Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமலின் நிலையப் பார்த்து கண்கலங்கினார் மகிந்த

Featured Replies

நாமலின் நிலையப் பார்த்து கண்கலங்கினார் மகிந்த

 
 
நாமலின் நிலையப் பார்த்து  கண்கலங்கினார் மகிந்த
 
 

தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை இன்று நேரில் சந்திக்கச் சென்ற முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, நாமலின் நிலையை நேரில் கண்டு கண்கலங்கினார் என்று தெரியவருகிறது.

இது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

மகிந்தவுடன் அவரது மனைவி மற்றும் மகன் யோசித ஆகியோரும், ஆதரவாளர்கள் சிலரும் சென்றனர் எனத் தெரியவருகிறது.

http://newuthayan.com/story/37273.html

  • கருத்துக்கள உறவுகள்

 நாமல் செய்த தவறுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது, ஆனால் ஏதோ தமிழ் மக்கள் செய்த தவறுக்கு தன் மகன் தண்டனை பெறுவதுபோல் தந்தையார் கூப்பாடு போட்டு இனவாதத்தை கிளப்பி பிரச்சினையை திசை திருப்புவார். எப்பிடி இருப்பினும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் சட்டம் ஒழுங்கு  முறை எதுவும் பேணப்படாமல்  இரண்டு நாளில் நாமல் வெளியே வந்து விடுவார். இனவாதத்தை கிளம்புவதற்கு இது ஓர் சந்தர்ப்பமாக பாவிக்கப்படும். இதுவே இவரின் ஆட்ச்சியாய் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை காணாமல் போன பட்டியலில் தான் தேட வேண்டும். அதனாற்தான் கைது செய்யமுதல் ஊரை கூட்டி ஒப்பாரி வைப்பதன் காரணம்  தான் செய்த வினை  தனக்கே வந்துவிடும் என்கின்ற பயம். இவர்கள் என்ன எங்கள் பிள்ளைகள் போலவே சிறை அனுபவிக்கிறார்கள்? அங்கேயும் வெளியில் இருப்பது போல சுகவாழ்வு அனுபவிக்கிறார்கள். அதுக்கே இந்த ஒப்பாரி. எங்கள் பிள்ளைகள் அனுபவிப்பதுபோல சித்திரைவதை, நீண்ட கால தடுப்பு என்று வைத்தால் இவர்களுக்கும் அந்த வலி புரியும். தாங்கள் என்னவேண்டுமானாலும் செய்து விட்டு தப்புவதற்கு சட்ட ஒழுங்கு பேணுவதில்லை. அவ்வாறே தமிழ் கைதிகளை நீண்ட காலம் தடுத்து வைத்திருப்பதற்கும் சட்ட ஒழுங்கு முறைக்கு முரணாகவே நடந்து கொள்கிறார்கள்.

  • தொடங்கியவர்

தங்காலை சிறைக்குள் மஹிந்த குடும்பம்

 

வடக்கில் உள்ளவர்களுக்கு தேவையானது போன்றே சட்டம் அமுல்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடக்கில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஒரு சட்டமும் தெற்கில் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதாக அவர் சாடியுள்ளார்.

தங்காலை சிறைக்குள்  மஹிந்த குடும்பம்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையம் ஆகியவற்றை இயக்குவது தொடர்பில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 ஆம் திகதி மஹிந்த ஆதரவு கூட்டு எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியின்மையில் ஈடுபட்டதுடன், பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட ஆறு பேரை கடந்த 10 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதல்வரான நாமல் ராஜபக்சவை பார்வையிட பெற்றோரான மஹிந்த ராஜபக்சவும் ஷராந்தி ராஜபக்சவும் இன்று தங்காலை சிறையில் நேரடியாக விஜயம் செய்திருந்தனர்.

அவர்களுடன் இளைய புதல்வரான யோசித்த ராஜபக்ச மற்றும் கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக விமல் வீரவன்சவும் தங்காலை சிறைச்சாலைக்கு நாமல் உள்ளிட்டவர்களை பார்வையிடச் சென்றிருந்தனர்.

தங்காலை சிறைக்குள்  மஹிந்த குடும்பம்

(வடக்கில் உள்ளவர்களுக்கு சட்டமொன்று இல்லை. வடக்கின் சட்டம் வடக்கிற்கு ஏற்றால் போல் தான் உள்ளது. வாக்குகளை பெறுவதை இலக்காக கொண்டு வேண்டிய அனைத்தையும் செய்வதற்கு இடமளித்து அவர்களுக்கு அரசாங்கம் சுதந்திரத்தை வழங்கியுள்ளது.இங்குள்ளவர்களுக்கே சுதந்திரம் இல்லை.இதெல்லாம் சாதாரணமான குற்றம். இங்கு  6 முஸ்லீம் இளைஞர்களும் இருக்கின்றனர். பாடசாலைக்கு செல்லும் 17 வயதான மாணவன் ஒருவரும் சிறைவைக்கப்பட்டுள்ளார். அவ்வாறு மூன்று பேர் உள்ளனர். தாய்க்கு உணவை வாங்கி கொண்டுவரும் போது கைதுசெய்யப்பட்டவரும் சிறைவைக்கப்பட்டுள்ளார். வேலையை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு செல்ல வந்தவர்களும் கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர்.இதுவே பிரச்சினை)

மத்தள சர்வதேச விமான நிலையத்தை வெளிநாட்டுக்கு வழங்குவதால் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினை ஏற்படும் என மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தங்காலை சிறைக்குள்  மஹிந்த குடும்பம்

(வளங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்ற வயதான பெற்றோரின் சிறு பிள்ளையை விளக்கமறியலில் வைத்துள்ளனர்.துறைமுகம் விமான நிலையம் ஆகியவற்றை விற்பனை செய்ய முயற்சியே செய்கின்றனர்.இதற்கு எதிராக குரல்கொடுப்பதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது. ஜே.ஆர் மற்றும் பிரேமதாஸ காலத்தில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதுசெய்யப்படவில்லை. நாளை வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது. இதில் நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்..அதேபோன்று விசேடமாக விமான நிலையத்தை எடுத்துக்கொண்டால் அதன் வான்வெளியை இறுதியில் நிர்வகிப்பது விமான நிலையமாகவே இருக்கும். எதிர்காலத்தில் அது பாரிய பிரச்சினையாக மாறும். விமான நிலையத்தின் அனுமதி இல்லாமல் ஆகாயத்தில் அங்கும் இங்கும் செல்ல முடியாது. நிலத்தை மாத்திரமல்ல ஆகாய பரப்பையும் இந்த அரசாங்கம் வழங்கியுள்ளது.

https://news.ibctamil.com/ta/politics/Mahinda-s-family-in-Tangalle-prison

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.