Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அர­சி­ய­ல­மைப்பே நல்­லி­ணக்­கத்திற்கான ஆரம்பம் இரத்த ஆறு ஓட­விட வேண்டாம் என்­கிறார் அமைச்சர் கிரி­யெல்ல

Featured Replies

புதிய அர­சி­ய­ல­மைப்பே நல்­லி­ணக்­கத்திற்கான ஆரம்பம்

03-9461f6b21435c79b61503e19d95cda79bd67a5d1.jpg

 

 இரத்த ஆறு ஓட­விட வேண்டாம் என்­கிறார் அமைச்சர் கிரி­யெல்ல

(ஆர்.யசி)

புதிய அர­சி­ய­ல­மைப்பே நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கும் புதிய ஆரம்­ப­மாகும். புதிய அர­சியல் அமைப்­பினை தடுக்க குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தி மீண்டும் நாட்டில் இரத்த ஆறு ஓட­விட வேண்­டா­மென அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

முதல் தட­வை­யாக தமிழர் தலை­மைகள் அர­சியல் அமைப்­பினை விருப்­புடன் ஆத­ரித்து வரு­கின்­றன . அந்த வாய்ப்­பினை நழு­வ­வி­டக்­கூ­டாது. இதை­விட நல்­ல­தொரு வாய்ப்பு இனி ஒரு­போதும் கிடைக்­கப்­போ­வ­தில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பின் பிர­தான விட­யங்­களில் குழப்­பங்கள் இருப்­ப­தாக

 மாநா­யக்க தேரர்கள் மத்­தியில் பொது எதி­ர­ணி­யினர் குற்றம் சுமத்தி வரும் நிலையில் நேற்று முன்­தினம் மீண்டும் அமைச்சர் லக்ஸ்மன் கிரி­யெல்ல அஸ்­கி­ரிய மாநா­யக்க தேரர்­களை சந்­தித்து தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்தார். இது குறித்து வின­வி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்பு இன்னும் முழு­மைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை, இப்­போது வரை­யிலும் பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சகல கட்­சி­க­ளி­னதும் யோச­னை­களே உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த விட­யங்கள் தொடர்பில் பரந்த விவாதம் ஒன்றை நாம் பாரா­ளு­மன்­றத்தில் முன்­னெ­டுப்போம். சகல கட்­சி­க­ளி­னதும் ஆத­ர­வுடன் மாத்­தி­ரமே இதனை தடை­க­ளின்றி முன்­னெ­டுக்க முடியும். அதேபோல் பாரா­ளு­மன்­றத்தில் சகல தரப்­பி­னரும் ஆத­ரித்தால் மட்­டுமே மக்­களின் பூரண ஒத்­து­ழைப்­பி­னையும் பெற்­றுக்­கொள்ள முடியும்.

இதற்கு முன்னர் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்ட சந்­தர்ப்­பங்­களில் தமிழ் அர­சியல் கட்­சி­களின் ஒத்­து­ழைப்பு இருக்­க­வில்லை. எனினும் இப்­போது அவ்­வாறு அல்­லாது தமிழர் தரப்­பினர் பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி புதிய அர­சியல் அமைப்­பினை ஆத­ரிக்கும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

பெளத்த மதத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கு­வ­தா­கவும், ஒற்­றை­யாட்சி என்ற கொள்­கையில் இருந்து செயற்­ப­டு­வ­தா­கவும் இவர்கள் ஏற்­றுக்­கொண்டு அதற்­கேற்றால் போல் செயற்­பட்டு வரு­கின்­றனர். இட­து­சா­ரிகள், இன­வாத கட்­சியை அமைத்தும் தமது கொள்­கை­யினை சற்று இலகு படுத்­திக்­கொண்டு நடு­நி­லையில் இருந்து ஆத­ரவை தெரி­வித்து வரு­கின்­றனர்.

பௌத்தம் தொடர்­பிலும், ஒற்­றை­யாட்சி என்ற விட­யத்­திலும் மாற்று சிந்­தனை ஒன்­றினை முன்­னெ­டுக்க வேண்­டிய எந்தத் தேவையும் இல்லை. இவை தொடர்பில் விவா­திக்­கவே தேவை­யில்லை. யுத்­தத்தின் பின்னர் இந்த நாடு புதிய மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ள­வில்லை.

புதிய ஆரம்பம் ஒன்று அவ­சியம் என மக்கள் எதிர்­பார்த்து செயற்­படும் நிலையில் இது­வ­ரையில் அவ்­வா­றான ஒரு வாய்ப்பு கிடைக்­க­வில்லை. இனங்­க­ளுக்கு இடை­யி­லான அவ­நம்­பிக்கை இன்றும் உள்­ளது. தமிழர் சிங்­க­ள­வரை நம்­பு­வ­தில்லை. சிங்­க­ளவர் முஸ்­லிம்­களை நம்­பு­வ­தில்லை என இனங்­க­ளுக்கு இடை­யி­லான குழப்­பங்கள் இன்றும் தொடர்­கின்­றன.

ஆகவே சகல மக்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­களும் சகல கட்­சி­களும் இணைந்து நாட்­டுக்கு தேவை­யான வகையில் ஒரு புதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்க முடி­யு­மாயின் அதுவே நல்­லி­ணக்­கத்தை வெற்­றி­கொள்ளும் பிர­தான வழி­யாகும். ஆகவே புதிய ஆரம்பம் ஒன்­றினை உரு­வாக்க புதிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சி­ய­மாகும்.

மாநா­யக்க தேரர்­களை நிரா­க­ரித்து எந்த செயற்­பாட்­டையும் முன்­னெ­டுக்க முடி­யாது. அதே­போன்று சிங்­கள மொழியில் ஒரு வகை­யிலும் ஆங்­கி­லத்தில் வேறு வித­மா­கவும் அர­சியல் அமைப்பு உள்­ள­தாக கூறு­கின்­றனர். நீதி­மன்­றத்தில் சிங்கள பிரதியினையே அங்கீகரிப்பார்கள்.

ஆகவே சிங்கள பிரதியில் ஒற்றையாட்சி, பெளத்த முன்னுரிமை என்ற அனைத்துமே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே எந்த பிரச்சினைகளும் ஏற்படப்போவதில்லை. எனினும் பிரச்சினையினை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையில் சிலர் முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில் அதனை நாம் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-09#page-1

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் எப்படி வாழைப்பழத்தில் ஊசிஏற்றுகிறான் என்று பார்த்தீர்களா? மெத்தப்படித்த சட்டாம்பிள்ளைகளுக்குச் சிங்களமும் புரியாதோ(!) சிங்களத்தையும் புரிந்தகொள்ளாதோ  தீக்கோழிகளாகத் திரிவதால் பயனேதும் விளையாது. சிங்களமும் வளையாது. வளைந்துகொடுத்து வீழ்ந்து வீணாகிப்போவதைவிடச் சரியான ஒருங்கிணைப்போடு அனைத்துத் தமிழ் முஸ்லிம் கட்சிகளையும் ஒரு பொது வேலைத்திட்டத்துள் இணைத்து மக்களை ஒன்றுதிரட்டி  சனனாயகரீதியிலான போராட்டங்களை முன்னெடுக்காதவரை சிங்களமோ அல்லது மேற்குலகோ விழிப்படையாது. இல்லையேல் முதலாந்தலைமுறையின் முன்மொழிவை இரண்டாந்தலைமுறை அதியுச்ச அர்பணிப்பைச்செய்து நிறுவியது. அதனைச் சரியாக நகர்த்தி ச் சென்று முன்றாந்தலைமுறையாவது அடிமையில்லை நாமென்று வாழவைக்காது அவர்களை மீண்டுமொரு அரசியற்படுகுழிக்குள் தள்ளவே  இந்த இறங்கிப்போதலும் ஒத்தூதுதலும் பயன்படப்போகிறது. தமிழினமே தானாக எழுவேண்டிய சூழலே தென்படுகிறது. குறைந்தபட்சம் மக்களது நிலமீட்ரபுப் போராட்டங்களையாவது ஒரு வீச்சாக மாற்றினாலே வெளியுலகு சற்று அசையும். சரியான தலைமையாயின் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென்று  ஐநா  ம.உ. ஆணையாளர் அண்மையில் சுட்டியதை ஒரு உந்துவிசையாக மாற்றிவிடலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.