Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஶ்ரீலங்கன் விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க பிரேரணை

Featured Replies

ஶ்ரீலங்கன் விமான சேவையின்  பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு  மேலதிக கொடுப்பனவு வழங்க பிரேரணை

 


ஶ்ரீலங்கன் விமான சேவையின்  பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு  மேலதிக கொடுப்பனவு வழங்க பிரேரணை
 

ஶ்ரீலங்கன் விமான சேவை எமது நாட்டின் தேசிய விமான சேவையாகும்.

எனினும் இந்த விமான சேவை தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான சுரேன் ரத்வத்தவிற்கு 10 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரதம நிறைவேற்று அதிகாரியான சுரேன் ரத்வத்தவையை சேவையில் இணைத்துக் கொள்ளும் போது செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு ஏற்ப நிபந்தனைகளை நிறைவேற்றியதன் பின்னர் மேலதிக கொடுப்பனவை வழங்க வேண்டும் என ஶ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அஜித் டயஸ் நியூஸ் பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

அதன்படி இந்த பிரேரணை அடங்கிய பத்திரமொன்று பணிப்பாளர் சபைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், பணிப்பாளர் சபை அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என ஶ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சுரேன் ரத்வத்த பிரதமரின் ஆலோசகரான சரித்த ரத்வத்தவின் சகோதரர் ஆவார்.

அவருக்கு 10 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க பிரேரணை முன்வைத்துள்ள ஶ்ரீலங்கன் விமான நிறுவனம், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டில் 28.2 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னராக நிதி ஆண்டில், நிறுவனம் 12.6 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டது.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் இவ்வாறு பில்லியன் கணக்கில் நட்டத்தை எதிர்நோக்கும் சந்தர்ப்பத்திலேயே மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளிட்ட 4 உயர்மட் அதிகாரிகள் மாதாந்தம் 3 மில்லியனுக்கும் அதிகமான சம்பளத்தை பெறுகின்றனர்.

பிரதம நிறைவேற்று அதிகாரியின் சம்பளம் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள தகவலறியும் சட்டத்திற்கு அமைய, ஶ்ரீலங்கன் விமான நிறுவன விமானிகள் சங்கம் பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதிலும், அவை நிராகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த அரசாங்கம் கொள்வனவு செய்வதற்கு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட விமானங்களை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், அதற்காக பாரிய நிதியை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர், பணிப்பாளர் சபை மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோர் தொடர்ந்தும் நட்டத்தை எதிர்நோக்கும் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் செயற்றிறனற்ற நிருவாகத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் அல்லவா?

 

http://newsfirst.lk/tamil/2017/10/ஶ்ரீலங்கன்-விமான-சேவையி-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.