Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாணங்களுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட வேண்டியது அவசியம்

Featured Replies

மாகாணங்களுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட வேண்டியது அவசியம்

p2-3a542db452b404e1456c7bbfc7b1b0aecc3869e9.jpg

 

13ஆவது திருத்­தத்தின் பிர­காரம் மாகா­ணங்­க­ளுக்கு பூரண அதி­காரம் வழங்­கப்­ப­ட­வேண்டும். அத்­துடன் நிறை­வேற்று அதிகார ஜனா­தி­பதி முறைமை இல்­லா­ம­லாக்­கப்­ப­டு­மானால் மாகாண அதி­கா­ரங்­களில் திருத்தம் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். மேலும் 83ஜூலை கல­வரம் ஜே.ஆரின் கட்­டுப்­பாட்டை மீறி இடம்­பெற்­ற­தொன்று. என்­றாலும் அதனை கட்­டுப்­ப­டுத்த முன்­கூட்­டியே நட­வ­டிக்கை எடுக்­கா­தமை அவர் செய்த தவ­றாகும் என நாட்டின் முத­லா­வது நிறை­வேற்று ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்த்­த­னவின் பேர­னு­ம் சூரிய மின்­சக்­தியை நாட்­டுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­வரும் தற்­போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கம்­பஹா மாவட்ட அமைப்­பா­ள­ரு­மான பிரதீப் ஜய­வர்த்­தன தெரி­வித்தார்,

அவர் எதிர்­கா­லத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் இணைந்து செயற்­பாட்டு அர­சி­யலில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக அண்­மையில் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­தி­ருந்தார். இது தொடர்­பாக கேசரி நாளி­த­ழுக்­காக அவர் வழங்­கிய நேர்­கா­ணலில் தெரி­வித்த கருத்­துக்கள் வரு­மாறு,

கேள்வி: செயற்­பாட்டு அர­சி­யலில் ஈடு­ப­டு­வ­தற்கு காரணம் என்ன?

பதில்: ஆரம்ப காலம் முதல் ஆளும் அர­சாங்­கங்­க­ளுடன் இணைந்து நாட்டின் முன்­னேற்­றத்­துக்கு என்னால் முடிந்த ஒத்­துை­ழப்­பு­களை வழங்­கி­யுள்ளேன். குறிப்­பாக கிரா­மப்­புறங்­க­ளக்கு மின்­சா­ரத்தை கொண்­டு­செல்ல முடி­யாமல் இருந்­தது. 1987ஆம் ஆண்டில் எனது பாட்னார் ஜே. ஆர். மின்­சக்தி அமைச்­ச­ராக இருக்கும் போது இது­தொ­டர்­பாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அப்­போது சூரிய சக்தி மின்­சாரம் தொடர்­பாக நான் எடுத்­துக்­கூ­றினேன். ஜே.ஆரும் அதன் பிர­யோ­ச­னத்தை என்­னை­விட அறிந்­தி­ருந்தார். அதனால் இந்த திட்­டத்தை அமுல்­ப­டுத்த அரச வங்­கி­களில் இருந்து நிதி உத­வி­களை பெற்­றுத்­தந்து ஊக்­க­ம­ளித்தார்.

 பின்னர் கிரா­மங்­க­ளைப்­போன்று நக­ரங்­க­ளுக்கும் இதனை அறி­மு­கப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்தோம். அதன் பிர­காரம் நெட் மீட்­டரிங் ஸ்கீம் முறையில் சூரிய மின் சக்­தியை அறி­மு­கப்­ப­டுத்­தினோம். ஆரம்­பத்தில் இதற்கு எதிர்ப்­புகள் வந்­த­போதும் தற்­போது 70மெகா வோட் வரை வீடு­களில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அத்­துடன் 2011ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ என்னை ஜேர்­ம­னிக்­கான கொன்­சி­யூ­லராக நிய­மித்தார். 4வரு­டங்கள் கொன்­சி­யூ­ல­ராக இருந்தேன். இவ்­வாறு அர­சாங்­கங்­க­ளுடன் இணைந்து செயற்­பட்ட அனு­பவம் இருக்­கின்­றது. அதனால் அர­சி­யலில் ஈடு­பட்டு என்னால் இன்னும் பல சேவை­களை செய்­யலாம் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கின்­றது. அத­னால்தான் அர­சியலில் ஈடு­பட தீர்­மா­னித்தேன்.

கேள்வி: ஜே.ஆரின் பரம்­ப­ரையில் வந்த நீங்கள் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டாமல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட காரணம் என்ன?

பதில்: ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து செயற்­ப­டு­வதன் மூலம் நல்­ல­தொரு பய­ணத்தை தொட­ரலாம் என்ற நம்­பிக்கை எனக்கு ஏற்­பட்­டது. அத­னால்தான் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட தீர்­மா­னித்தேன். ஐக்­கிய தேசிய கட்­சியின் உத­வி­யு­டன்தான் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்றார். அதனால் சுதந்­திர கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­டு­வதில் பெரி­ய­ளவில் பாதிப்பு ஏற்­படும் என்று நினைக்­க­வில்லை.

கேள்வி: பிர­தான இரண்டு கட்­சி­களும் இணைந்து அர­சாங்­கத்தை கொண்­டு­செல்­வதை நீங்கள் எவ்­வாறு காண்­கி­றீர்கள்?

பதில்: இணைந்து செயற்­ப­டு­வது நல்­ல­துதான், என்­றாலும் சில பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. அதா­வது அர­சாங்­கத்தில் இருக்கும் பல­ருக்கும் அனு­பவம் போதாது. அமைச்­சர்­க­ளுக்­கான பொறுப்­புகள் சரி­யான முறையில் பிரித்து வழங்­கப்­படவில்லை. அதனால் வேலைத்­திட்­டங்கள் சரி­யான முறையில் இடம்­பெ­றாது. அத்­துடன் எப்.சீ.ஐ.டி. கார­ண­மாக அரச அதி­கா­ரிகள் தொழிற்­பட அச்­சப்­ப­டு­கின்­றனர். மோச­டிகள் தொடர்­பாக தேடிப்­பார்க்­க­வேண்டும். அத்­துடன் அரச அதி­கா­ரிகள் மீது அர­சாங்­கத்­துக்கு நம்­பிக்கை இருக்­க­வேண்டும். அப்­போ­துதான் பிரச்­சி­னைகள் இல்­லாமல் வேலைத்­திட்­டங்கள் விரை­வாக இடம்­பெறும். அனைத்­தையும் சட்­டப்­படி நடத்த முற்­பட்டால் எத­னையும் செய்­ய­மு­டி­யாது.

கேள்வி: கம்­பஹா மாவட்ட அமைப்­பா­ள­ரான நீங்கள் எதிர்­வரும் தேர்­தலில் கொழும்பு மாந­கர சபைக்கு போட்­டி­யிட ஏன் தீர்­மா­னித்­தீர்கள்?

பதில்: கொழும்பு மாந­கர சபையின் மேயர் வேட்­பா­ள­ராக போட்­டி­யி­டவே தீர்­மா­னித்­துள்ளேன். ஏனெனில் கொழும்­புதான் நாட்டின் என்ஜின். கொழும்பை சரி­யா­ன­மு­றையில் முன்­னேற்­றி­னால்­தான நாட்டை முன்­னேற்­றலாம். கொழும்பில் கூடு­த­லான பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. அதற்கு உட­னடி தீர்­வு­களை பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். பல வருடங்­க­ளாக கொழும்பின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு எட்­டப்படாமல் இருக்­கின்­றது. 70ஆயிரம் பேர் குடிசை வீடுகளில் இருக்­கின்­றனர் அவர்­களில் 30ஆயிரம் பேரை மாடி­வீ­டு­களை அமைத்து குடி­ய­மர்த்த கோத்­த­பாய ராஜபக் ஷவும் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தார். அது உண்­மையில் வெற்­றி­க­ர­மான வேலைத்­திட்­ட­மாகும்.

அத்­துடன் அதனால் சில பிரச்­சி­னை­களும் இருக்­கின்­றன. அதா­வது அங்கு வாழ்ந்த அதி­க­மான மக்கள் சுய­தொ­ழிலை மேற்­கொண்­டு­வந்­தனர். அதற்­கு­ரிய வச­திகள் அவர்­க­ளுக்கு இருந்­தது. ஆனால் மாடி­வீட்டில் அவர்­களை குடி­ய­மர்த்­தும்­போது அந்த தொழிலை மேற்­கொள்ள அவர்­க­ளுக்கு போது­மான வச­திகள் அங்கு இருக்­க­வில்லை. அவ்­வா­றான பிரச்­சி­னை­களை தீர்க்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

கேள்வி: ஜே.ஆரின் அர­சி­ய­ல­மைப்பு அதி­கா­ரத்தை ஒரு இடத்­துக்கு குவிக்­கக்­கூ­டி­யது என்றும் அது ஜன­நா­ய­கத்­துக்கு விரோ­த­மா­னது என்று தெரி­விக்கும் நிலையில் தற்­போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக பேசப்­பட்டு வரு­கின்­றது. இது தொடர்­பாக உங்கள் நிலைப்­பாடு என்ன?

பதில்: ஜே. ஆர்.அனைத்து பத­வி­க­ளையும் தனக்கு கீழ் வைத்­துக்­கொண்டு இருப்­ப­தற்கே இந்த அர­சி­ய­ல­மைப்பை ஏற்­ப­டுத்­தினார் என்ற குற்­றச்­சாட்டு பொய்­யா­ன­தாகும். நாட்­டுக்கு அர­சியல் சுதந்­திரம் கிடைத்­தாலும் பொரு­ளா­தார சுதந்­திரம் கிடைக்­க­வில்லை. அர­சி­ய­ல­மைப்பில் இருக்கும் குறை­பா­டுகள் கார­ண­மா­கவே அதனை அடைந்­து­கொள்ள முடி­யாமல் இருக்­கின்­றது என்­பதை அவர் உணர்ந்தார். குறிப்­பாக பாரா­ளு­மன்­றத்தில் எந்த நேரம் என்­றாலும் உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வைப்­பெற்­றுக்­கொண்டு பிர­த­மரை மாற்­றி­ய­மைக்­கலாம். அதனால் நாட்டின் ஸ்­திர­மான அர­சாங்கம் ஒன்று குறிப்­பிட்ட காலத்­துக்கு இருப்­ப­தில்லை. அதனால் நாட்டில் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாமல் இருக்­கின்­றது. எனவே மக்­களின் வாக்­கு­களால் ஜனா­தி­பதி ஒரு­வரை குறிப்­பிட்ட காலத்­துக்கு நிய­மித்து அவ­ருக்கு போது­மான அதி­கா­ரங்­களை பெற்­றுக்­கொ­டுக்கும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஏற்­ப­டுத்த வேண்டும் என 1966ஆம் ஆண்டில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் அவர் உரை­யாற்­றி­யி­ருந்தார். அதன் பிர­கா­ரமே 1978ஆம் ஆண்டு இந்த அர­சி­ய­ல­மைப்பை ஏற்­ப­டுத்­தினார்.

அத்­துடன் இந்த அர­சி­ய­ல­மைப்பில் ஜன­நா­யகம் இல்லை என தெரி­விப்­பதில் உண்மை இல்லை. அனை­வரும் வாக்­க­ளித்து ஒரு­வரை தெரி­வு­செய்­வ­தை­விட ஜன­நா­ய­கத்­துக்கு வேறு என்­ன­தேவை. நாங்கள் குறிப்­பிட்ட கட்சி ஒன்றை நிய­மித்து அந்த கட்­சி­யினால் பிர­தமர் நிய­மிக்­கப்­ப­டு­வ­தை­விட இது ஜன­நா­யகம் மிக்­க­தாகும். ஆனால் சிறு­பான்மை மக்­களில் ஒரு­வ­ருக்கு ஜனா­தி­ப­தி­யாக முடி­யாத பிரச்­சினை ஒன்று இதில் இருக்­கின்­றது.

கேள்வி: 1987ஆம் ஆண்டு செய்­து­கொள்­ளப்­பட்ட இலங்கை இந்­திய ஒப்­பந்தம் குறித்து என்ன நினைக்­கி­றீர்கள்?

பதில்: ஜே.ஆர். இலங்கை–இந்­திய ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­திட்­டது ஏன் என்­பதை இன்று பலரும் மறந்­துள்­ளனர். பலரும் பல்­வேறு விட­யங்­களை தெரி­விக்­கின்றோம், அவர் யுத்­தத்தை நிறுத்­தவே இந்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்டார். இந்த ஒப்­பந்­தத்­துக்கு வந்தால் யுத்­தத்தை நாங்கள் நிறுத்­துவோம் என இந்­தியா நிபந்­த­னை­யாக தெரிவித்­தது. பயங்­க­ர­வாத அமைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்­தியே இந்­தியா இந்த ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டது. அவ்­வாறு பயங்­க­ர­வா­திகள் யுத்த நிறுத்­தத்­துக்கு வரா­விட்டால் என்ன செய்­வது என நாங்கள் கேட்­ட­போது, பலாத் கார­மா­க­வேனும் நிரா­யு­த­பா­ணிக­ளாக்­கு­வ­தாக உத்­த­ர­வாதம் அளித்­ததன் அடிப்­ப­டை­யிலே ஜே.ஆர். இதில் கைச்­சாத்­திட்டார். அத்­துடன் திரு­கோ­ண­மலை எண்ணெய் குழாய், துறை­முகம் என்­பன இந்­தி­யா­வுக்கு வழங்­கு­வ­தாக தெரி­விக்­க­வில்லை. மாறாக இந்­தி­யா­வுக்கு எதி­ராக யாருக்கும் வழங்­கு­வ­தில்லை என்றே தெரி­வித்தோம். ஆனால் ஜே.ஆருக்கு பின்னர் வந்த பிரே­ம­தாஸ ஜனா­தி­பதி, இந்த ஒப்­பந்­தத்தை முறித்து விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு பணம் மற்றும் ஆயு­தங்­களை வழங்­கினார். நாட்டில் இருந்த இந்­திய இராணு­வத்­தி­னரை திருப்பி அனுப்­பினர். இந்­திய இராணுவம் 2வரு­டங்கள் வரை இருந்­தி­ருந்தால் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­தி­ருக்­கலாம்.

கேள்வி: 13ஆவது திருத்தம் தொடர்­பாக என்ன நினைக்­கி­றீர்கள்?

பதில்: அந்த ஒப்­பந்­தத்தின் ஊடா­கவே மாகா­ணங்­க­ளுக்கு அதி­காரம் வழங்கும் 13ஆம் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்­டது.தற்­போது மாகா­ணங்­க­ளுக்கு 13ஆம் திருத்தம் பூர­ண­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. எமது ஆட்­சி­யா­ளர்கள் பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்­களை மாகா­ணங்­க­ளுக்கு வழங்க அச்­சப்­ப­டு­கின்­றனர்.

கேள்வி: அந்த அதி­கா­ரங்­களை வழங்­கு­வது குறித்து உங்கள் நிலைப்­பாடு என்ன?

பதில்: ஒப்­பந்­தத்தின் பிர­காரம் அவை வழங்­கப்­ப­ட­வேண்டும். அத்­துடன் மாகா­ணங்­களின் அர­சி­யல் வாதி­களின் நிலை­மை­க­ளையும் இதன்­போது நல்­ல­மு­றையில் அறிந்­து­கொள்­ள­வேண்டும். ஏதா­வது ஒரு மாகா­ணத்தில் நல்­லாட்சி இடம்­பெ­று­வ­தென்றால், பொலி­ஸுக்கு அர­சியல் அழுத்­தங்கள் இல்லை என்றால் அதனை கட்­டாயம் வழங்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அத்­துடன் ஏதா­வது ஒரு மாகாணம் சமஷ்டி முறையை கோரும்­போது பிரிந்­து­செ­யற்­படும் நிலையில் இருக்­கு­மாக இருந்தால் பொலிஸ், காணி அதி­கா­ரங்கள் வழங்­கு­வது சாத்­தியம் இல்லை.

கேள்வி: நிறை­வேற்று அதிகார ஜனா­தி­பதி முறையை இல்­லா­ம­லாக்க வேண்டும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதில் உங்கள் நிலைப்­பாடு என்ன?

பதில்: இதனை அவ்­வாறு இல்­லா­ம­லாக்க முடி­யாது. ஏனெனில் அதி­கார பகிர்வை மேற்­கொண்­டுள்­ளதால், நாட்­டுக்கு நிறை­வேற்று அதி­காரம் உள்ள ஒருவர் தேவை­யாகும். அமெ­ரிக்கா பல மாநி­லங்­களை உள்­ள­டக்­கிய பாரிய நாடாகும். என்­றாலும் அங்கு ஒரு ஜனா­தி­பதி ஒருவர் இருப்­பதால் அனைத்து மாநி­லங்­க­ளையும் ஒன்­றாக வைத்­துக்­கொள்ள முடி­யு­மாக இருக்­கின்­றது. நாங்­களும் 13ஆவது திருத்தம் மூலம் அதி­கா­ரங்­களை பகிர்ந்­துள்ளோம். அதனால் எங்­க­ளுக்கு நிறை­வேறு அதி­காரி ஒருவர் கட்­டா­ய­மாகும். இந்த காலத்தில் நிறை­வேற்று அதி­காரம் ஒழிக்­கப்­ப­டு­வது தொடர்­பாக கதைப்­பது தவ­றாகும். அவ்­வாறு இல்­லா­ம­லாக்­கப்­பட்டால் 13ஆவது திருத்­தத்­தையும் மாற்றி வேறு­வி­த­மாக அதி­கா­ரங்கள் வழங்­கு­வது தொடர்­பாக சிந்­திக்­க­வேண்டும்.

அத்­துடன் நிறை­வேற்று அதி­காரம் என்ற முறை கூடாது என்று யாராலும் தெரி­விக்க முடி­யாது. அதனால் பாரிய வெற்­றி­களை நாங்கள் கண்­டுள்ளோம். மக்­களின் பொரு­ளா­தா­ரத்தில் கடந்த 39 வரு­டங்­களில் பாரிய முன்­னேற்­றத்தை பார்க்­கின்றோம். ஜே.ஆர். தெரி­வித்­தது போல் மக்கள் பொரு­ளா­தார சுதந்­தி­ரத்தை அடைந்­துள்­ளனர். அத்­துடன் நிறை­வேற்று அதிகார ஜனா­தி­பதி முறைக்கு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியே ஆரம்­ப­மாக எதிர்ப்பு தெரி­வித்து வந்­தது. ஆனால் இன்று அனை­வரும் இதற்கு ஆத­ரவு தெரி­விக்­கின்­றனர்.

கேள்வி: ஐக்­கிய தேசிய கட்சி ஏன் இதற்கு எதிர்ப்பு தெரி­விக்­கின்­றது?

பதில்: அதுதான் எனக்கும் புரிந்­து­கொள்ள முடி­யாமல் இருக்­கின்­றது. ஆனால் ஐக்­கிய தேசிய கட்சியில் ஒரு­சி­லர்தான் இந்த நிலைப்­பாட்டில் இருக்­கின்­றனர்.

கேள்வி, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஸ்தா­பகர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்­டாரநாயக்­க­வுக்கும் தற்­போ­தைய தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கு­மி­டையில் என்ன வித்­தி­யா­சத்தை காண்­கி­றீர்கள்?

பதில்: இன்று பாரிய வித்­தி­யாசம் இல்லை. திறந்த பொரு­ளா­தா­ரத்­துக்கு அனை­வரும் இணக்கம். ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சிதான் இன்று வல­து­சாரி கொள்­கைக்கு சென்­றுள்­ள­தாக நினைக்­கின்றேன். அதா­வது தனியார் மய­மாக்கல் நாட்டின் வளங்­களை விற்­பனை செய்தல் போன்ற விட­யங்­களை மேற்­கொள்­கின்­றது. ஜே.ஆர்.இந்த நிலைப்­பாட்டில் இருக்­க­வில்லை. அவர் பொரு­ளா­தா­ரத்தை விரி­வாக்­கினார். முத­லீட்­டா­ளர்­களை வர­வ­ழைத்தார்.ஆனால் அனைத்­தையும் வெளி­நா­டு­க­ளுக்கு வழங்க அவர் நினைக்­க­வில்லை. தேசிய வளங்­களை வெளி­நாட்­டுக்கு வழங்­கு­வது பாரிய ஆபத்­தாகும். ஆனால் மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டு வளங்­களை வெளி­நாட்­டுக்கு வழங்­கு­வ­தற்கு எதிர்ப்பு தெரி­வித்து வருகின்றார்.

ஐக்­கிய தேசிய கட்­சி­ தான் வெளி­நா­டு­க­ளுக்கு வழங்கும் கொள்­கையை பின்­பற்­றி­வ­ரு­கின்­றது.

(தொடர்ச்சி...9ஆம் பக்கம் )

மாகாணங்களுக்கு பூரண....

(4 ஆம் பக்கத் தொடர்ச்சி)

கேள்வி :`மஹிந்த, மைத்­தி­ரியின் பிரிவை நீங்கள் எவ்­வாறு காண்­கின்­றீர்கள்?

பதில் :அவர்கள் இரு­வரும் இணைய வேண்டும் என்­ப­துவே எனது நோக்கம். அவ்­வாறு இணைந்தால் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு அர­சாங்­கத்தில் இருக்க முடி­யாத நிலை ஏற்­படும்.

இரண்டு பிரி­வ­ினர்­க­ளையும் இணைப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. தேர்தல் ஒன்று இடம்­பெற்­றால்தான் அதன் தேவை தொடர்பில் அனை­வரும் சிந்­திப்­பார்கள்.

கேள்வி: ஐக்­கிய தேசிய கட்சி தற்­போது ஜே.ஆரின் கொள்­கையில் இருந்து மாறு­பட்­டி­ருப்­ப­தாக நீங்கள் நினைக்­கி­றீர்­களா?

பதில்: ஆம், உண்­மையில் மாறி இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது. ஏனெனில் ஜே.ஆர். நாட்­டுக்கு வழங்­கிய பெறு­ம­தி­வாய்ந்த கொடைதான் இந்த அர­சி­ய­ல­மைப்பு. இது சிறந்த அர­சி­ய­ல­மைப்பு என்­பதை நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டை முன்­னேற்­று­வ­தற்கு மிகவும் சிறந்­தது என்­பதை அனைவரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர்.அவ்­வா­றான அர­சி­ய­ல­மைப்பை மாற்­று­வ­தற்கு இவர்கள் நினைப்­ப­தென்றால் ஐக்­கிய தேசிய கட்சி ஜேஆரின் கொள்­கையில் இல்லை என்­ப­து­தான் அர்த்தம்.

கேள்வி: 83 கல­வ­ரத்தை ஜே.ஆர். கட்­டுப்­ப­டுத்த தவ­றினார் என்ற குற்­றச்­சாட்டு இருக்­கின்­றதே,

பதில்: கறுப்பு ஜூலை காலத்தில் நான் நாட்டில் இருக்­க­வில்லை. அது தொடர்பில் எனக்கும் பிரச்­சி­னை­யா­கவே இருந்­தது. அது தொடர்பில் ஜே.ஆ­ரிடம் கேட்­ட­றிந்­து­கொண்டேன். அந்த கல­வரம் ஆரம்­பிக்க கார­ண­மாக இருந்­தது, யாழ்ப்­பா­ணத்தில் கொலை­செய்­யப்­பட்ட இரா­ணு­வத்­தி­னரை பொரளை கனத்தை மயா­னத்­துக்கு கொண்­டு­வந்­த­தாகும். கொலை­செய்­யப்­பட்ட இராணு­வத்­தி­னரை இங்கு கொண்­டு­வர வேண்டாம் என்றே தெரி­விக்­கப்­பட்­டது. என்றாலும் இராணுவத்தினர் கொண்டுவந்து கனத்தையில் வைத்து மக்களுக்கு காட்டியதுடன் அங்கு இரங்கல் உரை நிகழ்த்தியவர்கள் மக்களை ஆவேசப்படுத்தும் வகையில் செயற்பட்டனர். அதனால்தான் மக்கள் ஆத்திரப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.

என்றாலும் இந்த கலவரம் பாரியளவில் வியாபிக்கும் என்று ஜே.ஆர். நினைக்கவில்லை. அதனால் அதனை கட்டுப்படுத்த உடனடியாக செயற்படாமை அவர் செய்த தவறாகவே நான் நினைக்கின்றேன். அத்துடன் கலவரம் தீவிரமடைந்தபோது அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்மீது குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. நானும் அந்த கேள்வியை அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், கலவரத்தை நிறுத்துமாறு நான் இராணுவத்துக்கு அன்று தெரிவித்திருந்தால், நிச்சயமாக இராணுவம் இந்த நேரத்தில் எனது கட்டளையை மதிப்பதில்லை. அப்போது எனக்கு ராணுவத்தை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை என்பது நிரூபிக்கப்படும். அவ்வாறு இடம்பெற்றால் அது இன்னும் பாரிய பிரச்சினையாக மாறும் என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது என அவர் தெரிவித்தார். உண்மையில் அன்று ஜே. ஆரிடம் இருந்து இராணுவத்தின் அதிகாரம் இல்லாமல் போயிருந்தது. சிறியதொரு இராணுவ பிரிவொன்றே ஜே.ஆரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அத்துடன் அந்த காலப்பகுதியில் இருந்த ராணுவத்தினருக்கு பயிற்சி, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு இருக்கவில்லை. அதனால் இராணுவத்துக்கு ஏற்பட்ட பின்னடைவாக தவறாக நினைத்து இராணுவம் ஆவேசமாக நடந்துகொண்டனர். என்றாலும் நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் கலவரத்தை முன்கூட்டியே கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காதமையால் அவர்மீது கறை படிந்தது. அதனை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.