Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி சிறுவா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் வைத்தியசாலையில்

Featured Replies

கிளிநொச்சி சிறுவா் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் வைத்தியசாலையில்

image-0-02-06-5082b8dd3efa0316e30d276f8f
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சியில் இயங்கி வருகின்ற மகாதேவ சைவ சிறார் இல்லத்தில் சித்திரவதைக்குள்ளான ஜந்து சிறுவா்கள் சிறுவா் நன்நடத்தை மற்றும் சிறுவா் பாதுகாப்பு  அதிகாரிகளால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனா்

குறித்த ஜந்து சிறுவா்களும் மின்சார வயர்  மற்றும் ஹொக்கி பட் போன்றவற்றால் தாக்கப்பட்டுள்ளனா் எனவும் உடலின் பல பகுதிகளிலும்  உட்காயங்கள் இருப்பதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. எனவே சட்ட மருத்துவ  அதிகாரியின் பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இன்று குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்த யாழ்ப்பாணத்தை சிறுவன் ஒருவன் தனது தந்தையுடன் சென்று இலங்கை மனித உரிமைகள்  ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில்   தனக்கு நிகழ்ந்து சித்திரவதை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்தமையினை தொடர்ந்தே குறித்த விடயம் வெளியில்  தெரியவந்துள்ளது.

இதனையடுத்தே அதிகாரிகளால் மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுவா்கள்  சித்திரவதைக்குள்ளான சம்பவம் இரண்டு வாரங்களுக்கு முன் இடம்பெற்றது எனத்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களை சிறுவா்கள் வெளியில் தெரிவிக்க அச்சமடைந்து காணப்படுகின்றனா் எனவும் எனவேதான் அவர்களை  சிறுவா் இல்லத்திலிருந்து வெளியே எடுத்து வைத்தியசாலையில்  அனுமதித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

குறித்த சிறுவர் இல்லத்தில் யுத்தத்தில் தாய், தந்தை, பெற்றோர்களை இழந்த சிறுவா்களும், சிறுமிகளும், மற்றும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட சிறுவர்களும் உள்ளனா். போரினால் ஏற்பட்ட பல்வேறு உளவியல்  தாக்கங்களுக்கு உள்ளான சிறுவா்கள் தங்களின் நிலைமையினை கருதி சிறுவா் இல்லங்களில் தஞ்சமடைந்துள்ள நிலையில் அங்கும் அவர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

image-0-02-06-bd716c503bf3f0e453cabf773aimage-0-02-06-faf91d329a20d2eeb7d9174b74

http://globaltamilnews.net/archives/44176

  • தொடங்கியவர்

சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுவனுக்கு நடந்த கொடூரம் 

 

(ரி.விரூஷன்)

கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்து படித்த சிறுவன் ஒருவனை அச் சிறுவர் இல்ல பொறுப்பாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்கி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

children1.jpg

இச் சம்பவம் தொடர்பாக யாழ்.மனிதவ உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

 

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியை சேர்ந்த தனுஜன் என்ற சிறுவனே இவ்வாறு மூர்க்கத்தனமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக  பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தையான பிறேம்குமார்  வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவிக்கையில்,

22278739_978311208986915_69110496_n.jpg

எனது மகன் யாழ்.மத்திய கல்லூரியில் கல்வி கற்று வந்த நிலையில் குடும்பத்தின் வறுமை நிலை காரணமாகவும் மகனின் கல்வி நிலையை முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மகாதேவா சிறுவர் இல்லத்தில் சேர்ந்திருந்தேன். இவ்வாறு மகனை சேர்த்து நான்கு மாதங்கள் வரையிலேயே வரும்.

இந்நிலையில் கடந்த நான்காம் திகதி எனக்கு குறித்த ஆச்சிரமத்தில் இருந்து தொடர்புகொண்டு உங்கள் மகனை வந்து கூட்டிச் செல்லுமாறு கூறியிருந்தார்கள. நான் அங்கு சென்று ஏன் எனது மகனை வெளியேற்றுகின்றீர்கள் என கேட்ட போது உங்களது மகன் வேறு சில சிறுவர்களோடு சேர்ந்து பெண் பிள்ளைகளுக்கு கடிதம் கொடுத்தார். எனவே அவனை கூட்டிச செல்லுங்கள் என கூறியிருந்தார்.

இதற்கு நான் அப்படியாயின் கொடுத்த கடித்தத்தினை காட்டுங்கள் என கேட்ட போது அதற்கு அதனை மறுத்திருந்தார்கள். இதன் பின்னர் நான் எனது மகனை கூட்டிக்கொண்டு செல்லும் போதே ஏனைய சிறுவர்களிடம் என்ன நடந்தது என கேட்டபோது அதற்கு அவர்கள் உங்களது மகனுக்கு அடித்துள்ளார்கள் என கூறினார்கள்.

அதன் பின்னரே நான் எனது மகனிடம் என்ன நடந்தது என கேட்டபோது, தாம் அச் சிறுவர் இல்லத்தின் வளவில் உள்ள தென்னை மரமொன்றில் இளநீர் குடிக்க போனதற்காக, தென்னை மரத்தின் கீழ் முட்டுக்காலில் கட்டி வைத்து மூன்று வயர்களை ஒன்றாக பின்னி மூர்க்கத்தனமாக அடித்ததாகவும் பின்னர் மாலை நேர வகுபபுக்கு செல்லவில்லை என கூறி அங்கு தங்கியிருந்த உயர்தரம் படிக்கும் மாணவன் ஒருவன் தன்மீது விக்கட் கட்டையால் அடித்ததாகவும்  தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறு தமக்கு அடித்து விட்டு உடனே ஐஸ் கட்டிகளை போட்டு அடித்த தழும்புகளை மறைத்ததாகவும் தெரிவித்திருந்தார். இதன்போது நான் மகனின் உடலை அவதானித்து பார்த்த போதே அவரது  உடலின் பின்பகுதி கால் என உடலின் பல இடங்களில் காயங்களும் தளம்புகளும்  காணப்பட்டன. அத்துடன் கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு பின்னர் தொடர்ச்சியாக பாடசாலை செல்ல விடாது தடுத்து வைத்திருந்ததாகவும் எனக்கு மகன் தெரிவித்தார்.

இதன் பின்னரே நான்  மீண்டும் அவர்களிடம் சென்று ஏன் எனது மகனுக்கு அடித்தீர்கள் என கேட்டபோது தாம் அடிக்கவில்லை என தெரிவித்தனர். இதனபோது  நான் எனது மகனின் உடம்பில் இருந்த தழும்புகளை காட்டி கேட்டபோது அதற்கு பின்னரே அவர்கள் உங்களது மகனுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை இங்கே விட்டுவிட்டு போங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என தெரிவித்தனர். எனினும் நான் எனது மகனை அங்கே இனிமேலும் விட்டு விட்டு செல்ல முடியாத நிலையில் அழைத்து வந்துவிட்டேன்.

இச் சம்பவம் தொடர்பாக யாழ்.சிறுவர் பெண்கள் பாதுகாப்பு  பொலிஸாரிடம் முறைப்பாடொன்று செய்ய சென்ற போது குறித்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதால் அங்கேயே முறைப்பாடு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக சிறுவர் துஷ்பிரயோக பிரிவின் அவசர இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு  முறைப்பாடு செய்ததுடன் யாழ்.மனிதவ உரிமை ஆணைக்குழுவிலும் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளேன். என பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/25406

  • தொடங்கியவர்

 

யாழ்; சிறுவர் இல்லத்தில் தமிழ் மாணவன் சித்திரவதை

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையான இல்லம் என்று என்னாலேயே சிலருக்கு சிபாரிசு செய்ப்பட்டது.இப்ப யோசிக்க வேண்டியுள்ளது.:unsure:tw_anguished:

  • தொடங்கியவர்

மாணவர்களை அதிகாரிகள் எவரும் தாக்கவில்லை: கிளி மகாதேவ சிறுவர் இல்லத் தலைவர் குளோபளுக்கு கடிதம்:-

மாணவர்களை அதிகாரிகள் எவரும் தாக்கவில்லை என்று கிளிநொச்சி மகாதேவ சிறுவர் இல்லத் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசு அதிபருமான தி. இராசநாயகம் தெரிவித்தார்.

குறித்த சிறுவர் இல்லத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறுவன் ஒருவனின் தந்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பாக குளோபல் தமிழ் செய்திகள் அறிக்கையிட்டிருந்தது. இது தொட‌ர்பாக சிறுவர் இல்லத் தலைவர் குளோபல் தமிழ் செய்திகளுக்கு எழுதிய கடிதத்தை இங்கே இணைத்துள்ளோம்.
-ஆசிரியர்

a-218x300.jpg

b-218x300.jpgc-218x300.jpg

http://globaltamilnews.net/archives/44326

  • தொடங்கியவர்

சிறு­வர் இல்­லத்­தில் தாக்­கப்­பட்ட 5 சிறு­வர்­கள் பொலி­ஸா­ரால் மீட்பு

 
 
 
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

கிளி­நொச்சியில் உள்ள சிறு­வர் இல்­லத்­தில் மேற்­பார்­வை­யா­ளர்­க­ளால் மின்­சா­ர­வ­யர் மூலம் தாக்­கப்­பட்­ட­னர் எனக் கூறப்­பட்ட 6 சிறு­வர்­க­ளில் 5 பேர் பொலி­ஸா­ரால் மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

மனித உரி­மை­கள் ஆணைக்­குழு மற்­றும் பொலி­ஸா­ரி­டம் செய்­யப்­பட்ட முறைப்­பாட்டை அடுத்து இவர்­கள் மீட்­கப்­பட்­ட­னர்.

ஒரு­வர் ஏற்­க­னவே வெளி­யில் வந்­து­விட்­டார். அவர் வழங்­கிய தக­வ­லுக்கு அமை­யவே ஏனைய 5 பேரும் மீட்­கப்­பட்­ட­னர்.

கிளி­நொச்­சி­யில் உள்ள இல்­லத்­தில் இள­நீர் பறிக்க முயன்­ற­ போது மேற்­பார்­வை­யா­ளர்­க­ளால் இவர்­கள் தாக்­கப்­பட்ட­னர் என்று கூறப்­ப­டு­கி­ற­து.

பின்­னர் இவர்­கள் பாட­சாலை செல்­ல­வும் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. இந்தத் தகவல் அந்த இல்லத்தில் இருந்து வீட்­டுக்கு அழைத்­து­வ­ரப்­பட்ட கந்­தர்­ம­டத்தைச் சேர்ந்த சிறு­வன் மூலம் வெளி­வந்­தி­ருந்தது.

தன்­னைப்­போன்று மேலும் ஐந்து சிறு­வர்­கள் காயம் வெளி­யில் தெரிந்­து­வி­டும் என்­ப­தற்­காக பாட­சா­லைக்­குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டாது தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என அந்தச் சிறுவன் குறிப்­பிட்­டி­ருந்தான்.

இது­தொ­டர்­பில் சிறு­வ­னின் பெற்­றோர் நேற்­று­முன்­தி­னம் யாழ்ப்­பா­ணம் மனித உரிமைகள் ஆணைக்­கு­ழு­வில் முறை­யிட்­ட­னர்.

மனித உரிமைகள் ஆணைக்­குழு இணைப்­பா­ளர் கன­க­ராஜ் குறித்த விட­யத்தை பொலி­ஸா­ரின் கவ­னத்துக்குக் கொண்டு சென்­றார்.

இத­னை­ய­டுத்து நேற்­று­முன்­தி­னம் மாலை­யில் குறித்த இல்­லத்­திற்­குச் சென்ற பொலி­ஸார் ஏனைய ஐந்து மாண­வர்­க­ளை­யும் மீட்டு மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­த­ன­ர் மேல­திக விசா­ர­ணை­க­ளில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

http://newuthayan.com/story/35320.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.