Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தலைமைகளின் பெரும்தன்மையை சிங்களவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

Featured Replies

தமிழ் தலைமைகளின் பெரும்தன்மையை சிங்களவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

ruwan-308c8441e82fa96ea792155a4661211a5ccfdf51.jpg

 

இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன கூறுகிறார்
(ஆர்.யசி)

பெளத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை கொடுத்து ஒற்றை ஆட்­சிக்குள் அதி­கார பகிர்வு வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்தே தமிழ் தலை­மைகள் அழுத்தம் கொடுக்­கின்­றனவே தவிர பிரி­வி­னை­யினை ஒரு­ போதும் தூண்­ட­வில்லை. தமிழ் தலை­மை­களின் பெருந்­தன்­மை­யினை சிங்­கள தலை­மைகள் புரிந்துகொள்ளவேண்டும் என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன தெரி­வித்தார்.

வடக்கு,கிழக்கு இணைப்பு தொடர்பில் அர­சாங்கம் எந்­த­வித கலந்­து­ரை­யா­ட­லையும் முன்­னெ­டுக்­க­வில்லை. தமிழர் தரப்பும் இது­வ­ரையில் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­க­வு­மில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.


தெல்­கொடை பிர­தே­சத்தில் இடம்­பெற்ற பெளத்த நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

புதிய அர­சியல் அமைப்பு இந்த நாட்­டினை பிளவு படுத்­து­வ­தா­கவும், பிரி­வி­னை­வாத சக்­தி­க­ளுக்கு வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் வகை­யிலும், பெளத்த மதத்தை அழிக்கும் வகை­யிலும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாகவும் பொது எதி­ர­ணி­யினர் தொடர்ச்­சி­யாக பொய்ப்­பி­ர­சாரம் செய்து வரு­கின்­றனர்.

எனினும் அவ்­வா­றான எந்­த­வொரு முயற்­சி­க­ளையும் அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வில்லை. பெளத்த மதத்­திற்கு முக்­கி­யத்­துவம் என்ற கருத்தில் ஒரு­போதும் மாற்றம் இல்லை. பெளத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்கி, ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கார பகிர்வை முன்­னெ­டுக்­கவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. அதற்­கா­கவே நாம் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்க முயற்­சித்து வரு­கின்றோம்.

வடக்கு, கிழக்கு இணைப்பு என்ற கருத்து தொடர்பில் இது­வ­ரையில் அர­சாங்கம் எந்­த­வித கலந்­து­ரை­யா­ட­லையும் முன்­னெ­டுக்­க­வில்லை. அதற்­கான வாய்ப்­பு­களும் இல்லை. தமிழர் தரப்பும் இது­வ­ரையில் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­கவும் இல்லை.

அதி­கார பகிர்வு மூல­மாக நாட்டை துண்­டா­டவோ அல்­லது வடக்கு, கிழக்கு இணைப்பின் மூல­மாக தனி ஈழத்­தினை உரு­வாக்­கிக்­கொ­டுக்­கவோ எவரும் திட்டம் தீட்­ட­வில்லை. அர­சியல் இன­வா­திகள் தமக்கு சாத­க­மான வகையில் இந்த விவ­கா­ரத்தை பயன்­ப­டுத்­திக்­கொள்­கின்­றனர். பெளத்த மதத்தை வைத்து இவர்கள் பிரச்­சாரம் செய்து வரு­கின்­றனர்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட சிறு­பான்மை கட்­சிகள் அனைத்­துமே பெளத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­க­வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்தே அர­சியல் அமைப்பை உரு­வாக்க வலி­யு­றுத்தி வரு­கின்­றன. தமிழ் தலை­மைகள் தீர்வை மட்­டுமே எதிர்­பார்த்து செயற்­ப­டு­கின்­றனவே தவிர இன­வா­த­மாக செயற்­ப­ட­வில்லை.

ஆகவே தமிழ் தலை­மை­களின் பெருந்­தன்­மை­யினை சிங்­கள தலை­மைகள் சிந்­தித்­துப்­பா­ர்க்க வேண்டும். ஆனால் வருத்­த­ம­ளிக்கும் விடயம் என்­ன­வெனில் சில சிங்­கள தலை­மைகள் மாநா­யக தேரர்­களை சந்­தித்து தவ­றான கருத்­துக்­களை முன்­வைத்தும் சிலர் மாநா­யக தேரர்­களை விமர்­சித்தும் செயற்­ப­டு­வ­தாகும். அதேபோல் மாநா­யக தேரர்களை விமர்சிப்பது கட்சிக்கும் அரசியல் செயற் பாடுகளுக்கும் பொருத்தம் இல்லாத செயற்பாடாகும்.

ஆகவே கட்சி தலைவர்கள் இந்த விடயங்கள் குறித்து கூடிய அக்கறை செலுத்தி இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-09-26#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இவரின்ர ராஜதந்திரத்தை பாருங்கோ. வாழைப்பழத்தில ஊசி ஏத்தின மாதிரி தன்ர கருத்தை தமிழ்த் தலைமைகளின் கருத்தாக சொல்லிவிட்டார். அல்லது எங்கடையல் அப்பிடித்தான் அவன்ர காலில விழுந்து கிடக்குதுகளோ.

3 hours ago, நவீனன் said:

தமிழர் தரப்பும் இது­வ­ரையில் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்­கவும் இல்லை.

 

3 hours ago, நவீனன் said:

பெளத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை கொடுத்து ஒற்றை ஆட்­சிக்குள் அதி­கார பகிர்வு வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்தே தமிழ் தலை­மைகள் அழுத்தம் கொடுக்­கின்­றனவே தவிர

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.