Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவ­சாய ஆய்வு மாநா­டு அடுத்த மாதம் கிளி­­நொச்­சி­யில்

Featured Replies

 விவ­சாய ஆய்வு மாநா­டு அடுத்த மாதம் கிளி­­நொச்­சி­யில்

உலக விவ­சாய ஆய்வு மாநா­டு  அடுத்த மாதம் கிளி­­நொச்­சி­யில்

66 ஆராய்ச்­சிக் கட்­டு­ரை­க­ளு­ட­னான உலர் வலய விவ­சா­யம் தொடர்­பான 3ஆவது பன்­னாட்டு ஆராய்ச்சி மாநாடு எதிர்­வ­ரும் நவம்­பர் மாதம் முத­லாம் மற்­றும் 2ஆம் திக­தி­க­ளில் அறி­வி­யல் நகர், கிளி­நொச்­சி­யில் அமைந்­துள்ள யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் விவ­சாய பீடத்­தின் கேட்­போர் கூடத்­தில் இடம்­பெற ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மாறி­வ­ரும் காலத்­தின் தேவை கருதி ‘‘நீடித்த நிலை­பே­று­கை­யான விவ­சாய உற்­பத்­தித் திறனை நோக்­கிய புது­மை­கள்’’ (Innovation towards sustainable agricultural productivity) எனும் தொனிப் பொரு­ளில் இந்த ஆராய்ச்சி மாநாடு இடம்­பெ­ற­வுள்­ளது.

முத­லாம் திகதி காலை 8.30க்கு ஆரம்­ப­மா­கும் தொடக்க நிகழ்­வுக்கு அண்­ணா­ம­லைப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் பேரா­சி­ரி­யர் கே. மணி­வண்­ணன், பேரா­த­னைப்­பல்­க­லைக்­க­ழத்­தின் பேரா­சி­ரி­யர்­க­ளான பிர­தீப சில்வா, ஜீவிகா வீர ஹேவா, ரெரன்ஸ் மது­ஜித், சிறி ஜெய­வர்த்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கலா­நிதி மித்­திகா விதா­னகே ஆகி­யோர் வருகை தர­வுள்­ள­னர். அவர்­க­ளின் சிறப்­புரை­களும் இடம்­பெ­ற­வுள்­ளன.

இரண்­டாம் நாள் நிகழ்­வில் அமெ­ரிக்­கப் பல்­க­லைக்­க­ழ­கம், நைஜீ­ரி­யா­வைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் ஜோன். E. லியோ­னாட், UNICEF செயற்­றிட்ட அலு­வ­லர் சுதர்­மன் ஆகி­யோர் வருகை தந்து சிறப்­பிக்­க­வுள்ள­ தோடு சிறப்­பு­ரை­ க­ளை­யும் ஆற்­ற­வுள்­ள­னர்.

ஆறு அமர்­வு­க­ளாக இடம்­பெ­ற­வி­ருக்­கும் இந்த ஆராய்ச்சி மாநாட்­டில் ஒவ்­வொரு அமர்­வி­லும் பிரத்­தி­யேக­ மான உப­த­லைப்­புக்­க­ளின் கீழ் ஆராய்ச்­சி­யா­ளர்­கள் தம் ஆய்­வுக்­கட்­டு­ரை­க­ளைச் சமர்ப்­பிக்­க­வுள்­ள­னர்.

அந்த வகை­யில் உள்­நாடு மற்­றும் வெளிநா­டு­க­ளைச் சேர்ந்த ஆராய்ச்­சி­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து மொத்­த­மாக 66 ஆராய்ச்­சிக் கட்­டு­ரை­கள் இந்த அரங்­கில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன என விழா ஏற்­பாட்­டுக்­கு­ழு­வி­னர் தெரி­வித்­த­னர்.

கால­நிலை மாற்­ற­மும் விவ­சா­ய­மும், மண் நீர் மற்­றும் சூழல் முகா­மைத்­து­வம், உணவு விஞ்­ஞா­ன­மும் தொழில்­நுட்­பம், கால்­நடை வளர்ப்­பும் மீன்­பிடி மற்­றும் நீரி­யல் வளர்ப்­பும், பயிர்ப்­பா­து­காப்­பும் உயிர்­தொ­ழில்­நுட்­ப­மும், மீள்­கா­டாக்­க­மும் பயி­ருற்­பத்­தி­யும், விவ­சா­யப் பொரு­ளி­யல் விவ­சாய இயந்­தி­ர­வி­ய­லும், அறு­வ­டைக்­குப் பின்­னான தொழில்­நுட்­ப­மும் நீர்ப்­பா­சன முகா­மைத்­து­வ­மும் போன்ற உப தலைப்­புக்­க­ளின் கீழ் ஆறு அமர்­வு­க­ளும் இடம்­பெ­ற­வுள்­ளன.

இதில் இலங்­கை­யின் பிற பாகங்­க­ளி­லி­ருந்­தும், பன்­நா­டு­க­ளி­லி­ருந்­தும் பேரா­சி­ரி­யர்­கள், துறை­சார் வல்­லு­நர்­கள், புல­மை­யா­ளர்­கள், இளம் ஆராய்ச்­சி­யா­ளர்­கள், மாண­வர்­கள் எனப் பலர் கலந்து கொள்­ள­வுள்­ள­னர்.

விவ­சாய­ பீடத்­தின் பீடா­தி­பதி பேரா­சி­ரி­யர் திரு­மதி துஷ்­யந்தி மிகுந்­தன் தலை­மை­யில் இடம்­பெற உள்ள இந்த நிகழ்­வில் சிறப்பு விருந்­தி ­ன­ராக விஞ்­ஞான, தொழில்­நுட்ப மற்­றும் ஆராய்ச்சி அமைச்­சர் சுசில் பிரே­ம­ஜ­யந்­த­வும், முதன்மை விருந்­தி­­ன­ராக யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் துணை­வேந்­தர் பேரா­சி­ரி­யர் ஆர். விக்­னேஸ்வ­ ரனும் கலந்து கலந்து சிறப்­பிக்க­வுள்­ள­னர்.

‘‘ஆய்­வ­ரங்­கின் ஆறு அமர்­வு­க­ளின் மூல­மாக வடக்­கு­மா­க­ணத்­தின் அபி­வி­ருத்­தி­யி­லும் எமது சமூ­கத்­தின் மேம்­பாட்­டுக்­கும் குறிப்­பாக விவ­சா­யம் சார்ந்த பொரு­ளா­தா­ரத்தை கொண்­டுள்ள எமது பிர­தே­சத்­துக்­கும் பெரும்­பணி ஆற்ற வேண்­டிய கடப்­பாடு விவ­சாய பீடத்­துக்­குள்­ளது. அந்த வகை­யில் இத்­த­கைய பன்­னாட்டு­ ஆராய்ச்சி மாநா­டு­கள் இனி­வ­ரும் காலங்­க­ளில் இடம்­பெ­றப் போகும் அபி­வி­ருத்­திக்­கான அடித்­த­ள­மாக அமை­யும் என்­ப­தில் எவ்­வித ஐய­மு­மில்லை. ஆராய்ச்­சி­யா­ளர்­கள், துறை­சார் வல்­லு­நர்­கள், பேரா­சி­ரி­யர்­கள், விவ­சா­யத் திணைக்­க­ளங்­க­ளின் பணிப்­பா­ளர்­கள், பிர­திப் பணிப்­பா­ளர்­கள்,அரச அதி­கா­ரி­கள், மாண­வர்­கள் எனப் பல­ரும் கலந்து கொள்­ள­வி­ருக்­கும் இந்த ஆராய்ச்சி மாநாட்­டில் எமது பிர­தே­சத்­தின் விவ­சா­யி­கள், சமூக ஆர்­வ­லர்­கள் மற்­றும் பொது­மக்­கள் என்­போ­ரின் ஆத­ர­வும் பங்­கேற்­ற­லும் கிடைக்­கின்ற பட்­சத்­தில் இந்த ஆராய்ச்சி மாநாட்டை ஏற்­பாடு செய்­த­தன் நோக்­கம் முழு­மை­ய­டை ­யும்” என யாழ்ப்­பா­ணப்­பல்­க­லைக் க­ழக விவ­சாய பீடத்­தி­னர் தெரி­வித்­த­ னர்.

http://newuthayan.com/story/41691.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.