Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண அமைச்சர்களால் தனக்கு பாரிய அவமானம்-சி.வி.கே.சிவஞானம்

Featured Replies

வடக்கு மாகாண அமைச்சர்களால் தனக்கு பாரிய அவமானம்-சி.வி.கே.சிவஞானம்

 

 

வடக்கு மாகாண அமைச்சர்களால் தனக்கு பாரிய அவமானம்-சி.வி.கே.சிவஞானம்

வடக்கு மாகாண அமைச்சர்களால் தனக்கு பாரிய அவமானம் ஏற்பட்டுள்ளதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மாகாண சபையின் 107 ஆவது அமர்வு பேரவை கட்டடத்தில் நடைபெற்றது.
இதன்போது அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகளுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்திய பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த பிரேரணையை சமர்ப்பித்து அவைத்தலைவர் உரையாற்றிய பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா உள்ளிட்ட உறுப்பினர்கள் தத்தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உரையாற்ற முற்பட்ட போது அதற்கு அனுமதியளிக்காத அவைத்தலைவர் இன்றைய அமர்வில் முதலமைச்சரும் பங்குகொள்ளாத நிலையில் அமைச்சர்கள் நேரத்திற்கு சபைக்கு சமூகமளிக்க வேண்டும் என கூறினார்.
எனினும் அவைத் தலைவரின் இந்த கருத்தை மறுத்த அனந்தி சசிதரன் தாம் நேரத்திற்கு சபை கட்டடத்திற்குள் வந்து விட்டதாகவும், ஆனால் வெளியில் தொண்டர் ஆசிரியர்கள் நின்றதால் அவர்களை சந்தித்து பேசியதால் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
அதனையும் ஏற்க மறுத்த அவைத்தலைவர், தொண்டர் ஆசிரியர்களை சந்தித்தது அமைச்சரின் தனிப்பட்ட விடயம் எனவும், சபைக்கு நேரத்திற்கு வரவேண்டியது அமைச்சர்களின் கடமை எனவும் எச்சரித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவைத்தலைவர், சபையில் ஆசனங்கள் வெறுமையாக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் தன்னிடம் முறையிடுவதாக தெரிவித்தார்.
எனவே சபைக்கு வருகைதராத அமைச்சர்களால் தாம் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கடும் தொனியில் கூறினார்.(15)

http://www.samakalam.com

  • தொடங்கியவர்

தாமதமாக வந்து கருத்துக் கூறிய அனந்தி மீது சி.வி.கே. பாய்ச்சல்

 
தாமதமாக வந்து கருத்துக் கூறிய அனந்தி மீது சி.வி.கே. பாய்ச்சல்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

வடக்கு மாகாண கூட்­டு­றவு அமைச்­சர் அனந்தி சசி­த­ரன் நேற்­றுச் சபைக்­குத் தாம­த­மா­க ­வந்து கருத்­துக்­கூற முற்­பட்­ட­தால் அவைத் தலை­வர் அவ­ருக்­கு ¨எச்சரித்தார்.

சபை அமர்­வு­கள் ஆரம்­பிக்­கும்­ போது அமைச்­சர்­கள் மற்­றும் உறுப்பி­னர்­கள் இருக்­க­வேண்­டும் என்­பது கட்­டா­யம் – என்று அவைத் த­லை­வர் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

மாகா­ண­ச­பை­யின் 107ஆவது அமர்வு அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது.

இந்த அமர்­வின் ஆரம்­பத்­தில் அவைத் தலை­வ­ரால் அர­சி­யல் கைதி­கள் தொடர்­பான பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்­டது.

உறுப்­பி­னர்­கள் அது­தொ­டர்­பில் கருத்­து­களை முன்­வைத்­துக் கொண்­டி­ருந்­த­னர். கருத்­து­க­ளைக் கேட்­ட­றிந்த பின்­னர் பிரே­ரணை ஏக­ம­ன­தாக நிறை­ வேற்­றப்­பட்­டது.

அரச தலை­வ­ருக்கு அது மின்­னஞ்­சல் ஊடாக அனுப்­பி­வைப்­ப­தாக முடி­வெடுக் கப்பட்டது. அவ்­வேளை சபைக்­குள் நுழைந்­தார் வடக்கு மாகாண கூட்­டு­றவு அமைச்­சர் அனந்தி சசி­த­ரன். அவர் சடு­தி­யாக எழுந்து கருத்­து­க­ளைப் பதி­விட முயன்­றார்.

அப்­போது அவைத்­த­லை­வர்,
‘‘பிரே­ரணை தொடர்­பான கருத்­து­கள் உள்­வாங்­கப்­பட்டு அந்த விட­யம் முடி­வு­றுத்­தப்­பட்­டு­விட்­டது. நீங்­கள் இனி கருத்­துத் தெரி­விக்­க­மு­டி­யாது. சபை ஆரம்­பிக்­கப்­பட்டு இவ்­வ­ளவு நேரம் கழித்­து­வந்­துள்­ளீர்­கள். நீங்­கள் நினைத்­த­வாறு கருத்­து­க­ளைக் கூற­மு­டி­யாது’’ – – எனக் காட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

இத­னால் சபை­யில் சிறி­து­நே­ரம் இரு­வ­ருக்­கும் இடை­யில் சூடான விவா­தம் இடம்­பெற்­றது.
‘‘நான் சபைக்கு வெளியே தொண்­டர் ஆசி­ரி­யர்­களை சந்­தித்­த­மை­யா­லேயே சபைக்கு பிந்தி வந்­தேன்’’ என அனந்தி தெரி­வித்­தார்.

அத­னைத் தொடர்ந்து பேசிய அவைத்­த­லை­வர், ‘‘தொண்­டர் ஆசி­ரி­யர்­கள் பிரச்­சினை சம்­பந்­த­மாக கதைக்க கல்வி அமைச்­சர் இருக்­கின்­றார். நீங்­கள் உங்­கள் கட­மை­களைவிட்டு வேறு தேவை­யில்­லாத விட­யத்­துக்குச் சென்­று­விட்டு இங்­கு­வந்து சாக்­குப்­போக்­குச் சொல்­லா­தீர்­கள்’’ – எனத் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/35089.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.