Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் : 6 பேருக்கு கடூழியச்சிறை

Featured Replies

டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் : 6 பேருக்கு கடூழியச்சிறை 

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதில் குற்றவாளிகளாகக் கண்ட 6 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

daglas-devananda.jpg

களுத்துறை சிறைச்சாலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30 ஆம் திகதி,  அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், குறித்த வழங்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக்கெள்ளப்பட்போது, குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆறு பேருக்கு பத்தரை ஆண்டுகால கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயற்பட்டாளர் எமில்காந்தன் உள்ளிட்ட 9 பேர் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்து நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/26449

  • தொடங்கியவர்
டக்ளஸ் தாக்குதல்: எமில்காந்தன் உட்பட 10 பேர் விடுதலை; 6 பேருக்கு சிறை
 

image_f576f953db.jpg

1998ஆம் ஆண்டு, களுத்துறை சிறைச்சாலையில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தாக்குதலுக்குள்ளான சம்பவம் தொடர்பிலான தீர்ப்பு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களுக்குப் பத்தரை வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, எமில்காந்தன் உட்பட 10 பேர் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/டக்ளஸ்-தாக்குதல்-எமில்காந்தன்-உட்பட-10-பேர்-விடுதலை-6-பேருக்கு-சிறை/175-206320

  • தொடங்கியவர்

தம்மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் பூரண ஆதரவு வழங்கப்படும் – டக்ளஸ்

தம்மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட  தீர்ப்பால் தான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நீதிமன்றால் குறித்த ஆறு பேருக்கும் வழங்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை தொடர்பில் தாம் மிகுந்த மனவேதனை அடைவதாக தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் உறவினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சென்று மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் தாம் அதற்கு பூரண ஆதரவினை தெரிவிப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

களுத்துறைச் சிறைச்சாலையில் 1998 ஆம் ஆண்டு தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த நிலையில் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளை பார்வையிட்டு கலந்துரையாடச் சென்றிருந்த சமயமே கைதிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.

களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்ற ஈபிடிபியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தினர் என 6 பேருக்கு 10 ஆண்டுகளும் 6 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்பளித்தது.

1998ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீது கைதி மற்றும் தடுப்பிலிந்தவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதல் தொடர்பில் எமில்காந்தன் என அழைக்கப்படும் அன்ரன் சமில் லக்மி கண்ணன் உள்ளிட்ட 9 போராளிகள் மற்றும் 7 பேர் அடங்களாக 16 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் கொலை முயற்சிக் குற்றச்சாட்டை சட்டமா அதிபர் முன்வைத்தார்.

அவர்களில் 6 பேரை குற்றவாளிகள் என இன்று அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, இந்தத் தண்டனையை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/47598

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.