Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருமித்த நாடு என்பதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது

Featured Replies

ஒருமித்த நாடு என்பதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது

 

2000ஆம் ஆண்டு பிராந்தியங்களின் ஒன்றியம் சாத்தியமானலும் தற்போது சாத்தியமல்லை

 

நேர்­மை­யான முறையில் ஒரு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கு புலிகள் தரப்­பிடம் அர்ப்­ப­ணிப்பு இருக்­க­வில்­லை­. பு­லிகள் அமைப்­பிற்கு ஒரு நியா­ய­மான தீர்­வுத்­திட்­டத்­திற்கு செல்­வ­தற்கு பல சந்­தர்ப்­பங்கள் கிடைத்­தன. ஆனால் புலிகள் அந்த சந்­தர்ப்­பங்­களை பயன்­ப­டுத்­த­வில்லை. அவர்­களை யாரும் தோற்­க­டிக்க முடி­யாது என்ற எண்­ணத்­தினால் தீர்­வுக்­கான சந்­தர்ப்­பங்­களை பயன்­ப­டுத்­தாமல் இருந்­தனர் என்று முன்னாள் வெளிவி­வ­கார அமைச்­சரும் தற்­போ­தைய கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்

­தரும் சிறி­லங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான ஜீ.எல். பீரிஸ் தெரி­வித்தார். 2000 ஆண்டு பிராந்தியங்களின் ஒன்றி யம் என்ற முறைமை சாத்தியமாக இருந் தது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட் டதால் ஒருமித்த நாடு என்பது கூட சாத் தியமில்லை என்றும் அவர் கூறினார். 

கேசரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு விபரம் வரு­மாறு;

Q : நீங்கள் அர­சி­யலில் பல்­வேறு தட வைகள் கட்சி மாறி­யுள்­ளீர்­களே ஏன் இந்த நிலைமை?

A: நான் மட்­டு­மல்ல, தனி­யாக மாற­வில்லை. ஒரு குழு­வா­கவே நாங்கள் இவ்­வாறு கட்­சி­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்­கிறோம். 2001 ஆம் ஆண்டைப் பார்க்­கும்­போது அப்­போ­தைய அர­சாங்கம் செயற்­பட்ட விதம் தொடர்­பான விமர்­ச­னத்­தை­ய­டுத்தே நாம் கட்­சியை விட்டு வில­கினோம். அன்­றைய காலத்தில் கொள்­கை­களை விட வேலை செய்யும் முறைமை தொடர்­பாக ஏற்­பட்ட பிரச்­சினை கார­ண­மாக இவ்­வாறு நாங்கள் முடி­வெ­டுக்க வேண்­டி­யி­ருந்­தது. இங்கு யாரையும் நாங்கள் குற்றம் சாட்­ட­வில்லை. 2007 ஆம் ஆண்டு நாங்கள் மீண்டும் அங்கம் வகித்த கட்­சி­ய­ிலி­ருந்து வில­கினோம். யுத்­தத்தை தோற்­க­டித்து சமா­தா­னத்தை நிலை­நாட்­டு­வ­தற்­காக கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மை­யி­லேயே மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் இணைந்து கொண்டோம்.

Q : தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்­கை­யொன்று வந்­தி­ருக்­கி­றது. அதனை எவ்­வாறு பார்க்­கி­றீர்கள்?

A: எந்­த­வொரு வேலையை செய்­வ­தற்கும் நேர்மை என்­பது அவ­சி­ய­மாகும். இடைக்­கால அறிக்­கையில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்ன என்­பது தொடர்­பாக எந்த வெளிப்பாடும் இல்லை. அதில் எதுவும் சரி­யான முறையில் இல்லை. அர­சாங்­கத்தின் தீர்வு என்ன என்­பது தொடர்பில் அர­சாங்கம் நாட்டு மக்­க­ளுக்கு கூற வேண்டும். ஆனால் இங்கு ஒரு முக்­கிய விட­யத்தை நாம் கூற வேண்­டி­யுள்­ளது. அதா­வது நாட்டில் கடந்த 30 வரு­டங்­க­ளாக மாகாண சபை முறைமை இருந்து வரு­கி­றது. தற்­போது மாகாண சபை­களை இல்­லா­ம­லாக்கும் செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. கிழக்கு மாகாண சபை கலைக்­கப்­பட்­டுள்­ளது. கிழக்கு மாகாண சபை­யொன்று தற்­போது இல்லை. ஒரு முத­ல­மைச்சர் இருந்தார். அவரும் தற்­போது இல்லை. கிழக்கு மாகாண அமைச்­ச­ர­வை­யொன்று இருந்­தது. இன்று அது எதுவும் இல்லை.

அனைத்து அதி­கா­ரங்­களும் ஆளு­நரின் கைக­ளுக்கு சென்­றுள்­ளன. ஆளுநர் என்­பவர் மத்­திய அர­சாங்­கத்தின் பிரதி­நி­தி­யாவார். 13 ஆவது திருத்­தத்­தின்­படி மாகாண சபை­க­ளுக்கு சில அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அவை அனைத்தும் தற்­போது அற்றுப் போய்­விட்­டன. இவ்­வாறு மாகாண சபை­களின் அதி­கா­ரங்­களை இல்­லாமல் செய்­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கைகளை உயர்த்தி ஆத­ரவு வழங்­கி­யி­ருக்­கி­றது. அவர்­களிள் 16 எம்.பி.க்களும் இதற்கு ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர். அவர்கள் ஏன் வாக்­க­ளித்­தனர் என்­பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எம்மால் இதை நினைத்துப் பார்க்­கவும் முடி­யாமல் உள்­ளது. தமக்கு அர­சியல் அதி­கா­ரங்கள் வேண்­டு­மென கூட்­ட­மைப்­பினர் தமிழ் மக்­க­ளிடம் கூறு­கின்­றனர். ஆனால் இருக்­கின்ற அனைத்து அதி­கா­ரங்­க­ளையும் கூட்­ட­மைப்பு கைகளை உயர்த்தி இழந்­தி­ருக்­கி­றது. தற்­போது மாகாண சபை இல்லை. 2018 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 23 ஆம் திக­தி­யா­கும்­போது வட மாகாண சபைக்கும் இதே நிலையே ஏற்­படும். ஐந்து வரு­டங்­களில் மாகாண சபை­க­ளுக்கு தேர்­தலை நடத்த வேண்டும். ஆனால் அர­சாங்கம் தேர்­தலை நடத்த தயா­ராக இல்லை. தேர்தல் நடத்­தப்­பட்டால் பாரிய தோல்வி ஏற்­படும் என அர­சாங்­கத்­திற்கு தெரியும். அந்த வகையில் அர­சாங்கம் தேர்­தல்­களை தள்ளிப் போடு­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உதவி செய்­தி­ருக்­கி­றது. இது குறு­கிய கால நோக்­க­மாகும். இன்று எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் பெய­ர­ள­வி­லேயே எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருக்­கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பது இந்த அர­சாங்­கத்தின் ஒரு அங்­க­மா­கவே உள்­ளது. இந்த அர­சாங்கம் பத­விக்கு வரு­வ­தற்கு கூட்­ட­மைப்பு பாரிய ஒத்­து­ழைப்பை வழங்­கி­யது. இந்த அர­சாங்­கத்தை இன்று கூட்­ட­மைப்பு உயிர்த்­தி­யா­கத்­துடன் பாது­காத்­து­வ­ரு­கின்­றது. ஆனால் தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்சி என்ற வகையில் அந்­தக்­கட்சி என்ன செய்­ய­வேண்டும்? வடக்கு மாகாண சபையை இல்­லாமல் செய்­து­கொள்­வ­துதான் கூட்­ட­மைப்பின் பணி­யாக இருக்­கப்­போ­கின்­றதா?

அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பை மீறியே இந்த சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்­றி­யது. தற்­போது எல்லை நிர்­ண­யங்­களை முன்­னெ­டுத்த பின்­னரே மாகாண சபை தேர்­தலை நடத்­தலாம். உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்தாது இரண்டு வரு­டங்­க­ளுக்கு மேல் கடந்­துள்­ளது. அதே நிலைதான் மாகாண சபை­க­ளுக்கும் நடக்­கப்­போ­கின்­றது. அமைச்சர் பைசர் முஸ்­தபா தேர்­தலை நடத்­தாமல் இருப்­ப­தற்­காக ஏதா­வது ஒரு கார­ணத்தை கூறி­வ­ரு­கின்றார். இந்­நி­லையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­க­ளுக்கு பதி­ல­ளித்­தே­யா­க­வேண்டும். காரணம் கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளித்­தி­ருக்­கா­விடின் இந்த சட்­ட­மூலம் நிறை­வே­றி­யி­ருக்­காது. மாகாண சபை­க­ளுக்கு மேலும் அதி­காரம் தேவை என கூட்­ட­மைப்பு ஒரு பக்­கத்தில் கூறு­கின்­றது. மறு­பக்­கத்தில் மாகாண சபை இல்­லாமல் போவ­தற்கு கைகளை உயர்த்­து­கின்­றது.

Q : கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தாக கூறு­கின்ற நீங்கள் இடைக்­கால அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள ஒரு­மித்த நாடு என்ற முறை­மையை கடு­மை­யாக எதிர்க்­கின்­றீர்­களே?

A: இது நேர்­மை­யாக நடக்­க­வேண்டும். இதில் தமிழ் மக்­க­ளையும் ஏமாற்­று­கின்­றனர். தமிழ் மொழியில் தற்­போது ஒற்­றை­யாட்சி என்று பதமே உள்­ளது. ஆனால் அதனை தற்­போது நீக்­கி­விட்டு ஒரு­மித்த நாடு என்ற குறிப்­பிட்­டுள்­ளனர். ஒரு­மித்த நாடு என்­பது பல பிரி­வு­களை ஒன்­றி­ணைப்­ப­தற்கு கூறும் விட­ய­மாகும். ஒற்­றை­யாட்சி மற்றும் ஒரு­மித்த நாடு என்­ப­ன­வற்­றுக்கு இடையில் பாரிய வித்­தி­யாசம் உள்­ளது. தமிழ் பேரா­சி­ரியர் ஒருவர் எனக்கு அதனை தெ ளிவு­ப­டுத்­தினார். ஏன் தமிழ் சிங்­களம் மற்றும் ஆங்­கில மொழி­களில் வெவ்­வேறு பதங்­களை பிர­யோ­கிக்­க­வேண்டும்? ஏன் யுனிட்­டரி என்ற சொல்லை பிர­யோ­கிக்க பயப்­ப­டு­கின்­றனர்?

காரணம் இங்கு ஒரு ஒப்­பந்­தமே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. சர்­வ­தேச சக்­தி­களின் தேவையை நிறை­வேற்­றிக்­கொள்­ளவே இந்த அர­சாங்­கத்தை நிய­மித்­துக்­கொண்­டனர். இதற்கு பல உத­விகள் கிடைத்­தன. வெளிநாட்டு உளவு அமைப்­புக்கள் மற்றும் வெளிநாட்டு சக்­திகள் இணைந்தே இதனை முன்­னெ­டுத்­தன. இவ்­வாறு அர­சாங்­கத்தை அமைக்க உத­வி­யவர்கள் எங்கே புதிய அர­சி­ய­ல­மைப்பு என்று கேட்­கின்­றனர். ஏன் ஆங்­கி­லத்தில் யுனிட்­டரி என்ற வார்த்தையை பயன்­ப­டுத்த தயங்­கு­கின்­றனர்? அப்­படி பயன்­ப­டுத்­தினால் வெளிநாட்டு சக்­திகள் கேள்­வி­யெ­ழுப்பும். இது உலக நகைச்­சு­வை­யாகும். ஆங்­கில மொழியில் "ஏக்­கிய" என்று குறிப்­பிட முயற்­சிக்­கின்­றனர்.

Q : நீங்கள் 2000 ஆம் ஆண்டு கொண்டு வந்த தீர்வுப் பொதியில் பிராந்­தி­யங்­களின் ஒன்­றியம் என்ற முறைமை இருந்­தது. அதே­போன்று 2003 ஆம் சமா­தான பேச்­சு­வார்த்­தை­யின்­போது ஒஸ்லோ பிர­க­ட­னத்தில் சமஷ்டி முறை­மைக்கு இணங்­கி­னீர்கள். ஆனால் இன்று ஒரு­மித்த நாடு என்ற முறை­மையை எதிர்க்­கின்­றீர்கள். இது நியா­யமா?

A: அது முழு­மை­யாக ஒரு வித்­தி­யா­ச­மான ஒரு நிலை­மை­யாகும். ஒரு சிலர் இந்த விமர்­ச­னத்தை என்­மீது முன்­வைக்­கின்­றனர். அவர்கள் ஒரு விட­யத்தை புரிந்து கொள்ள வேண்டும். அர­சியல் தீர்வு மற்றும் அர­சியல் கருத்­துக்கள் என்­பன கற்­களில் பொறிக்­கப்­பட்­ட­வை­யல்ல. அவை நிரந்­த­ர­மா­ன­வையும் அல்ல. 25 வரு­டங்­க­ளுக்கு முன்னர் நான் வேறு ஒரு வித­மான நிலைப்­பாட்டில் இருந்­த­தாக கூறு­கின்­றனர். 25 வரு­டங்­க­ளாக ஒரே கருத்தில் இருக்க முடி­யுமா? அது யதார்த்­த­மாக அமை­யாது. அன்­றி­ருந்த நிலை­மைக்கும் இன்று இருக்­கின்ற நிலை­மைக்கும் பாரிய வித்­தி­யாசம் காணப்­ப­டு­கி­றது. அன்று நாங்கள் அவ்­வாறு நெகிழ்வுத் தன்­மை­யுடன் செயற்­பட்­டி­ருக்­கா­விடின் மற்றும் அவ்­வா­றா­னதோர் அர­சியல் தீர்வுத் திட்­டத்தை முன்­வைத்­தி­ருக்­கா­விடின் யுத்­த­கா­லத்தில் அமெ­ரிக்கா, இந்­தியா போன்ற நாடுகள் எமக்கு உத­வி­யி­ருக்­காது. இந்­தியா அமெ­ரிக்கா போன்ற பல­மான நாடு­க­ளி­ட­மி­ருந்து நாம் யுத்­தத்தை முடிக்க பாரிய உதவி கிடைத்­தது. நாம் ஒரு நேர்­மை­யான முயற்­சியில் ஈடு­பட்டோம். நான் புலி­க­ளுடன் ஐந்து சுற்று பேச்­சு­வார்த்­தை­களில் பங்­கு­பற்­றி­யி­ருந்தேன். ஆனால் புலிகள் ஒரு தீர்வை நோக்கிப் பய­ணிப்­பதில் நேர்­மை­யான நோக்­கத்தை வெளிக்­காட்­ட­வில்லை. காலத்தை இழுத்­த­டிக்­கவே அவர்கள் முயற்­சித்­தார்கள். போர் நிறுத்த உடன்­ப­டிக்­கையின் பின்னர் புலிகள் நினைத்த அனைத்தும் கிடைத்­து­விட்­ட­தாக அவர்கள் கரு­தினர். அந்த பேச்­சு­வார்த்­தைகள் வெற்றி பெறா­மைக்கு புலி­களே காரணம் என்­பதை முழு உல­கமும் தெரிந்து கொண்­டது. புலி­களின் பிர­தி­நி­திகள் பேச்­சு­வார்த்­தை­களில் கலந்து கொண்­டி­ருந்­த­போது தீர்வைக் காண்­ப­தற்­கான நோக்­கத்தை வெளிக்­காட்­ட­வில்லை. அப்­போது அர­சாங்­கத்தின் நேர்­மை­யான முயற்சி தொடர்பில் சர்­வ­தேசம் திருப்­தி­ய­டைந்­தது. அவ்­வா­றான நோக்­கங்­க­ளுக்­கா­கவே அக் காலத்தில் நாங்கள் சில யோச­னை­களை முன்­வைத்தோம். இனப்­பி­ரச்­சி­னையை தீர்க்க நாங்கள் நேர்­மை­யான முயற்­சியை வெளிக்­காட்­டினோம். சர்­வ­தே­சமும் அதனை அங்­கீ­க­ரித்­தது. அத­னால்தான் இறுதி யுத்­தத்தில் சர்­வ­தேச சமூகம் எமக்கு ஆத­ர­வ­ளித்­தது. ஏற்­க­னவே ஆத­ரவு கிடைத்­தி­ருக்­கா­விடின் எம்மால் யுத்­தத்தை முடித்­தி­ருக்க முடி­யாது.

Q : அதா­வது 2000 ஆம் ஆண்டு தீர்வுப் பொதி மற்றும் 2003 ஆம் ஆண்டின் ஒஸ்லோ பிர­க­டனம் என்­பன சர்­வ­தேச கவ­னத்தை ஈர்ப்­ப­தற்­காக முன்­வைக்­கப்­பட்­ட­தாக கூறு­கின்­றீர்கள். அதே­போன்று தற்­போது காணப்­ப­டு­கின்ற சூழலில் அவ்­வா­றான தீர்வுப் பொதிகள் சாத்­தி­ய­மில்லை என்று கூறு­கின்­றீர்­களா?

A: அன்­றி­ருந்த நிலை­மையும் இன்­றி­ருக்­கின்ற நிலை­மையும் வானத்­தையும் பூமி­யையும் போல வித்­தி­யா­ச­மா­ன­வை­யாகும். ஆனால் இன்று நேர்­மை­யா­ன­தொரு நல்­லி­ணக்கம் தேவைப்­ப­டு­கி­றது. அர­சாங்­கத்தின் தற்­போ­தைய செயற்­பா­டுகள் நேர்­மை­யா­ன­தாக இருப்­ப­தாக நாங்கள் கரு­த­வில்லை. பெரும்­பான்மை மக்­களின் பாரிய எதிர்ப்­புடன் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது. சிறு­பான்மை மக்­க­ளுக்கு நிச்­ச­ய­மாக நீதி கிடைக்­க­வேண்டும். ஆனால் அனைத்து மக்­க­ளி­னதும் விருப்­பத்­து­ட­னேயே இது செய்­யப்­ப­ட­வேண்டும். அடிப்­படை விட­யங்­களில் பெரும்­பான்மை மக்­களின் எதிர்ப்பு காணப்­ப­டு­மாயின் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டாது. யுத்­தக்­குற்­றங்­களை இரா­ணுவம் செய்­த­தா­கவும், அவர்­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும் என்று வடக்கில் சிவா­ஜி­லிங்கம் கூறு­கிறார். இனப்­ப­டு­கொலை என்ற பிரே­ர­ணையை வடக்கு முதல்வர் வட­மா­கா­ண­ச­பையில் நிறை­வேற்­றினார். தற்­போது காணா­மல்­போனோர் அலு­வ­லக சட்டம் வந்­தி­ருக்­கின்­றது. அது­ஒரு விடுதி போன்­றது. அதன் அதி­கா­ரி­க­ளுக்கு இரவு பகல் என எந்­த­வே­ளை­யிலும் இரா­ணுவ முகா­முக்கு செல்­லலாம். தற்­போது காணா­மல்­போனோர் தொடர்­பான சம­வா­யத்தை தயா­ரிக்­கின்­றனர். அதில் அமெ­ரிக்கா, பிரிட்டன், அவுஸ்­தி­ரே­லியா, கனடா போன்ற எந்த நாடு­களும் கைச்­சாத்­தி­ட­வில்லை. இவ்­வாறு பெரும்­பான்மை மக்­களின் உணர்­வுகள் பாதிக்­கப்­படும் வகையில் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து நீண்­ட­கால நல்­லி­ணக்­கத்தை அடை­ய­மு­டி­யாது.

Q : 2000ஆம் ஆண்டு பிராந்­தி­யங்­களின் ஒன்­றியம் முறையை முன்­வைக்க முடிந்­தாலும் 2017 ஆம் ஆண்டில் ஒரு­மித்த நாடு என்­ப­தைக்­கூட முன்­வைக்க முடி­யாது. என்று கூறு­கின்­றீர்­களா?

A: 2000ஆம் ஆண்­டுக்கும் 2017 ஆம் ஆண்­டுக்­கு­மி­டையில் பாரிய வித்­தி­யாசம் காணப்­ப­டு­கின்­றது. அன்று பொருத்­த­மாக இருந்­த­வைகள் இன்று பொருத்­த­மாக இருக்­காது. இன்று நாட்டில் யுத்தம் இல்லை. புலிகள் இல்லை. எனினும் தமிழ் மக்கள் உள்­ளிட்ட அனைத்து மக்­க­ளுக்கும் நீதியை நிலை­நாட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அதற்கு நாம் தயார். மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவின் காலத்தில் வடக்கு, கிழக்கில் எவ்­வ­ளவு திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அந்த அர­சாங்­கத்தில் நல்­லி­ணக்கம் தொடர்­பாக ஒரு தெளி­வான திட்டம் இருந்­தது.

Q :இந்தத் துறையில் உங்­க­ளுக்கு அனு­பவம் இருக்­கி­றது. அப்­ப­டி­யாயின் உங்­க­ளது தீர்­வுத்­திட்­டம்தான் என்ன?

A: எமது நாட்டில் அனைத்துத் தமிழ் மக்­களும் வடக்கில் வாழ­வில்லை. தமிழ் மக்கள் இலங்கை முழு­வதும் பரந்­து­பட்­டுள்­ளனர். அதற்­கேற்­ற­வ­கையில் நாம் செயற்­ப­ட­வேண்டும். தற்­போது பொலிஸ் அதி­கா­ரத்தை மக்கள் கேட்­க­வில்லை. தமிழ் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட அர­சி­யல்­வா­தி­களின் கோரிக்கை அது­வாகும். தமிழ் சமூ­கத்தின் தேவை என்ன என்­பதை நாம் கரு­த­வேண்டும். ஆனால் ஒரு விட­யத்தை நாம் புரிந்­து­கொள்­ள­வேண்டும். இவ்­வாறு அர­சியல் அதி­கா­ரத்­திற்­காக குரல்­கொ­டுக்கும் கூட்­ட­மைப்பு மாகா­ண­சபை ஸ்தம்­பி­த­ம­டை­வ­தற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருக்­கி­றது. அர­சாங்­கத்­துடன் இணைந்து இவ்­வாறு வாக்­க­ளித்­தி­ருக்­கி­றது. எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் அர­சாங்­கத்தின் கொள்­கையை விமர்­சிக்­க­வில்லை. எந்­த­வி­த­மான தயக்­க­மு­மின்றி வரவு, செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றனர். திருத்­தங்கள் இல்­லாமல் வரு­டா­வ­ருடம் அர­சாங்­கத்தின் அனைத்து விட­யங்­க­ளுக்கும் கையைத் தூக்கும் எதிர்க்­கட்­சித்­த­லைவர் எங்கும் இல்லை. சம்­பந்­தனை எனக்கு தனிப்­பட்ட ரீதியில் தெரியும் அவர் சிறந்த அனு­பவம் உள்­ளவர். ஆனால் இன்று கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்தின் பங்­கா­ளிக்­கட்­சி­யாக உள்­ளது. அது எதிர்க்­கட்­சி­யல்ல. அந்­த­வ­கையில் எனது யோச­னை­யா­னது மத்­தியில் அதி­காரம் பர­வ­லாக்கல் செய்­யப்­ப­ட­வேண்டும். அதா­வது செனட் சபை என்ற ஒன்றை உரு­வாக்க நாம் பரிந்­துரை செய்­கின்றோம். அதில் அனைத்து மாகா­ணங்­க­ளி­னதும் பிர­தி­நி­தித்­துவம் இடம்­பெறும்.

Q : அப்­ப­டி­யாயின் பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள்?

A: 13 ஆவது திருத்த சட்டம் வந்­த­பின்னர் நாட்டில் ஐந்து ஜனா­தி­ப­திகள் பத­வியில் இருந்­துள்­ளனர். அவர்­களில் ஒரு­வரால் கூட பொலிஸ், காணி அதி­கா­ரங்­களை வழங்க முடி­ய­வில்லை? ஏன் அது முடி­ய­வில்லை? முடி­யாது. மக்கள் அதனை விரும்­ப­வில்லை. பல்­வேறு ஜனா­தி­ப­தி­க­ளுக்கும் வித்­தி­யா­ச­மான எண்­ணங்கள் இருந்­தி­ருக்­கலாம். ஆனால் பொலிஸ், காணி அதி­கா­ரங்­களை யாராலும் வழங்க முடி­ய­வில்லை. காரணம் மக்­கள் அதனை நிரா­க­ரிக்­கின்­றனர். அதி­லி­ருந்து ஒரு­வி­ட­யத்தை நாங்கள் விளங்­கிக்­கொள்­ள­வேண்டும். இங்கு செயற்­பாட்டு ரீதி­யாக நாம் சிந்­திக்­க­வேண்டும். ஆனால் கூட்­ட­மைப்பு இந்த அதி­கா­ரங்கள் வேண்­டு­மென ஒரு­பக்கம் குரல்­கொ­டுப்­ப­துடன் மறு­பக்கம் மாகா­ண ­ச­பைகள் செய­லி­ழந்து போவ­தற்­காக வாக்­க­ளிக்­கின்­றது. செனட் சபை தொடர்பில் நாம் இந்­தி­யா­விற்கும் கூறி­யி­ருந்தோம். அத­னைத்தான் நாங்கள் 13 பிளஸ் என்று கூறி­யி­ருந்தோம்.

Q :நீங்கள் 2001,2003 காலப்­ப­கு­தியில் புலி­க­ளு­ட­னான சமா­தானப் பேச்­சுக்­களில் அர­சாங்கத் தூதுக்­கு­ழுவின் தலை­வ­ராக செயற்­பட்­டீர்கள். அந்த அனு­பவம் எப்­படி இருந்­தது?

A: நாம் அன்று நேர்­மை­யான முறையில் பாடு­பட்டோம். ஆனால் அன்டன் பால­சிங்கம் கட்­ட­ளை­க­ளுக்கு அமை­யவே எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.

Q :சற்று விளக்­கிக்­கூ­றுங்கள்?

A: அதா­வது புலி­களின் தேவை பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தாக இருக்­க­வில்லை. பிரச்­சி­னையை நீடிப்­ப­தற்கே அவர்கள் முயற்­சித்­தனர். ஏமாற்று வித்­தை­யைத்தான் அவர்கள் நடத்­தினர். அதா­வது புலிகள் மிகவும் வலு­வாக நம்­பிய ஒரு விடயம் இருக்­கின்­றது. அதா­வது அவர்­களை ஒரு­போதும் தோற்­க­டிக்க முடி­யாது என்ற எண்ணம் அவர்கள் மத்­தியில் இருந்­தது. இரா­ணுவ ரீதி­யாக தோற்­க­டிக்­கவே முடி­யாது என்ற எண்­ணத்தில் செயற்­பட்­டனர். இந்­திய பிர­தமர் உள்­ளிட்ட இலங்கை தலை­வர்­க­ளையும் புலிகள் அழித்­தனர். அதனால் அவர்கள் தாம் மிகவும் பல­மான அமைப்பு என நம்­பினர். அந்த எண்­ணத்தின் அடிப்­ப­டை­யி­லேயே எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினர். புலிகள் மட்­டு­மின்றி மேற்கு நாடுகள் கூட அந்த எண்­ணத்­தி­லேயே செயற்­பட்­டன. அந்த எண்­ணத்­தி­லேயே எமக்கு ஆலோ­ச­னையும் வழங்­கப்­பட்­டது. புலி­களை களத்தில் தோற்­க­டிப்­பது என்­பது கனவு என்றே பார்க்­கப்­பட்­டது. அதனால் நேர்­மை­யான முறையில் ஒரு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கு புலிகள் தரப்­பிடம் அர்ப்­ப­ணிப்பு இருக்­க­வில்லை. தொடர்ந்து காலத்தை இழுத்­த­டிக்கும் போக்­கையே கடைப்­பி­டித்­தனர்.  

 

 

Q : அப்­ப­டி­யாயின் பேச்­சு­வார்த்­தையின் போது நீங்கள் விரக்­தி­ய­டைந்­தீர்­களா?

A: எமது தூதுக்­கு­ழுவே விரக்­தி­ய­டைந்­தது.

Q :அன்டன் பால­சிங்­கத்­து­ட­னான அணு­கு­முறை எவ்­வாறு அமைந்­தது?

A: அவ­ருடன் நான் அடிக்­கடி பேசினேன். ஆனால் அவர் அங்கு தீர்­மானம் எடுப்­ப­வ­ராக இருக்­க­வில்லை. புலி­களின் குறிக்கோள் மற்றும் கட்­ட­மைப்­பிற்­கேற்ப அன்டன் பால­சிங்கம் தனித்து தீர்­மானம் எடுக்­க­மு­டி­யாது. அவர்கள் யாரும் தனிப்­பட்ட கருத்­துக்­களை தெரி­விக்­க­வில்லை. தனிப்­பட்ட கருத்­துக்­களை வெளி­யிட்ட புலி­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு என்ன நடந்­தது என்று தெரி­யும்­தானே.

Q :முப்­பது வருட போராட்டம் புலி­களின் தலை­மைத்­துவம் இவை இரண்­டையும் நீங்கள் எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?

A: புலிகள் அமைப்­பிற்கு ஒரு நியா­ய­மான தீர்­வுத்­திட்­டத்­திற்கு செல்­வ­தற்கு பல சந்­தர்ப்­பங்கள் கிடைத்­தன. ஆனால் புலிகள் அந்த சந்­தர்ப்­பங்­களை பயன்­ப­டுத்­த­வில்லை. அவர்­களை யாரும் தோற்­க­டிக்க முடி­யாது என்ற எண்­ணத்­தினால் தீர்­வுக்­கான சந்­தர்ப்­பங்­களை பயன்­ப­டுத்­தாமல் இருந்­தனர். அவ்­வா­றான நிலைப்­பாடு இருக்கும் இடத்து அந்த நெகிழ்­வுப்­போக்கு இருக்­காது. இந்­திய இரா­ணு­வத்­தால் கூட புலி­களை தோற்­க­டிக்க முடி­யாமல் போனது. உலகின் நான்­கா­வது அல்­லது ஐந்­தா­வது மிகப் பெரிய இரா­ணுவம். இது­போன்ற கார­ணங்­க­ளினால் புலி­களின் நம்­பிக்கை மேலும் அதி­க­ரித்­தது.

Q : சந்­தர்ப்­பங்­களைப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்தால்?

A: இவ்­வ­ளவு பெரிய அழிவு ஏற்­பட்­டி­ருக்­காது. மஹிந்த ராஜ­ப­க் ஷவின் காலத்தில் நாங்கள் தமிழ் மக்­களை குறைத்து மதிப்­பி­ட­வில்லை. சிவி­லி­யன்­களை பாது­காக்­க­வேண்­டிய தேவை அர­சாங்­கத்­திற்கு இருந்­தது. மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்கம் சிவி­லி­யன்கள் தொடர்பில் கரி­ச­னை­யு­ட­னேயே இருந்­தது. இறுதி நேரத்தில் நந்­திக்­கடல் களப்புப் பகு­தியில் மூன்று இலட்சம் மக்­களை மனிதக் கேட­ய­மாகப் பயன்­ப­டுத்­தி­யது. இரா­ணுவம் சர்­வ­தேச விதி­மு­றை­க­ளுக்கு அமை­வா­கவே யுத்தம் செய்­தது. அர­சாங்கம் மாறி­யி­ருக்­கா­விடின் அதனை நாங்கள் ஜெனி­வாவில் நிரூ­பித்­தி­ருப்போம். சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டம், சர்­வ­தேச மனித உரிமை சட்டம் என்­ப­வற்றை நாங்கள் பின்­பற்­றினோம்.

Q : அப்­ப­டி­யாயின் யுத்­தக்­குற்றம் நடை­பெ­ற­வில்­லையா?

A: இரா­ணுவம் எந்தவிதமான யுத்தக்குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

Q : யுத்தக்குற்றம் இடம்பெறவில்லையா யின் ஏன் விசாரணைக்கு மறுக்க வேண் டும்?

A: இந்தியா தனது உள்ளக விடய த்தை

யாராவது விசாரணை நடத்த அனுமதி அளிக் குமா? அது ஒரு நாட்டின் இறைமையைப் பொறுத்தவிடயம். எவ்வாறெனினும் நாம் இதுதொடர்பில் ஒரு நடவடிக்கையை எடுத் துக்கொண்டிருந்தபோதுதான் அரசாங்கம் மாறியது.

Q : தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தன்னுடன் வந்து இணைந்துகொள் ளுமாறு          உங்களுக்கு அழைப்பு விடுத்தால் என்ன செய்வீர்கள்? 

A: ஒரு நிமிடம் கூட அதைப்பற்றி சிந்திக்க நான் தயாரில்லை.

Q : நீங்கள் ஆரம்பித்த கட்சி இப்போது செயற்பட்டு வருகின்றது. எதிர்வரும் தேர்தலில் அது எவ்வாறு அமையும்?

A: நாங்கள் எமது கட்சியை முன்னிறுத்தி அனைத்து தரப்பையும் இணைத்துக்கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்கொள்வோம். மாகாணசபை தேர்தல் உடனடியாக நடக்காது. அது கூட்டமைப்பின் உதவியோடு பிற்போடப்பட்டுள்ளது. எனவே உள்ளூராட்சி தேர்தலுக்கு எமது கட்சியின் ஊடாக போட்டியிடுவோம். கடந்த பாராளுமன்றத் தேர்தலைப் போன்று இம்முறை ஏமாறுவதற்கு தயாரில்லை. எமது கட்சியின் ஊடாகவே பயணிப்போம். இரவு விழுந்த குழியில் பகலில் விழத் தயாரில்லை.

Q : உங்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

A: அது தொடர்பில் நாங்கள் தற்போது சிந்திக்கவில்லை. அப்பம் எண்ணக்கருவிலும் ஒரு கோட்பாடு உள்ளது. ஆச்சரியமான விடயங்கள் சிறப்பாக இருக்கும்.

Q : அப்படியாயின் இப்போது நீங்கள் ஒரு தலைவரை தெரிவு செய்துவிட்டீர்களா?

A: அது தொடர்பில் தற்போது பேசவே ண்டியதில்லை. அதற்கு முன்னர் இரண்டு

தேர்தல்கள் உள்ளன. இரண்டு வருடங்களு க்கு முன்னர் அது குறித்து சிந்திக்கவில்லை.

Q : தலைமைத்துவம் தொடர்பில் எதிர்கால நோக்கம் வேண்டும் அல்லவா?

A: படிப்படியாக செல்வோம். முதல் படி யாக உள்ளூராட்சிமன்றத் தேர்தல் உள்ளது. அடுத்து ஜனாதிபதி தேர்தல் வரும். அதனை தள்ளிப்போட முடியாது. சிலவேளை சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படலாம். அதற்கு நாம் தயார். எந்த தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். 

நேர்­காணல் : ரொபட் அன்­டனி

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-10-14#page-5

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நவீனன் said:

புலிகள் அமைப்­பிற்கு ஒரு நியா­ய­மான தீர்­வுத்­திட்­டத்­திற்கு செல்­வ­தற்கு பல சந்­தர்ப்­பங்கள் கிடைத்­தன. ஆனால் புலிகள் அந்த சந்­தர்ப்­பங்­களை பயன்­ப­டுத்­த­வில்லை. அவர்­களை யாரும் தோற்­க­டிக்க முடி­யாது என்ற எண்­ணத்­தினால் தீர்­வுக்­கான சந்­தர்ப்­பங்­களை பயன்­ப­டுத்­தாமல் இருந்­தனர். அவ்­வா­றான நிலைப்­பாடு இருக்கும் இடத்து அந்த நெகிழ்­வுப்­போக்கு இருக்­காது. இந்­திய இரா­ணு­வத்­தால் கூட புலி­களை தோற்­க­டிக்க முடி­யாமல் போனது. உலகின் நான்­கா­வது அல்­லது ஐந்­தா­வது மிகப் பெரிய இரா­ணுவம். இது­போன்ற கார­ணங்­க­ளினால் புலி­களின் நம்­பிக்கை மேலும் அதி­க­ரித்­தது.

உண்மைத் தன்மையோடு அன்று பேச்சுக்கு போயிருந்தவர் என்றால் போர் முடிந்தவுடனேயே நியாயமான தீர்வுத் திட்டத்தை அமுல் படுத்தியிருக்கலாமே. புலிகளை போரில்  வெல்ல முடியாமல் சர்வதேச இராணுவ உதவி பெறுவதற்காக அவர்ளை ஏமாற்றுவதற்காக போட்ட நாடகமே இவர்களின் தீர்வுத்திட்டம். போர்முடிந்த கையுடன் தீர்வுத்திட்டம் பற்றி கேள்வி எழுந்தபோது கோத்தா எண்ட கொலைகாரன் சொன்ன பதில் "புலிகளை அழித்துவிட்டோம்  இனி தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் கொடுப்பதை கண்டு கொள்ள வேண்டியதுதான்."  அவர்களுக்கே அப்போது புலிகளை அழிக்க முடியாது என்று நன்றாகவே தெரிந்திருந்தது. அவனின் போலிப்பேச்சில்  ஏமாந்து அவனுக்கு உதவிய  சர்வதேசம் போர் முடிந்த கையோடேயே  நம் பிரச்சினையை தீர்த்து வைக்க அவனை வற்புறுத்தியிருக்கவேணும். எங்கள் தலைமைகள் சர்வதேசத்தை வற்புறுத்தி தீர்வை எடுத்திருக்க வேணும். அது எல்லார் வீட்டு கைப்பிள்ளையாக வலம் வருகுது. தீர்வு வரப்போகுது சத்தம் போடாதேங்கோ எண்டு எங்களை அடக்கிச்சினம். இப்ப தாங்களும் அடங்கிப்போயிருக்கினம். இதுதான் தமிழனின் இன்றய பரிதாப நிலை.

 

1 hour ago, நவீனன் said:

: 13 ஆவது திருத்த சட்டம் வந்­த­பின்னர் நாட்டில் ஐந்து ஜனா­தி­ப­திகள் பத­வியில் இருந்­துள்­ளனர். அவர்­களில் ஒரு­வரால் கூட பொலிஸ், காணி அதி­கா­ரங்­களை வழங்க முடி­ய­வில்லை? ஏன் அது முடி­ய­வில்லை? முடி­யாது. மக்கள் அதனை விரும்­ப­வில்லை. பல்­வேறு ஜனா­தி­ப­தி­க­ளுக்கும் வித்­தி­யா­ச­மான எண்­ணங்கள் இருந்­தி­ருக்­கலாம். ஆனால் பொலிஸ், காணி அதி­கா­ரங்­களை யாராலும் வழங்க முடி­ய­வில்லை. காரணம் மக்­கள் அதனை நிரா­க­ரிக்­கின்­றனர்.

 பதவியிலிருந்த ஐந்து ஜனாதிபதிகளுமே சிங்களவர்களே. இனவாதத்தை தூண்டி பதவிக்கு வருபவர்கள் பிரச்சினையை தீர்த்துவைத்தால் அடுத்த தேர்தலுக்கு என்ன சொல்லி வாக்கு கேட்பதாம். ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என்று வாக்கு கேட்டு வென்றவர் அடுத்த தேர்தலிலும் ஜனாதிபதி வேட்ப்பாளராயே போட்டியிட்டு மீண்டும் ஜனாதிபதியாகிறார். சும்மா தங்கள் சுயநலத்திற்கு மக்களை காட்டுறது. உ +ம்  மைத்திரியையே கூறலாம். தமிழ்க்கைதிகளை விடுதலை செய்தால் தெற்கில் பிரச்சினை வருமாம். இது தேர்தலில் வாக்கு கேக்கும்போது இவருக்கு தெரியாதா? அரசியல் போராளிகளும், பொருளுக்காகவும், தமிழன் என்கிற காரணத்துக்காகவும் கொலை செய்த தெற்கு கொள்ளைக் கூட்டத்தையும்  ஒன்றாக வைத்து கதையளக்கிறார் ? தமிழ்  மக்களை கொலை செய்த போர்க்குற்றவாளிகளெல்லாம் பெரிய பதவிகளி ல் நாடு சுற்றுகிறார்கள். எங்கள் பிள்ளைகள் மட்டும் சிறைகளில். தமிழர் கேட்ப்பது துரும்பாய் இருந்தாலும் குடுப்பதில்லை என்றே முடிவு பண்ணி தொடர்ந்து ஒன்றவிட பின்னையது அதைவிடபெரிய பிரச்சினையாகமாறி மாறி   தொடர்ந்து உருவாக்கி கொண்டிருக்கிறது சிங்களம். சந்தர்ப்பங்களை நழுவவிட்டு அவனுக்கு சந்தர்ப்பங்களை உருவாக்கி குடுக்கிறது எங்கட தலைமைகள். இப்போ எங்கள் வாக்குக்கு குறிவைத்து த.தே.கூட்டமைப்பை தூற்றுகிறார். இவர்களும் அரசியல் செய்யும்போது இதே கூட்டமைப்பை பாவித்து எம்மை ஏமாற்றினார்கள். அப்போ அது தெரியவில்லை, இப்பொமட்டும் தெரியுதாம்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.