Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரட்டூர், சிட்லபாக்கத்தில் மழை நீரில் மிதக்கும் வீடுகள்!

Featured Replies

கொரட்டூர், சிட்லபாக்கத்தில் மழை நீரில் மிதக்கும் வீடுகள்!

 

Korattur_11245.jpg

Chennai: 

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், தாழ்வான பகுதியான கொரட்டூர், சிட்லபாக்கத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

 

தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. அதனால், சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. கால்வாய்கள், கழிவு நீர்க் குழாய்கள் சரியாகத் தூர் வாரப்படாததால், மழை நீர் சாலைகளில் வெள்ளம் போல ஓடுகிறது. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதியை நோக்கி மழை நீர் செல்வதால் அந்த பகுதியில் இருக்கும் வீடுகள் நீரினால் சூழப்பட்டிருக்கின்றன.

sitlapaakkam_2_11505.jpg

கொரட்டூர், சிட்லபாக்கம் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சமையலறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் தூக்கத்தைத் தொலைத்து விடிய விடிய மழை நீரை வெளியேற்றிவருகின்றனர். அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். மழை வருவதற்கு முன்பே கழிவு நீர்க் கால்வாய்களைச் சீரமைத்திருந்தால், இப்படி ஒரு நிலை வந்திருக்காது என்று பாதிக்கப்பட்டவர்கள் அரசின்மீது குற்றம் சாட்டுகின்றனர்.

sitlapaakkam_1_11096.jpg

"ஒருநாள் மழைக்கே இப்படி அவதிப்படும் மக்கள், இன்னும் மூன்று நாள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளநிலையில்  பொதுமக்கள் கடுமையான பாதிப்புகுள்ளாவார்கள்" என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே, கொட்டூர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரை கொட்டூர் ஏரியில் கரையை உடைத்து அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர். இதனை கண்டித்து சமூக ஆர்வலர்கள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

sitlapaakkam_11290.jpg

 

இதனிடையே, மழையால் ஏற்படும் தொற்று நோய்களைத் தடுக்க தமிழகம் முழுவதும் குளோரின் கலந்த குடிநீரைத் தர, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவுவிட்டுள்ளது. சாலையோரம், பாதுகாப்பற்ற உணவுப் பொருள்களை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சாப்பிடுவதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/106394-in-chennai-korattur-chitlapakkam-area-are-floating-in-rain-water.html

  • கருத்துக்கள உறவுகள்

வருடா வருடம் இனி தொடர் கதை அங்கு டெங்கு ஒழிப்பு என்று கொஞ்சநாளைக்கு முன்னாடிதான் பரத நாட்டியம் ஆடினவை இனி மறுபடியும் அ வில் இருந்து தொடங்கணும் .

  • தொடங்கியவர்

அமெரிக்கா, லண்டனில் தேங்கும் மழைநீர்கூட சென்னையில் தேங்கவில்லை! செய்தியாளர்களிடம் கலகலத்த அமைச்சர்

 

velumani_interview_14127.jpg

Chennai: 

'அமெரிக்கா, லண்டனில் தேங்கும் மழைநீர்கூட சென்னையில் தேங்கவில்லை' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.வி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

 

மழை, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகுறித்து நிதியமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்னை மாநகராட்சியில் இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினர். அப்போது, சென்னையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள்குறித்து ஆலோசிக்கப்பட்டது.  அதன் பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "கடந்த 2015ல் பெய்த மழைக்கும் இன்று பெய்த மழைக்கும் வித்தியாசம் இருக்கிறது. சில தொலைக்காட்சிகள் உள்நாேக்கத்துடன் செய்தி வெளியிடுகின்றன. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக தொலைக்காட்சிகள் செயல்படுகின்றன. உங்களது ஒத்துழைப்பு எங்களுக்கு வேண்டும். நாங்கள் செய்கிற வேலையை நன்றாகச் செய்துமுடிக்கிறோம்.

முடிச்சூர் பகுதியில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடையாறு ஆறு, கூவம் ஓரத்திதில் இருந்த 5 ஆயிரம் வீடுகள் அகற்றப்பட்டு வேறு இடத்துக்கு அந்த மக்களை அமர்த்தியிருக்கிறோம். சென்னையில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கிக்கொண்டி ருக்கிறது. அதிகாலை மூன்று மணி வரை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வேலைபார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கப்படும் புகார்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, சரிசெய்யப்பட்டுவருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதுகுறித்து தெரிவிக்க உத்தரவிட்டிருக்கிறோம். மழைநீர் தேங்கிய 49 இடங்களிலும் நீர் அகற்றப்பட்டுவிட்டது. 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை பாராட்டைப் பெற்றது" என்று கூறினார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் ஆவேசமடைந்த அமைச்சர் வேலுமணி, அமெரிக்கா, லண்டனில் தேங்கும் மழைநீர்கூட சென்னையில் தேங்கவில்லை. அமெரிக்கா, லண்டனில் எடுக்கப்பட்டதைவிட சென்னையில் சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டோம் என்று கூறினார். செய்தியாளர்கள் தொடர்ந்து, மழை தொடர்பான புகார்களை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கமுடியவில்லை என்று கேள்வி எழுப்பினர். அப்போது குறுக்கிட்ட மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தப்பு நடந்தமாதிரி திசை திருப்புகிறார்கள். இரண்டு மணி நேரத்தில் இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டுவிடும்" என்றார்.

 அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். அப்போது, நீங்க கேட்ட கேள்விக்கு நான் பதில் அளித்துவிட்டேன். நான் சொல்கிறதைக் கேளுங்கள் என்றார். தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர். அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் 95 சதவிகிதம் பணிகள் நடைபெற்றுள்ளது. என்னென்ன பணிகள் நடந்திருக்கிறது என்பதுகுறித்து உங்களுக்கு வீடியோ அனுப்பிவைக்கிறோம். ஆனால், ஆங்காங்கே ஒண்ணு இரண்டு இருக்கிறதை நீங்கள் படம்பிடித்து, அதை பிரதானமாகக் காட்டக்கூடாது" என்று காட்டமாகக் கூறினார்.

 

 அமைச்சர் வேலுமணி, தனது கையில் வைத்திருந்த மாநகராட்சியின் அறிக்கையைப் படித்துக்கொண்டே இருந்தார். அமைச்சர்களின் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு, கடும் சலசலப்புக்கு மத்தியில் முடிவடைந்தது.

http://www.vikatan.com/news/tamilnadu/106424-minister-velumani-compares-chennai-with-america-and-london.html

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: சென்னையில் கனமழை- ஸ்டிக்கர் தயாரா?

 
rainjpg1

வட கிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, தலைநகர் சென்னையிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் கவிதைகள் சொல்லியும், விழிப்புணர்வை விதைத்தும் வருகின்றனர். அவர்களின் கருத்து இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

பிரதாபன் ஜெயராமன்

மழை வந்தால், ஒட்டி பிழைக்க வந்தவர்கள், பூர்வ குடிகள் , இடமற்றோர், பொருளாதாரமற்றோர் கட்டியிருக்கும் ஏரி மற்றும் ஆற்றோர குடிசைகளும் மட்டுமே ஞாபகம் வரும் நமக்கு, ஏன் அந்த ஆறுகளை அழித்து, நீர்வழிகளை நாசமாக்கி அமைக்கப்பட்ட தொழிற்சாலைகள், அரசு கட்டிடங்கள், தனியார் ஆக்கிரமிப்புகள் கண்ணுக்கு தெரிய மறுக்கிறது?

பொதுப்புத்தி இப்படித்தான் வளர்க்கப்படுகிறது! #மழை

சங்கர ராம பாரதி

பெருமழையின் சிறுதுளியும் பரவசம் - மழை.

Vairavadivel Jayasuriya

மழை இவ்வளவு பெய்தும், நம்மிடம் மழைநீர் சேகரிப்பு இல்லையே?

Shri Valson

முன்னெல்லாம் மழை வந்தா வெளிய பாத்து ரசிக்க, குடை கொண்டுவருவோம்.

இப்போ கீழ இருக்கிற முக்கியமான பொருளை தூக்கி பரண்ட்ல போடுறோம்.

Dhina Dhina

மழை பொழிய வேண்டும். எந்தவித உயிர் சேதமும் பொருட்சேதமும் இன்றி நல்ல மழை பொழிய வேண்டும் இறைவா!

Haran Prasanna

சென்னையில் வெளுத்து வாங்குகிறது மழை. வெதர்மேன் மிகச் சரியாகக் கணிக்கிறார். அவர் சொன்னதை வைத்து மாலை நான்கு மணிக்குக் கிளம்பி, மகன் ,மகளை நாலே முக்காலுக்கு அழைத்துக்கொண்டு வீட்டுக் கதவைத் திறக்கவும் மழை அடித்துப் பிளக்கிறது. வெதர்மேனுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

சென்னைக்கு மழை மிகவும் அவசியம். ஆனால் மழை நீரைச் சேமிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. அரசு என்ன செய்யும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.

வெங்கடேஷ் ஆறுமுகம்

புகழ்மிக்க 2015 வெள்ளத்தில் சென்னையில் சிக்கிக் கொண்டவன் நான்.! அதன் பிறகு மதுரை வந்துவிட்டாலும். இந்த 2017-ம் ஆண்டிலும் இதே செய்திகளைப் படிக்கும் போது மனது கனக்கிறது.. இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு மழை வெள்ளத்தை சந்திக்க சென்னையில் என்ன கட்டமைப்புகள் தான் செய்யப்பட்டன.?

ஒரு இயற்கை பேரிடர் வந்தபின்பும் கூட அது மீண்டும் வந்தால் எப்படி எதிர்கொள்வது என்பதெல்லாம் யாருக்கும் தெரியாதா? முறையான நீர் வடிகால் வசதி ,குப்பைகளை அடைக்காத சாக்கடை வசதி, நீர் தேங்காத சாலைகளை உடைத்து புதிய சாலைகள் போடும் முறை, சீரான மின்சாரம், இவையெல்லாம் செய்திருக்க முடியாதா?

கரிகாலன்

லேசான மழை. ஆடைகளை ஈரமாக்கி, சேறாக்கியது. ஆனாலும் இந்த பைக் பயணம் உறவில் கதகதப்பையும் காதலையும் தருவது.

Bala G

இந்த மழை குளிருக்கு கதககதப்பாக கம்பளி போர்வைக்குள் சுருண்டு படுத்திருக்கும் என் குழந்தைகளை பார்க்கிறேன்.. ஒதுங்கிக்கொள்ள கூடுகளற்ற குழந்தைகளின் முகம் நினைவில் வந்து துன்புறுத்துகிறது...

Udhai Kumar

சென்னையில் மழை தற்போது வலுப்பெற்றது. பல நாட்களுக்கு முன்னரே மழை பற்றிய எச்சரிக்கை விடுத்தும் இந்த அரசு எந்த முன்னேற்பாட்டையும் செய்யாமல் போய்விட்டது. இன்னும் ரெண்டு, மூணு நாள் சென்னையில் வாகனங்களில் பயணிப்போர்களின் நிலைமை பரிதாபம்தான்.

தொலைநோக்கில் செய்யாத எந்த திட்டமும் மக்களை வெகுவாக பாதிக்கின்றது. வடிநீர் கால்வாய்கள் தூர்ந்து போய், இந்த சாதாரண மழைக்கே சாலை முழுவதும் வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கின்றது.

Elamathi Sai Ram

சரியான நேரத்துல தொடங்கி இடியும், மின்னலும், மேகவெடிப்புமா வடகிழக்கு பருவமழை தீபாவளி கொண்டாடுது :)

என்ன ஆனாலும் மழை நமக்கு தரும் நம்பிக்கையை அரசுகள் மட்டுமல்ல.. வேறு யாராலும் தரமுடியாது..

ஒரு அஞ்சு மாசத்தைக்கு முந்தைய தமிழ்நாடு தண்ணி இல்லாம கதறுனத ஒருநாள்ல மறக்கடிச்சிடுச்சி இந்த மாமழை. ஒவ்வொருவருள்ளும் நிரம்பித் தளும்பக்கூடியது மழை தரும் நம்பிக்கை.

Hansa Hansa

ஸ்டிக்கர் எல்லாம் தயாரா?

மழை வெளுத்து வாங்குதே?

Senthil Jagannathan

தொடர்ந்து பெய்யும் ஒரு மணி நேர மழைக்கே தாங்காத தார்சாலைகளும் அதனோடு உண்டாகும் டிராஃபிக்கும் தரும் துயரம் சொல்லிமாளாது.

Shan Karuppusamy

சென்னை ஒரு காலத்தில் பாம்புகள் நிறைந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும். அதன் நில அமைப்பு அப்படி. அவற்றின் பெரும்பாலான வாழ்விடங்களை நாம் பறித்துக் கொண்டுவிட்டோம். இப்போது மழை தொடங்கிவிட்டதால் பாம்புகள் ஏற்கனவே சுருங்கிவிட்ட தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறவேண்டிய கட்டாயம் நேரும். பாம்புகளைக் கண்டால் அடிக்கவோ கொல்லவோ செய்யாதீர்கள்.

கீழே கண்ட எண்களுக்கு அழையுங்கள். அவர்கள் வந்து பாதுகாப்பாக அவற்றைப் பிடித்து அவற்றின் வாழ்விடங்களுக்குக் கொண்டு செல்வார்கள். 24 மணி நேரமும் செயல்படும் தன்னார்வலர்கள் 20 நிமிடங்களில் வருவதாக வாக்களிக்கிறார்கள்.

வனத்துறை - 044-22200335

ஆர்வலர்கள் - 9945070909, 7845018969

Raju Mariappan

சென்னையில் மழை பெய்கிறது அவ்வுளவு தான். பருவ மழை தான் இது. சென்னையில் உள்ள தங்கள் பிள்ளைகளுக்கு சொந்தங்களுக்கு என்னவாயிற்று என்று ஊரில் இருப்பவர்கள் பதறவேண்டாம். அரசாங்கத்தின் மெத்தனத்தால் வழக்கம் போல் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியிருக்கிறது. நேற்று நள்ளிரவு முதல் லேசான மழையே பெய்து வருகிறது. மக்கள் தங்கள் பணிகளை வழக்கம்போல் செய்கிறார்கள். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அவ்வளவே. பூமி குளிர இன்னும் மழை தேவை...

Meena Somu

காலையில் ஏகாந்தமா நனைந்த மழை, இரவில் பயமுறுத்துதே ! இதுதான் வாழ்க்கையா ?

ரஹீம் கஸாலி @rahimgazali

மழை பெய்தால் தண்ணீர் தேங்கத்தான் செய்யும் -அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர்கள் வீட்டின் முன்னாடியெல்லாம் தண்ணீர் தேங்க மாட்டேங்குதே? எப்படி?!

Suresh Adithya

மழை வருவதை தடுக்க வீட்டில் உள்ள டேபிள் பேன்களை வானத்தை நோக்கி ஆன் செய்து வையுங்கள்.. அந்த காற்றினால் மேகம் கலைந்து மழை வராது..

#செல்லூர்ராஜு @madrascentral

மழைச்சாரல் @Raindrops2016

உன்னைப் போலவே இந்த மழை.. பல சமயம் ஏக்கத்திலும் சில சமயம் போதும் போதுமென மூச்சு முட்டவும்...

சண்டியர் @BoopatyMurugesh

தண்ணி போக வேண்டிய ஆத்துல மணல் லாரிய ஓட விட்டான் மனுசன்.

லாரி போக வேண்டிய ரோட்ல மழை தண்ணிய ஓட விடுது இயற்கை..

நீ பற்றவைத்த நெருப்பொன்று..

இரா.சரவணன் @erasaravanan

மரத்தின் உள்பக்கமாக காகம் கூடு கட்டினால் பெருமழை பெய்யும். வெளிப்பக்கமாக கட்டினால் அதிக மழை பெய்யாது.

நம் முன்னோரின் மழைக்கணிப்பு மகத்துவம்!

Sairam @SairSairam

வெளியே மழை நின்ற பின்பும் உள்ளே மழை... சென்னை மாநகர பேருந்துகள்.

ஏலியன் @Gopi007twitz

அய் மழை!! ஃபீலிங் ஹேப்பினு ஸ்டேட்டஸ் போட்டவங்களை எல்லாம்,

இனி, அய்யயோ மழை- பீலிங் சேடுன்னு ஸ்டேட்டஸ் போட வைச்சிடும்போல இந்த மழை...

அஸ்வத்தாமன் சேரன் @jairamguttuvan

மண்ணைக் குளிர வைக்கிற மழை

மனசையும் குளிர வைக்குது.

D S Gauthaman

இங்க ஒரு பாதாளச் சாக்கடை திறப்பு இருக்கா, அடுத்த திறப்பு பதிமூணு ஸ்டெப்ல வருதா... அப்போ அடுத்த பதிமூணு ஸ்டெப்ல அடுத்த திறப்பு... மழைநீர் சூழ் சென்னை சாலையில் இப்படித்தான் அடிக்கணக்கோட அடி மேல் அடி வச்சு நடக்க வேண்டி இருக்கு! இதுல பன்னீர் தூவும் கார், பைக் வேற!

#சென்னையில் மழை நாள்!

Mugil Siva

மாநகரத்தை மழை புரட்டி எடுக்க ஆரம்பித்துவிட்டது. மனிதக் கூட்டத்தின் பாவங்களை மன்னித்து பெய்யெனப் பெய்யும் மழைக்கு நன்றி. பெருமழைக் காலத்தின் ஆரம்பத்திலேயே சாலைகள் தலைவிரி கோலம் பூண்டுவிட்டன. இனி வரும் நாள்களை நினைத்தால் வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவே தார் உருண்டை ஒன்று உருளுகிறது.

Thamizhnathy Nathy

மழையைத் தேடியே நான் வந்தேன். மழையின் தடங்களையே தொடர்ந்தேன்.சென்னையில் மற்றுமோர் மழைக்காலம்!

தேநீர்க் குவளை, எதிர் வீட்டு தைல மரக்கிளைகளில் சொட்டும் - மின்கம்பியில் தத்தம் முறை பிசகாது நகரும் மழைத்துளிகள், தெருவில் சுழித்தோடும் வெள்ளம், குடை மனிதர்கள், நீரிசை... வாழ்தல் இனிது!

Shanmugam

ஒரே ஒரு இரவு பெய்த மழையிலேயே சென்னையின் சாலைகள் முடங்கிவிட்டன. இன்னும் 45 நாட்களைக் கடக்க வேண்டும். ஒரே ஒரு விண்ணப்பம்.

நீங்க ஒண்ணும் செய்யாட்டியும் பரவாயில்லை... மழை நீர் வடிகால்களுக்கு இத்தனை கோடி செலவு செஞ்சோம்னு அறிக்கை விட்டு கடுப்புகளைக் கிளப்பாதீங்க.

http://tamil.thehindu.com/opinion/blogs/article19955085.ece

  • தொடங்கியவர்
 
 

ஒரு நாள் மழையில், சென்னை மிதக்கிறது. அடுத்து மழை வந்தால் என்னவாகுமோ என்ற, 'டென்ஷனில்' மக்கள் உள்ளனர்; இரட்டை இலை வழக்கில், தேர்தல் கமிஷன், இன்று தீர்ப்பு கூறுமோ என்ற டென்ஷனில், அ.தி.மு.க.,வினர் உள்ளனர்.

 

மழைநீரில்,சென்னை,மிதக்குது!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட, பல்வேறு மாவட்டங்களில், நேற்று முன்தினம்
பலத்த மழை பெய்தது. வட கிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன், 'மழையை எதிர்கொள்ள, அரசு தயார் நிலையில் உள்ளது; அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களும் எடுக்கப்பட்டுள்ளன' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 

போக்குவரத்து பாதிப்பு


ஆனால், நேற்று முன்தினம் பெய்த, ஒரு நாள் மழைக்கே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள், நீரில் மிதக்கின்றன. பெருக்கெடுத்து ஓடும் மழை நீரால், தாம்பரம் - முடிச்சூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வரதராஜ புரம், பி.டி.சி., குடியிருப்பு, முடிச்சூர் பகுதி களில், தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

அடையாற்றில், 10 அடி உயரத்திற்கு வெள்ளம்

பெருக்கெடுத்து ஓடியது.காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், ஆதனுார் பகுதிகளில், வெள்ளநீர் ஊருக்குள் புகுந்தது. குரோம்பேட்டை - பள்ளிக்கரணை பாலத்தை, வெள்ள நீர் சூழ்ந்ததால், அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நள்ளிரவில் பெய்த மழையில், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி பகுதிகளில், தண்ணீரில் மிதந்து சென்ற பல வாகனங்கள், பழுதாகி வழியில் படுத்தன.

மழைநீர் தேங்கி நின்றதால், பல இடங்களில் சாலைகள் மூடப்பட்டன. சுரங்கப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. இந்த பகுதிகளில், மாவட்ட நிர்வாகமோ, உள்ளாட்சி நிர்வாகமோ, எட்டி கூட பார்க்கவில்லை என, மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், நேற்று, மாநகராட்சி தலைமை அலுவலகமான, ரிப்பன் மாளிகையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் ஆகிய மாவட்டங்களில், வட கிழக்கு பருவ மழை பாதிப்புகள் குறித்து, அமைச்சர்கள், வேலுமணி, ஜெயகுமார், பெஞ்சமின் ஆகியோர் தலைமையில், விரிவான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

டில்லியில் முகாம்


இது ஒருபுறம் இருக்க, தேர்தல் கமிஷனில், இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை, இன்று நடப்பதால், அ.தி.மு.க., நிர்வாகிகள், டில்லியில் முகாமிட்டுள்ளனர். தலைமை தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட, இரட்டைஇலையை பெற,அ.தி.மு.க., அணிகள், பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளன.

 

முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் இணைந்து, இரட்டை இலையை, தங்களுக்கு ஒதுக்கக் கோரி மனு செய்துள்ளனர். சசிகலா தரப்பில், தினகரன் சார்பில், இரட்டை இலைக்கு உரிமை கோரி, மனு தரப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை, தேர்தல் கமிஷனில், நான்கு முறை நடந்துள்ளது. நான்காவது முறையாக, நேற்று முன்தினம், விசாரணை நடந்தது. இரு தரப்பிலும், காரசாரமான விவாதங்கள் முன்வைக்கப் பட்டன.அதன்பின், வழக்குவிசாரணையை, நவ., 1க்கு, தேர்தல் கமிஷன் தள்ளிவைத்தது. இதில் ஆஜராவதற்காக, அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன், முன்னாள் எம்.பி., மனோஜ்பாண்டியன், முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி ஆகியோர், டில்லியில் முகாமிட்டுள்ளனர். அமைச்சர்கள், இன்று டில்லி செல்ல உள்ளனர்.

தினகரனும், நேற்று டில்லி சென்றார். ஆனால் அவர், நண்பரின் குடும்பத் திருமண விழாவில் பங்கேற்க வந்துள்ளதாக தெரிவித்தார்.இன்று தீர்ப்பு வெளியாகலாம் என்ற, எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதனால், ஒட்டுமொத்த, அ.தி.மு.க., வட்டாரம், 'டென்ஷனில்' உள்ளது

'சென்னை மாநகராட்சி பகுதியில், இன்னும், 13 இடங்களில் மட்டுமே, மழைநீர் அகற்றப்பட வில்லை; சுரங்க பாதைகளிலும், மற்ற இடங்களிலும், தேங்கிய தண்ணீர் உடனடியாக அகற்றபட்டது' என, அதிகாரிகள் தெரிவித்தனர். நகராட்சி நிர்வாக கமிஷனர், பிரகாஷ், ''பூந்தமல்லி நகராட்சியை தவிர, நான்கு மாவட்டங்களில் வேறு எந்த நகராட்சியிலும், பெரிய அளவில் வெள்ள பாதிப்பு இல்லை,'' என்றார்.

காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரி பேசுகையில், 'ஒரு நாள் மழைக்கு, ஆதனுாரின் ஒரு சில இடங்களில், இரண்டு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியதாகவும், அவை உடனடியாக அகற்றப்பட்டது' என்றார். அமைச்சர் வேலுமணி, 'முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில், ஏதாவது பிரச்னை உண்டா' என்று கேட்டதற்கு, 'முடிச்சூரில், இதுவரை தண்ணீர் தேக்கமே இல்லை' என்று கூறினார்.

அந்த பதிலில் திருப்தி அடைந்த அமைச்சர்கள், 'அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பதால், அனைத்து அதிகாரிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும்; ஏரிகளை கண்காணிக்க வேண்டும்' எனக் கூறி, கூட்டத்தை முடித்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1886803

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.