Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பது நீண்­ட­கால கனவு மாத்­தி­ர­மே­யாகும் அமைச்சர் மனோ கூறு­கிறார்

Featured Replies

வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பது நீண்­ட­கால கனவு மாத்­தி­ர­மே­யாகும்

 

அமைச்சர் மனோ கூறு­கிறார் 

(ஆர்.யசி)

வடக்கு, கிழக்கு இணைப்பு என்­பது நீண்­ட­கால கனவு மாத்­தி­ர­ மே­யாகும். இது நடை­பெ­றுமா நிரா­க­ரிக்­கப்­ப­டுமா என்­பது குறித்து  எதையும் கூற இய­லாது. அவ்­வாறு வந்­தாலும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை பெற்­றுக்­கொண்டு முஸ்­லிம்­க­ளுக்கு தனி அல­குகள் வழங்­காமல் மாற்று வழியில் வடக்கு, கிழக்கு இணைப்பை உரு­வாக்க முடி­யாது என்று அர­ச­க­ரும மொழிகள் மற்றும்  தேசிய கலந்­து­ரை­யாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.  

 தமிழ் முஸ்லிம் மக்­களின் இறுதி வாய்ப்பு இப்­போது அமைந்­துள்­ளது. அர­சியல் ரீதியில் ஒரு தீர்­வுக்கு நாம் முயற்­சி­சிக்­கின்­றோமே தவிர ஆயுத ரீதியில் அல்ல எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தேர்தல் திருத்­தங்­களும் இடைக்­கால அறிக்­கையும் என்ற தொனிப்­பொ­ரு­ளி­லான தெளி­வூட்டல் செய­ல­மர்வு நேற்று கொழும்­பி­லுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­மை­ய­க­மான தாருஸ்­ஸ­லாமில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,  எமது போராட்­டத்தின் மூல­மாக மாற்­றத்­தினை உரு­வாக்கி இந்த அர­சாங்­கத்தை நாம் உரு­வாக்­கி­யுள்ளோம். ஆகவே இந்த அர­சாங்­கத்தை காப்­பாற்ற வேண்­டிய அவ­சி­யமும் அக்­க­றையும் எமக்கு உள்­ளது. அதற்­காக அர­சாங்­கத்தில் உள்ளோம் என்ற கார­ணத்­தினால் எமது மக்­களின் துய­ரங்­களை கண்டும் காணாதும் இருக்­கவும் இய­லாது. அர­சாங்­கத்­தையும் காப்­பாற்ற வேண்டும். எந்த நிலையில் மக்­களின் உரி­மை­க­ளையும் வென்­று­கொ­டுக்க வேண்டும். இந்த இரண்­டையும் கவ­னத்தில் கொண்டு செயற்­பட்டு வரு­கின்றோம். இன்று அர­சாங்­கத்­திற்குள் நண்­பர்­க­ளாக செயற்­படும் நபர்கள் பலர் அன்று எம்மை எதி­ரி­யாக பார்த்­தார்கள். அவர்­களை எல்லாம் சமா­ளித்தே இன்று நாம் எமது உரி­மைக்­காக போராடி வரு­கின்றோம்.  

எந்த நேரமும் ஆட்­சியை வீழ்த்த மஹிந்த ராஜபக் ஷ அணி­யினர் சந்­தர்ப்பம் பார்த்­து­கொண்­டுள்­ளனர். அதன் கார­ண­மா­கவே நாம் முக்­கி­ய­மான நேரங்­களில் எல்லாம் அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்தி வரு­கின்றோம். மாகா­ண­சபை தேர்தல் சட்­டத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பெறாது பிரே­ரணை தோற்­க­டிக்­கப்­பட்­டி­ருக்­கு­மாயின் அதன் மூல­மாக அர­சாங்­கத்தை தோற்­க­டிக்கும் பாரிய இலக்­கினை மஹிந்த அடை­யினர் அடைந்­தி­ருப்­பார்கள். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பலர் பஸில் ராஜபக் ஷவுடன் தொடர்­பு­கொண்டு அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேற தயா­ராக இருந்­தனர். ஆகவே இதனை தடுக்­கவே நாம் பல­மாக அர­சாங்­கத்­துடன் துணை­நின்று எமது அபி­லா­சை­களை வெற்­றி­கொள்ளும் பய­ணத்­தினை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். ஆகவே தேசிய ரீதி­யி­லான பய­ணத்தில் நாம் முரண்­டு­பி­டித்து செயற்­பட முடி­யாது. அவ்­வாறு செயற்­பட்டால் நாட்டின் பிரச்­சி­னைக்கு நாமே காரணம் என முத்­திரை குத்­தி­விடும் நிலைமை ஏற்­பட்­டு­விடும்.

நாம் இந்த நாட்டின் தேசியம் குறித்து அதிக அக்­கறை உள்­ள­வர்கள். தமிழர், முஸ்லிம் என பாகு­பாடு இருக்­கலாம் ஆனால் முதலில் நாம் அனை­வரும் இலங்­கை­யர்கள். எனினும் தமிழ் முஸ்லிம் மக்­களின் இறுதி வாய்ப்பு இப்­போது அமைந்­துள்­ளது, அர­சியல் ரீதியில் ஒரு தீர்­வையே நாம் முயற்­சி­சிக்­கின்­றோமே தவிர ஆயுத ரீதியில் அல்ல. ஆயுதம் ஏந்­தி­யது இப்­போது வர­லா­றாக மாறி­விட்­டது. அர­சியல் ரீதியில் எமது உரி­மை­களை வெற்­றி­கொள்­ளவே எமது பிர­தி­நி­தித்­து­வத்தை பலப்­ப­டுத்த முயற்­சி­கின்றோம். வாய்ப்பை தாருங்கள், எங்­க­ளையும் விளங்­கிக்­கொள்­ளுங்கள். நாம் இன­வா­திகள் அல்ல. உண்­மை­யான தேசிய வாதிகள் . வர­லாற்றை புரட்­டிப்­பார்த்து எங்கு தவ­றி­ழைத்­தீர்கள் என்­பதை சிந்­தித்து பாருங்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு ஒரு குடும்ப ஏகா­தி­பத்­திய ஆட்­சியை தோற்­க­டித்து மீண்டும் இரண்டு கட்­சி­களின் ஏகா­தி­பத்­திய ஆட்­சி­யினை உரு­வாக்க நாம் வாக்­க­ளிக்­க­வில்லை. அனை­வ­ரதும் உரி­மை­களை வெற்­றி­கொண்டு அதன் மூலம் தேசிய பய­ணத்தை உரு­வாக்­கவே நாம் முயற்­சித்தோம். அதனை பெரும்­பான்மை சமூ­கங்­களும் கட்­சி­களும் தெளி­வாக விளங்­கிக்­கொள்­ளுங்கள்.

புதிய அர­சியல் அமைப்பு வருமா வராதா என்­பது குறித்து எமக்கு தெரி­யாது. வரலாம் வரா­மலும் போகலாம். ஆனாலும் புதிய அர­சியல் அமைப்பில் சமஷ்டி வரப்­போ­வ­தில்லை, வடக்கு கிழக்கு இணை­யப்­போ­வ­தில்லை, பெளத்த மதம் பாதிக்­கப்­ப­டப்­போ­வ­தில்லை. ஆனால் இவற்­றைக்­கூ­றியே இன்று பேரி­ன­வாத சக்­திகள் கூச்சல் போட்டு வரு­கின்­றனர். வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்­லிம்­களின் நிலை­மைகள் எமக்கு தெரியும். உண்­மையில் வடக்கு கிழக்கு இணைப்பு வருமா என்­பது எனக்கு எனக்கு தெரி­யாது. வந்தால் நல்­ல­தே­யாகும். ஆனால் இவை நீண்­ட­கால கன­வாகும். அவ்­வாறு வந்தாலும் முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு முஸ்லிம்களுக்கு தனி அலகுகள் வழங்கப்படாது மாற்று வழியில் வடக்கு கிழக்கு இணைப்பை உருவாக்க முடியாது. ஆனால் இவை நீண்டகால கனவாக வைத்துவிட்டு இப்போது நடக்கும் விடயத்தை பார்க்க வேண்டும். இல்லையேல் இது இழவுகாத்த கிளியைப்போல இணைப்பு வரும் என நினைத்து காலத்தை கடத்துவை மாத்திரமே இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.