Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2015 வெள்ளத்தை, சென்னையில்... ஒரே நாளில் காட்டிய மழை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Yesterday's rain remembers 2015 flood

2015 வெள்ளத்தை, ஒரே நாளில்... கண்முன் காட்டிய மழை!

நேற்று பிற்பகலிலிருந்தே மக்கள் கடைகளில் பரபரப்பாக குவிந்துவிட்டார்கள். அடுத்து நான்கு நாட்களுக்குத் தேவையான பொருட்கள், குறிப்பாக கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, தீப எண்ணெய், அகல் விளக்குகளுக்கு ஏக டிமான்ட். பல கடைகளில் இந்தப் பொருட்கள் மட்டும் விற்றுத் தீர்ந்திருந்தன.

மாலை நெருங்க நெருங்க மழை வெளுக்க ஆரம்பித்தது. குறிப்பாக தென் சென்னைப் பகுதிகளில். மக்கள் எதிர்ப்பார்த்ததுபோலவே இரவு சாலைகளில், தெருக்களில் முழங்காலுக்கு மேல் வெள்ளம். வேளச்சேரி - மடிப்பாக்கம் பிரதான சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்து வெள்ளம். ரியார் நகர், எல்ஐசி நகர், குபேரன் நகர், லட்சுமி நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புக ஆரம்பித்துவிட்டது. அவ்வப்போது பவர் கட் வேறு.

விடிய விடிய பெய்து கொண்டிருந்தது மழை. காலையில் பார்த்தால் ஊரே வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. வீட்டுக்கு எதிரே சாலையில் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போதே முன்னெச்சரிக்கையாக சிலர் வீடுகளைக் காலி செய்து கிளம்பிக் கொண்டிருந்தனர்.

2015-ல் பார்த்த அதே காட்சி.

வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளிலிருந்து முடிந்தவரை பொருட்களை எடுத்துக் கொண்டு குழந்தைகளை வெள்ள நீரில் இழுத்துக் கொண்டு வரிசையாக மக்கள் சென்ற காட்சி. மிக அதிக வெள்ளம் சூழ்ந்த வீடுகளிலிருந்து புல்டோசர்கள், ட்ராக்டர்களில் மக்கள் மீட்டுக் கொண்டு மாநகராட்சி பணியாளர்கள் சென்ற காட்சி, ஹெலிகாப்டரில் தாழப் பறந்து வந்து உணவுப் பொட்டலம் விநியோகித்த காட்சி, கட்சிக் கொடிகளோடு பிரமுகர்கள் வந்து கலர் கலராக சாதப் பொட்டலங்கள் கொடுத்த காட்சி....

இவை அனைத்தும் மீண்டும் அரங்கேறியிருக்கும், இன்னும் 24 மணி நேரம் - தொடர்ந்து கூட அல்ல - விட்டு விட்டு பெய்திருந்தாலும் கூட இந்தக் காட்சிகள் அரங்கேறியிருக்கும். இதற்கான பழியை மழை மீது போடுவதில் நியாயமில்லை. ஒரு பக்கம் எப்போதும் போல மெத்தனமாக இருக்கும் அரசு நிர்வாகம். இன்னொரு பக்கம் வழக்கம்போல மழைக் காலத்தில் மட்டும் பதறிவிட்டு, மீதி நாட்கள் அதே தவறுகளைச் செய்யும் பொதுமக்கள்.

வெள்ளம் வடியாமல் வீடுகளைச் சூழ முக்கிய காரணம் நீர்நிலைகளை ஆக்கிரமித்தல்.. அல்லது அவற்றை குப்பை மேடுகளாக்கி வைப்பது. இதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள் மக்கள். வெள்ளக் காலங்களில் மட்டும் இவர்களுக்கு ஞானோதயம் வந்துவிடும். மற்ற நேரங்களில் தொடர்ந்து அலட்சியம் காட்டுவார்கள், அரசு மீது குற்றம் சாட்டுவார்கள்.

ரொம்ப நாட்களல்ல... 2015-ல்தான் இத்தனை மோசமான வெள்ள பாதிப்பு வந்தது. அன்றைக்கு எங்கெங்கே வெள்ளம் வடியாமல் தேங்கி நின்றதோ அந்தப் பகுதிகளில் வடிகால் வசதியைச் சரி செய்திருக்க வேண்டும். குறிப்பாக வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில். ஆனால் இரண்டு ஆண்டுகளாக சும்மாதான் இருந்தார்கள் மாநகராட்சி, பொதுப் பணித்துறையினர். மடிப்பாக்கம் எல்ஐசி நகர் அம்பேத்கர் சாலை ஓரங்களில் 2015 வெள்ளத்தின்போது தோண்டப்பட்ட பள்ளம் கூட இன்னும் சரி செய்யப்படவில்லை.

அப்புறம் மழை வந்துவிட்டது.. வெள்ளம் சூழ்ந்துவிட்டது என்று கூப்பாடு போட்டால் எப்படி? இயற்கை அதன் வேலையை சரியாகச் செய்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்த தவறி நிற்பது நாம்தான்.

இந்த வெள்ள காலத்தில் மழை நீரை சுத்தமாகப் பயன்படுத்த முடியாத அளவுக்கு பெருங்கொடுமையை செய்கிறார்கள் மக்கள். அதுபற்றி தனியாகப் பார்க்கலாம்!

தற்ஸ்  தமிழ்.

ஒரு நாள் மழைக்கே...... மிதக்கிறது  சென்னை. (படங்கள்)
 

a-view-of-flooded-street-after-heavy-rain-in-chennai_150942064090.jpg

a-view-of-flooded-street-after-heavy-rain-in-chennai_1509420640100.jpg

 

a-view-of-flooded-street-after-heavy-rain-in-chennai_150942064070.jpg

a-view-of-flooded-street-after-heavy-rain-in-chennai_150942064060.jpg

a-couple-crosses-waterlogged-service-road-near-marina-beach-during-heavy-downpour_150942064040.jpg

a-view-of-flooded-street-after-heavy-rain-in-chennai_150942064030.jpg

a-view-of-flooded-street-after-heavy-rain-in-chennai_150942064010.jpg

a-view-of-flooded-street-after-heavy-rain-in-chennai_150942064020.jpg

a-view-of-flooded-street-after-heavy-rain-in-chennai_150942064000.jpg

Water logged in Chennai Central railway station

வெள்ளநீரால் மிதக்கும் சென்னை

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீரில்  மூழ்கிய.... வியாசார்பாடி  ஜீவா பாலம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, லண்டனில் தேங்கும் மழைநீர் கூட.... சென்னையில், தேங்கவில்லை. -அமைச்சர் வேலுமணி.-

23031676_895344767284321_6243207328412491380_n.jpg?oh=8e33bd149114ff4d1c11ab51f2d5ab26&oe=5A642F78

 

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் வளைகுடாவில் நீடிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.... கனமழை பெய்யும் !! சென்னை வானிலை மையம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடகடலோர மாவட்டங்களில் பலத்த பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களகா வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

சென்னை, திருவள்ளூர், கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நீடித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளதாக அவர் கூறினார். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பரவலாக மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

வட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கடலோர மாவட்டங்கள் அதாவது கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யும் என்றார்.

சென்னையை பொறுத்தவரை மாலையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த 24 மணி நேரத்தில் 21 இடங்களில் கனமழையும் 16 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
அதிகளவாக சீர்காழியில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தற்ஸ்  தமிழ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளியேறிய மக்கள்

தெளிய விட்டு, தெளிய விட்டு... பலமாக அடிக்கும் மழை:  பயத்தோடு பார்க்கும் சென்னைவாசிகள்.

சென்னையில் 2 மணிநேர இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஞாயிறு இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் வெள்ளநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்துள்ளதால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்றும் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாக சென்னையில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையின் நகர் பகுதிகளிலும், புறநகரிலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

திங்கட்கிழமை முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. முடிச்சூர் பகுதி மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறினர். வரதராஜபுரத்தில் ஒருநாள் மழைக்கே படகு மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.

தெளிய விட்டு அடிக்கும் மழை

செவ்வாய்கிழமையன்று சில மணிநேரங்கள் மழை நின்றது. வெயில் தலைகாட்டியது. இதனால் வெள்ளநீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியதாக மக்கள் நினைத்தனர். ஆனால் நள்ளிரவில் மீண்டும் பலத்த மழை கொட்டியது.

தெளிய விட்டு அடிக்கும் மழை:  பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் பலரும் உறவினர் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியுள்ளனர். விட்டு விட்டு பலத்த மழை பெய்வதால் 2015ஆம் ஆண்டு போல மீண்டும் ஒரு வெள்ளம் வருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்

வீடுகளுக்குள் முடங்கிய மக்கள்: இந்த நிலையில் மீண்டும் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. மழை பெய்வதால் பலரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். சென்னையின் பருவநிலையே குளிர்ச்சியாக மாறிவிட்டது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பலரும் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். வீட்டை விட்டு அலுவலகம் சென்றவர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

நன்றி தற்ஸ்  தமிழ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி மழை,  தட்டுத் தடுமாறும் சென்னை. 

a-view-of-flooded-street-after-heavy-rain-in-chennai_150945074530.jpg

a-view-of-flooded-street-after-heavy-rain-in-chennai_150945074560.jpg

a-view-of-flooded-street-after-heavy-rain-in-chennai_150945074550.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"கேள்வி நேரம்" ;  மழையால் தத்தளிப்பதற்கு யார் காரணம்..? அரசா..? ஆக்கிரமிப்பா..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Heavy rain continues holiday declared to 6 districts schools

கனமழை நீடிப்பு ... சென்னை, காஞ்சி உள்ளிட்ட 6 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர்,நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் துவங்கியது. விடாமல் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மின்சார சேவையும் சில இடங்களில் தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மைதானங்களில் தண்ணீர் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. சேரும் சகதியுமாக காணப்படுவதால் மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு 10 மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டனர்.

சென்னையில் நேற்று பகலில் வெயிலடித்த நிலையில் மாலை நேரத்தில் வானம் இருண்டது. நள்ளிரவில் மழை கொட்டித்தீர்த்தது. அம்பத்தூர், ஆவடி, புளியந்தோப்பு, மேடவாக்கம், வேளச்சேரி, தாம்பரம், மடிப்பாக்கம், வியாசர்பாடி, சிட்லபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கி உள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்றும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், பள்ளி வளாகங்களில் தண்ணீர் அதிக அளவில் தேங்கி இருப்பதாலும், வானிலை ஆய்வு மையத்தின் மழை எச்சரிக்கையை கருத்தில் கொண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு 3வது நாளாக விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக 30 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- நன்றி தற்ஸ் தமிழ். -

 

மழைன்னாலே  மெர்சலாகும்,  சென்னை மக்கள்... செய்யத் தவறியது என்ன?

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் 2 நாள் மழைக்கே மக்கள் பீதியாகின்றனர். மக்களின் இந்த அச்சத்திற்கு யார் காரணம். அரசும், மக்களும் செய்யத் தவறியது என்ன?

வடகிழக்குப் பருவமழை பெய்தாலும் கஷ்டம், பொய்த்தாலும் கஷ்டம் என்ற நிலை தான் தமிழகத்தில் நிலவுகிறது. கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் இந்த ஆண்டில் கடுமையான தண்ணீர் வறட்சியை மாநிலம் சந்தித்தது. செய்வதறியாது கைபிசைந்து நின்ற அரசு சென்னை மக்களுக்கு கல்குவாரிகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்து மக்களுக்கு விநியோகித்தது. தமிழகத்தின் பிற பகுதி மக்களுக்கும் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடும் வறட்சி நீடிப்பதால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அமைச்சர்கள் மக்களை கேட்டுக் கொண்டனர். மற்றொரு புறம் தண்ணீர் இல்லாமல் கருகிய விவசாயப் பயிர்களையும், வறண்டு கிடக்கும் விளை நிலங்களையும் பார்த்து மனம் நொந்து பல விவசாயிகள் விளைநிலத்திலேயே மாண்டு போயினர். இந்த ஆண்டு பருவமழை நிச்சயம் அதிக அளவில் இருக்கும் என்பதற்கு சமிக்ஞை காட்டுவது போல பெங்களூரு, ஐதராபாத், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை பின்னிப் பெடலெடுத்தது. 

தத்தளிக்கும் சென்னை

 

தத்தளிக்கும் சென்னை: அப்போது முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததன் விளைவே தற்போது 2 நாள் மழைக்கே சென்னையின் தாழ்வான பகுதிகள் தத்தளிக்கின்றன. இதே போன்று சாலைகளிலும் அதிக அளவு வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இத்தனைக்கும் பருவமழை இன்னும் சராசரி அளவை எட்டவில்லை. சென்னையில் 10 சென்டிமீட்டர் என்ற அளவில் தான் மழை பெய்துள்ளது.

நீர் வழி ஆக்கிரமிப்புகளால் பீதி

நீர் வழி ஆக்கிரமிப்புகளால் பீதி: சிறுமழை என்றாலே சென்னை மக்கள் பீதியாவதற்கு நீர் வழித் தடங்களின் ஆக்கிரமிப்புகளே முக்கியக் காரணம். வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்று பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ளன. 375 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை உருவாகிய போதும், இன்று மாடமாளிகைகள் கூட கோபுரங்கள், ஹைஃபை கட்டிடங்களாக காட்சியளிக்கும் சென்னையும் ஒரு கிராமம் தான்.

திட்டமிட்டே செய்யப்பட்ட நீர் வழி போக்குவரத்து

திட்டமிட்டே செய்யப்பட்ட நீர் வழி போக்குவரத்து: நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மாட்டு வண்டியில் தான் பயணமே நடந்தது. பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆண்டாலும் அவர்கள் செய்த நல்ல காரியங்கள் பல. கோடை காலம் வந்தால் குதூகலமாக சென்று வர ஊட்டி, தமிழகம் அண்டை மாநில நீர் நிலைகளை நம்பித் தான் உள்ளது என்பதால் ஏரிகள், குளங்கள், அணைகள் உள்ளிட்டவற்றை கட்டி வைத்தனர். இதே போன்று நம் முன்னோர்களும் மக்களின் தேவைகளுக்காக ஆங்காங்கே நீர் வழிப் போக்குவரத்தை ஏற்படுத்தினர்.

வளங்களை சுரண்டினோம்: ஆனால் அவற்றை முறையாக நாம் பராமரித்தோமா என்றால் அது தான் இல்லை. வளர்ச்சி என்ற பெயரில் மரங்களை அழித்தோம், நீர் நிலைகளில் இருந்து மணல் வளத்தை கொள்ளையடித்தோம், கொஞ்சம் கொஞ்சமாக நிலப்பரப்பை அதிகரிப்பதாகச் சொல்லி நீர் பரப்புகளை சுருங்கச் செய்தோம். இதன் விளைவு தான் இன்று சிறு மழை என்றாலே தண்ணீர் ஓட வழியின்றி வீடுகளைச் சூழ்ந்து நிற்கிறது.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை: பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காட்டில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பின் விளைவையே வேளச்சேரி, மடிப்பாக்கம் மக்கள் ஒவ்வொரு ஆண்டு மழையின் போதும் அனுபவித்து வருகின்றனர். இதே போன்று சென்னை மாநகராட்சியின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டே வந்தாலும் அவற்றிக்கு ஏற்ப கழிவுநீர் வடிகால்வாய்கள் ஏற்படுத்தாதது, மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள் ஏற்படுத்தாதது உள்ளிட்டவையும் காரணங்களாக உள்ளன.

சென்னையின் சாபக்கேடு

சென்னையின் சாபக்கேடு: மழை என்றாலே துள்ளித் திரிந்த காலம், மனதை ரம்மியமாக்கும் சூழல் இவற்றில் இருந்து மாறி பீதியாகும் நிலைக்கு தள்ளியது யாருடைய குற்றம். அரசும், மக்களும் நீர் மேலாண்மையை புரிந்து சரியான திட்டமிடல் செய்யாத வரை சென்னைக்கான இந்த சாபக்கேடு எப்போதும் நீங்காது. பிரச்னை வரும்போது மட்டும் போர்க்கால நடவடிக்கை எடுக்காமல் முன்கூட்டியே திட்டமிடல் செய்திருந்தால் வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் பல தலைமுறைகளுக்கு எஞ்சி நிற்கும் என்பதை புரிந்த நிர்வாகம் செய்தால் எதிர்காலத்தில் தப்பும் சென்னை.

- நன்றி தற்ஸ் தமிழ். -

 

பொதுமக்கள் அச்சம்

தண்ணீர் தேசமான சென்னை புறநகர்... வெள்ளநீரை வெளியேற்றக்கோரி நள்ளிரவில் போராட்டம்.

சென்னையில் 3வது நாளாக நேற்றும் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் நகர் மற்றும் புறநகர் பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. ஏராளமான குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் மழைக்கு 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நீர் நிலைகள் நிரம்பி அருகிலுள்ள பகுதிகளுக்குள் தண்ணீர் சென்றுள்ளது. மழை பாதிப்புகளால் ஏற்பட்டுள்ள சேதங்களை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் அச்சம்:  நீர்தேக்க பகுதிகள் உடையும் நிலையில் உள்ளதால் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இடைவிடாது மிரட்டும் மழையால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த மழை மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி:  கடந்த திங்கட்கிழமை முதல் விட்டு விட்டு கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. செவ்வாய்கிழமையன்று பகலில் மழை விட்டதால், மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். ஆனால், தமிழக கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்ததால் அன்று இரவே மீண்டும் மழை மிரட்ட தொடங்கியது.

தண்ணீர் தேசமான சென்னை புறநகர்

தண்ணீர் தேசமான சென்னை புறநகர்:  விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெள்ளநீர் வெளியேற வழியில்லாமல் தாழ்வான இடங்களை நோக்கியும், சாலைகளை நோக்கியும் தண்ணீர் புகுந்தது. சென்னை வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சேலையூர், முடிச்சூர், தாம்பரம், வரதராஜபுரம், சிட்லபாக்கம், பெருங்களத்தூர், தரமணி, புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தண்ணீர் வரத்து அதிகரிப்பு:  நீர்த்தேக்கங்களிலும் நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வழிவதால் ஊருக்குள் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சரியான பராமரிப்பு இல்லாததால் பல ஏரிகள் உடையும் நிலையில் உள்ளது.

வெளியேறும் மக்கள்:  பருவமழை தொடங்கிய 3 நாட்களுக்குள்ளேயே குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் அனைவரும் மீண்டும் வெள்ளம் வருமோ என்ற பீதியில் உள்ளனர். முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் விஷ ஜந்துகள் வரும் என்று அஞ்சி புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை காலி செய்தனர்.

வெள்ளநீரை வெளியேற்றுவதில் சுணக்கம்

வெள்ளநீரை வெளியேற்றுவதில் சுணக்கம்:  சென்னை நகரில் இருந்து புறநகர் முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது. அரசை பொறுத்தவரை, அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. குழு அமைக்கப்பட்டுள்ளது, உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாநகராட்சியிடம் போதிய உபகரணங்கள் கையிருப்பு இல்லாததால், தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொற்றுநோய் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதால் வெள்ளநீரை வெளியேற்றக்கோரி நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- நன்றி தற்ஸ் தமிழ். -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Text und im Freien

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ள மீட்பு நடவடிக்கைகள் சிறப்பாக இப்போது வரை சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், தான் என்ன சொன்னாலும் அதை வைத்து மீம்ஸ் போடப்படுகிறது.

நான் பத்திரிகையாளர்களிடம் பேசிய செய்தி வந்தவுடன் அதை வைத்து எப்படி கிண்டல் அடிக்கலாம், மீம்ஸ் போடலாம் என இதற்காகவே தனியாகவே சம்பளம் கொடுத்து ஆட்களை வேலைக்கு வைத்து இருக்கிறார்கள். ஸ்டாலின், தினகரன் மற்றும் இன்னொரு தரப்பு என மொத்தம் மூன்று கும்பல்கள் இதைச் செய்து வருகின்றனர். என்ன பேசினாலும் அதை வைத்து தவறாக மீம்ஸ் போடுவது, கிண்டல் அடிப்பது எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக நாட்டில் இப்படி நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஜெயக்குமார் கூறினார்.

நன்றி : தட்ஸ்தமிழ்

டிஸ்கி : நான் சொடலை குரூப்பும் இல்லை தினகரன் குருப்பூம் இல்லை .. ஆனா இந்த முகத்தை பார்த்தா இஸ்கூல் பையன் கூட மீம்ஸ் கிரியட்டரா மாறிடுறான்.. என் சிப்சு ..!:cool:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

2a6d71.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Chennai Ethiraj Girls hostel flooded by heavy rain water more than 700 students affected

ஓ.எம்.ஆர்  சாலை மிதக்கிறது..  எத்திராஜ் கல்லூரி விடுதியில் மழை நீர் புகுந்தது... 700 மாணவிகள் தவிப்பு!

மாலையில் இருந்து பெய்து வரும் மழையால் சென்னையின் பல இடங்கள் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. சென்னை எத்திராஜ் கல்லூரி விடுதியில் மழை நீர் புகுந்துள்ளதால் அங்கு தங்கியுள்ள 700 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பருவமழையால் இன்று மாலையிலிருந்து சென்னை நகரில் கன மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது.

ஏகப்பட்ட இடங்களில் வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலும் மழை நீர் புகுந்தது. சென்னையில் 186 இடங்கள் தாழ்வான இடங்கள் என கண்டறியப்பட்டும் நடவடிக்கை எடுக்காததே காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கனவே நேற்றைய மழையில் எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் மழை நீர் தேங்கியது. இந்நிலையில் அங்கு இருக்கும் எத்திராஜ் கல்லூரி பெண்கள் விடுதியில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அங்கு இருக்கும் 700 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதுபோல ஐ.டி பணியாளர்களும் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். ஓ.எம்.ஆர் சாலை வெள்ளக்காடாகி உள்ளது. எத்திராஜ் கல்லூரியில் பாதிக்கப்பட்டுள்ள மாணவிகளுக்கு உதவ அதிகாரிகள் விரைந்துள்ளார்கள் என்று அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

- நன்றி தற்ஸ் தமிழ். -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணும் இடமெங்கும் வெள்ளநீர்... 2015 நவம்பர் இரவு மீண்டும் கண்முன் வருதே!

விடாமல் கொட்டி வரும் மழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் ஆறுகளாக மாறி ஓடுவதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனால் அலுவலகம் முடிந்து வாகனங்களில் வீடு திரும்புபவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

2015ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியும், டிசம்பர் 1ஆம் தேதியும் இதுபோல ஒரு மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர் சென்னை வாசிகள்.

வாகனப்போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால் நடந்தே சென்றனர் அதே போல நிலை நவம்பர் 1ஆம் தேதியன்று இரவில் ஏற்பட்டுள்ளது. வீடு திரும்ப முடியாமல் தவித்து வரும் பலரும் தங்களின் தவிப்பை ஃபேஸ்புக், ட்விட்டரில் பலரும் பதிவிட்டுள்ளனர்.

வெள்ளத்தில் தவிக்கும் மேற்கு மாம்பலம்:  சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வெள்ளநீர் குளம் போல தேங்கியுள்ளது. பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. வாகனப்போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

- நன்றி தற்ஸ் தமிழ். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Heavy rain lashes Chennai News

சென்னையில்... மீண்டும் கனமழை. - புறநகர்களில், இடியுடன் வெளுக்கிறது!

சென்னை நகரின் பல இடங்களில் கனமழை மீண்டும் வெளுத்து வாங்குகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை உக்கிரமாக கொட்டி வருகிறது. தொடர் மழையால் சென்னை மற்றும் புறநகர்களில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியே உள்ளன.

மழைநீர் வெளியேறுவதற்கான கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் மக்கள் பெரும் துயரத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த கனமழை சென்னையில் பகலில் ஓய்ந்து இருந்தது.

சில மணிநேர இடைவேளைக்குப் பின்னர் சென்னை மற்றும் புறநகர்களில் கருமேகங்கள் சூழத் தொடங்கின. மாலையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராமாபுரம், போரூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது.

சென்னை புறநகர்களில் இடியுடன் கூடிய கனமழை கொட்டி வருகிறது. கனமழையால் சென்னை ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

- நன்றி தற்ஸ் தமிழ். -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

National Disaster Recovery Forces are in action at Chennai Rains

சென்னைக்கு.... தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைகிறது... மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்!

தொடர் மழையில் சிக்கியுள்ள சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் நகர்ப்பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் மிகுந்த பாதிப்படைந்துள்ளன.

அதிகாரிகள் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அந்தந்த பகுதிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் தலைமையில் மீட்புப் பணியில் துரித கதியில் நடந்து வருகிறது. இந்நிலையில், கோபலாபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லம், எழும்பூர் எத்திராஜ் கல்லூரி மாணவிகள் விடுதி, சோழிங்கநல்லூர் புனித ஜோசப் கல்லூரி விடுதிகள் ஆகியவற்றில் மழைநீர் புகுந்துள்ளது.

மீட்புப்பணிகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். அதில், மீட்புப்பணிகள் எல்லா இடத்திலும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கிய பகுதிகளில் மின் மோட்டார் கொண்டு நீரை வெளியேற்றும் பணி நடந்துவருகிறது. முன்னெச்சரிக்கையாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், 9 தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் களத்தில் உதவி வருவதாகவும், இன்னொரு குழு அரக்கோணத்தில் இருந்து விரைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு 112 அழைப்புகள் வந்திருப்பதாகவும் அதில் 80 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

- நன்றி தற்ஸ் தமிழ். -
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டும் திருந்தாத மாநிலம்.....அரசியல் மாற்றம் அவசியம் தேவை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Food items provided for Chennai the people

249 இடங்களில் தண்ணீரை அகற்றிவிட்டோம்.. சென்னை மாநகர ஆணையர் தகவல்.

சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாதிப்பு நிலை பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறியதாவது: மழை பாதிப்புகள் தொடர்பாக 599 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 249 இடங்களில் தண்ணீர் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.

- நன்றி தற்ஸ் தமிழ். -

 

 DNqvBYEXkAAo44f.jpg

சென்னையில் மேலும் 500 மி.மீ மழை பெய்யப்போகிறது.. பிபிசி லேட்டஸ்ட் எச்சரிக்கை!

சென்னையில் மேலும் 500 மி.மீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பிபிசி எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு சென்னையில் ஒரே நாளில் 50 செ.மீ மழை பெய்யும் என முன்கூட்டியே கணித்தது பிபிசி. அதைப்போலவே பெருமழை கொட்டித் தீர்த்து நகரமே வெள்ளத்தில் மிதந்தது.

பல்வேறு உயிர்பலிகளும், பொருட்சேதங்களும் ஏற்பட அந்த பெரு வெள்ளம் காரணமாக இருந்தது. இதனால் பிபிசி வானிலை அறிக்கை முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.

நேற்று மாலையே எச்சரிக்கை

நேற்று மாலையே எச்சரிக்கை:  இந்தநிலையில், பிபிசி வானிலை செய்திப்பிரிவு டிவிட்டரில் நேற்று மாலை ஒரு தகவலை வெளியிட்டது. அந்த தகவலில் இந்தியா மற்றும் இலங்கை: புதுச்சேரி, கேரளா, தமிழகம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சனிக்கிழமையளவில் கடலோர ஆந்திராவிலும் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

அபாய கட்ட வெள்ளம்:  மற்றொரு டிவிட்டில் "தென்கிழக்கு இந்தியா மற்றும் இலங்கை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், அடுத்த சில நாட்களில் வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயகட்ட, அளவுக்கு, மழையை கொண்டு வரும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

சொன்னதை போலவே....:  பிபிசி கூறியதை போலவே நேற்று வெள்ள அபாயம் ஏற்படும் அளவுக்கு சென்னையில் நேற்று இரவு மழை பெய்தது. நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாகியுள்ளது. நேற்று பிபிசி வெளியிட்ட டிவிட்டில் 500 மில்லி மீட்டர் அளவுக்கு (50 செ.மீ) மழை பெய்யலாம். இன்னும் வெள்ளத்திற்கு வாய்ப்புள்ளது. நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டிருந்தது.

இன்னும் 500 மி.மீ:   இந்த நிலையில் இன்று காலை பிபிசி வானிலை செய்திப்பிரிவு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: சென்னையில் ஏற்கனவே 200 மி.மீ மழை கடந்த 3 நாட்களில் பெய்துவிட்டது. 300-500 மி.மீ மழை வரும் சில நாட்களில் பெய்ய கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிகபட்சம் 500 செ.மீ மழை சென்னையில் பெய்யக்கூடும் என பிபிசி கூறியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய சூழலை காட்டுகிறது.

- நன்றி தற்ஸ் தமிழ். -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kein automatischer Alternativtext verfügbar.

 

Bild könnte enthalten: 2 Personen, Personen, die lachen, Text

 

23231204_999339496875428_6545433777150581093_n.jpg?oh=1fbe945d8bced985dbabe8edd3dcaff6&oe=5AA855D5

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை  மெரினா.

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் மழை எப்படி இருக்கும்? என்ன சொல்கிறது நார்வே வானிலை மையம்?

9b80d4.jpg

 சென்னை: இன்று மாலையும் சென்னையில் கனமழை கொட்டித் தீர்க்கும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை ஊற்றியது. இதனால் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பல பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மின்சாரம் துண்டிப்பு மின்சாரம் துண்டிப்பு சென்னையில் உள்ள பெரும்பாலான சுரங்கப் பாதைகள் நிரம்பியுள்ளதால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.

 

100க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் அவதி வெள்ளத்தால் அவதி நேற்று மாலை முதலே மழை பெய்ததால் அலுவலகம் சென்றவர்கள் நள்ளிரவு வரை வீடு திரும்ப முடியாமல் அவதியடைந்தனர். சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் பேருந்துகள் மிக குறைந்தளவே இயக்கப்பட்டன. நடந்தே சென்ற மக்கள் நடந்தே சென்ற மக்கள் வாடகைக்கார்கள் மற்றும் ஆட்டோக்களின் சேவையும் முடங்கியது. இதனால் மக்கள் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது. நார்வே மையம் எச்சரிக்கை நார்வே மையம் எச்சரிக்கை இந்நிலையில் சென்னையில் நேற்று போல் இன்று மாலையும் மழை வெளுக்கும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்குப்பிறகு மழை தொடங்கும் என்றும் நார்வே நாட்டு வாலை மையம் தெரிவித்துள்ளது. 

இரவு முழுவதும் நீடிக்கும் மாலை 6 மணியில் இருந்து விடிய விடிய மழை நீடிக்கும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது. பகல் நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை நீடிக்கும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது. நேற்று பலித்த கணிப்பு நேற்று பலித்த கணிப்பு நேற்று மாலையும் சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று நார்வே வானிலை மையம் கணித்திருந்தது. அதுப்போலவே நேற்று விடிய விடிய சென்னையில் மழை ஊற்றியது. அப்போதும் சரியாக இருந்தது அப்போதும் சரியாக இருந்தது கடந்த 2015ஆம் ஆண்டும் நார்வே வானிலை மையம் கணித்தது போலவே சென்னையில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. தற்போது மீண்டும் சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது.

நன்றி: தட்ஸ் தமிழ்

டிஸ்கி :

இவனுங்களும்(ISRO) வாரத்திற்கு ஒன்று என்று வானத்தில் புஸ்வாணம் பெருமைக்கு விடுறாங்கள்.. ஒன்னும் கணிக்க இயலவில்லை ! நோர்வே கணிப்பு பலிக்குமா ?

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2017 at 10:39 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வெள்ள மீட்பு நடவடிக்கைகள் சிறப்பாக இப்போது வரை சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால், தான் என்ன சொன்னாலும் அதை வைத்து மீம்ஸ் போடப்படுகிறது.

இது ஒரு தவறான செய்தி.

மீம்ஸ் போட்டால் என்னங்க பிழை தப்பு பண்ணியவர்களுக்கு கோபம் வரும் மக்களுக்கு நல்லது செய்தவர்களுக்கு இந்த மீம்ஸ் ஒரு பொருட்டு அல்ல .

இப்ப எல்லா கட்சியும் இந்த மீம்ஸ் கிரியேட் பன்னுவர்களை வேலைக்கு வைத்துள்ளது ஆனால் பிஜேபி மட்டும் தங்களை விமர்சிப்பவர்களை போட்டுதள்ளுகிற வெறியில் திரிகிறது (பங்களூர் பத்திரிகையாளர் மண்டையில் போட்டதில் பிஜேபி ஒரு தீக் கோழி ) அத்துடன் மாநிலத்துக்கு மாநிலம் தேடிபிடிச்சு உடனுக்குடன் பதிவு இதற்க்கு உதாரணம் விஜய்க்கு எதிரான மீம்ஸ் வந்த வேகம் .  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

Image may contain: one or more people, shoes, child, outdoor and water

Image may contain: 5 people, people smiling, people standing and outdoor

 பெருமாள் இணைத்த படங்களைப்  பார்க்க...  
"பல்லு  உள்ளவன், பகோடா  சாப்பிடுவது"  
 "காத்தடிக்கும்... போதே... தூற்றிக்கொள்"

போன்ற...  வசனங்கள் நினைவுக்கு வந்தது.
இதற்குள்... செல்பீ  எடுக் கும் ஆட்களை பார்க்க.. சிரிப்பு வந்தது.
"துன்பத்திலும்... இன்பம் காண்போம்.."  என்று, இளைய தலைமுறை முடிவெடுத்ததை குறை  சொல்ல முடியாது. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.