Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் தவறான பிரசாரம்

Featured Replies

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் தவறான பிரசாரம்

1-839adef8829f10af3a35d5be643f1b9e37630b29.jpg

 

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

வட­கி­ழக்கு இணைப்பு விட­யத்தில் கிழக்கு மாகாணத் தில் உள்­ள­வர்­களின் இணக்­கப்­பாட்டினை தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வர்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர் என சுட்­டிக்­காட்­டிய ஸ்ரீ­லங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவுப் ஹக்கீம், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யோச­னையே வட­கி­ழக்கு இணைப்பு எனவும் சுட்­டிக்­காட்­டினார். 

வட­கி­ழக்கு இணைப்பு தொடர்பில் கூட்­ட­மைப்பும் முஸ்லிம் காங்­கி­ரஸும் திட்­ட­மிட்டு செயற்­ப­டு­வ­தாக தவ­றான பிர­சாரம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டி­ய அவர், இந்த நாட்டில் உள்ள மாகா­ணங்கள் எவையும் இணைக்க கூடாது என்று குறிப்­பிடும் ஜாதிக ஹெல உறு­ம­யவின் யோச­னை­களை இருட்­ட­டிப்புச் செய்­கின்­றனர் எனவும் குறிப்­பிட்டார்.

அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று புதன்­கி­ழமை புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்ட உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­படி தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்­கையில் நாட்டின் தன்­மை­யா­னது தமிழ் மொழியில் ஒரு­மித்த நாடு என்ற சொற்­பதம் பயன்­ப­டுத்­தப்­பட்டு இருக்­கின்­றது. இந்த சொற்­ப­தத்­தினை பயன்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­ட­போது வழி­ந­டத்தல் குழு அமர்­வொன்றில் என்­னி­டத்தில் இந்த சொற்­ப­தத்­தினை பயன்­ப­டுத்­து­வது குறித்து உங்­களின் நிலைப்­பாடு என்­ன­வென்று கேட்­டார்கள்.

தமிழ் மொழியில் பரீட்­சயம் உள்­ளவர் என்ற அடிப்­ப­டையில் நான், மிகச்­ச­ரி­யான சொற்­பதம் என்று கூறினேன். மேலும் இந்த சொற்­ப­தத்­தனை பயன்­ப­டுத்து முற்­போக்­கா­ன­தொன்று எனவும் குறிப்­பிட்டேன். அவ்­வா­றி­ருக்­கையில் தற்­போது இடைக்­கால அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ஒரு­மித்த நாடு என்ற பதம் அர­சி­ய­லுக்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது.

தற்­போது ஒரு­மித்த நாடு என்ற சொற்­ப­தத்­திற்கு வெவ்­வேறு விதத்தில் அர்த்தம் கற்­பித்து பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். தெற்கில் கடு­மை­யான பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றி­ருக்­கையில், தற்­போது சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் இந்த விட­யத்­தினை கையி­லெ­டுத்­தி­ருப்­பதை அவ­தா­னிக்க முடிந்­தது.

அண்­மையில் ஒரு­மித்த நாடு என்ற சொற்­ப­தத்­திற்கு சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் ஒரு விள­கத்­தினை அளித்­தி­ருக்­கின்­றது. இடைக்­கால அறிக்­கையில் ஒரு­மித்த நாடு என்ற சொற்­பதம் பயன்­ப­டுத்­தப்­பட்டு அந்த சொற்­ப­த­மா­னது பிரிக்­கப்­ப­டாத நாடாக இருக்க வேண்டும் என்று விப­ரமாகக் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் நிலை­யி­லேயே நாடு பிள­வு­ப­டு­வது பற்றி சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் அர­சாங்­கத்­திடம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்­ளது. ஒரு­மித்த நாடு என்­பது நாடு பிரி­ப­டா­த­வொரு விடயம் என்­பதை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் அறி­ய­வில்­லையா? சட்டம் தெரிந்த அவர்கள் என்ன நோக்­கத்­துக்­காக செயற்­ப­டு­கின்­றார்கள் என்ற கேள்­வியே தற்­போது எழு­கி­றது.

தேசிய பிரச்­சி­னையை அடுத்த சந்­த­திக்கு நாம் விட்டுச் செல்லக் கூடாது என்­பதில் நாம் உறு­தி­யாக இருக்­கின்றோம். அதன் கார­ணத்­தி­னா­லேயே இவ்­வா­றான முயற்­சி­க­ளுக்கு ஒத்­து­ழைப்­புக்­களை முழு அளிவில் நல்­கி­ய­வாறு இருக்­கின்றோம்.

அது­வொ­ரு­பு­ற­மி­ருக்­கையில், ஜனா­தி­பதி முறையை நீக்­கு­வதா? இல்­லையா? இரண்­டா­வது சபையை அமைப்­பது, பௌத்த மதத்­துக்­கான முக்­கிய இடத்தை இல்­லாமல் செய்­வதா இல்­லையா? ஒற்­றை­யாட்­சியா சமஷ்­டியா? வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற நிலைப்­பா­டுகள் பற்றி பல்­வேறு விட­யங்கள் விவா­திக்­கப்­ப­டு­கின்­றன. இவை தொடர்பில் தற்­போது வரையில் இறுதி முடி­வுகள் இன்­னமும் எட்­டப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இடைக்­கால அறிக்­கையில், வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது யோச­னையை முன்­வைத்­துள்­ளது. அந்த விடயம் வழி­ந­டத்தல் குழுவின் நிலைப்­பாடு அல்ல. கூட்­ட­மைப்பின் தனிப்­பட்ட கருத்­தாகும். இதனை சிலர் தூக்கிப் பிடித்துக் கொண்டு பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர்.

தென்­ப­கு­தியைச் சேர்ந்த அர­சியல் வாதி­களும், தலை­வர்கள் எனக் கூறிக் கொள்ளும் சில முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் மக்கள் மத்­தியில் இது பற்­றிய பிர­சா­ரத்தை முன்­னெ­டுக்­கின்­றனர். இது விட­யத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் வாயை மூடிக் கொண்­டி­ருப்­ப­தாக அவர்கள் பிர­சா­ரங்­களை செய்து வரு­கின்­றனர். இவ்­வாறு பிர­சா­ரங்­களை முன்­னெ­டுப்­ப­வர்கள், எந்­த­வொரு மாகா­ணங்­களும் இணைக்­கப்­படக் கூடாது என ஜாதிக ஹெல உறு­மய முன்­வைத்­தி­ருக்கும் யோச­னை­களை மறைத்து செயற்­ப­டு­கின்­றனர்.

அவ்­வாறு மறைத்து செயற்­ப­டு­வ­தற்­கான காரணம் என்ன? மேலும் இந்த சபையில் உள்ள சிரேஷ்ட அர­சி­யல்­வா­தி­யான சம்­பந்தன், அண்ணன் மாவை­போன்­ற­வர்கள் கிழக்­கு­மா­கண மக்­களின் இணக்­கப்­பாடும் வட­கி­ழக்கு இணைப்பில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். இவை அனைத்தையும் விடுத்து கூட்டமைப்பும் மு.காவும் வடக்கு கிழக்கை இணைக்கப்போகின்றது என்று பிரசாரம் செய்வதில் என்ன நியாயம் இருக்கின்றது.

அதேநேரம் மிக முக்கிமான விடயம் பௌத்த மதத்துக்கான முன்னரிமை வழங்கப்பட்டமையாகும். எம்மைப்பொறுத்தவரையில் பௌத்த மத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் அதேநேரம் ஏனைய மதங்களுக்கான கௌரவம் மற்றும் இரண்டாம் பட்சமான கவனிப்பு என்பவற்றை தடுக்கும் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படவேண்டியது முக்கியமானது என்றார். 

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.