Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் அரசு நீதியான விசாரணையை நடாத்த வேண்டும் : எச்சிரிக்கும் கரனின் பிள்ளைகள்

Featured Replies

சுவிஸ் அரசு நீதியான விசாரணையை நடாத்த வேண்டும் : எச்சிரிக்கும் கரனின் பிள்ளைகள்

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுவிஸ்லாந்தில் அகதிகள் முகாமில் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் வீட்டிற்கு இன்று சுவிஸ்லாந்து தூதரக அதிகாரி ஒருவர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

Local_News.jpg

இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் வடக்கு, கிழக்கு பிராந்திய அரசியல் பிரிவு அதிகாரி சுஷாந்தினி கோபலகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று உயிரிழந்த குடும்பஸ்தரின் உறவுகளுடன் கலந்துரையாடியதோடு தனது ஆறுதலையும் தெரிவித்தார்.

அவர்களிடம் இது தொடர்பாக மேற்கொண்டு ஆறுதல் கூறிய சுஷாந்தினி,

“சுவிஸ்லாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் தொடர்பில் இது வரையில் இலங்கை சுவிஸ் தூதரகத்திற்கு மேலதிக விடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை, குறித்த சம்பவம் தொடர்பாக சுவிஸ் அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கின்றோம். இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஒழுங்கான முறையில் நடைபெறும். 

சுட்டுக் கொல்வது என்பது தவறு என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் பணிப்பின் பேரிலேயே நாம் இன்று சுட்டுக்கொல்லப்பட்டவரின் குடும்ப நிலைமைகளை நேரில் கண்டு ஆராய்வதற்காகவே வந்தோம். தந்தையை, சகோதரனை, கணவனை இழந்து தவிக்கும் உங்களின் வலிகளை புரிந்துகொள்கிறோம். உங்கள் நிலைமை தொடர்பில் சுவிஸ் அரசிற்கு அறிவிப்போம்” என உயிரிழந்தவர்களின் உறவுகளிடம் கூறினார்.

Screenshot__16_.png

தூதரக அதிகாரியினை பார்த்து உயிரிழந்தவரின் உறவுகள் கதறி அழுது தமது வேதனையை வெளிப்படுத்தியதோடு சுட்டுக்கொல்லப்பட்ட தமது தந்தைக்கு உரிய பதிலை வழங்குமாறும் தமது தந்தையை சுவிஸ் பொலிஸார் சுட்டுக்கொன்றது ஏன் எனவும் சுட்டுக்கொல்லும் அளவிற்கு தமது தந்தை தவறு செய்திருக்க மாட்டார் எனவும் கொலை செய்யப்பட்டவரின் பிள்ளைகள் கதறி அழுதனர்.

மேலும் தமது தந்தை தொடர்பில் சுவிஸ் அரசு நீதியான விசாரணையை நடாத்த வேண்டும் எனவும் உயிரிழந்த தமது தந்தை தொடர்பாக நடக்கும் விசாரணைகளை தம் குடும்பத்தின் சார்பில் தாம் சுவிஸ் சென்று ஆராய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

IMG_0671.JPG

 

http://www.virakesari.lk/article/25561

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸில் பொதுவாக போலீசுக்குத்தான் அதிகாரம் கூடுதல் 
போலீஸ்தான் பிழை என்று இறுதிவரை சுவிஸ் அரசு கூறாது 
யாரவது ஒரு நல்லா அறிவுள்ள வழக்கறிஞர் ஊடாக .... குடும்ப நிலையை 
சுட்டி காட்டி கொஞ்ச நிதி உதவி செய்யுமாறு சுவிஸ் அரசை கேட்கலாம் 
அப்படி செய்ய ஓரளவு சாத்தியம் உண்டு .

இது நடந்த மாநிலம் முற்றாக போலீசின் அடாவடி மாநிலம்தான் 
சுவிஸ் நாட்டு மக்களே போலீசுடன் பலதடவை முரண்பட்டு இருக்கிறார்கள் 
ஒருமுறை ஒரு ஐஸ் கொக்கி வீரரை போலீஸ் மறித்த போது வந்த வாய் 
தர்க்கத்தில் போலீஸ் அவரை போட்டு உருட்டி எடுத்து விட்ட்து 
அவரின் ரசிகர்கள் மக்கள் என்று சில ஊர்வலங்கள் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.