ஊற்றிய சிக்கன், வேக வைத்த கேரட் ஒரு பக்கம் வைக்கவும். இன்னொருப் பக்கம் பட்டாணி, மற்றொரு பக்கம் உருளைகிழங்கு வைக்கவும். பார்ப்பதற்கு கலர்ஃபுல்லா இருக்கும்.. ருசியும் அற்புதமாக இருக்கும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

“செரில் பனீர் ஃப்ரான்ஸ்”

பயணம்அசைவ ருசியில் சைவ உணவு

 

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!
ஓர் உண(ர்)வுப் பயணம்

“இந்தியன் செஃப்ஸ் கலினரி அசோஷியேஷன் (Indian Chefs Culinary
Association), சிங்கப்பூர் ஹலால் கலினரி பெடரேஷன் (Singapore Halal Culinary Federation), சிங்கப்பூர் செஃப்ஸ் அசோஷியேஷன் (Singapore Chefs Association) மற்றும் செலிபிரிட்டி செஃப்ஸ் ஆஃப் இன்டர்நேஷன்ல் (celebrity chefs international) ஆகிய அமைப்புகள் இணைந்து, சமீபத்தில் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி அடடா!

p101a.jpgஉலகம் முழுக்க இருந்து வந்த 42 செஃப்கள் இணைந்து 15,400 கிலோ ‘அளவுக்கு வெஜ் கறி’ தயார் செஞ்சோம். இதுக்கு 8,000 கிலோ காய்கறிகளைப் பயன்படுத்தினோம். இதை சமைக்கிறதுக்கு, 4 மீட்டர் அகலம், 4 மீட்டர் ஆழம் கொண்ட ஒரு பெரிய பாத்திரம் தேவைப்பட்டுச்சுன்னா எவ்வளவு கிராண்டா இந்த ஃபங்ஷன் நடந்திருக்கும்னு பார்த்துக்கோங்களேன். மொத்த சமையலையும் முடிக்க, 12 மணி நேரம் ஆனது.

இந்த சாதனை கின்னஸ் ரெக்கார்டுல பதிவாகி இருக்கு. இந்த உணவுக்கு ‘லாங்கஸ்ட் கறி இன் த வோர்ல்ட்’னு (Longest Curry in the World ) பெயர் கொடுத்திருக்காங்க. வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் இந்திய செஃப்கள் நிறைய பேர் கலந்துகிட்டாங்க. இந்தியாவுலேர்ந்து நான் மட்டும்தான் போயிருந்தேன். என்னைத்தான் பூஜை போட்டு ஆரம்பிக்கச் சொன்னாங்க. அதன்படியே ஆரம்பிச்சோம். இந்த கின்னஸ் சாதனையில எனக்கும் ஒரு பங்கு இருக்குனு நினைக்கும்போது சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு.

முதன்முதலா ‘Longest cooking marathon’னு ஒரு உணவு சாதனையை செய்து, தனிப்பட்ட முறையில் கின்னஸ் சாதனையை உருவாக்கினேன். ரெண்டாவதா மதுரையில் 35 செஃப்களுடன் இணைந்து ‘Longest dosa in the world’னு இன்னும் ஒரு கின்னஸ் சாதனையிலும் பங்காற்றியிருக்கேன். மூன்றாவதுதான் இந்த சிங்கப்பூர் சாதனை. அடுத்து ஒரு கின்னஸ் சாதனைக்கும் ஏற்பாடு செய்துக்கிட்டு இருக்கேன்.

p101b.jpg

இந்தத் தடவை சிங்கப்பூர் டிரிப்புல ‘நியூட்டன் சர்க்கஸ்’ என்ற இடத்துக்கு டின்னருக்குப் போயிருந்தோம். அங்க சுமார் 1,000 கடைங்களுக்கு மேல இருக்கும். எல்லாமே சைனீஸ் உணவுக் கடைங்கதான். அங்க ‘செரில் ஃப்ரான்ஸ்’ங்கிற ஒரு டிஷ்ஷை சாப்பிட்டேன். அதுக்குப் பொருத்தமா காரசாரமா ஒரு சாஸ் வேற. அவ்வளவு அட்டகாசமா இருந்துச்சு. ஹெல்த்தியான உணவாகவும் அமைஞ்சது.

அங்கே அசைவ உணவின் ருசியிலேயே சைவ உணவைத் தயார் செய்து கொடுக்கிறாங்க. இதுக்கு முக்கியமா அவங்க பயன்படுத்துறது, சோயா பனீர்தான்! உதாரணமா, வெஜ் மீன் கறி கேட்டா, மீன் கறியின் சுவையை சோயா பனீர் மூலமாகவே வெஜ் மீன் கறியா கொடுக்கிறாங்க.  அசைவ மீன் கறிக்கும், வெஜ் மீன் கறிக்கும் வேறுபாடே இல்ல. ஒரே மாதிரியான ருசியில் அருமையா இருந்துச்சு! இதுக்குப் பெயர் ‘மாக் நான்-வெஜ்டேரியன்’ உணவுனு சொல்றாங்க.

எனக்கு இதில் ரொம்பப் பிடிச்சது ‘செரில் ஃப்ரான்ஸ்’தான்! இது அசைவம்தான். இதையே சைவமாகவும் சமைக்கலாம். உங்களுக்கும் அந்த ரெசிப்பியை ரொம்ப பிடிக்கும். ‘செரில் பனீர் ஃப்ரான்ஸ்’ங்கற அந்த சைவ ரெசிப்பியை உங்களுக்கு இப்ப சொல்றேன்.


செரில் பனீர் ஃப்ரான்ஸ்!

தேவையானவை :
 தோல் உரிக்காத இறால் - கால் கிலோ
 ஓட்ஸ் - 2 கைப்பிடி அளவு
 கார்ன்ஃப்ளேக்ஸ் - 2 கைப்பிடி அளவு
 சோள மாவு - 2 கைப்பிடி அளவு
 கோதுமை மாவு - 2 கைப்பிடி அளவு
 கம்பு - ஒரு கைப்பிடி அளவு
 எலுமிச்சைப்பழம் - 1
 முட்டை - 1
 மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
 எண்ணெய் - தேவையான அளவு
 உப்பு - தேவையான அளவு

p101.jpg

செய்முறை :
இறாலை எலுமிச்சைச்சாறு, உப்பு போட்டுக் கலந்து ஊற வைக்கவும். ஓட்ஸ், கார்ன்ஃப்ளேக்ஸ், கம்பு ஆகியவற்றை எடுத்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சோள மாவு மற்றும் கோதுமை மாவுகளைச் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். இதில் மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து தனியாக வைக்கவும். முட்டையை உடைத்து ஒரு பவுலில் ஊற்றவும். இறாலை எடுத்து முட்டைக் கலவையில் நனைத்து, பிறகு ஓட்ஸ் கலவையில் புரட்டி எடுத்து, எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.

இதுவே நீங்கள் சைவம் சாப்பிடுபவராக இருந்தால், இறாலுக்கு பதிலாக கால் கிலோ சோயா பனீர் எடுத்துக்கொண்டு, விரல் வடிவில் நறுக்கி, இதே செய்முறையில் சமைத்து சாப்பிடலாம். அதே அசைவ ருசியில், சைவ உணவு ரெடி!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

கனவாய் மீன் வருவல்

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!ஓர் உண(ர்)வுப் பயணம்

 

p66.jpg‘உள்குத்து’ என்ற படத்தில் மீனவர்கள் சங்கத் தலைவரா நடிச்சிக்கிட்டு இருக்கேன். நாகர்கோவிலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ‘முட்டம்’ என்ற இடத்தில் படபிடிப்பு நடக்குது. ஒரு நாள் படபிடிப்பின் போது, அங்கிருந்த மீனவ மக்கள், எனக்கு மீன் குழம்பு, கனவாய் மீன் ஃபிரை, கிரேவி, கருவாடு, மாசி பொடி எல்லாம் செஞ்சு கொண்டு வந்தாங்க. இது எனக்கு புதுஅனுபவம். இதுக்கு முன்ன மீனவ மக்களிடம் நான் பழகினது கிடையாது. ஐஸ் மீன் சாப்பிட்டே பழகிப்போன எனக்கு, ஃபிரெஷ் மீன் சாப்பிடும் போது அவ்வளவு டேஸ்டா இருந்தது.
கடல் அலையோடு, கடல் காற்றோடு, மீனவ மக்களோடு, மீன் உணவுகள் சாப்பிட்ட அனுபவம் ரொம்பவே அலாதியானது. அவர்களிடம் அதை எப்படி சமைச்சாங்கனு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். இதில் ‘கனவாய் மீன்’ ஃபிரை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இதை ‘கடம்பா மீனுன்னும் சொல்லுவாங்க. இந்த ரெசிப்பியைத்தான் இந்த முறை உங்களுக்குச் சொல்றேன்.

கனவாய் மீன் வறுவல்

தேவையானவை :
 கனவாய் மீன் - கால் கிலோ
 மிளகாய்த்தூள் -  2 டீஸ்பூன்
 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
 இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
 பொட்டுக்கடலை மாவு - 2 கைப்பிடி அளவு
 கறிவேப்பிலை - ஒரு கொத்து
 சின்னவெங்காயம் - 2 கைப்பிடி அளவு
 பச்சை மிளகாய் - 6
 எண்ணெய் - ஒரு குழிகரண்டி அளவு
 உப்பு - தேவையான அளவு
 எலுமிச்சைப்பழம் - 1  (சாறு எடுக்கவும்)
 மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்

p66a.jpg

செய்முறை:
மீனை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும். இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து, தவாவில் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். 2 நிமிடத்துக்கு மேல் வேகவைத்தால், ரப்பர் போலாகிவிடும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் மீன் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் முன்பு  மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

முந்திரி சிக்கன் வித் லைட் சோயா சாஸ்

‘செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!பயணம்

 

ஓர் உண(ர்)வுப் பயணம்

p24.jpg‘‘சமீபத்துல லண்டன் போயிருந்தேன்... அப்ப அங்க ‘சைனீஸ் கார்டன்’னு ஒரு தெரு. அந்தத் தெருவைச் சுற்றி பழைய காலத்து சர்ச், அரண்மனை எல்லாம் அழகா இருக்கும். அதை எல்லாம் ரசிச்சிட்டு ‘சைனீஸ் கார்டன்’ என்ற அந்தத் தெருவுக்குள்ள போனா, முழுக்க சைனீஸ் ரெஸ்டாரெண்ட்தான். அங்க சாப்பிடற உணவு எல்லாம் வித்தியாசமாவும், செம ருசியாவும் இருந்துச்சு. ‘சுவையூட்டி’ எதுவும் இல்லாம, ரொம்ப ஹெல்தியான உணவு கிடைக்கும். அதில் முந்திரி சிக்கன் வித் லைட் சோயா சாஸ் சாப்பிட்டேன். அட, அடடா... செம்ம டேஸ்ட்! இந்த டேஸ்ட்டான டிஷ்ஷோட ரெசிப்பியைச் சொல்றேன்.’’

தேவையானவை:
 சிக்கன் - அரை கிலோ
 முந்திரி - ஒரு கைப்பிடி அளவு
 கேரட் - 1 (நீளவாக்கில் நறுக்கவும்)
 முளைக்கட்டிய பயறு - ஒரு கைப்பிடி அளவு
 பீன்ஸ் - 5 (நீளவாக்கில் நறுக்கவும்)
 பட்டாணி - 4
 லைட் சோயா சாஸ்-
4 டீஸ்பூன்
 இடித்த மிளகு - 2 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 சர்க்கரை - அரை டீஸ்பூன்
 எலுமிச்சைப்பழம் - அரை அளவு
 சோள மாவு - 4 டீஸ்பூன்
 மைதா மாவு - ஒரு கைப்பிடி அளவு
 எண்ணெய் - தேவையான அளவு
 காய்ந்த மிளகாய் - 8

p24a.jpg

செய்முறை :
மைதாமாவு, உப்பு கலந்து அதில் சிக்கனை புரட்டி வைக்கவும். எண்ணெயைச் சூடாக்கி அதில் சிக்கனைப் போட்டு வதக்கவும். மைதா மாவு காரணமாக பாத்திரத்தில்ச் சேர்த்து ஒட்டிக் கொள்ள ஆரம்பிக்கும். கவலைப்படாமல் நன்கு கிளறவும். இதில் முந்திரிப் பருப்பைப் போட்டு வதக்கவும். சிக்கன் வெந்ததும் கேரட், காய்ந்த மிளகாய், பீன்ஸ், முளைக்கட்டிய பயறு, பட்டாணி சேர்த்து வதக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து லைட் சோயா சாஸ், உப்பு, மிளகு, சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, சோள மாவைச் சேர்த்துக் கலக்கி இறக்கி, எலுமிச்சைச்சாறு பிழிந்துவிட்டுப் பரிமாறவும். மொத்தமே 10 நிமிடத்துக்குள் செய்து முடித்துவிட முடியும். இதை சாதம், சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுடன் சேர்த்துச் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்பில் எழுத தீர்மானித்துள்ளோம். இந்தநிலையில் நாடுகடத்தல் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என்ற தர்க்கத்தை இந்த தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  எனவே, நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயல்கின்றோம் அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்து. அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை அனுமதியை பெற்றுகொள்ள வேண்டும். இதனடிப்படையில், அடுத்த வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் அதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/action-to-bring-arjuna-mahendran-to-the-country-1731023300#google_vignette
    • 3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் மொஹமட் மஹிஷ் தெரிவித்துள்ளார். எனவே, வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியமானது. நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1407734
    • டொனால்ட் ட்ரம்பின்  (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)  தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia)  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன்.   ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது. அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல். புடினின் வாழ்த்து ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார். ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/putin-praises-trump-says-russia-ready-for-dialogue-1731016171#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.