Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவு ஒறுப்பை கைவிட அரசியல் கைதிகள் மறுப்பு

Featured Replies

உணவு ஒறுப்பை கைவிட அரசியல் கைதிகள் மறுப்பு

 
உணவு ஒறுப்பை கைவிட  அரசியல் கைதிகள் மறுப்பு
 Share
  •  
  •  
  •  
  •  
  •  
 

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் உணவு ஒறுத்து போராட்­டம்­ ந­டத்­தி­வ­ரும் அர­சி­யல் கைதி­கள் தமது போராட்­டத்­தைக் கைவி­ட­வேண்­டும் என்ற வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளின் கோரிக்­கையை நிரா­க­ரித்த­னர்.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் ஆறு பேர் நேற்று அநுரா­த­பு­ரம் சிறைச்சா­லைக்குச் சென்று போராட் டத்­தில் ஈடு­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­க­ளைப் பார்­வை­யிட்­ட­னர்.

கைதி­க­ளின் கோரிக்கை தொடர்­பில் வடக்கு மாகாண சபை மேற்­கொண்ட நட­வ­டிக்கை தொடர்­பில் உறுப்­பி­னர்­கள் கைதி­க­ளுக்கு எடுத்­துக்­கூ­றி­னர்.

அத்­தோடு கைதி­க­ளின் விவ­கா­ரத்தை அரச தலைவரின் கவ­னத்துக்கு தீர்மா­ன­மாக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தை­யும் சுட்­டிக்­காட்­டி­னர்.

தமது முயற்­சி­கள் தொட­ரும் என்­றும் உறு­தி­ய­ளித்­த­னர். எனவே போராட்­டத்தை இடை­நி­றுத்­து­வது குறித்­துச் சிந்­திக்­கு­மா­றும் கோரி­னர்.

ஆனால், தமது கோரிக்கை தமது விடு­த­லையோ தண்­ட­னைக் குறைப்போ அல்ல; மாறாக வழக்கு விசா­ர­ணை­களை இது­வரை நடத்தி வந்­தது போன்று வவு­னி­யா­வி­லேயே நடத்த வேண்­டும் என்­ப­து­தான் என்­ப­தைச் சுட்­டிக்­காட்டி, அத­னைச் செய்­யாத வரை­யில் தமது போராட்­டத்­தைக் கைவி­டப்­போ­வ­தில்லை என்று உறு­தி­யா­கத் தெரி­வித்­து­விட்­ட­னர்.

அநு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றம் முழு­மை­யாக சிங்­க­ள­வர்­க­ளால் இயங்­கு­வது என்­ப­தால் அங்கு முற்­ப­டு­வ­தற்­குத் தமது தரப்­புத் தமிழ்ச் சட்­டத்­த­ர­ணி­கள் தயங்­கு­கி­றார்­கள் என்­றும் சட்­டத்­த­ர­ணி­கள் இல்­லாத நிலை­யில் தங்­க­ளா­லும்­ கூட தமது தரப்பு நியா­யத்தை நீதி­வான் முன்­னி­லை­யில் தெரி­விக்­கவே சந்­தர்ப்­பம் கிட்­டாது, ஏனெ­னில் தமக்­குச் சிங்­க­ளம் தெரி­யாது என்­ப­தை­யும் அத◌­னா­லேயே வழக்கை வவு­னி­யா­வில் தொடர்ந்து நடத்­து­மாறு தாம் கோரு­கின்­றார்­கள் என்­றும் கைதி­கள் தெளி­வு­ப­டுத்­தி­னர்.

வடக்கு மாகாண சபையை சேர்ந்த சி.வி.கே சிவ­ஞா­னம் , அனந்தி சசி­த­ரன் , சத்­தி­ய­லிங்­கம் , சிவா­ஜி­லிங்­கம் , சுகிர்­தன் , தவ­நா­தன் ஆகி­யோர் கைதி­க­ளு­ட­னான நேற்­றைய சந்­திப்­பில் கலந்­து­கொண்­ட­னர்.

http://newuthayan.com/story/35208.html

  • தொடங்கியவர்

அனுராதபுரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் நீராகாரத்திற்கு மறுப்பு

 
தமிழ் அரசியல் கைதிகள் மூவர் அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் இன்று தொடக்கம் நீராகாரத்தையும் நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். 
அனுராதபுரத்தில்  தமிழ் அரசியல் கைதிகள் நீராகாரத்திற்கு மறுப்பு
 
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை  வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான மாகாணசபை உறுப்பினர் நேற்று சந்தித்த போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரத்தில்  தமிழ் அரசியல் கைதிகள் நீராகாரத்திற்கு மறுப்பு
   
மாகாணசபை உறுப்பினர்களின் குழுவில் இடம்பெற்றிருந்த அனுராதபுர சிறைச்சாலையில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இது தொடர்பாக தகவல் வெளியிடுகையில், 
 
21 தமிழ் அரசியல் கைதிகள் அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 
 
உண்ணாவிரதம் இருந்து வரும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்குகள் 58 தடவைகள் வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டு விசாரணை செய்யப்படவில்லை.
 
 
இந்த சூழ்நிலைக்கு அரசு தரப்பு சாட்சிகளான 67 பேரில் 3 பேர் அரச படைகளை சேராதவர்கள். ஆரம்பத்தில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.  தற்போது திடீரென்று அனுராதபுர மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதாக அறிவித்துள்ளனர். இதனை எதிர்த்து தான் அவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
இன்று முதல் நீர் ஆகாரம் இன்றி போராட்டத்தை தொடரப்போவதாக தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்தனர். 
 
அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் போராட்டத்தை நிறுத்த முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் வழங்கிய காரணம் நியாயமானது என்று தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Tamil-political-prisoners-deny-water

  • தொடங்கியவர்

அரசியல்கைதிகள் மூவரினதும் உடல்நிலை மோசமடைந்தமையால் வைத்தியசாலையில் அனுமதி

 

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் உள்ள அரசியல்கைதிகள் மூவரினதும் உடல்நிலை மோசமடைந்ததனையடுத்து அவசர அவசரமாக அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையினில் இன்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல்கைதிகள் மூவரினதும் உடல்நிலை மோசமடைந்தமையால் வைத்தியசாலையில்  அனுமதி

இன்று காலை முதல் தாம் அருந்தி வந்த குடிநீரையும் அவர்கள் ஒறுத்து போராட்டத்தை தொடர்ந்திருந்த நிலையினில் இன்று மதியம் அவர்கள் உடல்சோர்வுற்று மயக்கமடைந்திருந்தனர்.

இதனையடுத்தே அவர்களினை சிறைச்சாலை நிர்வாகம் அச்சங்காரணமான அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையினில் அவசர சிகிச்சை பிரிவினில் அனுமதித்துள்ளது.

முன்னதாக சிறைச்சாலை வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டு அவர்களிற்கு ஆரம்ப கட்ட வைத்திய சிகிச்சைகள் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் சிறைச்சாலை வைத்தியர் கைவிரித்ததையடுத்தே  அவசர அவசரமாக அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையினில் இன்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/three-of-the-Politicians-were-admitted-hospital

 

 

கைதிகளின் வழக்கை வவுனியாவில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் மறுப்பு

 

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேரின் வழக்கு விசாரணையை வவுனியா நீதிமன்றத்தில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் மறுப்புத்துள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

தமது வழக்குகளை வவுனியா நீதிமன்றத்தில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றததிற்கு மாற்ற வேண்டாம் என வலியுறுத்தி மூன்று கைதிகளும் கடந்த 25ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கு விசாரணை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடிதம் மூலம் உத்தரவும் வழங்கியிருந்தார்.

ஆனால் வழக்கை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கடந்த மாதம் 23ஆம் திகதி  வவுனியா நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் மூத்த சட்டத்தரணி ஒருவர் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு வழக்கு விசாரணையை வவுனியா நீதிமன்றத்தில் நடத்துமாறு கேட்டிருந்தார்.

ஆனால் வழக்கு விசாரணையை அவ்வாறு மாற்ற முடியாது எனவும் கைதிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியும் பயன் இல்லையென்றும் அந்த சட்டத்திரணியிடம் கூறப்பட்டதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்று சனிக்கிழமை கைதிகளை பார்வையிடச் சென்றிருந்த வடமாகாண சபை உறுப்பினர்கள் மீதும் கைதிகள் ஆத்திரமடைந்து ஏசியுள்ளதாகவும் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

அனைத்து சிறைச்சாலைகளிலும் சுமார் 170 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Prisoners

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை  துருப்புச் சீட்டாய்  வைச்சு அரசியல் நடத்தும் வடபகுதி, தென்பகுதி அரசியல்வாதிகள் தேர்தல் வரும்போது  அரசியல்  கைதிகள் விடுதலை என்று பேசிக்கொண்டு    எட்டிப்பாப்பினம் பேரம் பேசுவினம். அதுவரை இவர்கள் கைவிடப்பட்ட அனாதைகள். இதுகூட செய்ய இயலாத தலைவர் அரசியலில் அறுபது வருடமாக நிண்ட இடத்திலேயே நிண்டு சுத்துறார் சிங்களவனை. இது இவர்களின் ராஜதந்திரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.