Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு அரசுடன் இணைந்த பயணம்

Featured Replies

கொழும்பு அரசுடன் இணைந்த பயணம்

கொழும்பு அரசுடன் இணைந்த பயணம்

வடக்கு மாகாண சபை கொழும்பு அர­சு­டன் இணைந்து செயற்­ப­டா­விட்­டால் எமது பிர­தே­சங்­க­ளில் பெரும் அபி­வி­ருத்­தித் திட்­டங்­க­ளைச் செயற்­ப­டுத்த முடி­யாது. அத­னால் நான் அவர்­க­ளு­டன் இணைந்து செயற்­ப­டு­வது என்று தீர்­மா­னித்துள்­ளேன்.

இவ்­வாறு தெரி­வித்­தார் வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் க.சிவ­னே­சன்.

வடக்கு மாகாண விவ­சாய அமைச்சு அலு­வ­ல­கத்­தில் நேற்று செய்­தி­யா­ளர் சந்­திப்பு நடத்­தப்­பட்­டது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது-

வடக்கு மாகாண சபைக்­குக் கடந்த காலங்­க­ளில் பெரும் திட்­டங்­கள் கிடைத்­தன. முன்­னர் இருந்த அமைச்­சர் சாக்­குப் போக்­குக் கார­ணங்­க­ளைக் கூறி அவற்­றைத் தட்­டிக் கழித்து விட்­டாா்.

அத­னால் பெரும் திட்­டங்­கள் சில எமது கையை விட்­டுப் போய்­விட்­டன. பெரும் திட்­டங்­களை எமக்­குக் கிடைக்­கும் நிதி­யில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வது என்­பது சாத்­தி­ய­மில்லை. எமக்­குக் கிடைக்­கும் நிதி­யைக் கொண்டு பால் கொள்­வ­னவு செய்­யும் பாத்­தி­ரங்­க­ளைத்­தான் எம்­மால் வழங்க முடி­யும்.

பெரும் அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்­டு­மா­னால் கொழும்பு அர­சு­டன் நாம் இணைந்து பய­ணித்­தாலே சாத்­தி­ய­மா­கும்.
கடந்த காலத் தவ­று­களை நானும் செய்ய விரும்­ப­ வில்லை.

விவ­சாய அமைச்­ச­ராக நான் பத­வி­யேற்­ற­வு­டன் கொழும் அதி­கா­ரி­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னேன். அவர்­கள் மாகாண சபைக்­குக் கிடைத்த திட்­டங்­கள் சாக்­குப் போக்­குக் கூறித் தட்­டிக்­க­ழிக்­கப்­பட்­டன என்று சுட்­டிக்­காட்­டி­னர்.

விவ­சா­யத் துறை­யில் பல அனு­கூ­ல­மான திட்­டங்­க­ ளைக் கொழும்பு அரசு நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றது. அந்­தத் திட்­டங்­களை நிரா­க­ரிக்­காது அவர்­க­ளு­டன் இணைந்து பய­ணிக்க நாம் தீர்­மா­னித்­துள்­ளோம்.

வடக்கு மாகாண விவ­சா­யி­க­ளுக்கு மானிய அடிப்­ப­டை­யில் அல்­லது அரை மானிய அடிப்­ப­டை­யில் விதை நெல்­லைப் பெற்­றுத் தர வேண்­டும் என்று அரச தலை­வ­ருக்கு அண்­மை­யில் கடி­தம் ஒன்று அனுப்­பி­னேன்.

அரச தலை­வர் அதற்கு வழங்­கி­யுள்ள பதி­லில் இந்­தத் திட்­டத்­துக்கு ஆயி­ரத்து 800 மில்­லி­யன் ரூபா நிதி தேவைப்­ப­டுகின்­றது. வருட இறு­தி­யில் கேட்­டுள்­ளீர்­கள். இந்­தத் திட்­டத்தை முன்பே சமர்ப்­பித்­தி­ருந்­தால் வழங்க நட­வ­டிக்கை எடுத்­தி­ருப்­போம் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எமக்­கான தேவை­களை முன்­னி­ருந்த அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தால் விவ­சா­யி­க­ளுக்கு நன்மை கிடைத்­தி­ருக்­கும்.- என்­றார்.

http://newuthayan.com/story/41964.html

  • தொடங்கியவர்

வட மாகாண சபை மத்திய அரசுடன் இணைந்து செயற்படாவிட்டால் எதுவும் செய்யமுடியாது : சிவநேசன்

 

 

வடக்கு மாகாண சபை மத்திய அரசுடன் இணைந்து செயற்படாவிட்டால் எமது பிரதேசங்களில் பாரிய திட்டங்கள் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.

 sivaneshan.jpg

பொதுவாக நாம் பாரிய திட்டங்களை எமக்கு கிடைக்கின்ற நிதியில் நடைமுறைப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லை.எமக்கு கிடைக்கும் நிதியை வைத்து பால் கொள்வனவு செய்யும் பாத்திரங்களைத்தான் எம்மால் வழங்க முடியும். மக்களுக்கான பாரிய அபிவிருத்தி திட்டங்களை செய்ய வேண்டுமானால் நாம் மத்திய அரசுடன் இணைந்து பயனித்தாலே சாத்தியமாகும்.

 

கடந்த காலங்களில் விட்ட தவறுகளை நான் செய்யவிரும்பவில்லை. நான் விவசாய அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கொழும்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தேன். அப்போது மாகாண சபை கிடைக்கின்ற பாரிய திட்டங்கள் அனைத்தையும் சாக்குப்போக்கு காரணங்களை கூறி நிராகரித்து வருகின்றது என்பதை சுட்டிக்காட்டினார். அவர்கள் கூறுவது போல நாமும் பாரிய திட்டங்களை நிராகரித்து வருகின்றோம். இதனால் எமது பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி வேலைகளை செய்ய முடியவில்லை. விவசாயத்துறையில் பல அனுகூலமான வேலைத்திட்டங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்த திட்டங்களை நாம் நிராகரிக்காது. அவர்களுடன் இணைந்து நாம் பயணிக்க தீர்மானித்துள்ளோம். அண்மையில் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் அல்லது அரை மானியத்தில் விதை நெல்லை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அதற்கு ஜனாதிபதி தனது பதிலில் இந்த திட்டத்துக்கு ஆயிரத்து 800 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது. இதனை வருட நிறைவில் கேட்கின்றீர்கள். இந்த திட்டத்தை முன்பே சமர்ப்பித்திருந்தால் நாம் வழங்க நடவடிக்கை எடுத்திருப்போம் என எனக்கு கடிதம்  அனுப்பியுள்ளார். இனிவரும் காலங்களில் மத்திய அரசுடன் இணைந்து செயற்படுவது என தீர்மானித்துள்ளேன் என்றார்.

http://www.virakesari.lk/article/26481

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.