Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அர­சி­ய­ல­மைப்பு சாத்­தி­ய­மா­குமா? : நடப்­பதை பொறுத்­தி­ருந்து பாருங்கள் நாம் வெற்றி வாகை சூடுவோம்

Featured Replies

புதிய அர­சி­ய­ல­மைப்பு சாத்­தி­ய­மா­குமா? : நடப்­பதை பொறுத்­தி­ருந்து பாருங்கள் நாம் வெற்றி வாகை சூடுவோம்

 

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் உண்­மைக்கு புறம்­பான தக­வல்கள் மகா­நா­யக்க தேரர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் அரச தரப்பின் பரப்­பு­ரை­ போ­து­மா­ன­தாக இல்லை. எனினும் நடப்­ப­தனை பொறுத்­தி­ருந்து பாருங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பு வெற்­றி­க­ர­மாக நிறை­வேறும் என தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யா­டல் ­மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

அமைச்சர் கேச­ரிக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யின்போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவ­ரது செவ்­வியின் முழு வடிவம் கீழ்­வ­ரு­மாறு

கேள்வி: சக­வாழ்வு அமைச்சின் கீழ் முன்­னெ­டுக்கப்பட்ட கைய­டக்கத் தொலை­பேசி குறுந்­தி­ரைப்­பட போட்டி நிகழ்ச்சித்

திட்டம் குறித்து விளக்க முடி­யுமா?

பதில்: ஆம். எனது அமைச்­சுக்கு கீழ் சக­வாழ்வு விடயம் உள்­ள­டங்­கு­கின்­றது.நாட்டில் வாழும் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தையும் சக­வாழ்­வையும் ஏற்­ப­டுத்தும் நோக்­குடன் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள்ளோம்.சிங்­களம், தமிழ் மொழிகள் ஊடாக நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம். இதன்­படி சக­வாழ்வை நோக்­க­மாக கொண்டு கைய­டக்கத் தொலை

பே­சியின் ஊடாக குறுந்­தி­ரைப்­ப­டங்­க­ளுக்

­கான போட்­டிக்கு விண்­ணப்­பங்கள் ஏற்­க­ன­வே­கோ­ரப்­பட்­டன. இதன்­படி சுமார் 80 விண்­ணப்­பங்கள் கிடைக்­க­பெற்­றன. அதில்­சி­றந்த குறுந்­தி­ரைப்­ப­டங்­க­ளுக்கு விருது வழங்­கப்­படும்.

கேள்வி:இந்த விருதுகளை எந்த அடிப்­ப­டையில் வழங்­க­வுள்­ளீர்கள்?

பதில்:இந்த விருது வழங்கலின்

போது மூன்று மொழிகளிலான குறுந்தி­ரைப்­ப­டங்­கள் ­க­வ­னத்தில் கொள்­ளப்­படும். இதன்படி தமிழ், சிங்­களம் மற்றும் ஆங்­கி­ல­மொழிக ளில் சிறந்த மூன்று குறுந்­தி­ரைப்­ப­டங்­க­ளுக்கு விரு­துகள் வழங்­க­வுள்ளோம். அத்­துடன் இதற்கு அப்பால் மொத்­த­மாக சிறந்த 10 குறுந்­தி­ரை­ப்ப­டங்­க­ளுக்கு விசேட விரு­து­களை வழங்­க­வுள்ளோம்.

கேள்வி: இதனால் எவ்­வா­றான நன்­மைகள் கிடைக்கும்?

பதில்:மூன்றாம் கண்ணால் இலங்­கையர் அடை­யாளம் என்ற தொனிப்­பொ­ருளின் கீழ் குறித்த திட்­டத்தின் ஊடாக இளை­ஞர்­க­ளிடம் இருந்து சக­வாழ்­வுக்­கான எதிர்­பார்ப்பு எவ்­வா­றா­னது என்பதை அறிந்துகொள்ள முடிவதுடன். அத்­துடன் குறுந்­தி­ரை­ப்ப­டங்­களின் ஊடாக சக­வாழ்­வையும் நல்­லி­ணக்­கத்­தையும் நாட்டில் ஏற்­ப­டுத்துவதே எமது இலக்­காகும்.அத்­துடன் இந்த விருது வழங்கல் விழா இன்று வெள்­ளிக்­கி­ழமை இலங்கை திரை­ப்பட கூட்­டு­த்தா­ப­னத்தில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­கழ்வில் பிர­தம அதி­தி­யாக நிதி மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர கலந்­து­கொள்­ள­வுள்ளார்.

கேள்வி: நல்­லாட்சி அர­சாங்கம் பற்றி என்ன நினை­க்கின்­றீர்கள்?

பதில்: - நல்­லாட்சி அர­சாங்கம் எமது அர­சாங்­க­மாகும். நாமே நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கினோம். எனினும் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக பல விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. முன்­னைய ஆட்­சி­யினை பார்க்­கிலும் சிறந்­தது என்றே நான் கூறுவேன். திருட்டுத் தனம் தொடர்பில் பார்க்கும் போது அர­சாங்­கத்தில் உள்­ள­வர்கள் கொள்­ளை­யிட்­டுள்­ளனர் என்­பது தொடர்பில் விரி­வா­கவும் சுதந்­தி­ர­மா­கவும்

பேச முடியும். அவர்­க­ளுக்கு எதி­ராக ஆணைக்

­கு­ழுக்­களில் முறை­யி­டவும் முடியும். சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்களை பத­வியில் இருந்து நீக்­கவும் முடியும். இதுவே நல்­லாட்­சியின் மாற்­ற­மிகு செயற்­பா­டாகும்.

கேள்வி:- என்­றாலும் நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லுள்ள பிர­தான கட்­சி­க­ளி­டையே கருத்து முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றதே?

பதில்: இது ஒவ்வொரு­வ­ரி­னதும் பார்க்கும் கோணங்­க­ளாகும். தற்­போது அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள் கொள்­ளை­யிட்­டுள்­ள­தாக கூறு­கின்­றனர். எனினும் அர­சாங்­கத்தில் கொள்­ளை­யர்கள் உள்­ளனர் என்­ப­தனை கூறு­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் சுதந்­திரம் கொடுத்­துள்­ளது. இது என்­னு­டைய கோண­மாகும். இதற்­கான விசா­ர­ணைகள் நடை­பெற்று அமைச்சர் ஒருவர் நீக்­கப்­பட்­டுள்ளார். பிர­த­மரும் இது தொடர்பில் சாட்­சி­யம­ளிக்க தயார் என கூறி­யுள்ளார்.

எம் ஒவ்­வொ­ருவருக்கும் கொள்­கை­யொன்று உள்­ளது. அப்­படி ஒரு கொள்கை இருப்­பதன் கார­ண­மா­கவே கருத்து முரண்­பா­டுகள் ஏற்­ப­டு­கின்­றன. எனினும் ஜன­நா­ய­கத்தின் பண்­பு­களின் பிர­காரம் கருத்து வேறு­பா­டுகள் இருப்­பது சிறந்த அம்­ச­மாகும். நல்­லாட்சி அர­சாங்­கத்தில் பல்­வேறு கட்­சிகள் உள்­ளன. எனினும் அந்த கட்­சி­களின் கருத்­துகளுக்­க­மைய பேசு­வ­தற்கு இட­ம­ளித்­துள்­ளமை ஜன­நா­ய­கமாகும். இது வாத­பி­ர­தி­வாதம். இவ்­வா­றான வாதப்­பி­ர­தி­வா­தங்­களின் ஊடாக சரி­யான தீர்­மா­னத்தை நாங்கள் ஒன்று சேர்ந்து எடுப்போம். எனினும் இரு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து மூன்­றாண்­டுகள் தொடர்ச்­சி­யாக ஆட்சி புரிந்து வரு­கின்­றன. இவ்­வாறு இரு­பி­ர­தான கட்­சிகளும் ஒன்று சேர்ந்து ஆட்­சி­ பு­ரிந்­துள்­ளமை இது­வ­ரை­யான வர­லாற்று காலத்தில் நடந்­துள்­ளதா? இல்லை. எனவே இதுதான் வெற்­றி­யாகும்.

இனப்­பி­ரச்­சினை தீர்ப்­ப­தற்கு இரு பிர­தான கட்­சிகளும் ஒன்­றி­ணைந்தே ஆக வேண்டும். எனினும் தற்­போது கட்­சி­க­ளுக்­குள்­ளேயே பிள­வுகள் உள்­ளன. மக்கள் விடு­தலை முன்­னணி, சுதந்­திரக் கட்சி , எனது கட்­சி­யிலும் பிரச்­சினை ஏற்­பட்டு எனது சகோ­தரர் என்னை விட்டு பிரிந்து சென்றார் தானே. எனவே இரு பிர­தான கட்­சி­களும் இணைந்து இவ்­வ­ளவு காலம் ஆட்சி புரி­கின்­றன.ஏன் இதனை உங்­களால் சாத­க­மாக பார்க்க முடி­யாது.

கேள்வி: தற்­போது நாட்டில் நல்­லாட்சி இல்லை என்று கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கூறு­கின்­ற­னரே?

பதில்:இவ்­வா­றான கேள்வி எழுப்­பு­வ­தற்கு கூட்டு எதி­ர­ணிக்கு எந்­தவொரு அரு­க­தையும் கிடை­யாது. இவர்கள் யார்?. இந்த நாட்டின் அடிப்­படை சட்டம் ஒன்று உள்­ளது. இதில் திருத்­தங்கள் கொண்டு வந்­தனர். எப்­படி கொண்டு வந்­தனர். காலையில்

கொண்டுவந்து இரவில் நிறை­வேற்­றினர். இவர்கள் ஆடை அணிந்து கொண்டா இவ்­வாறு கேள்வி எழுப்­பு­கின்­றனர். ஜனா­தி­பதி ஒருவர் இரு தடவைகள் மாத்­தி­ரமே பத­வியில் இருக்க முடியும் என்ற சட்­டத்தை மாற்­றி­யது யார்?.

கேள்வி:கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் தேர்தல் தாமதம் தொடர்பில் அர­சாங்கம் மீது குற்றம் சுமத்­து­கின்­ற­னரே?

பதில்: தேர்தல் ஏன் தாம­த­மா­னது. தற்­போது புதிய தேர்தல் முறைமை கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இது பொது மக்களின் நீண்ட கால கோரிக்­கை­யாகும். 2003 ஆம் ஆண்டு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஆட்­சியின் போது தினேஷ் குண­வர்­தன தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. அவரே இவ்­வா­றான யோச­னை­களை முன்­வைத்தார். தொகு­தி­வா­ரியே ஆரம்­பத்தில் இருந்­தது. அதன்­பின்னர் விருப்பு வாக்கு முறைமை வந்­தது. தற்­போது கலப்பு முறையே வந்­துள்­ளது.

இதன்­மூலம் தொகு­திக்கு பொறுப்புக் கூறக்

கூடிய ஒருவர் தெரிவு செய்­யப்­ப­டுவார். இதன்­மூலம் பொறுப்­பு­கூறல் செயற்­பாடு உரிய முறையில் முன்­னெ­டுக்­கப்­படும்.

தற்­போது உள்ள விருப்பு வாக்கு முறை­மையை பாருங்கள். நான் கொழும்பு மாவட்ட மக்கள் பிர­தி­நி­தியாகும். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ரவி கரு­ணா­நா­யக்க, விமல் வீர­வன்ச ஆகியோர் கொழும்பு மாவட்ட மக்கள் பிர­தி­நி­திகள். ஆனால் எனக்கு யார் வாக்­க­ளித்­தார்கள் என்­பது எனக்கே தெரி­யாது. ஏனெனில் ஒரு வாக்­கா­ளர்கள் மூன்று விருப்­பு­வாக்குகளை அளிக்க முடியும். இதனால் பொறுப்பு கூறல் சாத்­தி­ய­மற்­ற­தாகும். ஆனால் தற்­போது தொகு­திக்கு பொறுப்பு கூற கூடி­யவர் வருவார். இதன்­மூலம் மக்­களின் பிரச்­சினை இல­குவில் தீர்க்­கப்­படும். அதே­போன்று தற்­போது செலவும் அதி­க­மாகும். இதனால் சிலர் கடன் பெற்றே தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­றனர். இதனால் பெரும் பாதிப்­புகள் உள்­ளன. இதன்­கா­ர­ண­மா­கவே தேர்தல் முறைமை மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் சிறு­பான்­மை­யினருக்கு பாதிப்பு

ஏற்­ப­டாத வகையில் மாற்றம் செய்­யப்­ப­டா­த­மையே கால­தா­ம­தத்­திற்கு பிர­தான கார­ண­மாகும். முன்­னைய ஆட்­சியின் போது பஷில் ராஜ­ப­க் ஷவே எல்லை நிர்­ணய பணி­களை முன்­னெ­டுத்தார். இதனால் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பெரு­ம­ளவில் அநீதி ஏற்­பட்­டது. தேர்தல் முறைமை மாற்றம் வேண்டும். பெண்கள் , இளை­ஞர்கள் பிர­தி­நி­தித்­துவம் கிடைக்க வேண்டும். எனினும் அதனை விடவும் சிறு­பான்­மை­யின மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும். முன்பு தமிழ் இளை­ஞர்கள் தோட்­டாக்­களை கையில் எடுத்­தனர். ஆனால் தற்­போது தோட்­டாக்­களும் இல்லை. வாக்­கு­சீட்டும் இல்லை என்றால் தமிழ் மக்கள் என்ன செய்­வது. ஆற்றில் பாய்­வதா? தாமதம் பற்றி கூறும் பண்­டி­தர்­க­ளுக்கு தேவை தேர்தல் கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­யாகும்.

இதன்­கா­ர­ண­மாக ரோஹண ஹெட்­டி­யா­ராச்சி போன்ற பண்­டி­தர்கள் கோஷ­மி­டு­கின்­றனர். இவர்கள் சிறு­பான்­மை­யினரை கணக்கில் எடுப்­ப­தில்லை.பழைய முறைமை வேண்டாம். புதிய முறை­மைதான் வேண்டும். எனினும் அவ­ச­ர­மாக வேண்டும் என்பது நியா­ய­மற்ற கோரிக்­கை­யாகும்.

கேள்வி: - பாரா­ளு­மன்ற தேர்தல் முறைமை மாறுமா?

பதில்: - தற்­போ­துதான் உள்­ளூ­ராட்சி மன்ற முறைமையில் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. மேலும் மாகாண சபை முறை­மை­யிலும் மாற்­றங்கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. பாரா­ளு­மன்ற தேர்தல் முறைமை குறித்து பின்­னரே நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி:- நுவ­ரெ­லியா, அம்­ப­க­முவ பிர­தேச

சபை­களின் எண்­ணிக்கையை அதி­க­ரிப்­பது தொடர்பில் நீங்கள் பெரும் முயற்சி எடுத்­தீர்கள். இந்த பிரச்­சினையில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டமை தொடர்பில் கூற முடி­யுமா?

பதில்:- இது தொடர்பில் கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் பேசி இணக்­க­ப்பாட்­டிற்கு வந்தோம். இது நீதி­யான கோரிக்­கை­யாகும். மற்ற இடங்­களில் 10 ஆயிரம் குடும்­பங்­க­ளுக்கு ஒரு பிர­தேச சபை இருக்கும் போது நான்கு இலட்சம் மக்­க­ளுக்கு இரு பிரதேச சபை­களே உள்­ளன. இது அநீ­தி­யாகும். இதனை செய்­யா­விட்டால் தேர்­த­லுக்கு நாம் செல்ல மாட்டோம். உண்­மையில் இந்த கோரிக்­கையை நிறை­வேற்­றா­விட்டால் அட்­டனில் நான் உண்­ணா­வி­ரத போராட்டம் நடத்­தி­யி­ருப்பேன். எனினும் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. பிர­தேச சபை உரு­வான பின்னர் தேர்தல் நடத்­தப்­படும்.

கேள்வி: -அம்­பாந்­தோட்டை போராட்­டத்தில் ஈடு­பட்டோர் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. ஒருவரின் கன்­னத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் அறைந்தார். எனினும் வடக்கில் ஜனா­தி­பதி வரு­கையின் போது ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யவர்கள் மீது எதுவும் செய்­ய­வில்லை என ஜீ.எல்.பீரிஸ் கூறு­கின்­றாரே?

பதில்: - வடக்கில் உள்­ள­வர்­க­ளுக்கு கன்னத் தில் அடிக்­க­வில்லை என்­பதா அந்த பேரா­சி­ரி­ய­ருக்கு உள்ள கவலை. தெற்கில் நடத்­திய தாக்­குதல் வடக்கில் நடத்­த­வில்லை என்­பதா அவ­ரது கவலை. வடக்கில் நடத்­திய தாக்­கு­தல்கள் அனைத்தும் போதும். இதுவே இன்று ஐக்­கி­ய­ நா­டுகள் சபை வரை சென்­றுள்­ளது.எனவே அந்த பேரா­சி­ரியரை அமை­தி­யாக இருக்க கூறுங்கள். அமை­தி­யாக இருப்­ப­துதான் அவ­ருக்கு மரி­யா­தை­யாகும். எனினும் கன்னத்தில் அடித்­தமை பெரும் தவ­றாகும். இதனை ஏற்­றுக்­கொள்ளபோவதில்லை. ஒரு அதி­காரி குற்றம் செய்­த­மைக்கு அர­சாங்கம் பொறுப்பு கூற முடி­யாது. எனினும் தற்­போது இது தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கின்­றது. பாரா­ளு­மன்­றத்­திலும் திரு­டர்கள் உள்­ளனர். சபா­நா­யகர் இவர்­க­ளுக்கு பொறுப்பு கூற முடி­யுமா?. அமைச்­ச­ர­வை­யிலும் திரு­டர்கள் உள்­ளனர். அதற்­காக அமைச்­ச­ர­வையை கலைக்க முடி­யுமா?

கேள்வி: - புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கையின் பின்­ணைப்பில் கட்­சி­க­ளி­டையே முரண்­பா­டுகள் உள்­ள­னவே?

பதில்: - தற்­போது நீங்­களே கேள்வி எழுப்பும் போது இடைக்­கால அறிக்கை என்று கூறி­விட்­டீர்கள். இது அர­சி­ய­ல­மைப்பா? அல்­லது அதற்­கான வரைபா? இல்லை. இது வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கை­யாகும். எனவே இதனை பார்த்து ஏன் அச்சம் கொள்­கின்­றனர். பாட­சாலை செல்­லா­த­வர்­களே இவ்­வாறு கூறு­கின்­றனர். நீங்­களும் நானும் பாட­சாலை சென்­றுள்ளோம். அங்கு வினா­பத்­தி­ரத்­தி­லுள்ள கேள்­வி­க­ளுக்கு விடைகள் நான்கு தரப்­பட்­டி­ருக்கும் அதில் சரி­யான பதிலை தெரிவு செய்து புள்­ளி­யி­டுவோம். அது­போன்ற ஒன்­றா­கவே இடை­கால அறிக்­கையை குறிப்­பி­ட­மு­டியும்.

இடைக்­கால அறிக்கை தொடர்பில் விவா­திப்போம். அதன்­பின்னர் வழி­ந­டத்தல் குழு­விற்கு மீண்டும் இணங்­கி­ய­வற்றை கொண்டு செல்வோம். அதன்­பிற்­பாடு மீண்­டு­மொரு அறிக்கை பாரா­ளு­மன்­றத்­திற்கு வரும். குறித்த அறிக்கை சட்­ட­வ­ரை­பாக மாற்­றப்­பட்டு அமைச்­ச­ர­வைக்கு கொண்டு செல்­லப்­படும். அதன்­பின்னர் அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­தின பின்னர் மீண்டும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வந்து அங்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட பின்னர் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு கொண்டு செல்­லப்­படும். ஏன் குழப்­ப­ம­டை­கின்­றனர். அச்சம் கொள்­கி­னறர்.

கேள்வி: - இடைக்­கால அறிக்­கைக்கு எதி­ராக

மகா­நா­யக்க தேரர்­களின் நிலைப்­பாடு தொடர் பில் உங்­க­ளது கருத்து என்ன?

பதில்:- மகா­நா­யக்க தேரர்கள் நான் மதிக்­கின்றேன். அவர்­க­ளது ஆசிர்­வாதம் எனக்கு எப்­போதும் உண்டு. எனினும் மகா­நா­யக்க தேரர்­க­ளிடம் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் பிழை­யான தக­வல்­களை கொண்டு செல்­ல­கின்­றனர். உண்­மையில் சொல்ல போனால் அது அரச தரப்பில் உள்ள பிர­தான குறைப்­பா­டாகும். ஏனெனில் இது தொடர்பில் எவரும் விளக்கம் கொடுப்பார் இல்லை. நானும் இன்னும் ஒரு சிலர் மாத்­தி­ரமே தொடர்ந்து பேசு­கின்றோம். வேறு எவரும் அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் பேசு­வ­தாக தெரி­வ­தில்லை.

கேள்வி: ஒரு­மித்த நாடு என்ற சொற்­ப­தத் தில் சர்ச்­சைகள் எழுந்­துள்­ள­னவே?

பதில்:ஒரு­மித்த நாடுவை பிடித்­துக்­கொண்டு திரிய வேண்­டி­ய­தில்லை. தற்­போது நாட்டில் தமிழ் பண்­டி­தர்கள் பலர் உரு­வா­கி­யுள்­ளனர். தமிழ் இல்­லாமல் தமி­ழர்கள் பலர் உரு­வா­கி­யுள்­ளனர். எனக்கு தமிழ் மொழியை பற்றி கூற வேண்­டி­ய­தில்லை. ஒரு­மித்த என்­பது ஒற்­றை­யாட்­சி­யாகும். இதற்­கான சொற்­ப­தத்தை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பே சூட்­டி­யது. எனக்கு பெரி­த­ளவில் விருப்பம் கிடை­யாது. இதனை பிடித்து கொண்டு அலட்­டிக்­கொள்ள தேவை­யில்லை. விமல் வீர­வன்ச அர­சி­ல­மைப்பு குறித்து பேசி­னாலும் அர­சி­ய­லை­மப்பு சபையில் இல்லை. எனவே இந்த முட்­டா­ளர்கள் தொடர்பில் பேச­வேண்­டி­ய­தில்லை.

கேள்வி: அர­சி­ய­ல­மைப்பு குறித்து இரா.சம்­பந்தன் ஒரு கருத்­தையும் சி.வி விக்­கி­னேஸ்­வரன் வேறு கருத்­தையும் முன்­வைப்­ப­தனால் தற்­போது தமிழ் மக்கள் குழம்பி போய் உள்­ள­னரே?

பதில்: - தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு என்­பது அகில இலங்கை தமிழ் மக்­களின் தலைமை அல்ல. அதனை முதலில் புரிந்­துக்­கொள்­ளுங்கள். வடக்கு கிழக்கில் மாத்­தி­ரமே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தலைமை வகிக்க முடியும். முழு நாட்டு தமிழ் மக்­களின் தலைவன் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வ­னான நானே­யாகும். 34 இலட்சம் தமிழ் மக்கள் உள்­ளனர். அதில் 14 இலட்சம் மக்­களே வடக்கில் உள்­ளனர். தெற்கில் உள்ள தமி­ழர்கள் அதி­க­மாகும். எனவே அவர்­களை பிர­தி­நி­தித்­துவம் செய்­வது தமிழ் முற்­போக்கு முன்­ன­ணி­யாகும்.

எனினும் இரா.சம்­பந்தன், சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனின் பிரச்­சினை தொடர்பில் எனக்கு கருத்து தெரி­விக்க முடி­யாது. அது அவர்­களின் கட்­சியில் உள்ள குழப்­ப­மாகும். எனவே இந்த விட­யத்தில் வடக்கில் வாழும் எனது சகோ­தர மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும்.

கேள்வி: - காணாமல் போனோர், அர­சியல்

கைதிகள் விடு­விப்பு, காணி­வி­டு­விப்பு தொடர் பில் தாமத போக்கு காணப்­ப­டு­கின்­றதே? ஐக்­கிய நாடு­களின் நிபு­ணரும் இதனை சுட்­டி­காட்­டி­யுள்­ளாரே?

பதில்: - ஆம். நிச்­சி­ய­மாக தாமதம் ஏற்­பட்­ட­மையை நான் ஏற்­றுக்­கொள்­கின்றேன். பப்லோ கிரிப் என்­னையும் சந்­தித்தார். அர­சியல் கைதிகள் விட­யத்தில் பலரை நாம் விடு­வித்­துள்ளோம். நாம் ஆட்­சிக்கு வரும் போது 200 பேர் இருந்­தனர். தற்­போது 130 பேர் உள்­ளனர். 70 பேரை விடு­வித்­துள்ளோம். காணிகள் பல விடு­வித்­துள்ளோம். செய்­தவை தொடர்பில் மகிழ்ச்சி அடை­வது போன்று எதுவும் செய்­ய­வில்லை என்று கூற முடி­யாது. அப்­படி எதுவும் செய்­யாமல் தேங்காய் குட்டை மாதிரி இருக்­கு­மானால் நான் அர­சாங்­கத்தில் இருக்க போவ­து­மில்லை. எனினும் பல வேலை­களை செய்­துள்ளோம். தாமத போக்கு காணப்­ப­டு­கின்­றது. அதனை மெல்ல மெல்ல சீர் செய்ய முடியும். தேசிய அர­சாங்­கத்தில் பல கட்­சிகள் உள்­ளன. இவர்­களின் கொள்­கை­க­ளுக்கு மதிப்­ப­ளித்து செயற்­பட வேண்டும். இதன்­படி ஒரு தரப்­பினர் அர­சாங்­கத்­திற்கு உள்ளே இருந்தும் ஒரு தரப்­பினர் வெளியே இருந்து போரா­டு­கின்­றனர்.இதனை சாத­க­மான நிலை­மைக்கு கொண்டு வர­வுள்ளோம்.

கேள்வி - அமைச்­சரே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு எதி­ராக பெளத்த பிக்­குகள் உட்­பட பல­த­ரப்­பினர் எதிர்ப்பு வெளி­யிட்டு வரும் நிலையில் நல்­லாட்சி அர­சாங்கம் எப்­படி புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்டு வரப்­போ­கின்­றது. அர­சாங்கம் கொண்டு வருமா?

பதில் - நடப்­ப­தனை பொறுத்­தி­ருந்து பாருங்கள். இப்­ப­டி­தானே வடக்கில் உள்­ள­வர்கள் அதி­காரம் பகிர்வு போதாது என்­கி்ன்­றனர். தெற்கில் உள்­ள­வர்கள் அதி­கார பகிர்வு அதி­யுச்சம் என்­கின்­றனர். இந்த இரு­வா­தங்­களும் வெவ்­வே­றா­னது. வடக்கில், தெற்கில் இன­வாத கோணத்துன் செயற்­ப­டு­ப­வர்­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்வம் அற்ற ஒப்­பந்தம் ஒன்று உள்­ளது. நாம் மத்­தி­யஸ்த நிலையில் உள்­ள­வர்கள். எனவே இன­வாதம் எப்­போதும் தோல்­வி­ய­டையும். நாம் வெற்­றி­பெ­றுவோம்.

மேலும் நான் எதற்கும் அஞ்­ச­மாட்டேன். வெள்ளை வேன் கடத்தல் நடக்கும் போது நான் வீதியில் இறங்கி போரா­டி­யவன். எனது பக்­கத்தில் ரவி­ராஜூம் லசந்த விக்­கி­ர­ம­துங்­க­வுமே இருந்­தனர். தற்­போது அவர்­களை கொலை செய்து விட்­டனர். என்­னையும் கொல்­வ­தற்கு திட்­ட­மிட்­டனர். எனினும் அது வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. எனினும் அதற்கு பயந்து நான் வெளி­நாடு செல்­ல­வில்லை. எனினும் தமிழ் தலை­வர்கள் என்று கூறு­ப­வர்கள் அப்­போது நாட்டில் இருக்­க­வில்லை. கனடா போன்ற நாடு­களில் பயந்து வாழ்ந்­தனர். ஆனால் நான் ஒட­வில்லை.என்­றாலும் ரவிராஜ் கொலை செய்­யப்­பட்ட நேரம் எனது அம்­மாவின் வேண்­டு­கோளின் பிர­காரம் இந்­தி­யா­வுக்கு சென்­றி­ருந்தேன். எனினும் நீண்­ட­காலம் நிற்­காது உடனே வந்து விட்டேன். மகேஸ்­வரன் இறக்கும் போதும் நான் இந்­தி­யா­வுக்கு சென்றேன்.

இருந்த போதும் இறு­தியில் எனது அம்­மாவை நான் இழந்தேன். என்னால் அவர் மன­த­ளவில் வேத­னை­யுற்று இருந்தார். அமைச்­ச­ராக இருந்த போதும் நான் எனது தாய்க்கு பிள்­ளை­யாகும். தற்­போது வீர­வ­சனம் பேசும் எந்த தமிழ் தலை­வர்­களும் அப்­போது முன்­வ­ர­வில்லை. நாமே ஆட்­சியை உரு­வாக்­கினோம். நான்தான் ஆட்­சியை உரு­வாக்க பாடு­பட்டேன். தற்­போது பலர் அதற்கு சொந்தம் கொண்­டாட முற்­ப­டு­கின்­றனர்.

கேள்வி - எனினும் லசந்த விக்­கி­ர­ம­துங்­கவின் கொலை சம்­பந்­தப்­பட்ட குற்­ற­வா­ளிகள் இன்னும் கைது செய்­ய­ப­ட­வில்லை. ஏன் இந்த தாமத போக்கு?

பதில் -ஆம். தாமதம் உள்­ளது. லசந்த விக்­கி­ர­ம­துங்­கவை கொலை செய்­த­வரை உடன் கைது செய்ய வேண்டும். யார் கொலை செய்தார் என்­பது எனக்கு தெரியும். எனினும் சாட்­சி­யங்கள் போதி­ய­தாக இல்லை. எனினும் விசா­ரணை நடத்­தப்­பட்டு உண்மை நிலை­நாட்­டப்­பட வேண்டும். இவர்­க­ளுக்கு என்­னிடம் மன்­னிப்பு கிடை­யாது. அதற்­காக சரத் பொன்­சேகா போன்று பல­வந்­த­மாக சிறையில் தள்ள முடி­யாது.

கேள்வி -அம்­பாந்­தோட்­டையில் அரச நிறு­வ­னங்­க­ளான விமான நிலை­யங்கள் விற்­கப்­ப­டு­வது தொடர்பில் உங்­க­ளது கருத்து என்ன?

பதில் - நாங்கள் எத­னையும் விற்­க­வில்லை. குத்­த­கைக்கு மாத்­தி­ரமே வழங்­கி­யுள்ளோம். ஆனால் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்­சியின் போது வான், நிலம், கடற்­ப­ரப்பு ஆகி­யன விற்­கப்­பட்­டன. இதன்­போது எவரும் எதிர்க்­க­வில்லை. துறை­முக நக­ரத்தை சீனா­வுக்கு உரித்­து­ரி­மை­யுடன் முழு­மை­யாக வழங்­கினார். இதன்­போது வான்­ப­ரப்பில் இலங்­கையின் விமா­னங்கள் கூட செல்ல முடி­யாத அள­விற்கு கட்­டு­பாடு விதிக்­கப்­பட்­டது. மன்­னாரில் பெற்றோல் எடுப்­ப­தற்­கான அங்­குள்ள கடற்­ப­ரப்பை இந்திய நிறுவனமொன்று வழங்கினார். நிலங்கள் பல ஏக்கர் கணக்கில் முழு உரித்துரிமையாக வழங்கினார். எனினும் நாம் அவ்வாறில்லை. கடன் சுமையை குறைக்கவே குத்தகைக்கு வழங்குகின்றோம்.

கேள்வி - உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்தா? அல்லது பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தா போட்டியிட போகின்றீர்கள்?

பதில் - தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வந்தவுடன் எமது முடிவினை அறிவிப்போம். அதுவரை பொறுத்திருங்கள். எனினும் எம்முடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட்டால் எமது வாக்கு வங்கி அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் ஐக்கிய தேசியக்கட்சியின் வெற்றியை உறுதி செய்யமுடியும். இல்லையேல் நடப்பதனை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

கேள்வி - மத்திய வங்கி பிணைமுறி விவகாரங்கள் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதிப்பு செலுத்துமா?

பதில் - நாம் ஐக்கிய தேசியக் கட்சி அல்ல. தமிழ் முற்போக்கு கூட்டணியாகும். எனினும் பிணைமுறி விவகாரத்தினால் பாதிப்புகள் ஏற்படும்.

கேள்வி - விமல் வீரவன்ச பாராளுமன்றத்திற்கு குண்டு வைக்க போவதாக கூறுகின்றாரே?

பதில் - தற்போது அமைச்சராக உள்ள எஸ்.பி திஸாநாயக்க நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கு சிறைவாசம் அனுபவித்தார். எனினும் நீதிமன்றத்தை பார்க்கிலும் அதியுச்ச அதிகாரம் கொண்ட நிறுவனமே பாராளுமன்றமாகும். என்றாலும் பாராளுமன்றத்திற்கு குண்டு தாக்குதல் நடத்த வேண்டும் என விமல் வீரவன்ச கூறியுள்ளார். இதனை நாம் சும்மா விடமாட்டோம். இது தொடர்பில் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். ஆகவே சபாநாயகர் தலையிட்டு உடனடியாக விமல் வீரவன்சவை சிறையில் அடைக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சபை கூடும் போதே குண்டு தாக்கல் நடத்த வேண்டும் என்றே விமல் வீரவன்ச கூறியிருந்தார். எனினும் அவரது கட்சி தற்போது அரசியலமைப்பு சபையில் இல்லை. என்றாலும் இவ்வாறான கருத்தின் ஊடாக அவரது கூட்டு எதிர்க்கட்சி சகாக்களுக்கும் அவர் ஆப்பு வைக்க பார்க்கின்றார் என்றார்.

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.