Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார இரத்து, பாராளுமன்றம் ஊடாக தெரிவு செய்தல் என்பன யாருடைய யோசனை?

Featured Replies

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார இரத்து, பாராளுமன்றம் ஊடாக தெரிவு செய்தல் என்பன யாருடைய யோசனை?

 

 

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார இரத்து, பாராளுமன்றம் ஊடாக தெரிவு செய்தல் என்பன யாருடைய யோசனை?
 

அரசியலமைப்பு சபையின் வழிபடுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

மக்களின் வாக்குகள் மூலமே தற்போது இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுகிறார்.

எனினும், ஜனாதிபதி குறித்த பதவிக்காலத்திற்கு பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட வேண்டும் என அரசியலமைப்பு சபையின் வழிபடுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையில் எட்டாம் பிரிவில் மூன்றாவது பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பாராளுமன்றம் மூலம் கிடைத்த அனுபவங்களை நோக்கும் போது, இது எந்தளவு நியாயமான பிரேரணை என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை அதிகரித்துக்கொள்ளல், சுயாதீன ஆணைக்குழு மற்றும் அதிகாரத்தைக் குறைத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் உள்வாங்கப்பட்ட அரசியலைமைப்பின் 18 ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாத அளவிற்கு ஒரு சில மணித்தியாலங்களில் மூன்றில் இரண்டிற்கும் அதிகமாக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபை திருத்த சட்டமும் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டும் அதிகமான வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டது.

முதல் பகுதியில் காணப்படாத பல சரத்துக்கள் குழுநிலையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டிருந்தன.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான பல விடயங்களுக்கு மக்கள் கருத்துக் கணிப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்து.

எனினும், அந்த திருத்தத்தின் சில சரத்துக்கள் மாகாண சபை தேர்தல் திருத்த சட்டத்திற்கு சூட்சுமமாக உள்வாங்கப்பட்டுள்ளதாக தற்போது குற்றம் சுமத்தப்படுகின்றது.

அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் பெற்றுக்கொள்வதற்காக நிதி மற்றும் சலுகைகளை வழங்கிய பல சம்பவங்களும் அண்மையில் பதிவாகின.

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆதரவைப் பெற்றுக்கொள்ள பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அறியக்கிடைக்கிறது.

இதன்படி, ஜனாதிபதியை பாராளுமன்றத்தினால் நியமிப்பதற்கு விருப்பம் தெரிவிக்காத ஒருவருக்கு பணம் மற்றும் சலுகைகளை வழங்கி, பாராளுமன்ற உறுப்பினர்களின் இணக்கத்தைப் பெற்றுக்கொண்டு அதிகாரத்திற்கு வருவதற்கான சந்தர்ப்பம் கிட்டுகின்றது அல்லவா?

அத்துடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்ய வேண்டும் என்ற பொது இணக்கப்பாடு உள்ளதாக வழிபடுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வேறு கருத்தினைத் தெரிவிக்கின்றனர்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக நீக்குவது புத்திக்கு சிறந்தது அல்லவென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பது அவசியம் என குறிப்பிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி நேரடியாக மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியலமைப்பு சபையின் வழிபடுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கைக்கு பல கட்சிகள் உத்தேச யோசனைகளை முன்வைத்துள்ள போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி அதனை முன்வைக்கவில்லை.

அவ்வாறு என்றால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்தல் மற்றும் ஜனாதிபதியை பாராளுமன்றம் ஊடாக தெரிவு செய்ய வேண்டும் என்பது யாருடைய யோசனை?

 

http://newsfirst.lk/tamil/2017/10/112216/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.