Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்கட்சித் தலைவர் பாராளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி சபாநாயகரிடம் முறைப்பாடு

Featured Replies

எதிர்கட்சித் தலைவர் பாராளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி சபாநாயகரிடம் முறைப்பாடு

 

 

எதிர்கட்சித் தலைவர் பாராளுமன்ற சிறப்புரிமையை மீறியதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி சபாநாயகரிடம் முறைப்பாடு

எதிர்கட்சித் தலைவர் தனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாக குற்றம் சாட்டியுள்ள வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இது குறித்து சபாநாயகரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் அக்டோபர் மாதம் 30, 31 மற்றும் நவம்பர் 1ஆம் திகதிவரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு தமது கருத்தைத் தெரிவிப்பதற்குத் தமக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான ந.சிவசக்தி ஆனந்தன் எதிர்க்கட்சித் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இருப்பினும் உங்களுக்கான நேர ஒதுக்கீடு குறித்து பாராளுமன்ற குழுவில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இதற்குக் கண்டனம் தெரிவித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இது வரைகாலமும் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு பாராளுமன்றக் குழுவில் முடிவெடுப்பதில்லை. இம்முறை எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு அறிவித்துள்ளமையானது எமக்கு அதிர்ச்சியளிக்கிறது. பாராளுமன்றத்தில் கூட்டமைப்பின் குறியீடாகவே இலங்கை தமிழரசுக் கட்சி இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியையும் சேர்த்து நான்கு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இடைக்கால அறிக்கை தொடர்பில் எமது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காகவே நாம் நேரம் ஒதுக்கித்தருமாறு வேண்டினோம். ஆனால் எமது கருத்து ஏற்கப்படவில்லை.

வன்னி உட்பட வடக்கு-கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகவும் அதன் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதற்காகவும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அளப்பரிய பங்காற்றியுள்ளது. கூட்டமைப்பிற்கு வெளியில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளையும் இதில் இணைத்துக்கொள்வதிலும் அது தனது காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தது.

மேற்கண்ட எமது செயற்பாடுகளை அங்கீகரிக்கும் வகையிலும் எமது மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து விலகாமலும் அவர்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை ஆற்றி வருவதினாலுமே வன்னி மக்களின் பூரண ஆதரவுடன் தொடர்ந்தும் நான்குமுறை நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு வந்திருக்கிறேன். அவர்களின் கருத்துக்களையும் எமது கட்சியின் நிலைப்பாட்டையும் தெரிவிப்பது எமது உரிமையும் கடமையுமாகும். எமது அந்த ஜனநாயகக் கடமையைச் செய்ய விடாமல் தடுப்பது எமது அடிப்படை உரிமையை மீறுவதாகும். மேலும் எமது மக்களை அவமதிக்கின்ற செயலாகவே நாம் இதனைப் பார்க்கின்றோம். எதிர்க்கட்சித் தலைவரின் இச்செயலானது தமிழரசுக் கட்சியின் அராஜகப் போக்கையும் அதன் எதேச்சாதிகாரப் போக்கையும் நிரூபிப்பதாகவே அமைந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் இச்செயலானது ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையை மீறுவதாகவும் அமைந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை நாம் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். சபாநாயகர் ஜனநாயகத்தை நிலைநாட்டி எமக்கான உரிமையை வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றோம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இத்தகைய அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.samakalam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.