Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறைமையின் அடிப்படையில் தமிழர்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவேண்டும்....அரசியலமைப்பு சபையில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் சுமந்திரன்

Featured Replies

இறைமையின் அடிப்படையில் தமிழர்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கவேண்டும்

5-2cc8f2741b8a6d37300e11b8fc743ef592ddec54.jpg

 

அரசியலமைப்பு சபையில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார் சுமந்திரன்
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

சமஷ்டி அரசுக் கோரிக்­கை­யா­னது நாட்­டினை பிரிக்கும் விடயம் அல்ல. தமி­ழர்கள் சமஷ்­டியைக் கோரு­வதால் நாட்டை பிரிக்­கப்­போ­கின்­றார்கள் என்­பது தவ­றா­னது. சமஷ்டி அரசு தொடர்­பி­லான விட­யத்­தினை பெரும்­பான்­மை­யி­னரே அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்கள். ஒரு­மித்த நாடாக இருப்­ப­தற்கு சமஷ்டி அவ­சியம் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற 

 உறுப்­பி­னரும் வழி­ந­டத்தல் குழுவின் உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

தமி­ழர்கள் இரண்­டாந்­தரப் பிர­ஜைகள் அல்ல. நாட்டின் இறை­மையின் அடிப்­ப­டையில் அவர்­களும்

ஆட்சி அதி­கா­ரத்தில் பங்­கேற்க வேண்டும். தாமும் இலங்­கை­யர்கள் என்ற மன­நிலை தோற்­றம்­பெற வேண்டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தினார்.

அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று திங்­கட்­கி­ழமை புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

சரித்­தி­ர­பூர்­வ­மான கலந்­து­ரை­யா­ட­லொன்று தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. முதற்­த­ட­வை­யாக தமிழ் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சிகள் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் செயற்­பாட்டில் பங்­கேற்­றுள்­ளன. பாரா­ளு­மன்ற அர­சியல் கட்­சி­களின் ஏகோ­பித்த விட­யங்­களும், தனிப்­பட்ட முன்­மொ­ழி­வு­க­ளையும் உள்­ள­டக்­கிய இடைக்­கால அறிக்­கை­யா­னது அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு சமர்ப்­பிக்­கப்­பட்டு விவாதம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இடைக்­கால அறிக்­கையின் ‘இ’ பகு­தியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது நிலைப்­பாட்­டினை தெளி­வாக கூறி­யுள்­ளது. இந்த நாட்டில் பிர­தான விட­ய­மாக இருப்­பது தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாகும். தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வொன்றை முன்­வைக்­கின்ற ஒவ்­வொரு கட்­டத்­திலும் எதிர்க்­கட்­சியில் உள்ள தரப்­புக்கள் எதிர்த்து வந்­த­மையே கடந்த கால கட்­டத்தில் இடம்­பெற்று வந்த வர­லா­றாகும்.

தற்­போது இரண்டு பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் தேசிய அர­சாங்­க­மாக இணைந்­துள்­ளன. ஆகவே இது­வொரு வர­லற்­றுச்­சந்­தர்ப்­ப­மாகும். அதனை சரி­யான வகையில் பயன்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு அiனை­வ­ருக்கும் உள்­ளது.

எதிர்க்­கா­தது ஏன்?

2015ஆம் ஆண்டு நிறை­வேற்று அதி­கார முறை­மையை ஒழிப்போம், புதிய தேர்தல் முறை­மை­யொன்றை ஏற்­ப­டுத்­துவோம், தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வு திட்­ட­மொன்றை வழங்­குவோம். புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் ஆகிய வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டன. அதற்­கான இந்த நாட்டில் உள்ள 91சத­வீ­த­மான மக்கள் ஆணை­வ­ழங்­கி­யுள்ளார்.

அந்த ஆணைக்கு அமை­வா­கவே பாரா­ளு­மன்­றத்­தினை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்றும் தீர்­மானம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி அத்­தீர்­மானம் சபையில் கொண்டு வரப்­பட்டு ஏக­மா­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது. முழு பாரா­ளு­மன்­றமும் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்­றப்­படும் தீர்­ம­னத்­திற்கு அனைத்து உறுப்­பி­னர்­களும் ஆத­ரவு வழங்­கி­யுள்­ளார்கள்.

தற்­போது இடைக்­கால அறிக்கை வெளி­யி­டப்­பட்ட பின்னர் அதற்கு எதி­ராக பகி­ரங்க குரல்கள் எழு­வதை நாம் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இங்­குள்ள கூட்டு எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் அத்­தீர்­மானம் பாரா­ளு­மன்­றத்தில் ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­ட­போது எதிர்ப்­பினை வெளி­யிட்­டி­ருக்க முடியும். ஆகக்­கு­றைந்­தது வாக்­கெ­டுப்­பினைக் கோரி­யி­ருக்­கலாம். ஆனால் அனை­வரும் அதற்கு முழு­மை­யான ஆத­ரவு வெளி­யி­டு­வ­தாக தெரி­வித்­தனர்.

இத்­தீர்­மானம் நிறை­வே­று­வ­தற்கு முன்­ன­ரான நாளொன்றில் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் பாரா­ளு­மன்­றத்­தினை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்றும் தீர்­மானம் சட்­டத்­திற்கு முர­ணா­னது என்று ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனால் தீர்­மானம் நிறை­வேற்­றிய பின்னர் அது­கு­றித்து அவர் ஒரு­வார்த்தை கூட வெளி­யி­ட­வில்லை.

மக்­களின் ஆணைக்கு அமை­யவே பாரா­ளு­மன்­றத்தில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அதே­நேரம் தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்பில் புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­கான வரை­ய­றைகள் காணப்­ப­டு­கின்­றன. அர­சி­ய­ல­மைப்பின் உறுப்­புரை 74மற்றும் 75ஆகி­ய­வற்றில் கூறப்­பட்­டுள்ள அந்த ஏற்­பா­டு­க­ளுக்கு அமை­யவே செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

யாரையும் புறக்­க­ணிக்­க­வில்லை

வழி­ந­டத்தல் குழுவின் அங்­கத்­த­வ­ராக இருந்­தவர் என்ற அடிப்­ப­டையில் முக்­கிய சில விட­யங்­களை குறிப்­பிட விரும்­பு­கின்றேன். புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான இடைக்­கால அறிக்­கையை உரு­வாக்கும் செயற்­பாட்­டின்­போது உப­கு­ழுவில் அங்கம் வகித்த உறுப்­பி­னர்கள் இருவர் தமது கருத்­துக்கள் உள்­வாங்­கப்­ப­டா­தி­ருப்­ப­தாக வழி­ந­டத்தல் குழுவின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­தனர்.

நாமல் ராஜ­பக்ஷ மற்றம் ஷெஹான் சேம­சிங்க ஆகிய எம்.பி. க்கள் இவ்­வாறு கவ­னத்­திற்கு கொண்டு வந்­ததும் அவர்­களின் கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்­கு­ரிய கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. அது­போன்று கெஹ­லிய ரம்­புக்­வெல எம்.பிக்கும் சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அவர் முன்­மொ­ழிவைச் செய்­த­போதும் பின்னர் தினேஷ் குண­வர்த்­தன அதனை மீளப்­பெற்­றுக்­கொண்டு விட்டார்.

தற்­போது இடைக்­கால அறிக்­கைக்கு எதி­ராக குர­லெ­ழுப்பும் உறுப்­பி­னர்கள் அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் செயற்­பாட்டில் இது­வ­ரை­யி­லான காலப்­ப­கு­தியில் 20 சத­வீ­த­மான பங்­க­ளிப்­பினை செய்­துள்­ளார்கள். அத்­துடன் இடைக்­கால அறிக்­கை­யிலும் அவர்­க­ளது கருத்­துக்கள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டு­களில் வேறு­பா­டுகள் காணப்­பட்­டாலும் பங்­க­ளிப்­புக்கள் கணி­ச­மா­ன­வை­யாக இருக்­கின்­றன.

மகிந்த சொன்­ன­தையே

 நாம் செய்­கின்றோம்

2015ஆம் ஆண்­டுக்­கான ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ வெளி­யிட்ட தேர்தல் விஞ்­ஞா­பனம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. அந்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தினை சபைக்கு ஆற்­றுப்­ப­டுத்தும் அதே­நேரம் அந்த விஞ்­ஞா­ப­னத்தில், 1978ஆம் ஆண்டு அர­சி­ய­ல­மைப்­பா­னது பல­த­ட­வைகள் திருத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே பல­வி­ட­யங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் தொடர்ந்தும் தொட்டம் தொட்­ட­மாக இதே அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்­களை மேற்­கொள்­ள­மு­டி­யாது. தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு, அதி­கா­ரப்­ப­கிர்வு போன்ற விட­யங்கள் தொடர்பில் தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட வேண்­டி­யுள்­ளது. எமது ஆட்சி அமைந்து ஒரு­வ­ருட காலத்­தினுள் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் என்று உள்­ளது.

ஆகவே மகிந்த ராஜ­பக்ஷ தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிட்ட விட­யத்­தி­னையே நாம் தற்­போது முன்­னெ­டுக்­கின்றோம். அவ்­வா­றான நிலையில் அதனை எவ்­வாறு அவ­ரு­டைய அணி­யினர் எதிர்க்க முடியும்?

பௌத்­தத்­திற்கு எதிர்ப்­பில்லை

நாங்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து மதங்­க­ளையும் சம­மா­கவே மதிக்­கின்றோம். அனைத்­துக்கும் சம அந்­தஸ்து வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­பது தான் எமது கோரிக்­கை­யா­க­வுள்­ளது. இருப்­பினும் பெரும்­பான்­மை­யான பௌத்த மதத்­தினை பின்­பற்றும் மக்கள் பௌத்த மத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும் அல்­லது தற்­போ­துள்­ள­மை­யைப்­போன்றே புதிய அர­சி­ய­ல­மைப்­பிலும் அமை­ய­வேண்டும் என்று விரும்­பு­வார்­க­ளாயின் அதனை நாம் எதிர்க்கப் போவ­தில்லை. அதனால் எமக்கு எந்­தப்­பி­ரச்­சி­னையும் இல்லை. ஆனால் ஏனைய மதங்­க­ளுக்­கான உரிய அங்­கீ­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும்.

சமஷ்­டியை முன்­மொ­ழிந்­த­வர்கள்

 பெரும்­பான்­மை­யி­னரே

இலங்கை அரசு சமஷ்டி அர­சாக இருக்க வேண்டும் என்று நாம் கோரு­கின்றோம். இதனால் நாடு பிரி­வ­டைந்து செல்­லப்­போ­கின்­றது என்று பிர­சாரம் மேற்­கொள்­ப­வர்கள் ஒரு விட­யத்­தினை தெரிந்து கொள்­வது அவ­சி­ய­மா­கின்­றது.

இந்த நாட்டில் சமஷ்டி என்ற விட­யத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்­தி­யவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­கவே ஆவார். இவர் 1926ஆம் ஆண்டு சமஷ்டி அரசு முறை­மையை வலி­யு­றுத்தி ஆறு கடி­தங்­களை எழு­தி­யுள்ளார்.

இதற்கு பின்னர் 1944ஆம் ஆண்டு கம்­னியூஸ்ட் கட்­சி­யாது சமஷ்டி அரசு முறை­மையை வலி­யு­றுத்­தி­யது. பீற்­றர்­கெ­னமன் மற்றும் வைத்­தி­ய­லிங்கம் ஆகியோர் அறிக்­கையில் இந்த விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்­ன­தாக டொனமூர் ஆணைக்­கு­ழுவில் இந்த நாடு மூன்று அல­கு­க­ளாக இருக்­க­வேண்டும். வடக்கும் கிழக்கும் இணைந்து இருக்­க­வேண்டும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் கண்­டியத் தலை­வர்கள் இரண்டு தட­வைகள் சமஷ்டி தொடர்­பி­லான விட­யத்­தினை முன்­வைத்­துள்­ளனர். இப்­பீ­ரியர் ஆணைக்­கு­ழு­விலும் சமஷ்டி முறையை பற்றி வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

ஆகவே தமி­ழர்கள் பிரிந்து செல்­வ­தற்­கா­கவே சமஷ்­டியைக் கோரு­கின்­றார்கள் என்­பது தவ­றான அர்த்­தப்­ப­டுத்­த­லாகும். தமி­ழர்­க­ளுக்கு முன்­ன­தாக பெரும்­பான்­மை­யா­ன­வர்­களே சமஷ்டி விட­யத்­தினை வலி­யு­றுத்­தி­யுள்­ளார்கள்.

ஆகவே சமஷ்டி என்­பது பிரிந்து செல்லும் விடயம் அல்ல. இலங்கை நாடு ஒரு நாடாக இருக்க வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். அனை­வரும் ஐக்­கி­ய­மா­கவும் சமத்­து­வ­மா­கவும் நடத்­தப்­படும் சூழல் ஏற்­ப­ட­வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். அது அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக தீர்­மா­னிக்­கப்­பட வேண்டும்.

இரண்­டாந்­தரப் பிர­ஜைகள் அல்ல

இந்த நாட்டின் இறை­மை­யா­னது ஒரு பெரும்­பான்­மையை மையப்­ப­டுத்­தி­ய­தாக இருக்க கூடாது. இந்த நாட்டின் பிர­ஜைகள் அனை­வரும் இறை­மையைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய சூழல் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். இந்த நாடு ஒன்­றாக இருக்கும் அதே­நே­ரத்தில் ஆட்சி அதி­கா­ரத்தில் எமது மக்­களும் பங்­கா­ளர்­க­ளாக வேண்டும்.

முக்­கி­ய­மாக அதி­கா­ரங்­களை ஒரு தரப்­பி­னரே பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்­கின்ற நிலையில் மற்­றைய தரப்­பினர் எவ்­வாறு அவர்­க­ளுக்கு தாங்­களும் சம­மா­ன­வர்கள் என்ற மன­நி­லைமை ஏற்­படும். ஆகவே அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்டு அனை­வரும் சமத்­து­வ­மா­ன­வர்கள் என்ற மன­நி­லைமை உரு­வாக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

விசே­ட­மாக தமிழ் மக்கள் தாங்கள் இரண்டாம் தரப்­பி­ர­ஜைகள் அல்ல. தாங்கள் இலங்­கை­யர்கள் என்ற நிலைமை தோற்­று­விக்­கப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது. தற்­போது கனடா:, லண்டன் என பல இடங்­களில் வாழும் தமிழ் மக்கள் தங்­களை கனடா தமி­ழர்கள், லண்­டனர் தமி­ழர்கள் என்றே அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்­றனர். அவர்கள் தாங்­களை இலங்­கை­யர்கள் என்று அழைப்­பதும் இல்லை அடை­யா­ளப்­ப­டு­வ­து­மில்லை.

ஆகவே நான் ஒரு இலங்­கையன். நான் நாட்­டினுள் சம­ம­மாக நடத்­தப்­ப­டு­கின்றேன். ஆட்சி அதி­கா­ரத்தில் நான் புறக்­க­ணிக்­கப்­ப­ட­வில்லை என்ற நிலைமை உரு­வாக வேண்டும். அதற்­காக அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட வேண்­டி­யுள்­ளன. தமிழ் மக்கள் ஆட்சிக் கட்­ட­மைப்பில் பங்­கேற்­றி­கின்ற நிலைமை உரு­வாக்­கப்­பட வேண்டும்.

அதி­கா­ரங்கள் பகிர்வும்

மகிந்­தவின் நிலைப்­பாடும்

13ஆவது திருத்­தச்­சட்டம் கொண்டு வரப்­பட்டு மாகாண சபை முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. மாகா­ண­சபை முறை­மையை முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு அனைத்து மாகா­ணங்­க­ளுக்கும் அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்று முத­ல­மைச்­சர்கள், எதிர்­கட்­சித்­த­லை­வர்கள் வலி­யு­றுத்­து­கின்­றார்கள். வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் தனியே இக்­கோ­ரிக்­கையை விடுக்­க­வில்லை. ஏனைய 7 மாகாண சபை­களும் இந்­தக்­கோ­ரிக்­கையை முன்­வைத்­துள்­ளன.

அவ்­வா­றி­ருக்­கையில் 13ஆவது திருத்­தச்­சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது அதற்கு எதி­ராக புறக்­கோட்­டையில் முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டத்தில் ஈடு­பட்ட குழுவில் முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்ஷவும் ஈடு­பட்­டி­ருந்தார். ஆனால் தற்­போது அவர் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல் பிற்­போ­டப்­ப­டு­வ­தாக குற்றம் சாட்­டு­கின்றார். போராட்­டங்­களை நடத்­து­கின்றார். இது வேடிக்­கை­யா­க­வல்­லவா இருக்­கின்­றது?

அதே­நேரம் இந்­தி­யா­வுக்குச் சென்­ற­போதும், ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற்ற சந்­தர்ப்­பத்­திலும் 13ஆம் திருத்­தச்­சட்­டத்­தினை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தோடு அதற்கும் அப்பால் சென்று அதி­கா­ரங்­களை பகிர்­வ­தற்கு தயா­ராக இருப்­ப­தாக கூறி­யுள்ளார். அத­னை­வி­டவும் அவரால் நிய­மிக்­கப்­பட்ட சர்­வ­கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட போதும் அதி­கா­ரப்­ப­கிர்வு மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்றும் குறிப்­பிட்­டி­ருந்­கின்றார்.

அவ்­வா­றா­னவர் தற்­போது ஒரு­மித்த நாடு என்ற சொற்­பி­ர­யோ­கத்­தினை பயன்­ப­டுத்­தியால் நாடு பிள­வ­டை­யப்­போ­வ­தாக கூறு­கின்றார். ஏகிய ராஜ்ய என்றால் ஒரு­மித்த நாடு அல்­லது ஒரு நாடு என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதற்கு பிள­வ­டை­ய­மு­டி­யாத பிரிக்­க­மு­டி­யாத நாடு என்றும் விளக்கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில் இதனை எதிர்ப்­ப­வர்கள் ஒரு காலத்தில் எதற்கு இணங்­கி­னார்கள் என்று தெரி­யுமா?

தற்­போ­தைய இடைக்­கால அறிக்­கையில் கூறப்­பட்ட விட­யங்­க­ளிலும் பார்க்க எவ்­வ­ளவோ தூரத்தில் காணப்­ப­டு­கின்ற பிராந்­தி­யங்­களின் ஒன்­றியம் என்று குறிப்பிட்டபட்ட சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க முன்வந்தார்கள். பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவையில் அச்சட்ட மூலத்திற்கான அனுமதி பெறப்பட்டபோது மகிந்த ராஜபக்ஷவும் ஆதரவளித்துள்ளார். இதனை புரிந்துகொள்வேண்டும்.

எமது மக்கள் ஏற்க வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கு மக்களின் பெரும்பான்மை ஆணையைப் பெற்ற கட்சியாகும். எமது மக்கள் வழங்கிய ஆணைக்கு மாறாக எம்மால் செயற்படமுடியாது. தேசிய பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படவேண்டும். வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் என்றே எமது மக்கள் ஆணை வழங்கியிருக்கின்றார்கள்.

அவர்களின் உரிமைகளை அபிலாஷைகளை மறுக்கின்ற விடயத்தினை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் திருப்தியடைக்கூடிய தீர்வொன்று கிடைக்கப்பெறும் சமயத்தில் நாம் அதனைப் பெற்றுக்கொண்டு எமது மக்கள் முன்னால் செல்வோம். அதற்கு அவர்கள் அங்கீகாரம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

இங்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றபோதும் பொதுவான விடயங்களில் பொது இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. புதிய அரசியலமைப்புக்கான பணியில் இடைவெளியில் நாம் நிற்கின்றோம். இதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். எதிர்காலத்தினையும் எதிர்கால சந்தியினரையும் கருத்திற்கொண்டு நாம் செயற்பட வேண்டும். எதிர்கால சந்ததியினரை துன்பகரமான நிலைமைக்கு தள்ளிவிடக்கூடாது. பிரதான கட்சிகள் இரண்டும் பொது இணக்கப்பாட்டிற்கு வரும் விடயங்களை ஏற்றுக்கொள்ளமுடியுமென்றால் நிச்சயமாக ஆதரவளிப்போம். தற்போதைய வாய்ப்பினை நழுவ விடக்கூடாது என்றார். 

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.