Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலைகள்........

Featured Replies

வவுனியாவில் இரு இளம் குடும்பஸ்தர்கள் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை

[05 - March - 2007] [Font Size - A - A - A]

வவுனியா கறுப்பஞ்சான்குளம் பகுதியில் இரு இளம் குடும்பஸ்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை இரவு 7 மணிக்கும் 8 மணிக்குமிடையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

மகா இறம்பைக்குளத்திற்கு அருகில் கறுப்பஞ்சான் குளம் உள்ளது.

இவ்விருவரும் வீட்டில் இருந்தவேளை ஆயுதங்களுடன் வந்த ஐவரினால் இவர்கள் கடத்திச் செல்லப்பட்டு வீட்டிலிருந்து சுமார் 200 யார் தொலைவில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

கைகள் கட்டப்பட்ட நிலையில் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மதுரைவீரன் மகேந்திரன் (24 வயது) பிரேமஜீவன் ரஞ்சன் (23 வயது) ஆகியோரே சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர்.

இவர்களது சடலங்கள் மரண விசாரணைக்காக வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இறந்த இருவரும் குடும்பஸ்தர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

-------------------------------------------------------------------------------

திருமலையில் இருவர் சுட்டுக்கொலை

[05 - March - 2007] [Font Size - A - A - A]

திருகோணமலை சலப்பையாறு பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

திருகோணமலை - புல்மோட்டை வீதியிலேயே சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கொல்லப்பட்ட இருவரும் வர்த்தகர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.

அப்துல் ரஷாக் (24 வயது), மற்றும் பிரியந்த (23 வயது) ஆகியோரே சுட்டுக் கொல்லப்பட்டவர்களாவர்.

இவர்களது சடலங்கள் பின்னர் குச்சவெளி ஆஸ்பத்திரிக்கு குச்சவெளி பொலிஸாரினால் கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

------------------------------------------------------------------------------------------------

சாவகச்சேரியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை

[05 - March - 2007] [Font Size - A - A - A]

சாவகச்சேரி- டச் வீதியில் நேற்றுக் காலை ஞாயிற்றுக்கிழமை 8.30 மணியளவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி- கெருடாவிலைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இராஜரட்ணம் இராஜசேகரம் (வயது- 35) என்ற குடும்பஸ்தரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் டச் வீதியால் மோட்டார் சைக்கிளில் தேவாலயம் ஒன்றுக்கு ஞாயிறு வழிபாட்டுக்குச் சென்று கொண்டிருந்த சமயம் இவர் ஆயுததாரிகளால் வழிமறிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரது சடலம் பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ். ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

-----------------------------------------------------------------------------------------

காரைதீவில் இளைஞன் சுட்டுக் கொலை

[05 - March - 2007] [Font Size - A - A - A]

- கே.பி.மோகன் -

காரைதீவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இளைஞரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காரைதீவு 12 தேசியர் வீதியிலுள்ள கோல் சிட்டி கடல்கோள் முகாம் அருகிலேயே இக்கொலை இடம்பெற்றுள்ளது.

தில்லைநாயகம் தீபன் (வயது 17) என்ற இளைஞரே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் மொகமட் ஜெமீல் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட இளைஞருக்கும் குழுவொன்றிற்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் நால்வர் அடங்கிய குழுவொன்று வந்து இவரை சுட்டுக் கொலை செய்து விட்டு சென்றதாகவும் அங்குள்ளவர்கள் மூலம் தெரியவருகிறது.

http://www.thinakkural.com/news/2007/3/5/i...s_page22690.htm

Edited by Prashanna

  • தொடங்கியவர்

வல்வையில் இளம் தம்பதிகள் மீது சூடு; மனைவி மரணம்; கணவன் ஆஸ்பத்திரியில்

உடுப்பிட்டி, மார்ச்.5

வல்வெட்டித்துறை, ஊறணியில் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணி யளவில் இனந்தெரியாத ஆயுத தாரிகள் மேற்கொண்ட துப்பாக் கிப் பிரயோகத்தில் மனைவி உயி ரிழந்தார். கணவன் ஆபத்தான நிலை யில் யாழ். ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டுள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த பரஞ் சோதி நிஷா (வயது 20) என்பரே உயிரிழந்தவர் ஆவார். அவரது கண வரான பீற்றர் பரஞ்சோதி (வயது 23) ஆபத்தான நிலையில் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டுச் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மரணமான பெண்ணின் மரண விசாரணையை பருத்தித்துறை நீதி வான் க. அரியநாயகம் நேற்று நடத்தினார்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னரே இவர்கள் திருமணம் செய்திருந்தனர். சம்பவ தினம் இரு வரும் தொலைக்காட்சியில் படம் பார்த்துவிட்டு இரவு 9.30 மணிக்கு கிணற்றடிக்குச் சென்றனர். அப் போது வீட்டு மதிலுக்கு பின்னால் நின்ற ஆயுததாரிகள் உள்ளே வந்து இருவரையும் சுட்டுவிட்டுத் தப் பிச் சென்றனர் என்று மரண விசா ரணையில் தெரிவிக்கப்பட்டது.

படுகாயம் அடைந்த பெண் மந்திகை ஆஸ்பத்திரிக்கு எடுத் துச் செல்லும் வழியில் உயிரிழந் தார். கணவன் மந்திகை ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச் சைக்காக யாழ். ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார்.(அ1115155)

கோப்பாய் இராசவீதியில் குண்டு வெடித்ததில் ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம்,மார்ச் 5

கோப்பாய் இராசவீதியில் மாவீரர் மயானத்திற்கு சமீபமாக நேற்றுப் பிற்பகல் குண்டு ஒன்று வெடித்தது. சம்பவத்தில் திருகோண மலையைச் சேர்ந்தவர் எனக் கரு தப்படும் ஒருவர் மரணமானார்.

நாகலிங்கம் நகுலேஸ்வரன் என்பவர் உயிரிழந்ததாக அவரது அடையாள அட்டை மூலம் இனங் காணப்பட்டுள்ளது.

அவரது அடையாள அட்டை யில் லூர்த்துமாதா கோயிலடி, பாலை யூற்று, திருகோணமலை என முகவரி உள்ளதாகவும் இவரது அடையாள அட்டை இலக்கம் 800414270ங எனவும் கோப் பாய் பொலிஸ் அதிகாரி தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு யாழ். நீதி வான் இ.த.விக்னராஜா சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை உறவினர்களி டம் ஒப்படைக்குமாறு உத்தரவிட் டார். சடலத்தை இனங்காண உதவு மாறு கோப்பாய் பொலிஸார் கேட்டுள்ளனர்.

இக்குண்டுவெடிப்பு எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து ஊர்ஜித மான தகவல் எதுவும் தெரிய வரவில்லை

http://www.uthayan.com/pages/news/today/16.htm

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு அருகில் Cளைஞனின் சடலம் கண்டுபிடிப்பு

கோப்பாய் இராசவீதியில் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு சமீபமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இளைஞர் ஒருவரின் சடலம் கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தின் சட்டைப் பையிலிருந்து மீட்கப்பட்ட ஆள் அடையாள அட்டையின்படி இவர் திருகோணமலை பாலையூற்றுப் பகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் நகுலேஸ்வரன் என்றும் அடையாளம் காணப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மரண விசாரணையை மேற்கொண்ட யாழ். மாவட்ட நீதிபதி ஆர்.ரி.விக்னராஜா, சடலத்தை இனங்காணும் பொருட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதேவேளை, கோப்பாய் - மாவீரர் துயிலுமில்லத்துக்குச் சமீபமாக நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு பாரிய குண்டு வெடிப்புச் சத்தம் ஒன்று கேட்டதாகவும் நேற்றுக் காலை இச் சடலம் அப்பகுதியில் கிடக்கக் காணப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

  • தொடங்கியவர்

வாழைச்சேனையில் இரு குடும்பஸ்தர்கள் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறையினரின் பிரிவுக்கு உட்பட்ட கருவாகேணி கென்டயன்கேணி பகுதியில் ஞாயிறு இரவு 8.45 மணியளவில் இனம்தெரியாத ஆயுததாரிகள் இரு குடும்பஸ்தர்களை அவர்களது வீட்டில் வைத்து சுட்டுக்கொன்றுள்ளார்கள்.

இதன்போது கொல்லப்ட்டவர்கள் இருபிள்ளைகளின் தந்தையான 44 அகவையுடைய ஓட்டோசாரதி தம்பையா மோகன் எனவும் ஆறுமாத குழநை;தையின் தந்தையான 30 அகவையுடைய கட்டிட தொழில் புரியும் குருகுலசிங்கம் சிறீகுமரன் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவரும் உறவினர்கள் எனவும் மோகன் வீட்டுக்கு சென்ற ஆயுததாரிகள் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று சுட்டுப்படுகொலை செய்துள்ளார்கள் என அவர்களது மனைவி தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்

வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொலை

இனம்தெரியாத ஆயுததாரிகளால் கடந்த ஞாயிறு இரவு 10 மணியளவில் வர்த்தகர் ஒருவர் சுண்டிக்குழிப்பகுதியில் யாழ் மாநகரசபைப்பகுதியில் அவரை கூப்பிட்டு பின் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதன்போது கொல்லப்பட்டவர் 26 அகவையுடைய ஏ.சுரேஸ்குமார் என இனம் காணப்பட்டுள்ளார்.

  • தொடங்கியவர்

ஏழாலை மயிலனியில் இளைஞரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் இன்று அதிகாலையில் ஏழாலையில் உள்ள மயிலனிப் பகுதியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காலையில் பொது மக்கள் இந்த சடலத்தை கண்டதைத் தொடர்ந்து சுன்னாகம் பொலிசில் முறையிடப்பட்தைத் தொடர்ந்து மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி சறோஐpனின இளங்கோவன் மரண விசாரனை மேற்கொண்டதைத் அடுத்து சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இளைஞர் வாகணத்தில் கொண்டுவரப்பட்டு நள்ளிரவு நேரம் கழுத்து வெட்டப்பட்டு போடப்பட்டதாக அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள். இவ்வாறு சடலமாக காணப்பட்டவர் எந்த இடத்தைச் சேர்ந்த என அடையாளம் காணப்படவில்லை.

உந்த மகிந்த எண்ட காட்டு மிராண்டீ நாய் எப்ப ஐனாதிபி ஆகிச்சுதோ அண்டைக்கு தொடங்கின வெறிதான் பிணந்தின்னி நாய்

  • தொடங்கியவர்

கன்னாதிட்டியில் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளர் சுட்டுக்கொலை.

யாழ். கன்னாதிட்டியில் தொலைத் தொடர்பு நிலைய உரிமையாளர் ஒருவர் நேற்றுமாலை இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கன்னாதிட்டியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் நிஷாந்தன் (வயது 30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வீட்டில் தொலைத்தொடர்பு நிலையத்தை நடத்திவரும் இவர் மீது நேற்று மாலை 6.30 மணியளவில் அங்கு வந்த இனந்தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம்செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர் அங்கு மரணமாகியுள்ளார்.

-Virakesari-

  • தொடங்கியவர்

சாம்பல்தீவில் பால்விநியோகஸ்தர் சுட்டுக்கொலை

இனம்தெரியாத ஆயுததாரிகளால் நேற்று புதன்கிழமை மதியம் 12.30 மணியளவில் பால்விற்பவர் ஒருபவர் திருமலை சாம்பல்தீவு பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதன்போது கொல்லப்பட்டவர் 52 அகவையுடைய தர்மு என இனம் காணப்பட்டுள்ளார்.

இவர் சாம்பல்தீவு பகுதியில் குடியிருப்பவராவர். உந்துருளியில் சென்ற ஆயுததாரிகள் இவரை சுட்டுக்கொன்றுள்ளார்கள். திருமலை நகரத்திற்கு பாலை விற்றுவிட்டு வரும்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • தொடங்கியவர்

திருமலையில் பெண் சுட்டுக்கொலை

கடந்த செவ்வாய்கிழமை இரவு திருகோணமலை குச்சவெளி பெரியகுளம் பகுதியில் இனம்தெரியாத ஆயுததாரிகளால் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதன்போது கொல்லப்பட்டவர் 30 அகவையுடைய உதயகுமார் சசிகலா என இனம்காணப்பட்டுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல்

வடிவேலு

குகதாசன்

நன்றாக இருக்கின்றது யாழில் எல்லாருடைய கருத்துக்களும் வாசிப்பதற்கு

ஆனால் நடைமுறையில் அல்லது செயற்பாட்டில் நிலமை மோசம் தான்

குறிப்பாக புலம் பெயர்நத தேசங்களில் வாழ்ந்தவாறு கருத்து எழுதும் முகம் தெரியாத உறவுகளுக்கு !

அனைவரினதும் தமிழிழம் தமிழிழ மக்கள் பற்றிய மிகப்பாரிய சிந்தனை இருப்பதையொட்டி மகிழ்ச்சி ஆனாலும் உங்களுடைய தனிப்பட்ட சிந்தனையோ அல்லது வெறும் இணைத்தளத்தில்

உங்களுடைய கருத்துக்களை புலம் பெயர்நாடுகளில் இருந்து இணைப்பதன் மூலம் எமது தேசத்தில் தற்போது அரங்கேறிவரும் பெரும் மனித அவலம் முடிவுற்றுவிடும் என்றோ அல்லது குறைந்துவிடும் என்றோ எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாதது என்பது நான் எழுதித்தான் புரியவேண்டும் என்றில்லை.

மிகவும் குறிப்பாக நான் இங்கு ஓன்றை இங்கு குறி;ப்பிடவிரும்புகின்றேன்

அதாவது எதிர்வரும் 11ம் திகதியுடன் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை முடப்பட்டு ஏழு மாதம் முடிவுறுகின்றது

ஆனால் அதை திறப்பதற்கு சீறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது அதற்காக நீங்கள் வந்து திறந்துவிடுங்கள் என்று கேட்கவில்லை .

புதியவன் அவர்கட்கு

நாரதர் விளையாட்டு நல்லதில் முடியுமென்பர்

எமக்குள்ளும் அப்படி ஒரு தொடர்பே வந்திருக்கிறது

கடந்த 22ந்திகதியும்நோர்வே தூரரகம்முன்பு ஆர்ப்பாட்டம் செய்திருந்தோம்

வெளிநாட்டில் 25 வருடங்களாக வாழ்பவன்

எல்லா ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டவன்

என்ற முறையில் என் அனுபவப்படி இவற்றால் எந்த நன்மையும் கிடையாது

தமிழ்செல்வன் அண்ணா எல்லோரோடும் வரவேற்று கதைக்கிற மாதிரி தான் இதுவும்

ஆனால் செய்யாமல் விடஏலாது

செய்து கொண்டு தான் இருக்கின்றோம் சலிப்புடன்

புதியவன்

நீங்கள் நினைக்கின்றீர்களா?

நாங்கள் சொல்லித்தான் இவர்களுக்கு இவை தெரியவேண்டும் என்று?

தூக்கத்தில் இருப்பவனை எழுப்பலாம்

நடிப்பவனை???

ஆனால் அவர்கள் எம்மை வந்து எழுப்பும்படி தலைவரால் செய்யமுடியும்

அந்த நாளுக்காக காத்திருக்கின்றோம்

அப்பொழுது நிச்சயம் புலம்பெயர்படையின் பயனை நிச்சயம் உலகம் வியக்கும்

  • தொடங்கியவர்

வவுனியா பண்டாரிக்குளத்தில் இளைஞன் சுட்டுக்கொலை.

வவுனியா பண்டாரிக்குளத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் பண்டாரிக்குளத்திற்கு அமைந்துள்ள கள்ளுத்தவனையில் அருகில் உந்துறுளியில் வந்த ஆயுததாரிகளால் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போதே இளைஞர் ஒருவர் சுட்டுக் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் வவுனியா குட்சன் நகரைச் சேர்ந்த 28 அகவையுடைய சிவபாலன் சசிகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • தொடங்கியவர்

மின்னல்

வடிவேலு

குகதாசன்

நன்றாக இருக்கின்றது யாழில் எல்லாருடைய கருத்துக்களும் வாசிப்பதற்கு

ஆனால் நடைமுறையில் அல்லது செயற்பாட்டில் நிலமை மோசம் தான்

குறிப்பாக புலம் பெயர்நத தேசங்களில் வாழ்ந்தவாறு கருத்து எழுதும் முகம் தெரியாத உறவுகளுக்கு !

அனைவரினதும் தமிழிழம் தமிழிழ மக்கள் பற்றிய மிகப்பாரிய சிந்தனை இருப்பதையொட்டி மகிழ்ச்சி ஆனாலும் உங்களுடைய தனிப்பட்ட சிந்தனையோ அல்லது வெறும் இணைத்தளத்தில்

உங்களுடைய கருத்துக்களை புலம் பெயர்நாடுகளில் இருந்து இணைப்பதன் மூலம் எமது தேசத்தில் தற்போது அரங்கேறிவரும் பெரும் மனித அவலம் முடிவுற்றுவிடும் என்றோ அல்லது குறைந்துவிடும் என்றோ எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாதது என்பது நான் எழுதித்தான் புரியவேண்டும் என்றில்லை.

மிகவும் குறிப்பாக நான் இங்கு ஓன்றை இங்கு குறி;ப்பிடவிரும்புகின்றேன்

அதாவது எதிர்வரும் 11ம் திகதியுடன் யாழ்ப்பாணத்திற்கான தரைவழிப்பாதை முடப்பட்டு ஏழு மாதம் முடிவுறுகின்றது

ஆனால் அதை திறப்பதற்கு சீறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது அதற்காக நீங்கள் வந்து திறந்துவிடுங்கள் என்று கேட்கவில்லை .

புதியவன் அவர்கட்கு

நாரதர் விளையாட்டு நல்லதில் முடியுமென்பர்

எமக்குள்ளும் அப்படி ஒரு தொடர்பே வந்திருக்கிறது

கடந்த 22ந்திகதியும்நோர்வே தூரரகம்முன்பு ஆர்ப்பாட்டம் செய்திருந்தோம்

வெளிநாட்டில் 25 வருடங்களாக வாழ்பவன்

எல்லா ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டவன்

என்ற முறையில் என் அனுபவப்படி இவற்றால் எந்த நன்மையும் கிடையாது

தமிழ்செல்வன் அண்ணா எல்லோரோடும் வரவேற்று கதைக்கிற மாதிரி தான் இதுவும்

ஆனால் செய்யாமல் விடஏலாது

செய்து கொண்டு தான் இருக்கின்றோம் சலிப்புடன்

புதியவன்

நீங்கள் நினைக்கின்றீர்களா?

நாங்கள் சொல்லித்தான் இவர்களுக்கு இவை தெரியவேண்டும் என்று?

தூக்கத்தில் இருப்பவனை எழுப்பலாம்

நடிப்பவனை???

ஆனால் அவர்கள் எம்மை வந்து எழுப்பும்படி தலைவரால் செய்யமுடியும்

அந்த நாளுக்காக காத்திருக்கின்றோம்

அப்பொழுது நிச்சயம் புலம்பெயர்படையின் பயனை நிச்சயம் உலகம் வியக்கும்

இதுக்கெல்லாம் வேர இடமிருக்கோய் மாமு. :angry: :angry: :angry:

  • தொடங்கியவர்

மல்லாகத்தில் தொலைதொடர்பு உரிமையாளர் சுட்டுக்கொலை

இன்று காலை 7.30 மணியளவில் மல்லாகம் சந்திக்கு அருகில் அமைந்துள்ள தனியார் தொலைதொடர்பு நிறுவன உரிமையாளர் ஒருவர் இரு உந்துருளியில் சென்ற நான்கு ஆயுததாரிகளால் அவரது வியாபார நிலையத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதன்போது கொல்லப்பட்டவர் 62 அகவையுடைய கார்த்திகேசு லங்காபதி என இனம் காணப்பட்டுள்ளார்.

இக்கொலை சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து 75 மீற்றர் தூரத்தில் ஈ.பி.டி.பி கூலிக்குழு முகாம் அமைந்துள்ளதாகவும் அந்த முகாமில் சிறீலங்கா காவல்துறையினரும் படையினரும் காவல் காத்துக் கொண்டு இருந்ததாகவும் தெரியவருகிறது

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

யோவ்வ்வ்வ்........ உந்தக் கொலைக்கெல்லாம் ஒரு தலைப்பா??????????

எட்டோ, பத்துக் கோடி தமிழ்ச்சனமாம் உலகத்திலை!!!!!!! உந்த ஈழத்தமிழன் முடிந்தால், உலகத்திலை தமிழன் இல்லாமலா போகப் போறான்??????

நம்மடை ஆட்கள் எட்டோ... பத்தையோ தான் சரியாக ஞாபத்தில் வைத்திருக்கிறார்கள் போலிருக்கு!!!!!!!!!!!!! அதுதான் சிங்களவனை அழிக்க விட்டிட்டினம் போல!!!!!!!!!!!

நாசமாய் அழிந்து போறான் ஈழத்தமிழன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தீவிர மெளனம் காக்கும் இராணுவ ஆய்வாளர்களே!!!

நாயிலும் கீழான ஈழத்தமிழருக்காய் ஒருதரம் வாய் திறவுங்கள்!!!

  • தொடங்கியவர்

படுவான்கரை நோக்கி சிறிலங்காப் படையினரின் எறிகணை தாக்குதல்: இரு பொதுமக்கள் பலி.

மட்டக்களப்பு படுவான்கரை நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை தாக்குதலில் பொதுமக்கள் இருவர் பலியாகியுள்ளதுடன் ஜவர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து படைமுகாம்களிலிருந்தும் படுவான்கரை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று பல்குழல் பீரங்கி தாக்குதலை நடத்தியுள்ளனர்.

நேற்று முற்பகல் 10.30 மணியளவில் தாண்டியடிப் பகுதிகளில் எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்ததில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.இதே வேளை சத்துருக்கொண்டான் ,வாழைச்சேனை,மயிலாம்பாவெளி,மற

  • தொடங்கியவர்

யாழ். பல்கலைக்கழக மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

[11 - March - 2007] [Font Size - A - A - A]

தெல்லிப்பழை மகாஜன கல்லூரிக்கு அருகிலுள்ள அம்பனை வயல் கிணறு ஒன்றிலிருந்து நேற்று சனிக்கிழமை காலை யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை அம்பனைப் பகுதியைச் சேர்ந்தவரும் யாழ். பல்கலைக்கழக முதலாம் வருட மாணவியுமான மயூரா முருகையா (வயது 22) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அண்மையிலிருந்து பிரஸ்தாப யுவதி பயணம் செய்ததாகக் கருதப்படும் பெண்கள் துவிச்சக்கரவண்டி ஒன்றும் பூட்டுப்பூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றுக் காலை சம்பவ இடத்துக்குச் சென்ற மல்லாகம் மாவட்ட பதில் நீதிவான் ஆர்.வசந்தசேனன் மரண விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

  • தொடங்கியவர்

வவுனியாவில் சூட்டுக்காயங்களுடன் உடலம் மீட்பு

வவுனியா அண்ணாநகர் பூந்தோட்டம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை காலை கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்ட நிலையில் சூட்டுக்காயங்களுடன் உடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் இருமகளுர்தியில் சென்ற ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொல்லப்பட்டவர் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் எனவும் அடையாளம் காண்பதற்காக இவரது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • தொடங்கியவர்

யாழில் வர்த்தகர் சுட்டுக்கொலை.

யாழ்ப்பாணத்தில் வியாபாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  • தொடங்கியவர்

ஆள ஊடுருவும் அணியின் தாக்குதலில் இருபொதுமக்கள் பலி

சிறீலங்கா படையினரின் ஆள ஊடுருவும் அணியினர் நேற்று திங்கட்கிழமை காலை மடு பரப்புக்கண்டான் வீதியில் நான்காம் மைல் கல் அமைந்துள்ளபகுதியில் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் ஒரு தபால்காரர் மற்றும் பொதுமகன் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இதன்போது கொல்லப்பட்ட தபால்காரர் 48 அகவையுடைய அருளானந்தம் குரூஸ் என இனம் காணப்பட்டுள்ளார். மற்றயவர் பொதுமகன் இன்னமும் இனம் காணப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

தபால்காரர் முதலில் சென்.மேரிஸ் வீதி அடம்பன் பகுதியை சேர்ந்தவர் எனவும் பின்னர் இவரது கிராமத்தை நோக்கி சிறீலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களையடுத்து இவர் மடு அகதி முகாமிற்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது. கடந்த திங்கட்கிழமை வட்டகண்டல் பகுதியில் அமைந்துள்ள உதவித் தபால் நிலையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது காலை 10 மணியளவில் இவர் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இதன்போது வேறு ஒரு பொதுமகனும் அக்கிளைமோர் தாக்குதலில் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.

  • தொடங்கியவர்

காணமல் போனவர் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப் பகுதியில் ஒருவர் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.30மணியளவில் இடம்பெற்றுள்ளது. காமல் போனவர் முகம்மது நந்தகுமார் (26) என்பவரே காணமல் போயுள்ளார்.

காணமல் போன இவர் இன்று காலை கொட்டடிப் பகுதியில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். இவரது உடல் யாழ் போதனாவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

http://sankathi.org/news/index.php?option=...64&Itemid=1

  • தொடங்கியவர்

யாழில் டெனிஸ் கண்ணிவெடிப் பிரிவின் பணியாளர் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணத்தில் டெனிஸ் கண்ணிவெடிப் பிரிவின் பணியாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை 6 மணியளவில் மானிப்பாய் கோணாந்தோட்டப் பகுதியில இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்புத்துறை ஏ.பி வீதியில் நேற்று மதியம் 1.30 மணியளவில் கடத்தப்பட்ட கொழும்புத்துறையைச் சேர்ந்த 26 அகவையுடைய ஆனந்தன் நந்தகுமார் எனத் தெரியவருகிறது. சடலத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டுள்ளன. சடலம் யாழ் பொது மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் மற்றொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

யாழ்நகரில் இளைஞர் ஒருவரின் உடலம்

நேற்று புதன்கிழமை காலை சிறீலங்கா இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தில் யாழ்நகரின் மையப்பகுதியில் கொனன் தோட்டம் வீதி, கே.கே.எஸ் வீதி-வைத்தியசாலை வீதி அமைந்துள்ள சந்திக்கு அருகில் சூட்டுக்காயங்களுடன் இளைஞரின் உடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவர்கடந்த சேவ்வாய் மாலைமுதல் காணாமல் போயிருந்ததாக தெரியவருகிறது. இதன்போது கண்டெடுக்கப்பட்டவர் 26 அகவையுடைய அலி நந்தகுமார் எனவும் ஏ.வி வீதி கொம்மாந்துறைப்பகுதியில் வசித்து வருவதாகவும் தெரியவருகிறது

வலிகாமம் பகுதியில் இளைஞர் சடலம் கண்டெடுப்பு

கைவிடப்பட்ட நிலையில் உள்ள வீடொன்றின் மலசலகூடத்தினுள் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட இளைஞர் ஒருவரின் உடலம் சுன்னாகம் தெற்கு வலிகாமம் பகுதியில் திங்கட்கிழமை மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அயல்வீட்டுக்காரர்கள் துர்நாற்றம் வீசியதையடுத்து அப்பகுதி கிராமசேகவர் ஊடாக மேற்கொண்ட தேடுதலின்போதே இவ் உடலத்தை கண்டெடுத்துள்ளனர். தற்போது இவ்உடலமானது இனம் காண்பதற்காக யாழ் ஆசிரியர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

  • தொடங்கியவர்

புங்குடுதீவு கடற்கரையிலிருந்து தலையற்ற முண்டம் மீட்பு

[Wednesday March 14 2007 09:36:30 PM GMT] [யாழ் வாணன்]

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரையிலிருந்து தலை, கைகள், கால்கள் வெட்டப்பட்ட நிலையில் முண்டமொன்றை ஊர்காவற்றுறை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தமீனவர்கள் கடலில் மர்ம பொதியொன்று மிதந்து வருவதைக் கண்டு அருகிலுள்ள கடற்படையினருக்கு தெரிவித்துள்ளனர்.

  • தொடங்கியவர்

அக்கரைப்பற்றில் இளம் வர்த்தகர் சுட்டுக்கொலை

[16 - March - 2007] [Font Size - A - A - A]

அக்கரைப்பற்று சிப்பித்திடல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இளம் வர்த்தகரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்றிலிருந்து நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் கண்ணகிபுரத்திலுள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோதே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் இவரைப் பின்தொடர்ந்து வந்தவர்களே இவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். கண்ணகிபுரம் -1ஐச் சேர்ந்த நல்லதம்பி ரஜிகுமார் (வயது27) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்

  • தொடங்கியவர்

பெண் ஒருவர் படையினரின் பாலியல் வன்புனர்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை.

மட்டக்களப்பு தாந்தாமலையில் பெண் ஒருவர் சிறிலங்காப் படையினரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு தாந்தாமலையில் அப்பகுதி மக்கள் படையினரின் பிடிக்குள் அகப்பட்டு மனிதக் கேடயங்களாக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை படையினர் மட்டக்களப்பு நகருக்கு செல்லவிடாமலும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு செல்லவிடாமலும் தடுத்துள்ளனர்.

இவ்வாறு அடைபட்டிருக்கும் மக்களில் நேற்று முன்தினம் யுவதியொருவர் படையினரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்ப்படுக்கப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த மக்கள் சிறைக்கைதிகளாக்கப்படுவதுடன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.