Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொண்டராசிரியர் நியமனத்தில் முறைக்கேடு

Featured Replies

தொண்டராசிரியர் நியமனத்தில் முறைக்கேடு
 

க.அகரன்

வட மாகாண சபையால் வழங்கப்படவுள்ள தொண்டராசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா தெற்கு கல்வி வலய தொண்டராசிரியர்கள் இன்று (06) காலை  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட மாகாண சபையினால் ஆசிரியர் நியமனத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ள 182 தொண்டராசிரியர்களின் பெயர்ப்பட்டியலில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், தகுதியானவர்களின் பெயர்கள் தெரிவுப்பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொண்டராசியர்களாக  கடமையாற்றிய தாம் பல தடவைகள் நேர்முகத்தேர்வுகளுக்கு சென்றிருந்த போதிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அரசியல் செல்வாக்கின் காரணமாகவே இமமுறையும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.

 

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தொண்டராசிரியர்-நியமனத்தில்-முறைக்கேடு/71-205077

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அரசியல் செல்வாக்கின் மூலமாக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது : வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய தொண்டராசிரியர்கள் இன்று வலயக் கல்வி காரியாலயத்திற்கு முன்பாக சுமார் ஒரு மணிநேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Local_News.jpg

வட மாகாண சபையில் ஆசிரியர் நியமனத்திற்கு உள் வாங்கப்பட்டுள்ள 182 தொண்டராசிரியர்களின் பெயர்ப் பட்டியலில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகுதியானவர்களின் பெயர்கள் தெரிவுப்பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் தெரிவித்தே குறித்த தொண்டராசிரியகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG_4965.JPG

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொண்டராசிரியர்களாக கடமையாற்றிய தாம் பல தடவைகள் நேர்முகத்தேர்வுகளுக்கு சென்றிருந்த போதிலும் தாம் புறக்கணிக்கப்பட்டு அரசியல் செல்வாக்கின் மூலமாக குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தமக்கான நியமனங்கள் நீதியாக வழங்கப்படாத நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/25394

  • தொடங்கியவர்
கல்வி அமைச்சுக்கு எதிராக முறைப்பாடு
 

க.அகரன்

வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் 25 பேர், இன்று (06) வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வடமாகாணத்தில் கடந்த பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வந்தவர்களை ஆசிரிய சேவையில் உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றிருந்தன.

இந்நேர்முகத் தேர்வில் 1,046 பேர் தோற்றியிருந்த நிலையில் 676 பேர் நியமனம் பெற தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டு, அந்நியமனத்துக்கான மத்திய அமைச்சரவை அங்கிகாரமும் கிடைத்திருந்தது. இந்நிலையில், வடமாகாண கல்வி அமைச்சு 182 பேரே தகுதி பெற்றுள்ளதென தெரிவித்து, அவர்களை நிரந்தர நியமனத்தில் உள்ளீர்ப்பதற்கான பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளது.

யுத்த காலப்பகுதியிலும் அதனை அண்டிய காலப்பகுதியில் நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் நாம், வலய மட்டத்திலும், மாகாண, மத்திய அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட பல நேர்முகத் தேர்வுகளில் தோற்றியிருந்த போதும் கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியா தெற்கு வலய தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நியமனத்திலும் அரசியல் தலையீடு காரணமாக சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நீண்டகாலம் கற்பித்து வரும் தாம் கோரப்பட்ட தகமைகள், ஆவணங்கள் இருந்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், கோரப்பட்ட தகமைகள் மற்றும் ஆவணங்களை கொண்டிராத சிலர் உள்ளவாங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த நேர்முகத் தேர்வில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவே தாம் கருதுவதாகவும் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள், தமக்கு நீதியைப் பெற்றுத் தருவதுடன,  நிரந்தர நியமனத்தில் தம்மையும் உள்வாங்க வேண்டும் எனக் கோரியே மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், வடமாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி அபிராமி பாலமுரளி, வடமாகாண சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஏ.சாந்தசீலன் ஆகியோருக்கு எதிராகவே பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் சார்பாக 25 பேர் முறைப்பாடு செய்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கல்வி-அமைச்சுக்கு-எதிராக-முறைப்பாடு/71-205085

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.