Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் முதன்முறையாக அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்

Featured Replies

இலங்கையில் முதன்முறையாக அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்

 

 

முப்பத்து இரண்டு வருடங்களின் பின், அமெரிக்க விமானம் தாங்கிப் போர்க் கப்பல் ஒன்று இலங்கை வரவிருக்கிறது.

 

கொழும்புத் துறைமுகத்தை நாளை (28) வந்தடையவுள்ள ‘த நிமிட்ஸ் கெரியர் ஸ்ட்ரைக் க்ரூப்’ என்ற இந்தக் கப்பல், அதன் துணைக் கப்பல்களுடன் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், 1985ஆம் ஆண்டுக்குப் பின், முதன்முதலாக ஒரு விமானம் தாங்கிக் கப்பல் இலங்கைக்கு வருவதன் மூலம், அண்மைக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கத்தை வெளிக்காட்டுவதாக அமைகிறது என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

சுமார் 23 மாடிக் கட்டடத்தின் உயரத்தைக் கொண்ட இந்தக் கப்பலின் நீளம் 333 மீற்றர்கள். ஐயாயிரம் பேர் பயணிக்கக்கூடிய இந்தக் கப்பலின் சமையலறையில், நாளொன்றுக்கு பதினெட்டாயிரம் பேருக்கு உணவு சமைக்க முடியும்.

இலங்கை வரவுள்ள இந்தக் கப்பலின் வீரர்கள் இலங்கையின் தொண்டு நிறுவனங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் நடைபெறும் சேவை நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர். 

அத்துடன், ஆயிரக்கணக்கான வீரர்களின் வருகையால் உள்நாட்டு வர்த்தகர்கள் பலனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/26353

  • தொடங்கியவர்

கொழும்பிற்கு வந்த அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்

 

அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ளது.

யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் தாக்குதல் கப்பற் படையணி இன்று அதிகாலை  திட்டமிடப்பட்ட துறைமுக விஜயமாக, கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது என்று  ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பிற்கு வந்த அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்

கொழும்பு துறைமுகத்திற்கு இன்று  நங்கூரமிட்ட யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் தாக்குதல் கப்பற் படையணி எதிர்வரும் 31ம் திகதி வரை தரித்து நிற்கவுள்ளது.

இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை நெருங்கிய அமெரிக்க விமானம் தாங்கிய இந்த பாரிய கப்பலை ஸ்ரீலங்கா கடற்படை சம்பிரதாயபூர்வமாக வரவேற்றது.

கொழும்பிற்கு வந்த அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்

தாக்குதல் கப்பற்படையணியில் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ், வேக யுத்தக் கப்பலான யு.எஸ்.எஸ் பிரின்ஸ்டன், நாசகாரிக் கப்பல்களான யு.எஸ்.எஸ் ஹவார்ட், யு.எஸ்.எஸ் ஷூப், யு.எஸ்.எஸ் பிங்க்னே, மற்றும் யு.எஸ்.எஸ் கிட் ஆகியன இடம்பெற்றுள்ளன.

இந்தக் கப்பல்கள், ஸ்ரீலங்கா மற்றும் அமெரிக்க கடற்படையினருக்கு இடையில் மேம்பட்டு வரும் நல்லுறவின் பிரதிபலிப்பாக, கடந்த 1985 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதன்முறையாக ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிற்கு வந்த அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்

கொழும்பிற்கு வந்த அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/US-Ships-arrival-to-Sri-Lanka

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.